Thursday, February 02, 2012

மனிதன் தன்னைப் பற்றி முத­ல் சிந்திக்கட்டும்

சகோதரர் : ராஜ் முகம்மது M I S C

முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 19:67)

மனிதன் எதிலி­ருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். (அல்குட்;ஆன் 86:5)

முதல் மனிதர் மண்ணால் படைக்கப்பட்டார்

களிமண்ணின் சத்திலி­ருந்து மனிதனைப் படைத்தோம் (அல்குர்ஆன் 23:12)

....மனிதனின் படைப்பைக் களிமண்ணி­ருந்து துவக்கினான். (அல்குர்ஆன் 32:7)

பின்பு விந்தி­ருந்து படைக்கப்பட்டான்

மனிதனை விந்துத் துளியால் அவன் படைத்தான்.... (அல்குட்;ஆன் 16:4)

மனிதனை விந்தி­ருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா?... (அல்குர்ஆன் 36:77)

கார்ப்பப்பையில் சுமக்கப்பட்டான்

(மனிதனை) அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். (அல்குர்ஆன் 31:14)

மனிதர்களில் ஆண்களையும் பெண்களையும் படைத்தான்!

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவா்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49,50)

மனிதன் அழகான அமைப்பில் படைக்கப்பட்டான்

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.(அல்குர்ஆன் 95:4)

மனிதனுடைய படைப்பில் பல அதிசயங்கள் திகழ்கிறது. மனிதனுடைய உறுப்பில் இருக்க கூடிய ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும் இனிமேல் அறிவோம்.

 கண்ணின் அதிசயம்

அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா? அல்குர்ஆன் 90:8

1. கண்ணிலுள்ள செல்கள் மொத்தம் 13.7 கோடி. 13 கேடி செல்கள் கறுப்பு வெள்ளைப் பொருட்களையும், மீதம் உள்ள கூம்பு வடிவ செல்கள், கலர் பொருட்களைப் பார்ப்பதற்கும் உதவுகின்றன. லட்சகணக்கில் செல்கள் லென்ஸில் இருந்தாலும் செல்களுக்கு தெரிந்த மொத்தமே 3 கலர்கள் தான். சிவப்பு, பச்சை, ஊதா. மற்ற கலர்களை எப்படி காட்டுகிறது என்றால் ஒரு ஓவியர் பல வண்ணங்களைக் கலந்து, அழகிய ஓவியம் தருவதைப் போல கண்கள் செல்களின் உதவியுடன் மின் வேதி மாற்றம் செய்து, பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை கலர்களையும் காட்டுகிறது.

2. கண்ணில் இரு அறைகள் உள்ள. ஒன்று முன்பக்கம் தண்ணீர் போலவும், பின்பக்கம் முட்டை வெள்ளைக் கருபோலவும் அந்தத் திரவங்கள் இருக்கும். ஒளிக்கதிர்கள் எப்படி இருந்தாலும் இதனுடைய கண்பார்வை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும். நல்ல வெளிச்சத்தில் லென்ஸ் சுருங்கிக் கொள்ளும். வெளிச்சம் குறைவான நேரத்தில் இருட்டாக இருக்கும் போது விரிந்து கொள்ளும்.

3. ஒரே நேரத்தில் 15 லட்சம் செய்திகளை கையாளும். நிமிடத்திற்கு 6 அல்லது 8 முறை கண்ணடித்துக் கொண்டிருக்கும்.

4. பார்வை நரம்புகள் அனைத்தும் தலையின் பின்புறமே உள்ளன. அதனால் தான் தலையின் பின்புறம் பலமாக அடிப்பட்டால் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

5. தினமும் 50 மைல் நடந்தால், நமது கால் தசைகள் எப்படி இருக்கும். அதே போன்று பார்வை எல்லாம் சரியாக காட்ட வேண்டும் என்பதற்காக லட்சம் முறை கண்களில் தசைகள் இயங்குகிறது.

6. பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் தாக்காமல் இருக்க லைசோசைம் என்ற உயிர்க் கொல்­யை கண் உற்பத்தி செய்து கொள்கிறது.

தொடரும்......