Monday, February 27, 2012

ஹதீஸ் கலை அறிவோம்: ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ்கள்


முந்தைய பகுதி:


1.     ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை இன்று நாம் அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. ஹதீஸ்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. 

ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த ஹிஜ்ரீ இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டு கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.  

தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது, மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக் கொள்வார்கள். 

எல்லா ஹதீஸ்களும் இந்த வகையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்றுள்ள முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். 

صحيح وضعيف سنن الترمذي - (ج 1 / ص 1)
 حدثنا قتيبة بن سعيد حدثنا أبو عوانة عن سماك بن حرب ح و حدثنا هناد حدثنا وكيع عن إسرائيل عن سماك عن مصعب بن سعد عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول

தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது.என்பது திர்மிதீயின் முதலாவது ஹதீஸ். 

இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஆவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இதை நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார். 

முஸ்அப் பின் ஸஃது என்பார் இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர். 

முஸ்அப் பின் ஸஃதிடமிருந்து இதைக் கேட்டவர் ஸிமாக் என்பார். 

ஸிமாக்கிடம் வகீவு என்பாரும் அபூ அவானா என்பாரும் கேட்டனர்.

வகீவு என்பார் வழியாகவும் அபூ அவானா என்பார் வழியாகவும் இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதி இமாமுக்குக் கிடைத்துள்ளது.

முதல் வழி:

1.     நபிகள் நாயகம் (ஸல்)
2.     இப்னு உமர் (ரலி)
3.     முஸ்அப் பின் ஸஃது
4.     ஸிமாக் பின் ஹர்பு
5.     இஸ்ராயீல்
6.     வகீவு
7.     ஹன்னாத்
8.     திர்மிதீ

இரண்டாவது வழி:

1.     நபிகள் நாயகம் (ஸல்)
2.     இப்னு உமர் (ரலி)
3.     முஸ்அப் பின் ஸஃது
4.     ஸிமாக் பின் ஹர்பு
5.     அபூ அவானா
6.     குதைபா
7.     திர்மிதீ

மேற்கண்ட இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு விபரங்களையும் இந்த ஹதீஸில் திர்மிதீ இமாம் கூறுகின்றார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகின்றார். அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இப்படித் தான் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஹதீஸைச் சரியான ஹதீஸ் என்று கூற வேண்டுமானால் கீழ்க்கண்ட அனைத்து விபரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். 
  • இந்தச் செய்தி இமாம் திர்மிதீ அவர்களுக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
  • அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
  • அவர்கள் ஒவ்வொருவரும் யார் வழியாக அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இந்தத் தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான ஸஹீஹான ஹதீஸ் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.

ஆதாரப்பூர்வமான ஸஹீஹான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.

Sunday, February 26, 2012

தவ்ஹீத் ஜமாத் ஜும்ஆவில் பிற இயக்கங்களை விமர்சனம் செய்கிறதா?

தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்படும் பள்ளிவாசலுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தவ்ஹீத் ஜமாத் ஜும்ஆவில் பிற இயக்கங்களை விமர்சனம் செய்கிறதா?
தவ்ஹீத் ஜமாத் ஒற்றுமைக்கு எதிரானவர்களா?  இந்த குற்றச்சாட்டுகள் உணமையா? கீழே விளக்கம்




Saturday, February 25, 2012

பீஜே காட்டிக்கொடுத்தாரா?

கேள்வி:


நீங்கள் கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை காட்டிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு சொல்கின்றார்களே இது உண்மையா? விரிவான விளக்கம் தேவை
ஹசன்
மேலப்பாளையம்

பதில்:

இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் எனது இணையதளத்தில் அளித்த பதிலையே உங்களுக்கும் பதிலாகத் தருகிறேன்.

கேள்வி : குண்டு வெடிப்பைக் காட்டிக் கொடுக்கவில்லையா?

பதில்:
கோவையில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன் பீஜே அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காட்டிக் கொடுத்தார் என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

இது பற்றியும் நாம் தெளிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கோவையில் காவலா் செல்வராஜ் கொல்லப்பட்டதன் எதிரொலியாக கோவை காவல்துறை ஒட்டுமொத்தமாக அரசுக்குக் கட்டுப்படாமல் ஸ்ட்ரைக் செய்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக சமூக விரோதிகளை ஏவி விட்டனர். சமூக விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளி 19 பேரைக் கொன்று குவித்தனா். இன்னும் சொல்லிமுடியாத கொடுமைகளை எல்லாம் செய்தனர்.

இந்தக் கொடுமையை மனித உரிமைக் கமிஷன் சிறுபான்மைக் கமிஷன் வரை அப்போதைய தமுமுக மூலம் நாம் கொண்டு சென்றோம்.

தமிழக அரசு இந்தக் கொடுமையை நிகழ்த்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பட்டமாக முஸ்லிம் விரோதப்போக்கை அப்போதைய முதல்வர் வெளிப்படையாகக் காட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் இதற்குப் பழி தீர்ப்பதற்காக கோவையில் சில இடங்களில் குண்டு வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட தகவல்கள் தமுமுக தலைமைக்குக் கிடைத்தது.

குண்டு வெடிப்பு நடந்தால் அப்பாவிகள் பலர் கொல்லப்படுவார்கள் என்று அப்போதைய தமுமுக நிர்வாகிகள் கவலைப்பட்டோம். மேலும் இதன் விளைவு கடுமையாக இருக்கும் ஏற்கனவே கோவை கலவரம் காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள கோவை முஸ்லிம்கள் இன்னும் பல இன்னல்களைச் சந்திக்க நேரும் என்பதையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.

மேலும் அவசரப்பட்டு இச்செயலைச் செயதவர்கள் காகாலத்துக்கும் இன்னல்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.

மேலும் குண்டு வெடிப்பு போன்ற சம்பவம் நடந்துவி்ட்டால் அதற்குமுன் நடந்த கலவரம், முஸ்லிம் இனப் படுகொலை ஆகியவற்றுக்கு நீதி கோரும் தார்மீக பலத்தை நாம் இழந்து விடுவோம் என்றெல்லாம் நாங்கள் கவலைப்பட்டோம்.

இந்தச் சமுதாயம் தாங்கிக் கொள்ள முடியாத கடும் விளைவுகளைத் தடுக்க வேண்டும் என்றால் குண்டு வெடிக்காமல் தடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

எனவெ எங்கெங்கே குண்டு வைக்கப்படவுள்ளன என்ற தகவலை விரிவாகத் திரட்டினோம்.

அப்போது காவல் துறை டி ஜி பியாக இருந்த அலெக்ஸாண்டர் அவர்களைச் சந்தி்த்து விளக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

நான், ஜவாஹிருல்லா, ஹைதர் இன்னொருவர் (நினைவில் இல்லை அநேகமாக விஞ்ஞானி ஜலீலாக இருக்கலாம்) ஆக நான்கு பேர் டிஜிபியைச் சந்தித்தோம். பொதுவாக நான் இது போன்ற சந்திப்புகளில் பங்கேற்பதில்லை என்றாலும் இதன் முக்கியத்துவம் கருதி நானும் அதில் ஒருவனாகக் கலந்து கொண்டேன்.

இன்னின்ன இடங்களில் குண்டு வைக்கப்படவுள்ளன. அதனால் இன்னின்ன விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் ஆதாரத்துடன் நாங்கள் எடுத்துச் சொல்லி குண்டு வெடிக்காமல் எப்படியாவது தடுத்து விடுங்கள் என்று வலியுறுத்தினோம்.

கவனமாகக் கேட்டுக் கொண்ட டிஜிபி இந்த தகவலை நீங்கள் கோவை காவல் துறையிடமும் தெரிவியுங்கள் நானும் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். இதன்படி நம்பகமானவர்கள் மூலம் கோவை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முழு விபரமும் சொல்லப்பட்டது.

அவர்கள் நினைத்திருந்தால் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகளைக் கண்டு பிடித்து செயலிழக்கச் செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் கொடுத்த பட்டியலில் காவலர்கள் குடி இருப்பும் ஒரு இடமாகும். அந்த இடத்தில் மட்டும் குண்டு வெடிக்காமல் காவல் துறையினர் காப்பாற்றிக் கொண்டனர். மற்ற இடங்களில் குண்டு வெடிப்பைத் தடுக்க வாய்ப்பு இருந்தும் அவர்கள் தடுக்கவி்ல்லை தடுக்க அவர்கள் விரும்பவில்லை.

19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் மற்றும் பலர் காயப்படுத்தப்படடதிலும் சொத்துக்கள் சூறையாடியதிலும் கோவை காவல் துறையினர் விசாரணையை எதிர் நோக்கி இருந்தார்கள். அதில் இருந்த அவர்கள் தப்பிக்க வேண்டுமானால் அதை விடப் பெரிய கொடுஞ்செயல் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து நிகழ வேண்டும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.

இதன் காரணமாக அவர்கள் குண்டு வெடிப்பைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

குண்டு  வெடிப்பைத் தடுப்பதற்காக நாம் செய்த இந்த முயற்சி யாரையும் காட்டிக் கொடுப்பதற்காகச் செய்தது அல்ல. மாறாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நன்மை கருதி செய்த காரியமாகும். இன்னும் சொல்லப்போனால் குண்டு வைத்தவர்களுக்குக் கூட இது நன்மையாக அமைந்திருக்கும்.

இதையும் காட்டிக் கொடுத்தல் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

ஒட்டு மொத்த சமூதாயத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் காரியம் ஒன்று நடக்க இருப்பது தெரிய வந்தால் இப்போதும் அதைத் தடுக்க நான் முயல்வேன். இது காட்டிக் கொடுத்ததில் சேராது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இது பொதுவாக நான் சொல்லும் பதிலாகும்.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தலைமறைவாகி ஒவ்வொருவராக பிடிபட்டனர். ஒவ்வொருவர் பிடிபடும் போதும் அவர்களைக் காட்டிக் கொடுத்தது பீ ஜே தான் என்றோ தமுமுக என்றோ தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். அவை அனைத்துக்கும் நான் இனைய தளத்தில் பதில் அளித்துள்ளேன்.

ஆனாலும் பல பக்கங்கள் கொண்ட அந்த ஆக்கத்தில் உங்கள் கேள்விக்கான பதிலாக அமைந்த சிறு பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.

ஆன்லைன் பீஜே இணையதளத்தில் உள்ள கட்டுரையின் ஒரு பகுதி...

“சிறைவாசிகள் தொடர்பாக பலவிதமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்த போதும் தமுமுகவில் இருந்த போது தமுமுக சார்பில் அதிகாரப்புர்வமாக நான் பதிலளித்துள்ளேன். அதில் ஒரு பகுதியைத் தான் மேலே பார்த்தீர்கள்.

ஆனால் அதன் பின்னர் சிறைவாசிகளை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த போதும் நான் அதிகாரப்புர்வமாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் பதில் அளிக்கவில்லை. தனிப்பட்ட சில சந்திப்புகளின் போது இதுகுறித்து கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கம் அளித்தது தவிர பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் அது குறித்து நான் விளக்கம் அளிக்கவில்லை இதற்குக் காரணம் இருக்கிறது. இது குறித்து நான் பதில் சொல்லப்போனால் தவறுகள் அனைத்தும் சிறைவாசிகள் மீதுதான் என்பது உறுதியாகும். இதன் காரணமாக சிறைவாசிகளின் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் உதவிகள் குறைந்து விடக்கூடாது என்று நான் கருதியது தான் அந்தக் காரணம்.

அந்த நிலை இப்போது இல்லை. சிறைவாசிகளி்ல் அதிகமானோர் விடுதலை ஆகி விட்டனர். நான் இது குறித்து விளக்காமல் இருந்தால் பீஜே சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்தார் என்ற பொய், வரலாற்றில் உண்மையாகிவிடும். அவ்வாறு ஆகக் கூடாது என்பதாலும், அனைத்தையும் எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் அது குறித்து விரிவாக இப்போது விளக்குகிறேன்.

பாஷா அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்த போது அவர்கள் கையெழுத்துப் போட்டு அளித்த சட்டப்புர்வமான வாக்கு மூலத்தி்ல் கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கு பீஜே தான் பண உதவி செய்தார் என்று கூறி இருந்தனர்.

இப்படி பீஜேயைச் சம்பந்தப்படுத்தி கூறி இருந்தும் பீஜேயை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை? இதில் இருந்து பீஜே அரசாங்கத்தின் உளவாளி என்பது தெரியவில்லையா? என்று பிரச்சாரமும் செயது வந்தனர்.

நாங்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்படாததால் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் பிரச்சாரம் செய்து வரலாயினர்.

அப்துன்னாஸா் மதானி எங்களுக்கு உதவினார் அடைக்கலம் தந்தார் என்று கைது செய்யப்பட்ட அல்உம்மா இயக்கத்தினர் கூறியதால் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஆனால் பீஜே மீது வலிமையாக நாங்கள் குற்றம் சுமத்தி இருந்தும் அவர் ஏன் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்படவில்லை என்ற பிரச்சாரம் என்னுடைய எதிரிகள் மத்தியில் நன்றாக எடுபட்டது.

இது குறித்த விளக்கத்தை நான் இப்போது தெளிவுபடுத்துகிறேன்.

பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் எனக்கு எதிராக அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் என்னை நிச்சயம் வழக்கில் சேர்க்க முடியும்.

ஆனால் தமுமுகவுக்கும், அல்உம்மாவுக்கும் இருந்த பகை பற்றியும், அல்உம்மா இயக்கத்தினர் தமுமுக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும், தமுமுக கொடிக் கம்பங்களை அவர்கள் வெட்டிச் சாய்த்தது பற்றியும், எங்களைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது பற்றியும் அனைத்தும் அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் எதிரி இயக்கத்தின் மீது பழி சுமத்தவே இதைக் கூறுகின்றனர் என்பது அதிகாரிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே தெரிந்து விட்டது. இதனால் எங்களில் யாரையும் அவர்கள் வழக்கில் சேர்க்கவில்லை.

ஆனாலும் அரசாங்கம் பீஜேயையும் தமுமுகவையும் வழக்கில் சேர்க்காமல் எங்கள் குற்றச் சாட்டைக் கண்டு கொள்ளாமல் காப்பாற்ற நினைக்கிறது என்று பல முனைகளில் அல்உம்மா தரப்பில் பிரச்சாரம் செய்து வந்ததால் வேறு வழியில்லாமல் இது குறித்து விசாரித்து என்னை வழக்கில் சேர்க்க எஸ்.ஐ.டி (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) முடிவு செய்தனர்.

அதன்படி பீஜே, ஜவாஹிருல்லா,  ஹைதர் அலி, பாக்கர் ஆகிய நால்வருக்கு எதிராக நீதிமன்ற அனுமதி பெற்று விசாரனைக்கு அழைத்து வரும் உத்தரவு பெற்றனர். மேலும் தமுமுக அலுவலகம், மற்றும் எனது வீடு ஆகியவற்றைச் சோதனை செய்யும் உத்தரவோடு வந்தனர்.

திடீரென தமுமுக அலுவலகத்தில் ரைடு நடத்தினார்கள். அதே நேரம் எனது வீட்டிலும் ஒரு நாள் முழுவதும் சின்னச் சின்ன துரும்பைக் கூட விடாமல் சோதனை செய்தனர்.

எனது வீட்டில் அவா்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.  தமுமுக அலுவலகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சில ஃபைல்களையும், அலுவலகத்தில் இருந்த அனைத்து வீடியோ கேஸட்டுகளையும் அள்ளிச் சென்றனர்.

அத்துடன் எங்கள் நால்வரையும் விசாரணைக்காக கோவை வருமாறு உத்தரவிட்டுச் சென்றனர்.

இதன் அடிப்படையில் இந்த வழக்கில் நிச்சயம் சேர்த்துவிடுவார்கள் என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரிந்ததால் குடும்பத்துக்குச் சொல்ல வேண்டிய வஸிய்யத்களைச் செய்து விட்டு மற்ற மூவருடன் கோவை புறப்பட்டேன்.

ஜவாஹிருல்லா,  ஹைதர், பாக்கர் ஆகிய மூவர் மீதும் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் சாதாரணமான குற்றத்தையே சுமத்தி இருந்தார்கள். அவர்கள் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என்பது என்று எனக்குத் தோன்றியது.. ஆனால் நான் நிச்சயம் கைது செய்யப்படுவேன் என்று உள்ளுணர்வு சொன்னது. அவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுக்களை என் மீது கூறி இருந்தனர்.

நாங்கள் நால்வரும் நான்கு நாட்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டோம்.

குண்டு வைப்பதற்காக ஒரு துணிப் பையில் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் பீஜே தந்தார். அதை மேலப்பாளையம் புகாரி, (அல்லது முஹம்மது அலி) பீஜே வீட்டுக்குப் போய் வாங்கி வந்தார். அந்தப் பணத்தில் தான் குண்டு வைப்பதற்கான பொருள்களை வாங்கினோம் என்பது பாஷா என் மீது சுமத்திய முதல் குற்றச்சாட்டு, என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றதை புகாரியும் உறுதி செய்துள்ளார். இது பொய் என்பதை நான் தான் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கத் தவறினால் வழக்கில் முதல் குற்றவாளியாகக் கூட நான் சேர்க்கப்படலாம் என்று விசாரனை அதிகாரிகள் தெரிவித்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர்.

பாஷா ஜாமீனில் வெளியே வந்து தமுமுக அலுவலகத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் “நான் அடிக்கடி கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறேன். அப்படி கைது செய்யப்பட்டால் என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. எனவே இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன். அதை உங்களுக்குத் தெரிந்த தொழில் அதிபரிடம் கொடுத்து மாதாமாதம் இலாபம் வரும் வகையில் முதலீடு செய்து உதவுங்கள்” என்று கூறி பாஷா இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தார். அதைத் தொழில் அதிபர் அன்வா் பாஷா அவர்களிடம் கொடுத்து வைத்து மாதாமாதம் லாபம் வரும் வகையில் அவருக்கு உதவினேன். திடீரென ஒரு நாள் அந்தப் பணம் உடனே வேண்டும் என்று பாஷா கேட்டு அனுப்பினார் உடனே நான் அன்வர் பாஷாவிடம் நிலைமையை விளக்கி பணத்தைக் திருப்பிக் கேட்ட போது நாளை தருவதாகச் சென்னார். அதன் படி மறுநாள் புஹாரியை (அல்லது முஹம்மது அலியை) வரச் செய்து அந்தப் பணத்தைக் கொடுத்து விட்டேன்.

மேலப்பாளையம் புகாரியிடம் அதிகாரிகள் விசாரித்த போது உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டார். தொழில் செய்வதற்காக பாஷா அவர்கள் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் வாங்கினாரே தவிர குண்டு வைடிப்புக்காக பீஜே கொடுத்த பணம் அல்ல என்று புகாரி அளித்த வாக்கு மூலமும் என்னைப் பொய் வழக்கில் சேர்க்காததற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.
பாஷா என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் திரும்ப வாங்கினார் என்று அதிகாரியிடம் நான் தெளிவுபடுத்தி எனக்கும் அல்உம்மாவுக்கும் உள்ள கடும் பகை, அவர்களின் கொலை மிரட்டல் காரணமாக எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றையும் எடுத்துக் காட்டினேன். எங்களுக்குள் இவ்வளவு பகை இருக்கும் போது நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினேன்.

என்னிடம் விசாரித்தது போலவே மற்ற மூவரிடமும் தனியாக இன்னொரு டீம் இது குறித்து விசாரணை செய்தது. அவா்களும் நான் கூறியது போலவே கூறினார்கள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.

ஆனால் காவல் துறையினர் இதை முழுவையாக நம்பாமல் இதை மேலும் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். நாங்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது மறுநாள் சென்னைக்குத் தகவல் கொடுத்து அன்வர் பாஷா அவர்களின் அலுவலகத்தின் கணக்குப் புத்தகத்தைச் சோதித்தனர். அதில் பாஷா பணம் முதலீடு செய்த விபரம் அவருக்கு திருப்பிக் கொடுத்த விபரம் ஆகியவை இருந்ததால் நான் செய்வது முழு உண்மை என்று போலீசார் கண்டு கொண்டனர்.

அன்வர் பாஷா அவர்கள் இந்த விபரத்தை எழுதி வைத்திருக்காவிட்டால் நானும் 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அல்லது சிறைக்குச் சென்றவுடன் அங்கேயே கொல்லப்பட்டிருக்கவும் கூடும். அல்லாஹ் எனக்குச் செய்த மாபெரும் கருணையால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து நான் தப்பிக்க முடிந்தது.
அடுத்து பாஷாவின் மைத்துனர் ஜூபைர் என்பவர் ஒரு வாக்கு மூலம் கொடுத்திருந்தார். அது இதை விடக் கடுமையானது.

அவரிடம் கைப்பற்றப்பட்ட ஜெர்மன் துப்பாக்கி பற்றி காவல்துறை விசாரித்த போது நான் பீஜேயை 36 தாக்கர் தெருவில் உள்ள உணா்வு அலுவலகத்தில் சந்தித்த போது ஐம்பதினாயிரம் ரூபாய் பனமும் இந்த ஜெர்மன் துப்பாக்கியும் கொடுத்தார் என்று பாஷாவின் மைத்துனர் கூறி இருந்தார்

இது குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பல வகையில் விசாரித்தனர்.

உண்மையில் இது பொய் என்றால் குற்றம் சுமத்தப்பட்ட நான் தான் இதை பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று காவல் துறையினா் எதிர்பார்த்தனர்.

இது பொய் என்று என்னால் எப்படி நிரூபிக்க முடியும்? பாஷா மைத்துனர் ஜூபைர் கொடுத்த வாக்குமூலத்தின் நகலைத் தாருங்கள் என்று நான் கேட்டேன் அவர்கள் நகலைத் தந்தனர்.

அவர் பொத்தாம் பொதுவாக இதைக் கூறி இருந்தால் நான் நிச்சயம் பொய் வழக்கில் சிக்கி இருப்பேன்.

ஜூபைர் என்னைச் சந்தித்த மாதத்தையும் வருடத்தையும் குறிப்பிட்டு இருந்தார். (அந்த வருடம் மாதம் இப்போது நினைவில் இல்லை)

அந்த இடத்தில் தான் அல்லாஹ்வின் மாபெரும் அற்பதம் நிகழ்ந்தது எனலாம்.

புரசைவாக்கம் தாக்கா் தெருவில்தான் உணர்வு அலுவலகம் இருந்தது.

பின்னர் இப்ராஹிம்ஷா தெருவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

அலுவலகம் மாற்றப்பட்டு வி்ட்டாலும் நீதிமன்றத்தில் முகவரி மாற்றம் பற்றிய தீர்ப்பு பெற வேண்டும், அது தாமதமானதால் கடைசி பக்கத்தில் 36 தாக்கர் தெரு என்றே போட்டு வந்ததோம். இதைப் பார்த்துவிட்டுத் தான் ஜூபைர் தாக்கர் தெரு அலுவலகத்தில் என்னைச் சந்தித்ததாகக் கூறி விட்டார். ஆனால் அவர் கூறிய அந்தக் காலத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பே நாங்கள் இப்ரா ஹிம் ஷா தெருவுக்கு மாறி வி்ட்டோம்.

அதாவது எந்த மாதத்தில் என்னை தாக்கர் தெரு அலுவலகத்தில் சந்தித்ததாக பாஷாவின் மைத்துனர் கூறினாரோ அந்த மாதத்தில் உணர்வு அலுவலகமே அந்த முகவரியில் இல்லை என்று நான் தெரிவித்தேன்.

எங்களைக் கஸ்டடியில் வைத்துக் கொண்டே சென்னைக்குத் தகவல் கொடுத்து தாக்கர் தெரு முகவரியில் இருந்த உணர்வு எப்போது இடம் மாறியது என்பதை விசாரிக்கச் செய்தனர். அது போல் இப்ராஹீம் ஷா தெருவில் உள்ள உணர்வு அலுவலகத்தில் சென்று சோதித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் பார்த்து நாங்கள் எவ்வளவு காலமாக இந்த முகவரியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தனர்.

மறுநாள் நீங்கள் கூறியது உண்மை தான் என அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். நான்கு நாட்கள் கோவையில் வைத்து விசாரித்துவிட்டு என் மீதும் மற்ற மூவர் மீதும் பொய்யாகத் தான் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் புகார் கூறியுள்ளனர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதி செய்த பின் எங்கள் நால்வரையும் விடுவித்தனர்.

அப்துன்னாஸர் மதானி தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டை அவரால் பொய் என்று நிரூபிக்க முடியாததால் அவர் பலகாலம் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு குண்டு வெடிப்பில் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதும் இவர்களால் தான் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?

அவரைப் போன்ற பெரிய தலைவர்களையும் வழக்கில் சேர்த்தால் பெரும் போராட்டம் நடக்கும் அதனால் தாங்கள் தப்பிக்கலாம் என்று நினைத்து அவரை வழக்கில் இழுத்து விட்டதாக அவர்களைச் சேர்ந்த ஒருவர் பிற்காலத்தில் என்னிடம் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இப்போது அப்துன்நாஸர் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கும் இது போன்ற ஒருவரின் வாக்குமூலமே காரணம்.

ஆனால் நான் நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ்வின் உதவி எனக்கு இருந்ததால் இதில் இருந்தும் நான் தப்பித்தேன். அல்லாஹ்வுக்காகப் போராடப் போவதாகச் சொன்னவர்கள் சம்மந்தமில்லாதவர்கள் மீது பழி போடும் அளவுக்குக் கேவலமாக நடந்து கொண்டனர்.

என் மீது இவர்கள் பழி சுமத்தியதால் தான் என்னையும் சாட்சிகள் பட்டியலி்ல காவல்துறை சேர்த்தது. எனக்கும் பாஷாவுக்கும் பகைதான்  இருந்தது என்பதை நீதி மன்றத்தில் சொல்ல வைத்ததற்கு பாஷாவின் பொய்ப புகார் தான் காரணம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீஜே மட்டும் தான் சிறைவாசிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னார் என்று இதையும் பரப்பினார்கள்.

குண்டு வெடிப்பு தொடர்பாக நான் எந்த சாட்சியமும் அளிக்கவில்லை. என் மீது பழி சுமத்தியதால் எனக்கும் இவர்களுக்கும் பகைதான் இருந்தது என்று சொன்னேன். அதுவும் நானாகப் போய் இதைச் சொல்லவில்லை. சிறைவாசிகளின் வழக்கறிஞர் என்னையும் விசாரிகக வேண்டும் என்று மனு போட்டதன் அடிப்படையி்ல் நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பியதால் தான் நான் என்னைக் காத்துக் கொள்வதற்காக இவா்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்ற உண்மையைக் கூறினேன்.

என் மீது பொய்ப் பழியையும் சுமத்திவிட்டு, எனக்குச் சம்மன் அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுவும் போட்டு விட்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக பல முறை நீதி மன்றத்துக்கு எனனை அலைய வைத்துவிட்டு, நான் குண்டு வெடிப்பு தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்தும் நான் குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சி கூறியதாகவும் பரப்பினார்கள்.

இதற்காக பாஷா அவர்கள் பிற்காலத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் மற்ற சிலர் இன்னும் திருந்தவில்லை என்பதைக் காண்கிறேன். அவர்களைத் தான் சிலர் உசுப்பி விட்டுள்ளனர்.

மீண்டும் நான் உறுதிபடக்கூறிகிறேன், நான் எந்தக் காலத்திலும் எந்த மிரட்டலுக்கும் பயப்படக் கூடியவன் அல்ல. தவ்ஹீத்வாதியாக் இருப்பவன் யாருக்கும் பயப்படமாட்டான்............

இன்னும் முழுமையான விபரங்கள் அறிய நீங்கள் கட்டாயம் ஆன்லைன் பீஜே இணையதளத்தில் உள்ள அந்த முழுக் கட்டுரையையும் வாசியுங்கள்.

நன்றி
உணர்வு

Friday, February 24, 2012

ஹதீஸ் கலை அறிவோம்: ஹதீஸ்களின் வகைகள்


திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பரவலாக மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொடர்பான செய்திகளை ஏற்கத்தக்கவை எனவும் ஏற்கத்தகாதவை எனவும் வகைப்படுத்தி இருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க இல்லை. இதைச் சிலர் அறிந்திருந்தாலும் ஏன் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததை இரண்டாகப் பிரித்து சிலவற்றை நாம் நிராகரிப்பதாக அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது அனைத்துமே ஏற்கத்தக்கவை என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா? என்பதில் ஏற்படும் சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் மறுக்கப்படுகின்றன என்பதை விளக்கவே இந்நூல்.

அறிவிப்பாளர் சரியில்லை என்று நாம் காரணம் கூறி ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது அறிவிப்பாளர்கள் சஹாபாக்கள் தானே சஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்கும் போது அறிவிப்பாளரை ஏன் குறை சொல்ல வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றனர்.

நாம் சஹாபாக்களைக் காரணம் காட்டி எந்த ஹதீஸையும் மறுப்பதில்லை. சஹாபாக்கள் அல்லாத அறிவிப்பாளர்களை மட்டுமே காரணம் காட்டுகிறோம் என்ற உண்மை இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சரியான ஹதீஸ்களையும் தவறான ஹதீஸ்களையும் எவ்வாறு கண்டறிவது என்று ஆசைப்படுவோருக்கு முழுமையான விளக்கம் இன்ஷா அல்லாஹ் இந்நூலில் கிடைக்கும்.

சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும்:

ஹதீஸ் துறையில் ஸஹீஹ் என்றால் என்ன? லயீஃப் என்றால் என்ன? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன? என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிகச் சொற்பமே. ஏகத்துவப் பணிகளில் ஈடுபடுவோர் ஹதீஸ் துறையில் உள்ள இந்தக் கலைச் சொற்களை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

ஹதீஸ் கலை:
  1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள்
  2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்கள்
  3. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரங்கள்
ஆகிய மூன்றையும் ஹதீஸ் என்பர்.

ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர்கள் தரம் பிரித்துள்ளனர்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

1. ஸஹீஹ் (صحيح) - ஆதாரப்பூர்வமானவை

2. மவ்ளூவு (موضوع) - இட்டுக்கட்டப்பட்டது

3. மத்ரூக் (متروك) - விடப்பட்டவை

4. ளயீஃப் (ضعيف) - பலவீனமானவை

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும்.

இவற்றில் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. 

இந்த நான்கு வகைகளையும் பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

குறிப்பு:

சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.

ஜூம்ஆ உரை ஆடியோ - 24.02.2012


















Tuesday, February 21, 2012

இஸ்லாமிய கீதம் என்ற பெயரில் நபி மீது பொய் கூறும் நாகூர் ஹனீபா!


இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய கீதம் இசைப்பதில் பிரபலமானவர் நாகூர் ஈ.எம்.ஹனீபா இவருடைய பாடல்களுக்கு முஸ்லீம்களுக்கு மத்தியில் மட்டுமன்றி முஸ்லீம் அல்லாத மக்களுக்கு மத்தியிலும் பெரிய மவுசு உள்ளது.

ரமழான் காலத்தில் இலங்கையின் பல வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் ஹீரோ இவராகத் தான் இருப்பார். ஆனால் இவர் ராகம் போட்டு இசைக்கும் பாடல்கள் இஸ்லாத்தின் உண்மைக் கருத்தை இல்லாதொழிக்கும் அளவுக்கு ஆபத்தானவை என்பது பலருக்குத் தெரியாத உண்மையாகும் அதனால் இவர் பற்றிய தெளிவுக்காக சகோதரர் ஷம்சுல் லுஹா அவர்கள் எழுதிய இவ்வாக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.

ஒரு திரைப்படம் வெண் திரையில் ஓடத் துவங்கியதும் அதில் முதல் காட்சியாக இடம் பெறுவது தெய்வவணக்கம் தான்அந்தப் படத்தின் தயாரிப்பாளருடைய குல தெய்வத்தைக் காட்டிஅதற்குப் பத்தி,சாம்பிராணிகுத்து விளக்கு வைபவ காட்சிகள் முதலில் இடம் பெற்ற பின்னர் தான் மற்ற காட்சிகள்துவங்கும்இதற்கு அடிப்படைக் காரணம் ஒரு காரியத்தின் ஆரம்பம் தெய்வ வழிபாட்டில் துவங்க வேண்டும்என்பது தான்.

திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் தங்கள் பக்தியை இப்படி வெளிப்படுத்துகின்றனஎன்றால்மதச் சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அரசு தொலைக்காட்சிகள்,வானொலிகள் போன்றவை நம் நாட்டிலுள்ள மூன்று பெரிய மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் தத்தமது நிகழ்ச்சிகளைத் துவங்கும் முன் இந்துமுஸ்லிம்கிறித்தவப் பாடல்களை ஒளிஒலிபரப்புகின்றன.

இந்தப் பாடல்களில் இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் இடம் பெறும் இஸ்லாமிய (?) பாடகர் இன்னிசைமுரசு நாகூர் .எம்ஹனீபா ஆவார்இவரது புகழ் இந்தியாஇலங்கை மட்டுமல்லாது தமிழ் முஸ்லிம்கள்வாழும் இடங்களிலெல்லாம் கொடி கட்டிப் பறக்கின்றது.

மாற்று மத நண்பர்கள் கூட நம்மிடம் பேசும் போதுதான் இஸ்லாமிய மார்க்கத்தை நேசிக்கும் ஓர் இனியநேயர் என்பதை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக, "பாய்நான் நாகூர் அனிபா பாடல்களை ரொம்பவும்விரும்பிக் கேட்பேன்'' என்று கூறுவர்.

இதன் மூலம் அவர்களது இஸ்லாமிய விசுவாசத்தை எண்ணி நாம் மகிழ்வோம் என்பதற்காக மாற்றுமதத்தவர்கள் பலர் இவ்வாறு கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம்அந்த அளவுக்கு பக்திப் பாடல்களில்முன்னணிப் பாடகராக நாகூர்    ஹனீபா இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இரு பெருநாட்களில் .எம். ஹனிபா பாடல்கள்:

அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிவானொலி அலை வரிசைகள் இரு பெருநாட்களின் போதுமுஸ்லிம்களுக்காக .எம்ஹனீபாவின் பாடல்களை ஒலிஒளி பரப்பி தங்களது மதச் சார்பின்மையைநிரூபித்துஇஸ்லாமிய நேயர்களின் வரவேற்பையும் பெற்று விடுகின்றார்கள்மற்றவர்களே இஸ்லாமியப்பாடல்களுக்கு இப்படி ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கும் போதுமுஸ்லிம்கள் இந்த இஸ்லாமியப்பாடல்களில் தங்களது முத்திரையைப் பதிக்காமல்இசை முரசுவின் பாடலைக் கேட்டு தங்கள் ஈமானைப்புதுப்பிக்காமல் விடுவார்களா?

மார்க்கத்தில் மிக அழுத்தமான அளவுக்கு இஸ்லாமியப் பிடிப்புள்ள மக்கள் ரமளான் மாதத்தின் ஸஹர்நேரத்தில் பாங்குபயானுக்காக உள்ள ஒலி பெருக்கிகளில் இசை முரசின் பாடல்களை ஒலிபரப்பிமுஸ்லிம்களைப் புல்லரிக்கச் செய்து விடுவார்கள்.

வெள்ளிக்கிழமையின் போது தங்கள் வீடுகளில் நாகூர் ஹனீபா பாடல்களை டேப் ரிக்கார்டர்களில்போட்டுக் கேட்டுதங்கள் இஸ்லாமியப் பற்றுதலை வெளிக் காட்டும் முஸ்லிம்கள் ஏராளம் உள்ளனர்.

தங்கள் வீட்டில் நடக்கும் பெயர் சூட்டு விழாகத்னாபெண் குழந்தைகளுக்குக் காது குத்துதல்பூப்புனிதநீராட்டு விழா மற்றும் கல்யாண வைபவங்களில் நாகூர் ஹனீபாவின் பாடல்களை அலற விட்டு தங்களதுஅபாரமான மார்க்க பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

ஹனிபா பாடல்கள் மீது அப்பாவி மக்கள் தான் பக்தி கொண்டிருக்கின்றார்கள் என்றால்  ஆலிம்பெருந்தகைகளும் இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லதமிழகம் மற்றும் இலங்கையின் பெரும் பெரும்மார்க்க மேதைகள் முதல் சாதாரண கடைநிலை ஆலிம்கள் வரை உரையாற்றும் மேடைகளில்சொற்பொழிவு துவங்கும் முன் நாகூர் ஹனீபாவின் பாடல்களை ஒலி பெருக்கிகளில் அலற விட்டு ஆனந்தம்அடைகின்றனர்.

நாகூர் ஹனீபா வெறும் கேஸட் வடிவில் மட்டுமல்லாது தனது மேடைக் கச்சேரிகள் மூலமும் தனக்கென தனிஇடத்தைப் பெற்றிருக்கின்றார்.

தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம் என்று ஒரு பாடகர் பாடலில் தான் தர்ஹாக்களுக்குப்பயணம் செய்தார் என்றால்நாகூர் ஹனீபா தன் பாட்டுக் கச்சேரியுடன் நேரிலேயே அனைத்துதர்ஹாக்களுக்கும் பயணம் செய்திருக்கின்றார்தமிழகத்தில் அவரது பாதம் படாதபாட்டுக் கச்சேரிநடக்காத எந்தவொரு பட்டி தொட்டியும் இல்லை என்ற அளவுக்கு தமிழகத்தின் தர்ஹா வரலாற்றில்பதிவாகியிருக்கின்றார்.

அந்தந்தப் பகுதிகளில் அடங்கியிருக்கும்பைசாவுக்குத் தேறாத அவ்லியாக்கள் கூட இவரது பாடல்வரிகளுக்குள் நுழைந்து அதன் மூலம் பிரபலம் அடைந்திருக்கின்றார்கள் என்றால் இவரது பாட்டின்மகிமையை நாம் என்னவென்று சொல்வது?   இந்தப் பாடல்கள் மீது முஸ்லிம்கள் கொண்ட உண்மையானஇஸ்லாமிய (?) ஈடுபாட்டை என்னவென்று வர்ணிப்பது?

ஆலிம்கள் போதனையும், ஹனிபாவின் கீர்த்தனையும்:

தமிழகத்திலும், இலங்கையிலும் மீலாது விழாக்கள் நடைபெறும் போது அங்கு புகழ் பெற்ற ஆலிம்அறிஞர்களின் போதனை நடக்கும்அதன் பின் ஹனீபாவின் வெண்கலக் குரல் கீர்த்தனையும் இசைஆராதனையும் நடைபெறும்.


மீலாது விழா ஏற்பாடு செய்த விழாக் குழுவினர்கச்சேரி தொடங்கும் மகிழ்ச்சியில்அது வரை அண்ணல்நபி (ஸல்அவர்களைப் பற்றி ஆவேசமாகப் புகழ்ந்து பேசிய ஆலிம் பெருமக்களுக்கு வழிச் செலவுக்குப்பணம் கொடுக்கக் கூட மறந்து விடுவார்கள்இதன் எதிரொலியாக கச்சேரி நடக்கும் மேடைகளில்நாங்கள் பயானுக்கு வர மாட்டோம் என்று   கூட அறிஞர் பெருமக்கள் முடிவெடுத்தார்கள் என்றால்இன்னிசை முரசின் ஆதிக்கம் எந்த அளவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஊடுறுவி இருக்கின்றது என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்த அளவுக்குப் பாமர முஸ்லிம்களுக்கு மத்தியில் தனது பாடல்களால் ஊடுறுவி இருக்கும் இவரதுபாடல்கள் தமிழகத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றால் மிகையல்ல!

தவ்ஹீதுவாதிகளின் இதயத்தில் இவருக்குக் கடுகளவு கூட இடமில்லை என்றாலும்இஸ்லாமிய பக்திப்பாடல்கள் என்ற பெயரில் தன் வீட்டில் இவரது பாடல் பதிவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமியபாமரன் தனது ஈமானைப் பறி கொடுத்து விடாமல் பாதுகாப்பது ஒவ்வொரு ஏகத்துவவாதியின் கடமைஎன்பதற்காகவும்நபி (ஸல்அவர்கள் மீது யார் பொய்யைப் பரப்பினாலும்அந்தப் பொய்யைஅந்தப் பொய்முகத்தினரை அடையாளம் காட்டுவது நமக்குக் கடமை என்ற அடிப்படையில் நமது ஆய்வுப் பார்வையைஇங்கு படர விடுகின்றோம்.

காசுக்காக கடவுளைத் திட்டும் கவிஞர்கள்:

பொதுவாகக் கவிஞர்கள் காசுக்காக யாரையும் கடவுளாக்கத் தயங்க மாட்டார்கள்அந்தக் காசுக்காககடவுளைத் திட்டவும் பயப்பட மாட்டார்கள்அவர்களுக்குக் கடவுளே காசு தான்.

அவனை அழைத்து வந்து ஆடடா ஆடு என்று ஆட விட்டுப் பார்த்திருப்பேன்வருவான்படுவான்பட்டதேபோதும் என்பான்பாவி அவன் பெண் குலத்தைப் படைக்காமல் இருந்திடுவான் என்று இந்தக் கவிஞன்கடவுளைப் பாவியாகச் சித்தரிக்கின்றான்.

கண்ணைப் படைத்துபெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்று இறைவனைக்கொடியவனாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றான்இதெல்லாம் கவிஞர்களுக்கு ஒரு பொருட்டேகிடையாதுஇதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கவிஞர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கையில்ஊறிப் போன பக்தர்கள் என்பது தான்இந்த ரகத்தில் உள்ளவர் தான் நாகூர் ஹனீபா.

இறைவனிடம் கையேந்துங்கள்அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்று ஒரு தட்டில் ஏகத்துவத்தைமுழங்குவார்மறு தட்டில்அடியார்க்கு அருள் செய்யும் அம்மாஅழகான கடலோரம் வாழ்கின்ற பீமா என்றுஏகத்துவத்திற்கு வேட்டு வைப்பார்.

ஏகத்துவத்தை நிலைநாட்டும் கருத்துக்களை விட அதற்கு வேட்டு வைக்கும் கருத்துக்களைக் கொண்டபாடல்களே அதிகம்.

நமனை விரட்ட மருந்தொன்று இருக்கின்றது நாகூர் தர்ஹாவிலே!

ஷாஹே மீரான் சஞ்சலம் தீர்க்கும் எங்கள் கஞ்ச ஷவாயே!

நீ எங்கே எங்கே ஷாகுல் மீரானேஉன் வாசல் தேடி வந்தேன் நாகூர் மீரானே!

என்று விஷம் கக்கும் வரிகளைக் கொண்ட இவருடைய பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நபி (ஸல்அவர்களையும்முஹய்யித்தீன்ஷாகுல் ஹமீது ஆகியோரை ஒரு பக்கத்திலும்அண்ணா,கருணாநிதியை இன்னொரு பக்கத்திலும் கடவுளைப் போன்று சித்தரித்து மகிழ்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் நபி (ஸல்அவர்கள் மீது பொய்யான செய்திகளை இட்டுக் கட்டிதனது பாடல்களில்பாடியிருக்கின்றார்.

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன் நோன்பு நோற்றுஇறந்து விட்டான்அவனை ஒரு சாது வந்துஉயிர்ப்பித்தார் என்று ஒரு பாடலில் பாடினார்.

பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை என்று ஏதோ ஒரு சம்பவத்தைத் தனது பாடலில் கூறினார்.

இவையெல்லாம் நபி (ஸல்அவர்கள் சம்பந்தப்படாத செய்திகள் என்பதால் அவற்றை நாம் ஆராயத்தேவையில்லைஆனால் நபி (ஸல்அவர்களைப் பற்றிய பொய்யான செய்திகளைத் தனது பாடல்களில்பாடுவதை நாம் அடையாளம் காட்டாமல் இருக்க முடியாது.

நபி (ஸல்அவர்கள் தினந்தோறும் ஒரு வீட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்களாம்அவர்கள்அவ்வாறு செல்லும் போது அந்த வீட்டில் உள்ள மூதாட்டி நபி (ஸல்அவர்கள் மீது குப்பையைக்கொட்டிக் கொண்டிருந்தாளாம்ஒரு நாள் குப்பையைக் கொட்டவில்லைஉடனே நபி (ஸல்)அவர்கள் அந்த மூதாட்டிக்கு என்ன ஆனதுஎன்று விசாரிக்கின்றார்கள்அவள்நோயுற்றிருக்கின்றாள் என்று தெரிய வருகின்றதுஉடனே நபி (ஸல்அவர்கள் அந்தப்பெண்மணியின் வீட்டுக்குச் சென்று அவளை நோய் விசாரிக்கின்றார்கள்நபி (ஸல்அவர்களின்இந்தப் பெருந் தன்மையைக் கண்டு வியந்துஇப்படிப்பட்ட நல்ல பண்பாளர் மீதா நாம்குப்பையைக் கொட்டினோம் என்று வருந்தி இஸ்லாத்தில் இணைகின்றாள்.

இசை முரசு .எம்ஹனீபா இதயத்தை ஈர்த்துஇரக்கமுறச் செய்யும் வண்ணம் தன் பாட்டில் வடித்தசம்பவம் இது தான்சொல்வதற்குச் சுவையாகவும்கேட்பதற்கு ரசனையாகவும் உள்ள இந்தச் செய்திமுஸ்லிம்களிடம் மட்டுமல்லமாற்று மத நண்பர்களும் இதை மேற்கோள் காட்டும் அளவுக்கு அந்தப் பாட்டில்இடம் பெற்றுள்ள இந்தக் கருத்து பரவியுள்ளதுஇதை நபி (ஸல்அவர்களின் வாழ்வின் நிகழ்ந்த ஒரு சிறப்புநிகழ்வு என்று கருதி முஸ்லிம்கள் நடத்தும் விழாக்களில் வந்து சொற்பொழிவாற்றும் போதுகுறிப்பிடுகின்றனர்.

ஆனால் இப்படியொரு சம்பவம் நபி (ஸல்அவர்களின் வாழ்வில் நடந்ததாக எந்தவொரு ஆதாரப்பூர்வமானஹதீஸ் நூலிலும் இடம் பெறவில்லைஎனவே இது நபி (ஸல்அவர்கள் மீது சொல்லப்படும் அப்பட்டமானபொய்யாகும்.

ஒரு நாள் மதீனா நகர்தனிலே... என்று துவங்கும் ஒரு பாடல்அந்தப் பாடலின் கருத்து இது தான்.

ஒரு நாள் மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போதுஇறுதிநாள் வரப் போகின்றதுஅதனால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுங்கள்என் மீது ஏதும் குறைஇருந்தாலும் அதைச் சொல்லுங்கள்அதை நான் நீக்கிக் கொள்கிறேன் என்று கூறினார்கள்அப்போதுஉக்காஷா என்ற நபித் தோழர் எழுந்துதங்கள் மீது எனக்கு ஒரு குறை உள்ளது என்று கூறினார்உடனேநபித் தோழர்கள் அவர் மீது ஆவேசப் பட்டனர்நபி (ஸல்அவர்கள் நபித் தோழர்களை அமைதிப் படுத்திவிட்டுஅந்தக் குறையைச் சொல்லுங்கள் என்று உக்காஷாவிடம் கூறுகின்றார்கள்.

பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது தாங்கள் அமர்ந்திருக்கும் போதுநான் ஒட்டகத்தின் கயிற்றைப்பிடித்துக் கொண்டு நடந்து வந்தேன்நீங்கள் சாட்டையால் ஒட்டகத்தை அடிக்கும் போது சட்டென்று ஓர்அடி என் மீது விழுந்து விட்டதுஅதற்குப் பதிலாக தங்களை நான் அடித்திட அனுமதி வேண்டும் என்றுஉக்காஷா கூறினார்எதிலும் நீதி தவறாத நபி (ஸல்அவர்கள் அவரது கோரிக்கையை ஏற்றார்கள்.அப்போது உக்காஷாஎன்னை அடித்த சாட்டை இங்கு இல்லைஅது தங்களின் வீட்டில் உள்ளதுஎனதுஎண்ணம் நிறைவேற அதை எடுத்து வரச் சொல்லுங்கள் என்று கூறினார்உடனே நபி (ஸல்அவர்கள்,பிலாலை அனுப்பி அதை எடுத்து வருமாறு கூறினார்கள்.

பிலால் (ரலிஅழுது கொண்டே நபி (ஸல்அவர்களின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த ஃபாத்திமா(ரலி)யிடம் சபையில் நடந்ததைக் கூறினார்கள்உடனே ஃபாத்திமா (ரலிஅழுதுஉடல் நலம் சரியில்லாதஎன் தந்தையார் இந்தத் தண்டனையை எப்படித் தாங்குவார்கள்அதற்குப் பதிலாக எங்களை அடிக்கச்சொல்லுங்கள் என்றார்பெருமை நிறைந்த பாட்டனாருக்குப் பதிலாக எங்களை அடிக்கட்டும் என்றுஹஸனும்ஹுசைனும் கூறி விட்டு சாட்டையை எடுத்துக் கொண்டு சபைக்கு வந்தார்கள்சாட்டையைவாங்கி நபி (ஸல்அவர்கள் உக்காஷாவிடம் கொடுத்தார்கள்அதை வாங்கிய உக்காஷாஎன்னை நீங்கள்அடிக்கும் போது நான் சட்டையில்லாமல் இருந்தேன்எனவே நீங்களும் சட்டையைக் கழற்றுங்கள் என்றுகூறினார்அப்போதும் நபித்தோழர்கள் ஆவேசப்பட்டனர்நபி (ஸல்அவர்கள் அமைதிப்படுத்தி விட்டுதமதுசட்டையைக் கழற்றினார்கள்அப்போது உக்காஷா சாட்டையைத் தூக்கி எறிந்து விட்டு ஓடி வந்து,ஆவலுடன் நபி (ஸல்அவர்களைத் தாவி அணைத்துக் கொண்டார்நுபுவ்வத் ஒளிரும் நபி (ஸல்அவர்களின்முதுகில் தான் நினைத்தது போல் முத்தமிட்டார்உணர்ச்சி பொங்க மீண்டும் முத்தமிட்டார்நபி (ஸல்)அவர்கள்உக்காஷாவின் மனம் மகிழஉமக்கு சொர்க்கம் உண்டு என்று கூறி துஆச் செய்தார்கள்சுற்றிநின்ற நபித் தோழர்கள் வாழ்த்து தெரிவிக்கமஸ்ஜிதுந் நபவீ மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

இவ்வாறாக ஒரு நீண்ட சம்பவத்தைத் தன்னுடைய கம்பீரமான குரலில் ஏற்றஇறக்கத்துடன் நாகூர்ஹனீபா பாடுவதைக் கேட்கும் யாரும் அதில் லயித்து விடுவார்கள்நபி (ஸல்அவர்களின் வாழ்வில்நடந்ததாகச் சொல்லப்படும் அந்த நிகழ்ச்சியை எண்ணிபுல்லரித்து விடுவார்கள்இந்தச் சம்பவம்உண்மையானதா என்பதைப் பார்ப்போம்.

ஏறக்குறைய இது போன்ற ஒரு செய்தி தப்ரானியின் முஃஜமுல் கபீர் என்ற நூலில் 2676வதுஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுஆனால் இது பலவீனமானஇட்டுக் கட்டப்பட்டசெய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் முன்இம் பின் இத்ரீஸ் பின் ஸினான் என்பவரைப் பொய்யர்என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.

பொய்யர்ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடியவர் என்று மஜ்மஉஸ் ஸவாயிதில் ஹைஸமீ கூறுகின்றார்.

வஹப் என்பவர் மீது இவர் பொய் சொல்பவர் என்று அஹ்மத் இப்னு ஹம்பல் கூறுகின்றார்இப்னுல் மதீனி,அபூதாவூத்நஸயீ ஆகியோர் இவர் நம்பகமானவர் இல்லை என்று கூறுகின்றார்கள்இவர் ஹதீஸ்களில்மோசமானவர் என்று இமாம் புகாரி கூறுகின்றார்இவரை ஆதாரம் கொள்வது ஹலால் இல்லை என்றுஇப்னு ஹிப்பான் கூறுகின்றார்இவரும் இவரது தந்தையும் விடப்பட்டவர்கள் என்று தாரகுத்னீகூறுகின்றார். (நூல்இப்னுல் ஜவ்ஸீயின் அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)

எனவே இந்தச் செய்தி பலவீனமானஇட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும்இந்தச் செய்தியின்அடிப்படையில் இயற்றப்பட்ட நாகூர் ஹனீபா பாடலும் நபி (ஸல்அவர்கள் மீது இட்டுக் கட்டப்பட்ட ஒருசெய்தியை அடிப்படையாகக் கொண்ட பாடல் என்பதில் சந்தேகமில்லை.

எந்தத் தலைவர் மீதும் யாரும் எந்தச் சம்பவத்தையும் சொல்லி விட்டுப் போகலாம்அதைச் சொல்பவருக்குஅதனால் பெரிய அளவுக்குப் பாதிப்பு வந்து விடாதுஆனால் அதே சமயம் நபி (ஸல்அவர்கள் மீதுஅவர்கள்சொல்லாததைசெய்யாததைஅங்கீகரிக்காததைச் சொன்னால் அவர் போய் சேருமிடம் நரகம் ஆகும்.இதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

"என் மீது பொய் சொல்வ தென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்லஎன் மீதுவேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : முகீரா (ரலி)நூல் : முஸ்லிம்.

நபி (ஸல்அவர்கள் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்பவருக்குவிடுக்கப்படும் எச்சரிக்கையாகும்.

இந்த எச்சரிக்கையைத் தாங்கி நிற்கும் அறிவிப்புத் தொடர்கள் கிட்டத்தட்ட 72 வழிகளில்இடம்பெறுகின்றனஇந்த அடிப்படையில் இந்தச் செய்தி முதவாத்திர் என்ற தகுதியைப் பெற்று விடுகின்றது.முதவாதிர் என்றால் ஏராளமானவர்களால் ஒருமித்து அறிவிக்கப்படும் ஹதீஸ்களாகும்.

கேட்பதற்கு இனிய சம்பவமாக இருந்தாலும் அதை நபி (ஸல்அவர்கள் மீது இட்டுக் கட்டி கூறினால்அவ்வாறு கூறுபவர் செல்லுமிடம் நரகம் தான்அந்த அடிப்படையில் நாகூர் ஹனீபா தன்னுடைய பாடலுக்குச்சரியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்அல்லது தான் பாடிய அந்தப் பாடல் தவறானது என்றுபகிரங்கமாக பிரகடனப் படுத்த வேண்டும்.

அவ்வாறு அவர் செய்ய முன் வரவில்லை என்றால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களின் எச்சரிக்கைப் படிநரகத்தில் ஓர் இடத்தை முன் பதிவு செய்து கொள்கின்றார் என்றே அர்த்தம்.

இந்த நாகூர் ஹனீபா மற்றும் இது போன்ற இஸ்லாமிய (?) பாடகர்களால் பாடப்படும் இறைவனுக்குஇணை கற்பிக்கும் பாடல்களையும்நபி (ஸல்அவர்கள் மீது பொய்யுரைக்கும் பாடல்களையும்இஸ்லாத்தின் ஓர் அங்கமாக எண்ணிகேட்டு ரசித்துக் கொண்டிருப்பவர்கள் இனியாவது திருந்தவேண்டும்.