ஸலஃபிகள் என்ற முன்னோர்களை கண்மூடி பின்பற்றும் கூட்டம், பிஜே ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை மறுத்துவிட்டார் என்று சில விஷயங்களை உளறி தள்ளியிருந்தார்கள். அதில், பிஜே ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கிறார், ஸஹாபாக்களையும் ஸலஃபிகளையும் பின்பற்றுவது இல்லை என்று கிறுக்கி தள்ளியிருந்தனர்.
ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை இதுவரை பிஜேவை தவிர்த்து வழிகேட்ட கும்பல்கள் தான் மறுத்துள்ளன என்று கதைவிட்டுயிருந்தார்கள். குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை பல நல்ல அறிஞர்கள் மறுக்க வேண்டும் சட்டம் சொல்லியுள்ளனர் என்று அடுக்கடுக்கான வாதங்களை வைத்தவுடன் பதில் தெரியாமல் திகைத்து போயினர், ஒட்டம் எடுத்தனர். அதைபோல், ஸஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடு என்று நாம் நிருபித்தவுடன் ஒட்டம் எடுத்தனர்.
பதில் இல்லாமல் வலுவாக சிக்கிக்கொண்ட பின், ஹதீஸ்கள் பட்டியலை வெளியிடுங்கள் என்று திசை திருப்புகிறார்கள்.
அவர்களின் ஆர்வத்திற்காக குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ் ஒன்றை நாம் வெளியிடுகிறோம். இந்த ஹதீசை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறுவதோடு நின்றுவிடாமல், அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
நாங்கள் ஹதீசை ஏற்றுக்கொள்வோம், ஆனால் அதை செயல்படுத்த மாட்டோம் என்றால், அது ஏமாற்று வேலை. இந்த ஹதீசை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை செயல்படுத்துவும் முடியாது.
இது சாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே உரிய சட்டம் என்றும் கதை விடாமல், அதை செயல்படுத்திக் காட்டுங்கள். அவ்வாறு செயல்படுத்தவில்லை என்றால், நீங்களும் இந்த ஹதீசை மறுக்கிறீர்கள் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.
இந்த ஹதீஸின் அடிப்படையில் சவூதியில் பெண்கள் தனியாக வாகன ஓட்டுநர்கள் உடன் சொல்ல வேண்டியிருப்பதால், அந்த பெண்கள் ஒட்டுநர்களுக்கு பால் கொடுத்து, சகோதரர்களாக ஆக்க வேண்டும் என்று சவூதியின் ஸலஃபி அறிஞர் ஒருவர் ஃபத்வா கொடுத்தார். இந்த ஃபத்வாவிற்கு சவூதியில் உள்ள பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சவூதியில் கூட இந்த சட்டத்தை நடைமுறை படுத்தமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்க அறிவு இல்லாமல், தங்களால் வழிகேடர்கள் என்று கூறப்பட்ட, இஸ்மாயில் சலஃபி போன்றவர்களின் ஆக்கங்களை எடுத்து வாந்தி எடுக்கும் சில்மியின் முரிதுகள் வெட்கப்பட வேண்டும். அல்பானியின் மாணவர் என்றும், நான் தான் தமிழ் உலகத்திலேயே நன்கு படித்தவன் என்று உளறும் சில்மி சுயமாக ஆய்வு செய்ய தெரியாதவர் என்பதற்கு இது ஒரு தக்க சான்று.
இந்த நேரத்தில் சவூதி மார்க்க அறிஞர் ஒருவர், அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த ஒவ்வொரு ஹதீசும் அதன் கருத்து சரியாக அமைந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்ற பிஜேவின் கருத்தை முன்வைத்தார். அவரை எதிர்க்க இந்த அரபு நாட்டு அடிமை கூட்டத்திற்கு திராணியில்லை என்பது ரகசியம். பிஜேவின் கருத்தை சொன்ன அறிஞரை இந்த குழப்பிகள் கூட்டம் எதிர்க்க முடியாது. எதிர்த்தால், சம்பளம் வராது.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்-1:

பருவ வயதை அடைந்தவருக்கு பால்புகட்டுதல்:
நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள் சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார். மேலும் அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல் (சாலிமை அபூஹுதைஃபா வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்) மேலும் அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை (யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.
ஆகவே நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அது தான் அல்லாஹ்விடத்தில் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரராகவும் உங்கள் மார்க்கச் சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள் எனும் (33 : 5ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது).
பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார். பிறகு அபூஹுதைஃபா பின் உத்பா அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் சாலிமை பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33 : 5 ஆவது) வசனத்தை அருளி விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5088)
(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே. அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2878)
சஹ்லா (ரலி) அவர்களும் அவரது கணவர் அபூஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது.
ஸலஃபி மதஹபினர் இந்த ஹதீசை செயல்படுத்துகிறார்களா? அல்லது மறுக்கிறார்களா? என்று பார்ப்போம்.
இந்த ஹதீஸ் குர்ஆனுடன் எவ்வாறு முரண்படுகிறது என்பது தேவைப்பட்டால் பின்னர் விளக்கப்படும்.
இந்த ஹதீஸ் குர்ஆனுடன் எவ்வாறு முரண்படுகிறது என்பது தேவைப்பட்டால் பின்னர் விளக்கப்படும்.