அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வளைந்து கொடுக்காத தீவிர பிரச்சாரத்தால், சமீப காலமாக நபிவழித் திருமணங்கள் அதிகரித்துள்ளன.
மேலத்தெரு மற்றும் கிழத்தெருக்களில் நபிவழித் திருமணத்திற்கு ஜமாஅத்தார்கள் திருமண பதிவேட்டை தந்து, நீங்கள் நபிவழியில் திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள்.
பிலால் நகர் ஜமாஅத்தார்கள், இதற்கு ஒருபடி மேல சென்று நபிவழி திருமணத்திற்கு பதிவோடு தந்து, பள்ளிலேயே திருமணத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்றார்கள். பிலால் நகர் ஜமாஅத்தார்கள் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.
கடந்த 22.1.2012 நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமகன் 3 கிராம் மோதிரம் மஹராக கொடுத்து திருமண விருந்தும் மணமகன் செலவில் வழங்கினார், அல்ஹம்துலில்லாஹ்.
பிலால் நகர் பள்ளியில் நடைபெற்ற இந்த திருமணத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் நடத்திவைத்தார்.
நபிவழியை நடைமுறைப்படுத்தியதற்காக பள்ளியில் அடிக்கப்பட்டவர்களுக்கு, இன்று பள்ளியிலேயே நபிவழித் திருமணங்களை நடத்த அனுமதி கிடைத்து இருப்பது அல்லாஹ்வின் அருள் தான். அல்ஹம்துலில்லாஹ்.
வரதட்சணை திருமணங்களுக்கு பட்டுக் கம்பளம் விரித்து, நபிவழித் திருமணத்திற்கு அனுமதி மறுக்கும் ஜமாஅத்தார்கள், அல்லாஹ்வுக்கு அஞ்சி தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.