சகோதரர் மனாஸ் இலங்கை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள். என்று சொல்லி எங்களை விமர்சிக்கும் நீங்கள் மக்களுக்கு சத்தியத்தைச் சொல்லும் யோக்கியத்தனத்தை மக்களுக்கு நாங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டவேண்டும். உங்கள் அறிவுக் கடலைக்கொண்டு குர்ஆனுக்கு மாற்றமாக படுபாதகமான செய்திகளையும் நபிகளாருக்கு இழுக்கு ஏற்படும் செய்திகளுக்கு நீங்கள் விளக்கம் தருகிறேன் என்று சொல்லும் உங்கள் வார்த்தைக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அல்லாஹ்வுக்குப் பயந்து எங்களை விமர்சிக்கும் முன்னர். ஒரு கணம் உங்கள் நிலையை யோசிக்க வேண்டும் சலபி சலபி என்று மூச்சு விடும் நீங்கள் இந்த சலபி என்ற வார்த்தையை எங்கிருந்து எடுத்தீர்கள். முதலில் இந்த வார்த்தை எப்போது பிரயோகிக்கப்பட்டது. யாருக்குப் பிரயோகிக்கப்பட்டது என்பதை விளக்கவேண்டும்?
இப்போது விசயத்திற்கு வருவோம்.
நீங்களும் நானும் அனைத்து முஸ்லீம்களும் ஏற்றுக் கொண்ட ஒரு செய்திதான் அல்குர்ஆன் முழுமைப் படுத்தப்பட்டுள்ளது.
அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். அல்குர்ஆன்:15:09
இதில் யாருக்கும் கூட்டல் குறைத்தல் செய்யமுடியாது என்பதை அல்லாஹ் திருமறையில் தன்னுடைய வேதத்தை தானே பாதுகாப்பேன் என்று சொல்கிறான். அப்படி இருக்கும் போது அல்குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது. அது ஓதப்பட்டுக்கொண்டும் இருந்த நிலையில்தான் நபியவர்கள் மரணித்தார்கள். என்று அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதோ அந்த செய்தி:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்'' என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப் பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.(முஸ்லிம் 2876)
அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் இந்த ஒரு செய்திக்கு முதலில் நீங்கள் பதில் தரவேண்டும் பத்து வசனமாக இருந்து மாற்றப்பட்ட ஐந்து வசனங்கள் எங்கே?
உங்கள் கூற்றின் படி குர்ஆனுக்கு ஹதீஸ் முரண் படவில்லையென்றால் அந்த வசனங்கள் இன்றுள்ள குர்ஆனில் இருக்கின்றதா? உங்களால் காட்ட முடியுமா? அல்லது மாற்றுமதத்தவர்கள் இதை காட்டி விமர்சிக்கும் போது உங்களால் பதில் சொல்ல முடியுமா?அல்லது இது தான் அந்த வசனம் என்று காட்ட முடியுமா?
அடுத்தவர்களை விமர்சிக்கும் முன்னர் நான் இருக்கும் கொள்ளை சரிதானா? என்பதை ஒரு கணம் அல்லாஹ்வையும் மறுமை வாழ்வையும் முன்னிறுத்தி ஆழமாக சிந்தியுங்கள். அப்போது புரியும் குறை பிடிக்கத்தெரிந்த உங்களுக்கு நிறைகாணத் தெரியுமா? விமர்சிப்பதென்றால் ஏராளமான செய்திகள் உள்ளது.
முதலில் நீங்கள் இதற்கு மறுப்புக் கொடுங்கள் அடுத்தடுத்து கேள்விக்கணைகள் உங்களை நோக்கி எறியப்படும். உங்கள் வாதத்தின் படி ஹதீஸ் முரண்படாது என்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தைப் பாதுகாக்கவில்லை அல்லாஹ்வின்தூதரும் மார்க்த்தை முழுமைப் படுத்தவில்லை என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்
சலஃபி அவர்களே உங்கள் அறிவுக் கண்னைக் கொஞ்சம் திறக்க முடியுமா?