அதிராம்பட்டினத்தில் கடந்த 10.11.2011 வியாழக்கிழமை மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு (புதுக்குடி நெசவுத்தெரு)வில் நடந்த தீ விபத்தால் மூன்று வீடுகள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. தீ விபத்தில் சேதம் அடைந்த குடும்பங்களுக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இந்த வருட ஹஜ்ஜிப் பெருநாளில் பெறப்பட்ட குர்பானி தோல்கள் மூலம் கிடைத்த பணத்தில் இருந்து மூன்று குடும்பங்களுக்கும் தலா 5000 ரூபாய் விதம் 15000 ரூபாய் அதிரை கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.