Sunday, October 19, 2014

முத்துப்பேட்டையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்! - பிஜேபி மாநில செயலாளர் கருப்பு முருகானந்ததிற்கு அழைப்பு !

கருப்பு முருகானந்தம் இல்லம் உட்பட வீடு வீடாக சென்று மாற்று மத சகோதரர்களுக்கு அழைப்பு!

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பிறமத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கொய்யா மஹாலில் நாளை 19-10-2014 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்கான அழைப்புபணி இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது மங்களூர் செம்படவன்காடு ஜாம்புவானோடை. கல்லடிகொல்லை போன்ற முத்துப்பேட்டையை சுற்றியுள்ள. கிராமங்களில் வீடுவீடாக பத்திரிக்கை. கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது

நாம் பத்திரிக்கை கொடுத்து இந்த நிகழ்ச்சியை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் சொல்லிவிட்டு அழைப்பு பணி செய்யும்போது

பிறமத மக்கள் நம்மிடம் காட்டிய மரியாதையும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட விதமும் நெகிழவைத்து விட்டது.

வீட்டுக்கு வந்த நீங்கள் சாப்பிட்டு விட்டுதான் போகனும் என்று கூறியதும் டீ யாவது குடியுங்கள் என வற்புறுத்தியது

மழை கடுமையாக பெய்கிரதே குடையாவது தரட்டுமா என் அக்கரையோடு விசாரித்தது நீங்கள் நேரடியாக வீடுதேடி வந்து அழைத்துள்ளீர்கள். அவசியம் வருகிறோம் என கூறியது போன்ற சம்பவங்கள் நமக்கு புதுமையாக இருந்தது

தாவாவை இன்னும் வீரியமாக செய்தால் மிக எளிதாக பிறமத மக்களை வென்றடுக்கலாம் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது

இதில் முக்கியமாக ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை பகுதியில் வீடு வீடாக பத்திரிக்கை கொடுத்து அழைப்பு செய்தபோது

பிஜெபி பொதுசெயளாலர் கருப்பு என பட்டம் சூட்டிகொண்ட முருகானந்தம். வீட்டிற்கு சென்றோம்

அவரின் அரசாங்க பாதுகாவலர் துப்பாக்கியோடு நம்மை எதிர்கொண்டார் நாம் எதற்காக வந்துள்ளோம் என்பதை சொன்னதும் காத்திருக்க சொன்னார்

தகவல் போனதும் உடனே வெளிவந்த முருகானந்தம் நம்மை வரவேற்றார் நாம் நடத்தும் நிகழ்ச்சியை பற்றி விளக்கிசொல்லிவிட்டு இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேள்வியாக கேளுங்கள் என அழைத்தோம்.

அவசியம் வருவதாக உறுதியளித்தார் தேனீர் அருந்திவிட்டு செல்லும்படி கூறினார் அதை இதமாக மறுத்துவிட்டு திரும்பினோம்.

இந்த இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் நிகழ்ச்சிக்கான அழைப்புபணி வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் என்று சொல்லலாம் இந்த நிகழ்ச்சி வெற்றிபெற நீங்களும் துவா செய்யுங்கள்.

தகவல்: முத்துபேட்டை அன்சாரி


2 கருத்துரைகள் :

எல்லாம் வல்ல அல்லாஹ்,அவருக்கு ஹிதாயத் கொடுப்பானாக

அருமையான அழைப்பு அல்லாஹ்வே .பேஈதுமானவன் .அழைப்புபணி .நம்மை .சார்ந்தது .இதற்க்கு .வெற்றியை .தருவது .அல்லாஹ்வின் .நாட்டம் .இதில்கலந்தவர்களுக்கு .இறைவனின் .சாந்தியும் .சமாதானமும் .என்றும் .நிலவ .அருள் புரிவானாக

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.