இசையில் ஏஆர் ரஹ்மானை தூக்கி சாப்பிட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள்!
நாங்கள் அரசியலுக்கு போனால் அரசியல் சாக்கடையை சந்தன அருவியாக மாற்றி விடுவோம் என்று சவடால் விட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள் மயிலாடுதுறையில் ஹைதரி அலியை எம்பி ஆக்க இசை அமைக்கும் அற்புத காட்சி. தவ்ஹீத் வேண்டாம் என்றவர்கள் எப்படி தருதலைகளாக மாறுகிறார்கள் என்பதற்கு தமுமுக சார்பாக வெளியிடப்பட்ட இந்த வீடியோவே சாட்சி.
இசை கூடாது என்று கட்டுரை போடும் தமுமுகவின் கள்ள ஆதரவாளர்கள் இவற்றை கண்டிப்பார்களா?
அதிராம்பட்டிணத்தில் கந்தூரியின் இசை அடிக்கிறார்கள் அது தவறு என்று சொல்லும் தமுமுக மாவட்ட செயலாளர், தமுமுகவினரே இசை அடிக்கும் போது கண்டிக்காமல் இருப்பது தான் மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பதா?
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.
நூல்: புகாரி 5590
3 கருத்துரைகள் :
இப்படி மாறி மாறி குறை சொல்லிகிட்டே இருங்க சுலபமா நம்மல வீழ்த்திடுவங்க . மார்க்கம் இப்படிதான் சண்ட விளக்க சொன்னிச்சா .
அஸ்ஸலாமு அலைக்கும்.
//இப்படி மாறி மாறி குறை சொல்லிகிட்டே இருங்க சுலபமா நம்மல வீழ்த்திடுவங்க . மார்க்கம் இப்படிதான் சண்ட விளக்க சொன்னிச்சா .//
மார்க்கத்திற்கு முரணான செயலை தனிநபரே அல்லது இயக்கமே செய்யும் போது அதை விமர்சிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயல், வலியுறுத்தப்பட்ட செயல். இஸ்லாத்தில் முஸ்லிம் என்ற பெயருக்காக ஒற்றுமை என்பது இல்லை. ஒற்றுமை என்பது கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டும். தவறு செய்பவரை கண்டிக்க கூடாது என்றால், வட்டி வாங்குபவன், மது அருந்துபவன், விபச்சாரம் செய்பவன் இவர்களை எல்லாம் விமர்சிக்க கூடாது அல்லவா?
தவறுகளை கையால், நாவால், அல்லது மனதால் தடுக்க வேண்டும் என்றும், ஒற்றுமை இல்லாமல் போனாலும் தவறை கண்டிக்க வேண்டும் என்பதற்கு ஸஹாபாக்களின் செயலும் கீழ்காணும் நபிமொழியும் ஆதாரமாக உள்ளது.
தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முதன்முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார்.(அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.)அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று,” “சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும் என்று கூறினார்.
அதற்கு மர்வான் “முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டுவிட்டது (இப்போது அது நடைமுறையில் இல்லை) “ என்று கூறினார்.(அப்போது அங்கிருந்த$) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்,இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றிவிட்டார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்:
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்.
ஆதாரம்: முஸ்லிம் 78
இது போன்ற அனாச்சாரமான செயல்களை தவ்ஹீத் ஜமாஅத் சுட்டிக் காட்டினால், மற்றவர்களை குறை கூறுவதாகவும், திட்டுவதாகவும் அர்த்தமாம்!!!!!!!!!
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.