Thursday, May 01, 2014

நாதியற்று போன கந்தூரி திருவிழா!

இந்த ஆக்கம் அதிரையில் நாதியற்று போன கந்தூரி திருவிழாவை பற்றி வெளியிடப்பட்டது, இப்போது அதிரையில் உள்ள இன்னோரு தர்ஹாவிலும் கந்தூரி திருவிழா நாதியற்று போய்யுள்ளதால், அந்த ஆக்கத்தை மீள்பதிவு செய்கிறோம். 

நாதியற்று போன கந்தூரி திருவிழா!

ஒரு காலத்தில் அதிராம்பட்டிணத்தில் கந்தூரி திருவிழாக்களால் களைகட்டியது. மேலத்தெரு தர்ஹா கந்தூரி, கடல்கரைத் தெரு தர்ஹா கந்தூரி, பெரிய தைக்கால் மற்றும் சிறிய தைக்கால்களில் இருந்த குட்டி தர்ஹாக்களின் திருவிழாக்கள் என்று அதிரையில் இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள் நடைபெற்றன. மக்கள் இஸ்லாத்தில் பெயரால் நரக படுகுழிக்கு அழைக்கப்பட்டனர். ஆலிம்கள் என்ற பெயரில் நடமாடிய சாமியார்கள் பாத்திஹா ஒதி, குறவன் குறத்திகள் (குறவர் இனத்தை சார்ந்த பெண்கள்) தொடை தெறிய ஆட வைத்து  கந்தூரி திருவிழாவை துவக்கி வைத்தனர். தர்ஹாக்கள் புனிதமானவை என்று சொல்லிக்கொள்ளும் கூறுகெட்ட ஆலிம்சாக்கள், அங்கு ஆண்களையும் பெண்களையும் கலக்க அனுமதித்தனர். பாத்திஹா ஒதி ஆரம்பித்து வைக்கப்பட்ட கந்தூரி திருவிழா இரவுகளில் பெண்களை தொடை தெரிய மேடையில் 'கொய்ய காய்க்கு ஆசைப்பட்டு கொழுந்தநாரை வைச்சுகிட்டேன்' என்று பாடலை ரசிக்கும் ஆண்களை கையை காட்டி காம களியாட்டங்கள் நடைபெற்றன. கந்தூரி திருவிழாக்களுக்கு வரும் குடிகார அவ்லியா பக்தர்கள் தெருக்களில் நின்று கந்தூரி விழாக்களை காண வந்த பெண்களை கேளி கிண்டல் செய்வார்கள். இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இசை கச்சேரிகள் காதை கிழிக்கும். தொழுகை நேரங்களில் குடிகார அவ்லியா பக்தர்களும் அவர்களின் காம களியாட்டத்தை பாத்திஹா ஒதி துவக்கி வைக்கும் ஆலிம்கள் என்ற கேடுகெட்ட ஜென்மங்களும் இசை கச்சேரிகளை நிறுத்த மாட்டார்கள்.




இந்த அநியாங்களையும் இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்ற இணைவைப்பு கொடுமையையும்  எதிர்த்து பிரச்சாரம் செய்த தவ்ஹீத்வாதிகள் அடித்து துவைக்கப்பட்டனர், எண்ணற்ற துன்பங்களுக்கும் அடங்குமுறைகளுக்கும் ஆழ்படுத்தப்பட்டனர். வழக்குளை எதிர்கொண்டனர். தவ்ஹீத்வாதிகளின் இடைவிடாத பிரச்சாரத்தால் இன்று கந்தூரி திருவிழாக்களுக்கு யாரும் நிதி உதவி செய்வது இல்லை. அன்று ஊரே கூடி நின்று கண்டு ரசித்த இந்த கந்தூரி திருவிழா, இனறு அனாதையாக ஆக்கப்பட்டடுள்ளது. மார்க்கப்பற்று சற்றும் இல்லாதவர்களும் குடிகார அவ்லியா பக்தர்களையும் தவிர யாரும் இன்று கந்தூரி திருவிழாக்களை பார்ப்பது இல்லை. இன்ஷா அல்லாஹ், ஏகத்துவம் என்ற தவ்ஹீத் கொள்கை அதிரையில் எஞ்சியிருக்கும் தர்ஹாக்கள் என்ற இணைவைப்பு ஆலயங்களையும், பள்ளிகளிலேயே உயர்த்தி கட்டி வைக்கப்பட்டுள்ள கப்ர்களையும் உடைத்து நொறுக்கும் . இவற்றை இன்று இணைவைப்பு ஆலயங்களையும் நிர்மாணிப்பவர்களின் வாரிசுகளே கூட உடைத்து நொறுக்கலாம்.


அன்று தவ்ஹீத்வாதிகள் நாதியற்றவர்களாய் இருந்தார்கள் இன்று கந்தூரி திருவிழாக்களும் அதை நடத்துபவர்களும் தனித்து விடப்பட்டு நாதியற்று போய்விட்டார்கள்.


அறியாமல் கப்ர் வணக்கத்தில் ஈடுபடும் நமது சகோதர சகோதரிகள் அதை விட்டு மீண்டு வர துஆ செய்வோம், பிரச்சாரத்தையும் வீரியப்படுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.


உடைக்கும் காலம் துரத்தில் இல்லை... இன்ஷா அல்லாஹ்:

“தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 1609, அஹ்மத் 1175, திர்மிதீ 970, அபூதாவூத் 2801

ஒவ்வோரு தவ்ஹீத்வாதியும் மேற் காணும் நபிமொழியை செயல்படுத்த வேண்டிய நிலை வரும் அளவுக்கு பிரச்சாரம் செய்து இணைவைப்பை  துரத்தி அடிக்க வேண்டும்.

குறிப்பு: 
இந்த ஆக்கத்தில் நீங்கள் காணும் புகைப்படங்கள் இந்த வருட கடல்கரைத் தெரு கந்தூரி தேரோட்டத்தில் எடுக்கப்பட்டது. கந்தூரி திருவிழா ஊர்வலத்தில் மக்கள் கூட்டமின்றி இருப்பதை காணுங்கள்.

புகைப்பட உதவி: அதிரை நியூஸ் இணையதளம்

தொடர்புடையவை:

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு!

4 கருத்துரைகள் :

வரும் ஆண்டு இந்த கந்தூரி என்கின்ற காவடி இல்லாமல் போக எல்லாம் வல்ல அல்லாஹுத்தால வெற்றியய் அருளுவானாக ஆமீன்.

Fazee Canada

இந்த வருடம் கந்தூரி திருவிழா நாதியற்றும் கேவலப்பட்டு போனதற்கு தவ்ஹீத் அமைப்புகள் காரணமாக இருந்தாலும் முக்கியமான காரணம் கந்தூரி எடுத்தும் தெருவைச்சாந்த மக்கள் தான் ஒரு காலத்தில் 10 வயது முதல் 60 வயதினர் வரை இந்த விழாவில் கலந்துக்கொள்பவர்களாக இருந்தனர் இப்பே மேலத்தெரு கந்தூரி என்று சொல்வதைக்கூட மேலத்தெரு மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவர்கள் விளிப்புனர்வு அடைந்திருக்கிறார்கள் கந்தூரி எடுக்கும் தெருவில் உள்ள இளைஞர்களின் ஆதரவு இல்லாததன் காரணமாக தான் அவர்கள் இந்த வருடம் அடங்கிபோனார்கள்

இதுபோல் கடற்கரைத்தெருவாசிகளும் இளைஞர்களும் கந்தூரிக்கு எதிராக மேலத்தெரு வாசிகள் எப்படி செயல்பட்டார்களோ அதைவிட கந்தூரியே நடைபெறாமல் இருக்கும் அளவுக்கு உங்களுடைய எதிர்ப்புகளை காட்டுங்கள்

//அமீருக்கு விளக்கம் தரருங்கள் ஜமீல் காக்கா//

'அமர' எனும் அரபுச் சொல்லின் வேரடி வினையிலிருந்து பிறந்த வினைப் பெயர் 'அமீர்' ஆகும்.

'அமர' என்றால் "கட்டளையிட்டார்" என்பது பொருள். ஒரு குழுவினருக்குக் கட்டளை இடும் தகுதி பெற்றவர் 'அமீர்' என்று அழைக்கப்படுவார்.

'அமீர், அதிரை தாருத் தவ்ஹீத்' என்றால் அதிரை தாருத் தவ்ஹீத் உறுப்பினர்களுக்குக் கட்டளை இடும் தகுதி படைத்தவர் எனப் பொருள்.\\

இது சரியா?

அஷ்ரப் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அமீர் கட்டளையிடும் அனைத்து விஷயங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்பது வழிகேடு. இதை ஜாக் போன்ற வழிகெட்ட இயக்கங்கள் தங்களின் அப்பாவி தொண்டர்களை ஏமாற்ற வைத்து இருக்கும் தந்திரம்.

அமீர் என்றால் யார்? அவருக்கு என்ன முக்கியத்துவம் என்பதை அறிய கீழ்காணும் நூலை பார்வையிடவும்.


http://www.onlinepj.com/books/ameeruku_kattupaduthal/

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.