Saturday, May 31, 2014

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 30.5.14(வீடியோ)

சுவர்க்கத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருப்பவர்கள் யார் யார்

சமுதாய துரோகி கேடி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்!

சமுதாய துரோகி கேடி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்!

தவ்ஹீத் ஜமாஅத் நடத்த உள்ள சிறைசெல்லும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதோடு, நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகளின் கற்பொழுக்கத்தையும் கேவலமாக பேசியுள்ளான் சம்சுதீன் விஷமி என்ற சமுதாய துரோகி.

ஓரினசேர்க்கை செய்து மாட்டிக் கொண்டதால் இந்த சமுதாய துரோகி அவன் இருந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டான்; ஆண்களை கூட தனது காமப்பசிக்கு இறையாக்கத்துடிக்கும் இந்த காமுகன் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீதும், நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகள் மீதும் அவதூறை அள்ளி வீசுகின்றான்.

இடஒதுக்கீடு கேட்பது ஹராம் என்று உளறியுள்ளான். இந்த மனநோயாளியை பள்ளிவாசல் இமாமாக நியமித்து தாங்களும் மடையர்களாகி, மக்களையும் மடையர்களாக்கும் சென்னை மக்கா பள்ளிவாசல் நிர்வாகிகளே! இந்த காமவெறி பிடித்த மிருகத்தால் உங்களது வீட்டிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உங்கள் வீட்டிலுள்ள ஆண்களுக்கும் கூட ஆபத்து என்று எச்சரிக்கின்றோம்.

தான் செய்யக்கூடிய ஈனத்தனமான காரியங்களையெல்லாம் பிறரும் செய்வார்கள் என்று குற்றம் சொல்லும் இந்த அயோக்கியனது லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல….

நம் மீது இவன் சொன்ன அனைத்து அவதூறுகள் குறித்தும், “நேருக்கு நேர்” விவாதிக்க இவனுக்கு நாம் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். அப்படி நேரடியாக நம்மோடு விவாதிக்க இவன் வருவானேயானால்,

இவன் ஒழுக்கங்கெட்டவன் என்பதையும், 

இவன் ஒரு மார்க்க வியாபாரி என்பதையும், 

இவன் ஒரு சமுதாய துரோகி என்பதையும் 

நாம் நிரூபிக்க தயாராக உள்ளோம்.

இவனுக்கு உண்மையிலேயே தைரியமும், திராணியும் இருக்குமேயானால், ஒரு மூளையில் ஒளிந்து கொண்டு, முக்காடு போட்டுக் கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத் மீது இவன் சொல்லும் குற்றச்சாட்டுக்களை நம்முன்னால் நேருக்கு நேர் அமர்ந்து சொல்ல பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம்….

அப்படி நம்மோடு விவாதிக்க இவன் வராவிட்டால் நாம் சொன்ன குற்றச்சாடுகள் அனைத்தும் உண்மை என்பதும், இவன் ஒரு பெட்டை என்பதும் உண்மையாகிவிடும்.

இப்போது இடஒதுக்கீடு ஹராம் என்று சொல்லும் இந்த அயோக்கியன் 2006 ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான ஆணையம் அமைத்ததற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லி பேட்டி கொடுத்தான். (அந்த வீடியோ இந்த உரையில் இணைக்கப்பட்டுள்ளது) 

இப்படி நயவஞ்சக நாடகமாடும் இந்த சமுதாய துரோகியின் நயவஞ்சகத்தனத்தை அம்பலப்படுத்துகின்றது இந்த உரை.


தொடர்புடையவை:

நக்கும் நக்கீரனை நக்கிய கேடி ஷம்சுதீன் காஸிமீ

நடிப்பது யார்?

எடுபடாத வாதங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலப்படுத்தி படம் எடுத்த அமொரிக்விற்கு எதிராக நடந்த பேராட்டத்தை கண்டிக்கும் அமொரிக்க கைக்குளி கேடி ஷம்சுதீன் காஸிமி

Friday, May 30, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 31) - கடன் பத்திரம் எழுதிக் கொள்வது

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 31) - கடன் பத்திரம் எழுதிக் கொள்வது

இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.

Thursday, May 29, 2014

கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா (புகைப்படங்கள்)

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் நடைபெற்றது. அதில் முதல் ழூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கும் தேர்வில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. காலையில் மாணவர்களுக்கும் மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மாணவிகளுக்கு பரிசுகளை மாநில செயலாளர் மற்றம் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.




Wednesday, May 28, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் 12.5.2014 முதல் காலை ஆண்களுக்கு மாலை பெண்களுக்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்று வருவதை அனைவரும் அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக நேற்று மாணவ மாணவிக்கு தேர்வுகள் நடைபெற்றது தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நாளை (29.5.2014) வியாழன் மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது இதில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு உங்களை அன்புடன் அதிரை கிளை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது

யாருக்கும் ஆதரவு இல்லை எனில் நமது கோரிக்கைகளை எப்படி வெல்வது?

தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலை கூட எடுக்கக்கூடாது என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கருத்து சொல்லாவிட்டால் நமது கோரிக்கைகளை எவ்வாறு வென்றெடுக்க முடியும்?

மசூது, கடையநல்லூர்.

எங்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றால் நாங்கள் தேர்தலில் வாக்களிப்போம் என்று சொல்லும்போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது என்பது உண்மைதான். இதற்காகவே இந்த நிலைப்பாட்டை இது வரை நாம் எடுத்து வந்தோம்.

ஆனால் வேறு வழியில் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்பதாலும் ஆதரவு நிலைபாட்டினால் நன்மையை விட கேடுகளே அதிகம் என்பதாலும் இது மறு பரீசீலனைக்கு உரியது என்று முடிவு எடுக்கப்பட்டது.

உயர்நிலைக் குழுவில் வைக்கப்பட்ட காரணங்களைக் கீழே தருகிறோம்.

முதல் காரணம்

தமிழக முஸ்லிம்களைப் பொருத்தவரை பெரும்பாலானவர்கள் மாநிலத்தில் உள்ள கட்சிகளின் அபிமானிகளாகவும், விசுவாசிகளாகவும் உள்ளனர். நம்முடைய பிரச்சாரத்தின் மூலம் இதில் ஓரளவு நாம் வெற்றி பெற்றாலும் முழு வெற்றி பெறவில்லை.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இத்தகையோர் அதிக அளவில் இல்லாவிட்டாலும் ஓரளவு இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

திமுக அல்லது அதிமுக அல்லது ஏதோ ஒரு கட்சியில் இருந்து கொண்டுதான் முஸ்லிம்களாக உள்ளனர். நாங்கள் திமுக குடும்பம்; நாங்கள் அதிமுக குடும்பம் என்ற கொள்கை உள்ளவர்களும் உள்ளனர்.

திமுக எவ்வளவு பெரிய நன்மை செய்தாலும் அதிமுக அபிமானிகளாக உள்ளவர்கள் அந்த நன்மையைக் கருத்தில் கொண்டு திமுகவுக்கு வாக்களிப்பதில்லை.

அதிமுக எவ்வளவு பெரிய நன்மை செய்தாலும் அந்த நன்மைக்கு நன்றி செலுத்துவதைவிட திமுக அபிமானிகளுக்கு திமுகவே பெரிதாக தெரிகின்றது. அதிமுகவுக்கு வாக்களிக்க அவர்களின் மனம் இடம் கொடுப்பதில்லை.

நியாயமான கோரிக்கைக்காக நாம் எடுக்கும் முடிவைக் கூட அனைவரும் ஏற்கும் நிலை எப்போதும் இருந்ததில்லை.

கோவை குண்டுவெடிப்புக்குப் பின் நடந்த தேர்தலில் எந்த முஸ்லிமும் திமுகவுக்கு வாக்களித்திருக்கக்கூடாது என்றபோதும் சில முஸ்லிம்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.

மேலும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததற்காக அறவே திமுகவுக்கு வாக்களித்திருக்கக்கூடாது என்றாலும் அப்போதும் சில முஸ்லிம்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை நாம் பார்க்க முடிந்தது.

மார்க்க சம்மந்தமான விஷயங்களை நாம் சொல்லும்போது குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் உள்ளதால் அதை ஏற்கும் அளவுக்கு தேர்தல் நிலைப்பாட்டை மக்கள் ஏற்பதில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.

அனைவரும் இல்லாவிட்டாலும் 80 சதவிகிதமாவது ஏற்று வாக்களித்தால்தான் அதை வைத்து அரசிடம் கோரிக்கை வைக்க முடியும். அந்த நிலை இல்லை எனும்போது நாம் எதற்காக கருத்து சொல்ல வேண்டும்?

இந்தக் காரணம் உயர்நிலைக் குழு உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டது.

இரண்டாவது காரணம்

நமது முடிவை நாமே எடுக்கும்போது உறுதியான ஒருமுடிவை எடுக்க முடியும். ஆனால் பெரிய கட்சிகள் என்ன செய்கின்றன என்பதைப் பார்த்து முடிவு எடுக்கும்போது குழப்பங்கள் ஏற்படுகின்றன.

இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தார்கள் என்பதற்காக நாம் அதிமுக ஆதரவு நிலை எடுத்தோம். அதில் உறுதியாக நிற்க முடியாத அளவுக்கு அதிமுகவின் செயல்பாடு அமைந்து விட்டது.

அதிமுக, பாஜகவை விமர்சிக்க வில்லை என்ற நிலையிலும் நாம் ஆதரவு நிலையைத் தொடர்ந்தால் பெட்டி வாங்கிவிட்டார்கள் என்று கூசாமல் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படும். அதை மக்கள் நம்பக் கூடிய நிலையும் ஏற்படும்.

அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்டால் உறுதியான முடிவை எடுக்க தவ்ஹீத் ஜமாஅத்துக்கு திராணி இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.

பாஜகவுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என்று சொன்னதற்காக திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம். அதன் பின்னர் சன் டிவியில் மோடிக்கு வாக்களிக்குச்சொல்லி விளம்பரம் வருகிறது. நம் மக்கள் திமுகவுக்கு வேலை பார்க்க மாட்டோம் என்று சொன்னபோது உடன்பாடு இல்லாவிட்டால் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று நாம் சொல்லும் நிலை ஏற்பட்டது.

இவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பதைக் கவனித்து முடிவை மாற்ற வேண்டும். அதுவும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. மாற்றாவிட்டாலும் வேறு விமர்சனத்துக்கு உள்ளாக நேர்கின்றது.

நாளுக்கு ஒரு நிலைப்பாடும் கொள்கையும் உள்ளவர்களை ஆதரிக்கப் புகுந்தால் நாமும் நாளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலைதான்  ஏற்படும்.

இந்தக் காரணமும் முன் வைக்கப்பட்டது.

மூன்றாவ்து காரணம்

மார்க்க விஷயத்தில் நாம் அடித்துப் பேசுவதுபோல் இந்த விஷயத்தில் உறுதியான வாதங்களை வைக்க முடியவில்லை.

குறிப்பிட்ட காரணத்துக்காக நாம் திமுக அல்லது அதிமுக ஆதரவு நிலை எடுத்தால் அதை நூறு சதவிகிதம் நியாயப்படுத்தும் நிலை இருக்காது.

நாம் திமுகவை ஆதரிக்கும்போது திமுகவின் துரோகங்களைப் பட்டியல் போட்டு நாம் தவறான முடிவு எடுத்து விட்டது போல் காட்ட பல இயக்கங்கள் உள்ளன.

அதிமுகவை ஆதரிக்கும் போதும் இதே நிலை தான் ஏற்படுகிறது.

எந்த முடிவை எடுத்தாலும் அதுதான் சரியானது என்று உறுதியாக நிலைநாட்ட மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

இதுவும் கவனத்தில் கொள்ளப் பட்டது.

நான்காவது காரணம்

யாருக்கு ஆதரவு நிலை எடுத்தாலும் நம் ஜமாஅத் தனக்காகவோ, ஜமாஅத்தின் தலைவர்களுக்காகவோ எந்த ஆதாயத்தையும் அடைந்ததில்லை. பணமோ, பதவிகளோ, இன்னபிற சலுகைகளோ நாம் அடைந்தது இல்லை. வெளிப்படையாக நமது செயல்பாடுகள் இருந்தாலும் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியே வருகின்றது.

அனைவரும் பணம் வாங்கிக் கொண்டு பணியாற்றுவதால் தவ்ஹீத் ஜமாஅத்தும் அப்படித்தான் நடக்கும் என்ற பொதுவான கருத்துக்குள் நம்மையும் அடக்கி விடுகிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்துடன் அதிகத் தொடர்பு இல்லாத தவ்ஹீத் ஆதரவாளர்கள்கூட ”இருந்தாலும் இருக்கும்” என்று கூறி தலையாட்டுவதை நாம் அறியாமல் இல்லை.

நாம் எவரிடமும் எவ்வித ஆதாயமும் அடையாமல் இருந்தும், அதுபோல் ஒரு விமர்சனத்துக்கு, நாம் ஏன் ஆளாக வேண்டும்?

இந்தக் கருத்தும் முன்வைக்கப் பட்டது.

ஐந்தாவது காரணம்

ஒரு கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்து நாம் பிரச்சாரம் செய்வது நம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் மன மாற்றத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மற்றவர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக ஏன் நாமே போட்டியிடக் கூடாது என்ற அளவுக்கு கீழ்மட்டத்தில் பேசப்படுவதையும் நாம் அறிகிறோம்.

இஸ்லாமிய ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் நாம் நேரில் களத்தில் குதிக்க வேண்டும் என்று உளறுவோரும் உருவாகின்றனர். இந்தத் தேர்தல் முறையில் நாம் போட்டியிட்டு இஸ்லாம் கூறும் அரசியலை நடத்த முடியாது என்ற சிந்தனைகூட இல்லாமல் போய் விடுகின்றது.

ஆதரவு நிலையே இல்லை எனும்போது இதுபோன்ற பேச்சுக்கு அறவே இடமில்லாமல் போய் விடும்.

ஆறாவது காரணம்

தேர்தல் பணி செய்யும்போது நம் காசில் வேலை செய்ய முடியாது. அரசியல் கட்சிகளின் செலவில்தான் நாம் வேலை செய்ய முடியும். இதற்காக அரசியல்வாதிகளை அணுகும்போது மிகுந்த சுய மரியாதையுடனும் கண்ணியத்தைக் காத்துக் கொள்ளும் வகையிலும் அதிகமான மாவட்ட கிளை நிர்வாகிகள் நடந்து கொண்டாலும் சிலர் அவ்வாறு நடப்பதில்லை.

வேட்பாளரிடம் பணம் வாங்குவதற்கு முன் அதுகுறித்த பட்ஜெட்டை தலைமைக்கு அனுப்ப வேண்டும். தலைமை அங்கீகரித்த பட்ஜெட்டைத் தான் வேட்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தினோம்.

உதாரணமாக ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஒரு லட்சம் ஆகும் என்றால் மூன்று லட்சம் என்று வேட்பாளரிடம் பட்ஜெட்டைக் கொடுத்தால் நம் ஜமாஅத்தின் நற்பெயர் பாதிக்கும் என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்ட்து.

ஆனால் இதை அனைவரும் கடைப்பிடிக்கவில்லை. பணம் வாங்கினால் எவ்வளவு வாங்கப்பட்டது என்பது தலைமைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதையும் சிலர் கடைப்பிடிக்கவில்லை.

வேட்பாளர்தான் நமது அலுவலகம் வந்து ஆதரவு கேட்க வேண்டும். நாம் அவர்களைத் தேடிச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டும், அதுவும் சிலரால் மீறப்பட்டது.

தியாகம், அர்ப்பணிப்பு என்ற அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட கொள்கைச் சகோதரர்கள் அந்த உயர் பண்பை இழப்பதற்கு இது காரணமாக ஆகிவிடுகின்றது.

ஏழாவது காரணம்

நம்முடைய மர்கஸ்களில் தொழவரும் சகோதர்ர்களில் திமுகவாக இருந்து கொண்டு தவ்ஹீதை ஆதரிப்பவர்களும் அதிமுகவாக இருந்து கொண்டு தவ்ஹீதை ஆதரிப்பவர்களும் உள்ளனர். அதிமுக ஆதரவு நிலை எடுத்தால் அன்று முதல் திமுக ஆதரவு முஸ்லிம்கள் பள்ளிக்கு வருவதில்லை. திமுக ஆதரவு நிலை எடுத்தாலும் இதே நிலை தான்.

தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் சமுதாய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஜும்மாவுக்கு நமது பள்ளிக்கு வந்துகொண்டு இருப்பார்கள். அவர்களை ஆதரிப்பதில்லை என்ற முடிவை நாம் எடுக்கும்போது அவர்கள் தவ்ஹீதைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படுகிறது.

எட்டாவது காரணம்

ஏகத்துவக் கொள்கைக்காக நாம் பலவிதமான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டோம். இதற்கு அல்லாஹ்விடம் கூலி உள்ளது என்பதால் அதை நாம் பொருட் படுத்தவில்லை. அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு கலங்காமல் பணியாற்றி வருகிறோம்.

கொள்கைக்காக மோதிக் கொள்வதில், மார்க்கதிற்கு முரணான வைகளைக் கண்டிப்பதற்காக நமக்குள் சண்டை ஏற்பட்டாலும் ஒற்றுமை குலைகிறது என்று பலர் கூப்பாடு போட்டாலும் அதனால் நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படவில்லை. ஆனால் தேர்தலில் யார் ஜெயிப்பது என்பதற்காக நாம் போட்டுக் கொள்ளும் சண்டை நிச்சயமாக நமக்கு உறுத்தலை ஏற்படுத்துகிறது.

மார்க்கத்திற்காக தவிர வேறு எந்தச் சண்டையும் வேண்டாம் என்றால் இந்த அரசியல் முஸீபத்தில் இருந்து முற்றாக விலக வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது.

ஒன்பதாவது காரணம்

தேர்தல் களத்தில் இறங்கி விட்டால் சுமார் 40 நாட்கள் நமது தாவா (பிரச்சாரப்) பணிகள் நிறுத்தப்படுகிறது. இதுவே முழு நேர வேலையாக ஆகின்றது.

பத்தாவது காரணம்

அமைச்சர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் ஏற்பட்ட தொடர் பையும், நட்பையும் தமது சுய நலனுக்குப் பயன்படுத்தும் எண்ணம் சிலருக்கு ஏற்படலாம் என்ற அச்சமும் உள்ளது.

இதுபோல் பல காரணங்கள் விபரமாக எடுத்து வைக்கப்பட்டன. இன்ஷா அல்லாஹ் இந்தக் காரணங்கள் விரிவாக நமது பொதுக்குழுவில் வைக்கப்படும்போது உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

அப்படியானால் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க என்ன செய்வது என்ற கேள்வியும் பரிசீலிக்கப்பட்டது.

நம்முடைய கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டி நாம் போராட்டம் நடத்தலாம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு நீங்கள் எங்கள் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கலாம். கோரிக்கை நிறைவேறாவிட்டால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று பொதுவான எச்சரிக்கையோடு நிறுத்திக் கொள்ளலாம்.

எங்கள் கோரிக்கையை ஏற்றால் நாங்கள் வாக்களிப்போம் என்று சொல்லாமல் நீங்கள் நல்லது செய்து எங்கள் மக்களை வென்றெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லலாம். இதன் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்கலாம்.

மக்கள் மத்தியில் நாம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு காரணமாக தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் அரசியல்வாதிகள் கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்வார்கள்.

போராட்டத்தில் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் அறிவிப்பு செய்யப்படாது; தேர்தல் நெருக்கத்திலும் செய்யப்படாது எனும்போது இப்போது கூடுவதை விட அதிக அளவில் மக்கள் திரள்வார்கள். நம் கோரிக்கை இறைவன் அருளால் சரியான முறையில் சென்று சேரும் என்று கருதுகிறோம்.
நன்றி: உணர்வு கேள்வி பதில்

Tuesday, May 27, 2014

தனித்து நின்றால் தான் அது ஏகத்துவம் (வீடியோ)

தனித்து நின்றால் தான் அது ஏகத்துவம்




Sunday, May 25, 2014

Thursday, May 22, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 30) - கடன் கொடுத்தவர் கடைப்பிடிக்க வேண்டியவை

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 30) - கடன் கொடுத்தவர் கடைப்பிடிக்க வேண்டியவை

இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.

Wednesday, May 21, 2014

இந்தப் பூமி ஏகத்துவவாதிகளுக்கே!

இந்தப் பூமி ஏகத்துவவாதிகளுக்கே!

குஜராத் மாநிலம், பாவ் நகர், மெகானி பகுதியில் ஒரு முஸ்லிம் வியாபாரி ஒரு வீட்டை வாங்கினார். இதை எதிர்த்து பஜ்ரங்தள் தலைவன் பிரவீன் தொகாடியா ஆர்ப்பாட்டம் நடத்தினான்.

முதலில் முஸ்லிம்கள் ஒரு பெரும் விலை கொடுத்து இந்துக்கள் பகுதியில் சொத்து வாங்குவார்கள். பிறகு பாதி விலையில் வாங்குவார்கள். முஸ்லிம்களின் இந்த சதித்திட்டத்தை இரு வகைகளில் முறியடிக்க வேண்டும்.

1. அரசாங்கம் கலவரப் பகுதி சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தின்படி அசையா சொத்துக்களை அந்தப் பகுதி மக்கள் விற்க முடியாது.

2. முஸ்லிம்கள் வாங்கிய அந்த வீட்டில் பஜ்ரங்தளம் என்று அறிவிப்புப் பலகை வைத்து, பலவந்தமாக அந்த வீட்டைக் கையகப்படுத்த வேண்டும். பின்னர் சட்டரீதியிலான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

இதுதான் இந்த ஆர்ப்பாட்டத்தில் காவி வெறியன் தொகாடியா பேசிய பேச்சாகும்.

"48 மணி நேரத்திற்குள் அந்த முஸ்லிம் வியாபாரி வீட்டைக் காலி செய்யவில்லை என்றால் வீட்டைச்  சூறையாடுவோம்; கொளுத்துவோம். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கே இந்த நாட்டில் தூக்குத் தண்டனை அளிக்கப்படவில்லை. அதனால் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை'' என்று தொகாடியா தனது கொடிய விஷத்தைக் கக்கியுள்ளான். இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையம் அவன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பாவ்நகர் காவல் நிலையத்தில் அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

19.04.2014 சனிக்கிழமை அன்று பாவ்நகரில் தொகாடியா தனது வெறிப்பேச்சைக் கொட்டினான். அதற்கு முந்தைய நாள் 18.04.2014 அன்று பீகார் மாநில பாஜக தலைவரும், நவாடா தொகுதி வேட்பாளருமான கிரிராஜ் சிங் என்பவன் ஜார்கண்ட் மாநிலம், பொகாரேயில் உரையாற்றும் போது, "மோடியை விமர்சிப்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் பாகிஸ்தான் சென்றுவிடலாம்'' என்று விஷம் கக்கியிருக்கின்றான். இவன் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை, கல்யாணில் நடந்த பேரணியில் நரேந்திர மோடி முன்னிலையில் சிவசேனாவைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ராமதாஸ் கடம் என்பவன் பேசும் போது, "மோடி பதவியேற்ற ஆறு மாதத்தில் பாகிஸ்தானை அழித்துவிடுவார்'' என்று உறுதி கூறினான்.

அஸ்ஸாம், மியான்மர் படுகொலைகளைக் கண்டித்து ஆகஸ்ட், 12, 2012ல் மும்பை ஆசாத் மைதானத்தில் 5 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது. இதன் எதிரொலியாக காவல்துறை வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பெண் காவலர்களும் தாக்குதலுக்கு உள்ளாயினர்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய ராமதாஸ் கடம், "ஆட்சிக்கு வந்ததும் மோடி இதற்குப் பழிக்குப் பழி வாங்குவார்'' என்று மோடியை வைத்துக் கொண்டே பேசினான். மோடியும் அதைக் கண்டிக்கவில்லை. இவன் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊடகங்களில் இந்தச் செய்திகள் வெளியாகி, வேறு வழியில்லாத நிலையில் தான் தேர்தல் ஆணையம் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கின்றது. இதுபோன்ற எண்ணற்ற வெறிப்பேச்சுக்களை சங்பரிவார்கள் விஷமாகக் கக்கியிருக்கின்றார்கள். அவற்றுக்கெல்லாம் எந்த நடவடிக்கையும் இல்லை.

இவை அனைத்தும் நமக்குத் தெரிவிப்பது என்ன? முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது; அவர்களைத் துரத்திவிட வேண்டும்; அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் சங்பரிவார்கள் வெறியாய் இருப்பதைத் தான் காட்டுகின்றது.

வரலாற்றுரீதியாக இந்த வார்த்தைகள் முஸ்லிம்களுக்கு அந்நிய வார்த்தைகள் அல்ல. புதிய வார்த்தைகள் அல்ல. இவை இறைத்தூதர்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட வார்த்தைகள். இதைத் திருக்குர்ஆனில் நாம் பார்க்கலாம்.

"உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். "அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது. 

(அல்குர்ஆன் 14:13,14)

இறைத்தூதர்களுக்கு எதிரிகள் வைத்த அந்த நிபந்தனைகளைத் தான் இன்று இந்துத்துவா சக்திகள் இந்திய முஸ்லிம்களை நோக்கி வைக்கின்றனர். எங்களுடன் இரண்டறக் கலந்து விடு அல்லது அழிந்து விடு என்ற இரண்டு நிபந்தனைகளைத் தான் வைக்கின்றார்கள். இந்து மதத்தில் ஐக்கியமாகிவிட்டால் அவர்கள் நம்மை விட்டுவிடுவார்கள்.

அந்த அடிப்படையில் தான் பாஜக தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று கூறியிருக்கின்றார்கள். இதற்கு நாம் கட்டுப்படாவிட்டால் நம்மை நாட்டை விட்டு விரட்டுவோம் அல்லது குஜராத்தில் கொன்று, கொளுத்தியது போன்று கொளுத்துவோம் என்கிறார்கள்.
நாம் தூய இஸ்லாமியக் கொள்கையில் வாழ்ந்தால் இவர்களால் ஒருபோதும் நம்மை நாட்டை விட்டு விரட்டமுடியாது. மாறாக அவர்களே அழிந்துபோவார்கள் என்பதைத் திருக்குர்ஆனின் இந்த வரிகள் தெளிவாக உணர்த்துகின்றன.

இங்கே ஒரு கேள்வி எழலாம். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தினரைப் போன்று ஏகத்துவவாதிகள் இல்லையே! பரேலவிகள், கப்ரு வணங்கிகள், சூபிகள் என இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தானே இருக்கிறார்கள்? இவர்கள் எப்படி முஸ்லிம்கள் என்ற கணக்கில் வருவார்கள் என்பது தான் அந்தக் கேள்வி.

இந்தக் கேள்வி சரியானது தான். ஆனால் எதிரிகள் பார்ப்பது கப்ரு வணங்கிகளான முஸ்லிம்களை அல்ல. குர்ஆன் கூறுகின்ற ஏகத்துவத்தையும், இஸ்லாத்தையும் தான் பார்க்கிறார்கள். அந்தக் குர்ஆனை ஏற்றவர் பெயரளவில் முஸ்லிமாக இருந்தாலும் சரி! கொள்கைப்பிடிப்புள்ளவர்களாக இருந்தாலும் சரி! அவர்கள் இந்தப் பூமியை விட்டு, நாட்டை விட்டுத் துரத்தப்பட வேண்டும் என்ற ஒன்று மட்டும் தான் எதிரிகளின் பார்வையில் உள்ளது.

இங்கு வாழும் முஸ்லிம்கள் உண்மையான ஏகத்துவக் கொள்கையின் அடிப்படையில், தூய இஸ்லாமிய அடிப்படையில் வாழ்ந்தால் இந்தப் பூமி நிச்சயமாக ஏகத்துவவாதிகளுக்குச் சொந்தமாகிவிடும். ஆனால் அது சாதாரணமாகக் கிடைத்துவிடாது. அதற்கென்று சில விலைகளைக் கொடுத்தாக வேண்டும். அல்லாஹ் வைக்கின்ற சோதனைகளைச் சந்திக்க வேண்டும். அதில் பொறுமை காக்க வேண்டும்.

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?'' என்று (இறைத்)தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. 

(அல்குர்ஆன் 2:214)

நபித்தோழர்கள் அப்படித் தான் பொறுமை காத்தார்கள். இந்தச் சோதனையின்போது அதற்குத் தலைமை தாங்குகின்ற இறைத்தூதர்கள் கூட கொல்லப்பட்டார்கள்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். 

(அல்குர்ஆன் 2:144)

இறைத்தூதர்கள் கொல்லப்பட்டாலும் கொள்கை நீடிக்கும். அதற்கான இறை உதவியும் நீடிக்கும்.

(முஹம்மதே!) பொறுப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. எனவே அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நாம் காட்டினால் அல்லது உம்மை நாம் மரணிக்கச் செய்தால் நம்மிடமே அவர்கள் கொண்டு வரப்படுவார்கள். 

(அல்குர்ஆன் 40:77)

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தான் இறுதி வெற்றி கிடைக்கும். அதாவது, அல்லாஹ்வின் வேதத்திற்கும் அவனது தூதர்களின் போதனைக்கும் தான் இறுதி வெற்றி! இந்தக் கருத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றான்.

நமது அடியார்களான தூதர்களுக்கு நமது கட்டளை முந்தி விட்டது. அவர்களே உதவி செய்யப்படுவார்கள். நமது படையினரே வெல்பவர்கள்.

(அல்குர்ஆன் 37:171-173)

"நானும் எனது தூதர்களுமே மிகைப்போம்'' என்று அல்லாஹ் விதித்து விட்டான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.

(அல்குர்ஆன் 58:21)

இதற்கு ஒரே நிபந்தனை, இந்தச் சோதனையில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

இஸ்லாமிய சமுதாயம் ஃபிர்அவ்னை விட ஒரு கொடியவனைச் சந்தித்திருக்க முடியாது. இறை நம்பிக்கை கொண்டிருந்த இஸ்ரவேல் சந்ததியினரை ஃபிர்அவன் வெட்டிக் கருவறுத்தான். அப்போது மூஸா (அலை) அவர்கள் சொன்ன அறிவுரையும் ஆறுதலும் இது தான்.

"அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். "நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்'' என்றும் கூறினார்.

(அல்குர்ஆன் 7:128, 129)

மூஸா நபியின் சமுதாயத்தினர் பொறுமை காத்தனர். அதற்குரிய பலனை அடைந்தனர்.

பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம். 

(அல்குர்ஆன் 7:137)

மூஸாவையும் பனூ இஸ்ரவேலர்களையும் ஃபிர்அவ்ன் வெறியேற்ற நினைத்தான். ஆனால் வல்ல அல்லாஹ் அவனை அழித்தான்.

அவர்களுக்குப் பின் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவற்றை அவர்கள் ஏற்க மறுத்தனர். "குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?' என்பதைக் கவனிப்பீராக!  

(அல்குர்ஆன் 7:103)

நாளை ஆட்சியைப் பிடிக்கப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் மோடியைப் பற்றி ஓர் அச்சம் இஸ்லாமிய சமுதாய மக்களிடம் உள்ளது. ஃபிர்அவ்னை விட இந்த மோடி ஒன்றும் பெரிய ஆள் இல்லை. மோடி என்ன ஆட்டம் போட்டாலும் அது இஸ்லாமிய சமுதாயத்தைப் பாதிக்காது. மாறாக அவர்களைக் கொள்கை ரீதியாக அது ஒன்றுபடுத்தும், உறுதிப்படுத்தும்.

ஈமானிய அடிப்படையில் மோடியை முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற போது இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத் தான். அப்போது இந்தப் பூமி அநியாயக்காரர்களுக்கு அல்ல, ஏகத்துவவாதிகளுக்குத் தான் என்பது உறுதியாகிவிடும். அந்த வெற்றி நாளைத் தான் நாம் எதிர்பார்க்கிறோம்.

தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள். 

(அல்குர்ஆன் 3:139)

இங்கே பரேலவிகளுக்கும் பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கும் ஓர் எச்சரிக்கையை விடுக்கின்றேம். இந்துத்வா நம்மை அழிக்க வரும்போது ஏகத்துவவாதிகளை மட்டும் குறிவைத்து அழிக்கப்போவதில்லை. முஸ்லிம் என்று பெயரளவில் இருந்தால் போதும். இஸ்லாத்தின் அடையாளங்களான தாடி, கத்னா, புர்கா போன்றவை இருந்தால் போதும். அவை அவர்கள் அழிப்பதற்குரிய ஆதாயத் தடயங்கள் ஆகும்.

கொள்கையில் பரேலவிகள் என்பதால் அவன் விட்டுவைக்கப் போவதில்லை. அவனுக்குத் தேவை நீங்கள் குர்ஆனை நம்புவதாகக் கூறினால் போதும். உங்களைக் கொளுத்திப் போட்டுவிடுவான். எனவே நீங்கள் உண்மையான ஏகத்துவக் கொள்கையின்பால் திரும்பிவிடுங்கள் என்ற அழைப்பையும் எச்சரிக்கையையும் விடுத்துக் கொள்கிறோம்.

நன்றி: ஏகத்துவம்

மதிக்கப்பட வேண்டிய மாநபி தோழர்கள் (வீடியோ)

மதிக்கப்பட வேண்டிய மாநபி தோழர்கள் (வீடியோ)


Tuesday, May 20, 2014

பரக்கத் நிறைந்த திருமணம் (எளிமையான திருமணம்) - வீடியோ



பரக்கத் நிறைந்த திருமணம்

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

ஷம்சுல்லுஹா (ரஹ்மானி)


பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.

வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.

கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது பெண் சிசுக் கொலை பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகப் புரட்சி:

பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல் வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கின்றது.

ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி வழித்து சுருட்டி சுரண்டிக் கொண்டிருந்த வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை இன்று வேண்டாம் வரதட்சணை வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.

உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து வைத்தே தீருவேன்; இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.

ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.

புறக்கணிப்பு:

இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.

இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.

ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத் அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.

அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.

இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! 

(அல்குர்ஆன் 5:2)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.

அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!

சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்:

பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.

வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.

அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.

மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.

இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.

அன்பளிப்பின் அடிப்படை:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி 6636

இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.

இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!

திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளூரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.

பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண் அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.

இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.

எனவே இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள்இவிருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி
RASMINMISC.TK

திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோ - விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான் துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இத்துடன் மார்க்கம் பெண்களுக்கு விதித்திருக்கின்ற புர்கா போன்ற வரைமுறைகளை, வரம்புகளைத் தாண்டி சந்திப்புகளும் சங்கமங்களும் திருமண வீட்டில் நடைபெறுகின்றன.

அண்ணியிடமும், கொழுந்தியாவிடமும் ஆண்கள் இரட்டை அர்த்த வார்த்தைகளில் கிண்டல் செய்வது, பதிலுக்குப் பெண்களும் மச்சான், கொழுந்தன் என்று அதே பாணியில் கிண்டல் செய்கின்ற அநாகரீகக் காரியங்களும் நடக்கின்றன. போதாக்குறைக்கு வீடியோ கேமராக்கள் கல்யாண வீடுகளில் புகுந்து வெறித்தனமாக விளையாடுகின்றன.

கல்யாண வீடு என்றதும் வீட்டிலுள்ள பெண்களும், வெளியிலிருந்து வரும் பெண்களும் தங்களுடைய உயர் ரக பட்டாடைகளை உடுத்தி ஒப்பனை செய்துகொள்வார்கள். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்வார்கள். கூந்தலுக்குப் பூச்சூடிக் கொள்வார்கள். கழுத்துகளிலும் காதுகளிலும் விலையுயர்ந்த நகைகளை அணிந்து கொள்வார்கள். மொத்தத்தில் அழகுப் பதுமைகளாகக் காட்சியளிப்பார்கள். அவர்களின் பிம்பங்களை வீடியோ கேமராக்கள் வளைத்து வளைத்துப் படம் பிடிக்கின்றன.

வீட்டுப் பெண்கள் வீதியில் நிற்கும் உணர்வில் இருக்க மாட்டார்கள். மேனியை விளம்பரப்படுத்தும் மெல்லிய சேலைகளில் இருப்பார்கள். சகஜமாகவும், சர்வசாதாரணமாகவும் வீட்டில் அங்கிங்கென்று அலைவார்கள். குனியும் போதும் நிமிரும் போதும் அவர்களுடைய அங்க அவயங்களிலிருந்து ஆடைகள் அடிக்கடி விலகிக் கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளை வீடியோக்கள் ஒன்று விடாது பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

வீடியோக்காரனின் வேட்டை இத்துடன் நின்று விடுவதில்லை. வீடியோ மையத்தில் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து அதை சி.டி. ஆக்கும் போது அங்குள்ள பணியாளர்களின் பார்வைகளுக்கும் பெண்களின் அழகு மேனிகள் பலியாகின்றன. ஸ்லோமோஸனில் அவர்கள் பெண்களை நிறுத்தி, நிறுத்தி தங்களின் விழிகளால் வேட்டையாடித் தள்ளுகின்றனர்.

வீட்டுப் பெண்களை இப்படி அடுத்தவருக்கு அந்நியருக்கு வேட்டைக் களமாக்கலாமா? விருந்தாக்கலாமா? உடல் கூச வேண்டாமா?

மாப்பிள்ளையின் நண்பர்கள் என்ற பெயரில் அந்நியர், அயலார்களும் உறவினர் என்ற போர்வையில் ஊரார்களும் ஊதாரிகளும் தங்களது மொபைல் போன்களில் மணமகள் உட்பட நமது அக்கா, தங்கைகள் உள்ளிட்ட அனைத்து பெண்களையும் நம் கண் முன்னால் கையோடு கையாக களவாடிச் செல்கின்றனர்; கவர்ந்து செல்கின்றனர்.

இதைவிட மிகக் கொடுமையான விஷயம் அண்ணன் தம்பிமார்களே தங்கள் அக்கா தங்கைகளை, மனைவிமார்களை அந்நியர்களுக்கு இணைய தளத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பில் காட்டுகின்றனர்.

வெளியார் பார்வை வீட்டுக்குள் பாயக்கூடாது, பதியக்கூடாது என்பதற்காக வீட்டுவாசலில் திரைபோடும் இந்த அறிவாளிகள் வானமேறிப் பறக்கும் ஊடகத்தின் வாயிலாக தங்கள் குடும்பப் பெண்களை மானமேறச் செய்கின்றனர்.

வெளியாட்களின் வெறிப்பார்வைக்கும் வேற்றுப் பார்வைக்கும் தங்களின் வீட்டுப் பெண்களை விருந்தாக்குகின்றனர்.

ஆண்களாகிய இவர்களுக்கும் வெட்க உணர்வு, ரோஷ உணர்வு எல்லாம் வெந்து சாம்பாலாகிவிட்டது போல் தெரிகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரை(க் கண்டிக்காதீர்கள்;) (விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கம் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 24

ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு வெட்கம் என்பது அவனது நாடி நரம்புகளுடன் பின்னிப் பிணைந்தது என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

ஆனால் இவர்களுக்கோ இந்த வெட்க உணர்வுகள் இறை மறுப்பாளர்களைப் போன்று அத்தனையும் மழுங்கி, மாயமானவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது. இத்தகையவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற, விடுக்கின்ற எச்சரிக்கையை இங்கே நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 24:19

அத்துடன் அடுத்தவரின் காம விழிகளுக்குக் காட்சியாகும் பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை இதோ:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.  ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.  இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.  அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்.  ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 3971

இந்தக் காட்சிகளைக் கண்டு ரசிக்கின்ற ரசிகர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை:

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

அல்குர்ஆன் 40:19

முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்

அல்குர்ஆன் 41:20


ஆடம்பர திருமணத்தை தவிர்த்து, திருமணங்களை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் நடத்துவோம். நமது வீட்டுப் பெண்களை அன்னிய ஆடவர்களுக்கு விருந்தாக்குவதில் இருந்து தவிர்போம்.

Monday, May 19, 2014

அதிரையில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி முகாம்!

அதிரையில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி முகாம்!

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சி நேற்று காலை 10.00 முதல் பகல் 1.30 வரை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. இதில் மாணவரணி ஒருங்கினைப்பாளர் சகோ உமர் பாரூக் அவர்கள் எங்கு படிக்கலாம்? என்ன படிக்காலம்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் படிப்பு சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.







Saturday, May 17, 2014

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் -அஜ்மானில் துவக்கம்

அல்லாஹ்வின் திருபெயரால் ...

அதிரை தவ்ஹீத் ஜமாத் - அஜ்மானில் துவக்கம்
வருகின்ற 30.05.2014 வெள்ளிக்கிழமை அன்று அதிரை தவ்ஹீத் ஜமாத் கிளையின் கூட்டமைப்பு அஜ்மானில் துவங்க இருக்கின்றது. இதற்கான  புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க இருப்பதால் தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நடைபெறும் இடம் சார்ஜா ரோலா மர்கஸ், நேரம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை.

தொடர்பு கொள்ள:
சஹாபுதீன் @  055 - 8343582
சாகுல்           @  050 - 5063755
சமீர்                @  055 - 7013435  

இசையில் ஏஆர் ரஹ்மானை தூக்கி சாப்பிட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள்!

இசையில் ஏஆர் ரஹ்மானை தூக்கி சாப்பிட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள்!

நாங்கள் அரசியலுக்கு போனால் அரசியல் சாக்கடையை சந்தன அருவியாக மாற்றி விடுவோம் என்று சவடால் விட்ட தமுமுகவின் கொள்கை சிங்கங்கள் மயிலாடுதுறையில் ஹைதரி அலியை எம்பி ஆக்க இசை அமைக்கும் அற்புத காட்சி. தவ்ஹீத்  வேண்டாம் என்றவர்கள் எப்படி தருதலைகளாக மாறுகிறார்கள் என்பதற்கு தமுமுக சார்பாக வெளியிடப்பட்ட இந்த வீடியோவே சாட்சி.

இசை கூடாது என்று கட்டுரை போடும் தமுமுகவின் கள்ள ஆதரவாளர்கள் இவற்றை கண்டிப்பார்களா?

அதிராம்பட்டிணத்தில் கந்தூரியின் இசை அடிக்கிறார்கள் அது தவறு என்று சொல்லும் தமுமுக மாவட்ட செயலாளர், தமுமுகவினரே இசை அடிக்கும் போது கண்டிக்காமல் இருப்பது தான் மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பதா?

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

நூல்: புகாரி 5590




Wednesday, May 14, 2014

Tuesday, May 13, 2014

கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இந்த வருடமும் கோடைகால விடுமுறையை மாண, மாணவிகள் பயனுள்ளதாக கழிப்பதற்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் கோடைகால சிறப்பு நல் ஒழுக்க பயிற்சி வகுப்புகள் 12.05.2014 திங்கள் முதல் நடைபெற்றுவருகிறது. இதில் ஆண்களுக்கு காலை 10.00 முதல் பகல் 12.30 வரையிலும் பெண்களுக்கு மாலை 4.00 மணி முதல் 6.30 வரையிலும் வகுப்புகள் நடைபெறுகிறது இதில் 100க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொள்ளுகிறார்கள்





இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 29) - கடன் வாங்கியவர் கடைப்பிடிக்க வேண்டியவை

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 29) - கடன் வாங்கியவர் கடைப்பிடிக்க வேண்டியவை

இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.

Sunday, May 11, 2014

கசகசாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா? - வெளிநாடுகளுக்கு கசகசாவை எடுத்து செல்பவர்களுக்கு கடும் தண்டனை

கசகசா என்ற பொருளை உணவில் சேர்த்து பயன்படுத்தலாமா?

கசகசா என்ற பொருள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சமையலுக்காக பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களும் பெரும்வாரியாக இதை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்த கசகசா வை ஆங்கிலத்தில் Poppy Seeds என்று கூறுகின்றனர்.

இந்த பாப்பி விதை எனப்படும் கசகசா என்பது பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம் என்ற போதைப் பொருள்.

இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார், குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலோசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம்.

கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009ஆம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004லிம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும்,விசாரணையும் இல்லாமல் ஷரியத் கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும்,ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!

இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார். கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன்,சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள்.
என்று இணையதள செய்திகள் நமக்கு தெரியப்படுத்துகிறது.

போதைப் பொருட்கள் எல்லா வகைகளையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் "பித்உ" (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5585)

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்கüடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் "அவை யாவை?'' என்று கேட்டார்கள். நான் "அல் பித்உ, அல் மிஸ்ர்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் "போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'' என்று பதிலüத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி (4343)

கசகசா என்பது அதிகம் சாப்பிட்டால்தானே போதை வருகிறது. நாம் குறைவாகத்தானே பயன்படுத்துகிறோம் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழி கவனிக்கட்டும்.

அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில்  குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : திர்மிதீ (1788)

எனவே கசகசா என்ற பொருள் சேர்க்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதே சரியான வழியாகும்.