Friday, August 02, 2013

பெண்கள் முகம் மறைத்தல் மற்றும் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக மௌலவி (?) ஹைதர் அலியின் புருடா! தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாத சவாலை கண்டு வெரூண்டு ஓட்டம்!!

ஹைதர் அலி ஆலிம் (?) அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் எதையாவது சொல்லுவது, அதை பற்றி கேள்வி எழுப்பினால் எஸ்கேப் ஆகிவிடுவது என்பதையே கொள்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் பெண்கள் முகத்தை கட்டாயமாக மறைக்க வேண்டும் என்று அள்ளிவிட்டுள்ளார். தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக தனது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார். இதே போன்ற உறரல்களை கடந்து ஆண்டும் செய்தார், இதற்காக ஒரு வருடத்திற்கு முன்பே ஹைதர் அலி அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக விவாத சவால் விடப்பட்டது. ஒரு வருடம் ஆகியும் இந்த தைரியமிக்க (?) ஆலிம்சா தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாத சவாலை ஏற்கவில்லை.

விவாதத்திற்கு வந்தால் இவர் தூக்கி பிடிக்கும் மத்ஹபின் அசிங்கங்களையும் ஆபாசங்களையும் அள்ளிப்போட்டு இவரின் முகத்திரையை கிழிக்க வசதியாக இருக்கும். வருடம் முழுவதும் லைலத்துல் கத்ர் வரும் என்று கதைவிடும், இவர் தூக்கி பிடிக்கும் தப்லீக் தஃலிம் கிதாபின் கப்சாக்களையும் அள்ளிப்போட வசதியாக இருக்கும்.

சத்தியம் இருந்தால் தானே வர முடியும்?

தர்ஹாவிற்கு எதிராக பேசிவிட்டு, எவனாவது மிரட்டினால், அடுத்த நாள் நான் அப்படி பேசலைங்க என்று தைரியமாக தனது தொடை நடுக்கத்தை கப்ர் வணங்கிகளிடம் வைத்து கொள்ள வேண்டும். சத்தியத்தில் இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திடம் மோதினால், கேவலம் தான் மிஞ்சும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக்கொள்கிறோம்.

இந்த ஆலிம்சாவை தூக்கிபிடிக்கும் தவ்ஹீத்வாதிகள் (?) திருந்துவது எப்போது?





தப்லீக் ஜமாஅத்தின் வழிகேடுகள் (வீடியோ)

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.