Sunday, August 11, 2013

சிறைவாசிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? ஒர் விளக்கம்

சமீபத்தில் பிஜே அவர்களின் பேட்டி ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. 'சிறைவாசிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் குரல் கொடுக்கவில்லை?' என்று ஒரு சகோதரர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான பதிலாக இந்த ஆக்கம் வெளிப்படுகிறது. இது சம்பந்தமாக பிஜே அவர்களின் பதில் இதோ,

சம்பந்தப்பட்ட சகோதரரின் கருத்து:
/அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. // 
கோவை குண்டு வெடிப்பில் விசாரணை என்ற பெயரில் குற்றம் சுமத்தப்படாத பல சகோதரர்கள் தங்களுடைய இளமை பொழுதை சிறையில் கழிக்கிறார்களே, அவர்களின் குடும்பத்தின் கண்ணீர் பிற சமுதாய இயக்கங்களை கொஞ்சமாவது குரல் கொடுக்க தூண்டியது, இந்த பேட்டியிலாவது இது பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே.. ஏன் அப்பாவி கோவை சிறைவாசிகள் பற்றி வாய்திறக்க பயப்படுகிறீர்கள்.



சிறைவாசிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை?

சிறைவாசிகளின் வழக்குகளுக்கோ அவர்களின் குடும்பங்களுக்கோ நான் உதவவில்லை என்றும் மற்றவர்கள் உதவுவதைத் தடுத்தேன் என்றும் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

 தமுமுக ஆரம்பிக்கப்படுவதற்கு நான் சிறைவாசிகளுக்கு உதவி வந்தேன் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறேன்.

தமுமுக ஆரம்பிக்கப்பட்டது முதல் அதில் நான் அமைப்பாளராக இருந்த காலம் வரை சிறைவாசிகளின் வழக்குகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன. அவர்களின் குடும்பங்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டு வந்தன.

ஆனால் குண்டு வெடிப்புக்குப் பின் அல் உம்மாவைச் சேர்ந்தவர்கள் தவிர மற்ற கைதிகளுக்கான உதவியை அப்போதைய தமுமுக செய்தது.

பின்னர் சிறைவாசிகளின் பெயரைச் சொல்லி தமுமுக பணம் திரட்டி இயக்கம் நடத்துகிறது என்று தமுமுகவில் மாதாமாதம் உதவி பெற்ற சிலர் வெளிநாடுகளுக்குக் கடிதம் மூலம் பரப்பியதால் இனி மேல் சிறைவாசிகளுக்காக தனியாக உதவி கோருவதில்லை எனவும், இயக்கத்துக்காக திரட்டப்படும் நிதியில் இருந்து இயன்ற உதவிகள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இது பற்றி அன்றைய உணர்வில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. சிறை வாசிகளுக்கு தமுமுக உதவவில்லை எனக் கூறியவர்கள் மாதாமாதம் தமுமுகவில் உதவி பெற்று அளித்த வவுச்சர்களையும் உணர்வில் வெளியிடும் நிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் சிறைவாசிகளின் குடும்பங்கள் மிகுந்த அல்லல்படுவதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்காக உதவும் படி உணர்வில் விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காகவே சிறைவாசிகளால் அமைக்கப்பட்ட ட்ரஸ்டுகளுக்கு உதவுமாறும் எங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் உணர்வில் விளம்பரம் வெளியிட்டோம்.

சிறைவாசிகளுக்காக எங்கள் முகவரிக்கு யாராவது அனுப்பினால் அதை அப்படியே சிறைவாசிகளிடம் மொத்தமாகக் கொடுத்து விடுவோம் என்று அறிவிப்பு செய்து அவ்வாறே கொடுத்தோம். சிறைவாசிகளில் சிலர் மீது நமக்கு கோபம் இருந்தாலும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் நாம் குறுக்கே நிற்கவில்லை.

சிறைவாசிகளை ஜாமீனில் விடுமாறும் நாம் அரசைக் கேட்டு வந்தோம்.

இந்த நிலையில் தான் சென்ற சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில் தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது. ஜெயலலிதாவைச் சந்தித்து சிறைவாசிகளின் ஜாமீன் மனு பற்றி கோரிக்கையை நானே முன் வைத்தேன்.

ஆனால் சிறையில் இருந்து சிறைவாசிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர். எங்களை வைத்து தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் பண்ண வேண்டாம். எங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் சொல்லி இருந்தனர். இன்னும் பலவிதமான குற்றச் சாட்டுக்களையும் அதில் சுமத்தி இருந்தனர். அந்த அறிக்கையைப் பிரசுரமாகவும் கோவை முழுவதும் விநியோகம் செய்தனர்.

நாங்கள் குரல் கொடுப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று சிறைவாசிகள் கருதுவதால் அவர்கள் விஷயமாக எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து அவர்கள் குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டோம். கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் உறையாற்றச் சென்ற போது அந்தக் கூட்டத்திலேயே அந்த அறிக்கையை விநியோகம் செய்தனர். எங்களை வைத்து அரசியல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அப்பட்டமாக அறிவித்த பின்னர் அவர்கள் பற்றி பேசுவதை நாம் நிறுத்திக் கொண்டோம்.

இதன் காரணமாக நாங்கள் இவர்கள் விஷயத்தில் ஒதுங்கி இருந்தாலும் அவர்கள் எங்களை அணுகும் போது பழைய சம்பவங்களை மனதில் வைத்து நாம் நடந்து கொள்ளவில்லை.

அந்த அடிப்படையில் கடந்த மாதம் சிறைவாசிகள் சார்பில் எங்களைச் சந்தித்து எங்கள் விடுதலைக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்துல் பாசித் வந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்.

நாம் பழைய சம்பவங்கள் எதையும் மனதில் வைக்காமல் அவர்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யுமாறு முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் கோரிக்கை மனு அளித்தோம்.

சிறையில் உள்ளவர்களைப் பொருத்த வரை அவர்கள் குழப்ப நிலையில் இருப்பார்கள். எனவே அவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லி இருந்தாலும் அவர்களுக்கான உதவிகளை மறுக்கக் கூடாது என்று தான் நடந்து வந்துள்ளோம்.

சிறைவாசிகளுக்கு உதவுங்கள் என்று மக்களிடம் கேட்பதைத் தான் நிறுத்திக் கொண்டோம். ஆனால் இயக்கப் பணிகளுக்காகக் கிடைக்கும் நிதியில் இருந்து இப்போதும் நம்மை அணுகும் சிறைவாசிகளுக்கு உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கிறோம். 

72 கருத்துரைகள் :

சமிபத்தில் நடந்த கொலைகளுக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று மிடியாகள் பரப்பிக்கொண்டு இருந்தபோது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் என்னத்தை வெளிகாட்டு முகமாக பி ஜே ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்கள் இதை அதிரையில் பிரபரியமான அனைத்து இனைய தளத்தில் வெளியிடப்பட்டது. உங்களிடம் கேள்வி கேட்பவரும் ஒரு இனைய தளம் நடத்துகிறார் இந்த நியாயமான பேட்டியை கூட அவர் இனைய தளத்தில் போடுவதற்கு மணம் இல்லை இருந்தாலும் இவரைப்போன்றவர்கள் கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் த த ஜ வின் செயல் பராட்டதக்கது.

சகோ. அஷ்ரப்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

யார் எங்களை நோக்கி கேள்வி கேட்டாலும் அதற்கு பதில சொல்லும் கடமை எங்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில் தான் இந்த பதில் தரப்பட்டது.

நீங்கள் குறிப்பிடும் நபர் தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட ஆக்கங்களை வெளியிட வேண்டும் என்று நீங்கள் நினைப்பது தவறானது. காரணம், அடிப்படையில் அவர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரானவர். தவ்ஹீத் என்ற போர்வை போட்டு, தங்கள் இணையதளத்தில் 'கவிஞர்' ஒருவரை 'இறையருள்கவி' என்று எழுதி மகிழ்பவர்கள். இவர்களிடம் யாரேனும் கேள்வி கேட்டால், கமெண்ட் பாக்சை மூட சொல்லி பல வாசகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்று புழுகி, கமெண்ட் பாக்சை மூடி ஒட்டமெடுக்கும் வீரர். கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாமல் யாரும் எழுதினால் அதை நீக்கும் இந்த மகான்கள், தவ்ஹீத் ஜமாஅத்தையே அல்லது பிஜே அவர்களையே சாடி சம்பந்தம் இல்லாமல் கருத்துயிட்டால் அதை பாதுகாப்பவர் தான் நீங்கள் குறிப்பிடும் நபர்.

நீங்கள் குறிப்பிடும் நபர் பேஸ்புக்கில் ஒரு குழுமம் ஒன்றை துவங்கி அதில் சூனியம் மற்றும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்த தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடுகளை விமர்சனம் செய்வதாகவும், தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்கள் சிலர் அந்த குழுமத்தில் இணைய முற்பட்ட போது, அதை அங்கீகரிக்கவில்லை எனவும், நமக்கு தகவல் வந்துள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த நிலைபாட்டையும் யாரும் விமர்சனம் செய்ய உரிமை உண்டு. விமர்சனம் செய்பவர்கள் அதற்கு பதில் சொல்ல முன்வருபவர்களை எதிர் கொள்ள திராணி வேண்டும். அந்த திராணி நீங்கள் குறிப்பிடும் நபருக்கு கிடையாது.

பொருக்கித்தனம் செய்வதில் முன்னோடிகளான இலங்கை சேர்ந்த மௌலவி முஜாஹித் மற்றும் கோவை அய்யுப் போன்ற பொருக்கிகளை மார்க்க முன்னோடிகளாக வைத்து அழகு பார்க்கும் இவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்?

தவ்ஹீத் ஜமாஅத்தை நேருக்கு நேராக விமர்சிக்க திராணி இல்லாத இவர், திரை மறைவில் செய்யும் விமர்சனங்களை பகிரங்கப்படுத்தும் ஆக்கம் நமது இணையதளத்தில் விரைவில் வெளியாகும், இன்ஷா அல்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்

கேட்ட கேள்விகளையே திரும்ப திரும்ப கேட்பதும் சொன்ன பதிலை மூடி மறைப்பதும் என்ன தனம் என்று சொல்வது ?


சொன்ன பதில் விளங்க வில்லை என்றால் திரும்ப கேட்பதில் தவறு இல்லை ,ஆனால் கேட்க வேண்டிய இடம் எது என்பது கூட இந்த சகோதரருக்கு தெரியாதா ?

யாருக்கு தவ்ஹீத் ஜமாஅத்தை பிடிக்காதோ அங்கே சென்று கேள்வி கேட்பது எதற்கு? கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணமா? அல்லது குறை கூற வேண்டும் என்ற ஆழ்மனத்தின் ஆசையா ?

மின்னஞ்சல் வழி கருத்து:

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான் த த ஜா தள நிர்வாகிகளுக்கு,

அதிரை முஜீப் தளத்தில் வெளியான பதிவு ஒன்றில் பின் வருமாறு ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன்.

///
//அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. //

கோவை குண்டு வெடிப்பில் விசாரணை என்ற பெயரில் குற்றம் சுமத்தப்படாத பல சகோதரர்கள் தங்களுடைய இளமை பொழுதை சிறையில் கழிக்கிறார்களே, அவர்களின் குடும்பத்தின் கண்ணீர் பிற சமுதாய இயக்கங்களை கொஞ்சமாவது குரல் கொடுக்க தூண்டியது, இந்த பேட்டியிலாவது இது பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே.. ஏன் அப்பாவி கோவை சிறைவாசிகள் பற்றி வாய்திறக்க பயப்படுகிறீர்கள். ///
////

இந்த பின்னூட்டத்தில் மிகத்தெளிவாக சொல்லியுள்ளேன், கோவை சிறைவாசிகள் பற்றி பேசி இருக்கலாமே, ஏன் பேச பயப்படுகிறீர்கள் என்று கேட்டிருந்தேன்.

நான் இங்கு கோவை 'சிறைவாசிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் உதவவில்லை என்று எங்கே குறிப்பிட்டுள்ளேன்?
எந்த ஒரு உதவியும் செய்யவே இல்லை என்று கேட்டிருந்தேனா?
ஏன் என் மீது பொய்யான அவதூறு சொல்லியுள்ளீர்கள்?

என் மீது சொல்லப்பட்டுள்ள பொய்யான தகவலை உடனே நீக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் அதிரைtntj சார்பாக இந்த பதிவின் பின்னூட்டத்தில் வெளியிட்டுள்ளவைகள் அடிப்படை ஆதாரமற்றது. வீனான பழியை என் மீது போடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

அதிரைநிருபர் பதிப்பகத்தில் உள்ள சில சகோதரர்களில் நானும் ஒருவன், ஆனால் தனி நபராக நீங்கள் அந்த தளம் பற்றிய விமர்சனத்திற்கு என்னிடம் பதில் எதிர்ப்பார்ப்பது தவறு. நெறியாளரின் மின்னஞ்சலுக்கு ( editor@adirainirubar.in ) உங்கள் விளக்கங்களை கேட்டால் நிச்சயம் பதில் தருவார்கள். விளக்கம் கேட்காமல் விமர்சனம் செய்வது சரியான அனுகுமுறையா என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

என் மீது சொல்லப்பட்டுள்ள பொய்யான தகவலை உடனே நீக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

தாஜுதீன்
tjdn77@gmail.com

சகோ. தாஜூதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் பதிலுக்கு நன்றி.

நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி கோவை பிரச்சினையில் சம்பந்தப்படாத பலருக்கு தவ்ஹீத் ஜமாஅத் உதவி உள்ளது. முடிந்த அளவுக்கு சிறைவாசிகள் அனைவருக்கும் குரலும் கொடுத்துள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத் சிறைவாசிகளை வைத்து அரசியல் செய்கிறது என்று பொய் குற்றச்சாட்டு சுமத்தினார்கள். மேலும், எங்களுக்காக தவ்ஹீத் ஜமாஅத் போராட வேண்டாம் என்றும் சொன்னார்கள். எனவே, தவ்ஹீத் ஜமாஅத் அவர்களுக்காக முடிந்தவரை குரல் கொடுப்பதை நிறுத்திக்கொண்டது.

சம்பந்தப்பட்டவர்களே எங்களுக்காக நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லும் போது, தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்ய முடியும்?

உங்கள் மீது நாங்கள் பொய்யான செய்தியை சொல்லியுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். நாங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியில் எது பொய் என்று குறிப்பிட்டு எழுதினால் வசதியாக அது பற்றி விவாதிக்க வசதியாக இருக்கும். நாங்கள் எழுதியள்ள அத்தனை செய்திகளும் ஆதாரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது (நீங்கள் நடத்தும் கள்ள குழுமம் உள்பட).

தாஜூதீன் அவர்களுக்கு,

குரல் கொடுப்பதும் உதவி என்ற அர்த்ததில் நாம் எமது ஆக்கத்தில் எழுதியிருந்தோம் என்பதை கருத்தில் கொள்ளவும்.

//மேலும் அதிரைtntj சார்பாக இந்த பதிவின் பின்னூட்டத்தில் வெளியிட்டுள்ளவைகள் அடிப்படை ஆதாரமற்றது. வீனான பழியை என் மீது போடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.//

இதை சற்று விபரமாக விளக்கினால் நலம்.

வ அலைக்குமுஸ்ஸலாம்,

என் மீது தொடுக்கப்பட்ட தவறான தகவலை சுட்டிக்காட்டிய பின் நீக்கியமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா...

குரல் கொடுக்கவில்லை என்பதை உதவி செய்யவில்லை என்று அவசரப்பட்டு எழுதிவிட்டீர்களே.. இனி அப்படி அவசரப்பட்டு செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

//நீங்கள் குறிப்பிடும் நபர் பேஸ்புக்கில் ஒரு குழுமம் ஒன்றை துவங்கி அதில் சூனியம் மற்றும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்த தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடுகளை விமர்சனம் செய்வதாகவும், தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்கள் சிலர் அந்த குழுமத்தில் இணைய முற்பட்ட போது, அதை அங்கீகரிக்கவில்லை எனவும், நமக்கு தகவல் வந்துள்ளது.//

இது பொய்..

ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

என்னுடைய முகநூல் முகவரியில் கடந்த சில வருடங்கலாக என்னுடைய புகைப்படத்துடன் என் சொந்த கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன். நான் ததஜவுக்கு எதிரான எந்த குழுமமும் உருவாக்கவில்லை. இது அப்பட்டமான பொய்.

//அவர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரானவர்.//

இதுவும் பொய்.... சில விசயங்களில் கருத்து முரண்பட்டால் ஒட்டுமொத்த ஜமாத் சகோதரர்களுக்கும் எதிரானவன் நீங்களே முடிவு செய்வது பொய்யான தகவல்?

நான் த த ஜவுக்கு எதிரானவனா? இல்லையா? என்பதை உங்கள் அதிரை கிளை துணை தலைவர் அப்துல் ஜப்பாரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்..

அதிரைநிருபர் தளம் தொடர்பான உங்கள் விமர்சனங்களுக்கு பதில் வேண்டும் என்றால் editor@adirainirubar.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என்று முன்னரே சொல்லிவிட்டேன்.

//என் மீது தொடுக்கப்பட்ட தவறான தகவலை சுட்டிக்காட்டிய பின் நீக்கியமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா...//

படத்துடன் இருந்தவற்றை நீக்கிவிட்டு, உங்களின் கருத்தை அப்படியே வைத்துள்ளோம். உங்களின் கருத்திற்கு பதில் உள்ளது. சில சுட்டிக்காட்டுதல் அடிப்படையில் எங்கனவே இருந்த உங்களின் கருத்துப்படம் நீக்கப்பட்டுள்ளது.

//குரல் கொடுக்கவில்லை என்பதை உதவி செய்யவில்லை என்று அவசரப்பட்டு எழுதிவிட்டீர்களே.. இனி அப்படி அவசரப்பட்டு செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

உதவி செய்வதும் குரல் கொடுப்பதில் அடங்கும் என்பதை யாரும் புரிந்துகொள்வார்கள். அவசரப்பட்டு யாரும் எழுதவில்லை. உங்களுக்கு புரியவில்லை என்பதால் விளக்கப்பட்டுள்ளது.

சிறைவாசிகள் சம்பந்தமாக உங்களின் கேள்விக்கு நாங்கள் தந்த பதிலை ஏற்றுக்கொண்டதற்கு (பதில் தராமல்) நன்றி.

////நீங்கள் குறிப்பிடும் நபர் பேஸ்புக்கில் ஒரு குழுமம் ஒன்றை துவங்கி அதில் சூனியம் மற்றும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்த தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடுகளை விமர்சனம் செய்வதாகவும், தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்கள் சிலர் அந்த குழுமத்தில் இணைய முற்பட்ட போது, அதை அங்கீகரிக்கவில்லை எனவும், நமக்கு தகவல் வந்துள்ளது.//

இது பொய்..

ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.//

நீங்கள் ஃபேஸ்புக்கில் எந்த குழுமமும் நடத்தவில்லை என்று சொல்லுகிறீர்களா? பொதுவான பெயரில் குழுமம் ஆரம்பித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வைகளை வீராப்பாக விவாதிக்கவில்லை? அந்த குழுமத்தின் நிர்வாகி நீங்கள் அல்லவா?

ஆதாரமும் வரும், இன்ஷா அல்லாஹ்.

//என்னுடைய முகநூல் முகவரியில் கடந்த சில வருடங்கலாக என்னுடைய புகைப்படத்துடன் என் சொந்த கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன். நான் ததஜவுக்கு எதிரான எந்த குழுமமும் உருவாக்கவில்லை. இது அப்பட்டமான பொய்.

//அவர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரானவர்.//

இதுவும் பொய்.... சில விசயங்களில் கருத்து முரண்பட்டால் ஒட்டுமொத்த ஜமாத் சகோதரர்களுக்கும் எதிரானவன் நீங்களே முடிவு செய்வது பொய்யான தகவல்?

நான் த த ஜவுக்கு எதிரானவனா? இல்லையா? என்பதை உங்கள் அதிரை கிளை துணை தலைவர் அப்துல் ஜப்பாரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்..//

அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தை ஆதரிக்க வேண்டும் என்ற பாசிஸ கொள்கை எங்களுக்கு இல்லை. நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதிலே அல்லது கருத்து வேறுபாடு கொள்வதிலே எந்த தவறு இல்லை. குழுமத்தில் விற்கும் சரக்கை சற்று சந்தையில் விற்றால் பதில் தருவதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும்.

நியாயமான முறையில் செய்யப்படும் விமர்சனங்களுக்கு பதில் தருவது எங்களின் கடமை என்பதை தெரிவிக்கிறோம்.

//சமீபத்தில் பிஜே அவர்களின் பேட்டி ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. 'சிறைவாசிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் உதவவில்லை?' என்று ஒரு சகோதரர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான பதிலாக இந்த ஆக்கம் வெளிப்படுகிறது. இது சம்பந்தமாக பிஜே அவர்களின் பதில் இதோ,//

சிறைவாசிகளுக்கு ஏன் உதவவில்லை என்று நான் கேட்டிருப்பதாக நான் குறிப்பிடாத வார்த்தை இன்னும் உள்ளதே ....

சிறைவாசிகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்றுதானே நான் குறிப்பிட்டிருந்தேன்.. ஏன் இன்னும் மாற்றம் செய்யவில்லை..

எங்களின் ஆக்கத்திலும் கருத்திலும் சொன்ன விஷயங்கள் பலவற்றை ஏற்று, இரு விஷயங்களை மட்டும் குறிப்பிட்டு மற்ற விஷயங்களை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள்.

//சிறைவாசிகளுக்கு ஏன் உதவவில்லை என்று நான் கேட்டிருப்பதாக நான் குறிப்பிடாத வார்த்தை இன்னும் உள்ளதே ....

சிறைவாசிகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்றுதானே நான் குறிப்பிட்டிருந்தேன்.. ஏன் இன்னும் மாற்றம் செய்யவில்லை..//

உதவவில்லை என்ற தலைப்பின் கீழ் குரல் கொடுப்பது என்ற பதம் அடங்குமா? அடங்கதா?

உங்களின் ஆசைக்காக தலைப்பு மாற்றப்படுகிறது - சிறைவாசிகளுக்கு ஏன் குரல கொடுக்கவில்லை?

//எங்களின் ஆக்கத்திலும் கருத்திலும் சொன்ன விஷயங்கள் பலவற்றை ஏற்று, இரு விஷயங்களை மட்டும் குறிப்பிட்டு மற்ற விஷயங்களை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள்.//

நீங்களாகவே ஒன்றை முடிவு செய்து, கருத்திடாதவைகளை ஏற்றுக்கொண்டேன் என்பது உங்கள் அறியாமை, பிறருக்கு வக்காலத்து வாங்கி பேச நான் விரும்பவில்லை, என் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்யிக்கு மறுப்பை மட்டும் பேச நான் தகுதியானவன், பிறர் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்...

தவறு செய்பவன் மனிதன், அவன் தஃவ்பா செய்து திருந்தி வாழ்தால், அவன் செய்த தவறு அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ளது. அந்த தவறை செய்யாமல் திருந்தி வாழும் அவனின் தவறை செல்லிக்காட்ட ஆரம்பித்தால், அல்லாஹ் மற்றும் நபி(ஸல்) அவர்களை தவிர இவ்வுலகில் யாரும் மிஞ்சமாட்டார்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். இந்த அளவுகோலை வைத்து கருத்துரையாடலாமே...

//குழுமத்தில் விற்கும் சரக்கை சற்று சந்தையில் விற்றால் பதில் தருவதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும்//

குழுமத்தில் விற்கும் சரக்கு என்னவென்பதை தெளிவுபடுத்தவும்.

//நீங்களாகவே ஒன்றை முடிவு செய்து, கருத்திடாதவைகளை ஏற்றுக்கொண்டேன் என்பது உங்கள் அறியாமை, பிறருக்கு வக்காலத்து வாங்கி பேச நான் விரும்பவில்லை, என் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்யிக்கு மறுப்பை மட்டும் பேச நான் தகுதியானவன், பிறர் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்...//

இவ்வாறு சொல்லுவது தான் ஒத்துக்கொள்வது என்பதை எவரும் அறிவர். வேறு இடங்களில் வக்காலத்து வாங்கலாம், இங்கு வாங்க கூடாதா?

//தவறு செய்பவன் மனிதன், அவன் தஃவ்பா செய்து திருந்தி வாழ்தால், அவன் செய்த தவறு அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ளது. அந்த தவறை செய்யாமல் திருந்தி வாழும் அவனின் தவறை செல்லிக்காட்ட ஆரம்பித்தால், அல்லாஹ் மற்றும் நபி(ஸல்) அவர்களை தவிர இவ்வுலகில் யாரும் மிஞ்சமாட்டார்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். //

இதில் எங்களுக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை. எந்த மனிதனினும் தவறு அப்பாற்பட்டவன் அல்ல. அதே நேரத்தில், மார்க்க பிரச்சாரம் செய்பவருக்கு சில தகுதி வேண்டும். சாதாரண மனிதன் கூட செய்ய தயங்கும் இழிசெயலை அவன் செய்யக்கூடாது. மார்க்க பிரச்சாரம் செய்பவன் ஊருக்கு ஊர் கலியாணம் கட்டி தலாக் சொல்லி பெண்களின் வாழ்க்கை சிரழிக்க கூடாது. மக்கள் திரண்டு வந்து மர்கஸ்யை முற்றுகையிட்டு, மார்க்க பிரச்சாரகரின் இழிசெயலை அம்பலப்படுத்த கூடாது. தொழுகை வைக்கும் ஒரு இமாம் இழி செயலை செய்துவிட்டு, வந்து தொழுகை நடத்தினால் அவரை ஏற்றுக்கொள்வீர்களா? தவ்பா செய்துவிட்டோம் என்பதற்கு அந்த இழிசெயலை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டுமல்லவா? மறுமை பற்றி உருகி அழுது பேசுபவர் இப்படி நடப்பதின் மர்மம் தான் என்ன?

//இந்த அளவுகோலை வைத்து கருத்துரையாடலாமே...//
கண்டிப்பாக உரையாடலாம், இன்ஷா அல்லாஹ். உரையாடல் பயனுள்ளதாக இருக்கட்டும்.

//குழுமத்தில் விற்கும் சரக்கு என்னவென்பதை தெளிவுபடுத்தவும்.//
சூனியம் மற்றும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்த ததஜவின் நிலைப்பாடு பற்றியது.

\\கோவை குண்டு வெடிப்பில் விசாரணை என்ற பெயரில் குற்றம் சுமத்தப்படாத பல சகோதரர்கள் தங்களுடைய இளமை பொழுதை சிறையில் கழிக்கிறார்களே, அவர்களின் குடும்பத்தின் கண்ணீர் பிற சமுதாய இயக்கங்களை கொஞ்சமாவது குரல் கொடுக்க தூண்டியது, இந்த பேட்டியிலாவது இது பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே.. ஏன் அப்பாவி கோவை சிறைவாசிகள் பற்றி வாய்திறக்க பயப்படுகிறீர்கள்.//

எது பற்றி கேள்வி கேட்டார்களே அதற்கு தான் பதிலளிக்கவேண்டும் ஒரு வேலை பீ ஜே செல்லியிருந்தாலும் அதை edit செய்து போடும் உரிமை பத்திரிக்கைக்கு உண்டு.

குரல் கொடுப்பவர்கள் உதவி செய்தார்களா? இல்லையா என்பது வெளிப்படையாக தெரியாது குரல் கொடுக்காதவர்கள் உதவி செய்தலும் வெளிப்படையாக தெரியாது இந்த அடிப்படையில் தான் தாஜுதீன் கேட்டுயிருப்பார்

//வேறு இடங்களில் வக்காலத்து வாங்கலாம், இங்கு வாங்க கூடாதா?//

வேறு இடங்களில் யாருக்கு வக்காலத்து வாங்கினேன், ஆதாரம் இருக்கா?

//சூனியம் மற்றும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்த ததஜவின் நிலைப்பாடு பற்றியது.//

இது பற்றிய பொது விவாதம் ததஜவுக்கு....

சூனியம் செய்வது கொடியபாவம், சூனியம் வெட்ட செல்வது கொடிய பாவம், அல்லாஹ்வை போல் சூனியக்காரன் செய்வான் என்று நம்புவது பாவம், இது பகிரங்கமான வழிகேடு ஆனால் குர்ஆனில் அல்லாஹ் சூனியத்தின் தாக்கம், அதன் தோற்றம் பற்றி நிறைய வசனங்களில் சொல்லியுள்ளான், 1400 வருடங்கலாக ஷஹீஹான ஹதீஸ்கள் சூனியம் என்ற ஒன்றுக்கு தாக்கம் உள்ளது தெளிவு படுத்துக்கிறது ஆகவே சூனியத்துக்கு ஓர் எதார்த்தம் உண்டு அல்லாஹ் நாடினால் அது நடக்கும், நாம் குஃப்ரில் செல்லுகிறோமா இல்லையா என்பதர்காக, அல்லாஹ் சூனியத்தை கொண்டு நம்முடிய ஈமானை சோதிக்கும் செயலாக நாம் ஏன் கருதக்கூடாது, நபி(ஸல்) அவர்களும் ஸஹப்பாக்களும் நுர்பமான ஷிர்க் வைத்தார்கள் என்று ஒரு யூதன் சுட்டிக்காட்டியதாக வரும் செய்தி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது, அந்த செய்தி தவறானது என்று இவைகள் அனைத்தையும் செல்லும் மவ்லவி மார்களுக்கும் நடைபெறும் விவாத்தில் உண்மையை நாம் எல்லோரும் தெரிந்துக்கொள்வோம். அதுவரை இந்த விசயத்தில் கொஞ்சம் நிதானம் காக்கலாமே...

//நீங்கள் ஃபேஸ்புக்கில் எந்த குழுமமும் நடத்தவில்லை என்று சொல்லுகிறீர்களா? பொதுவான பெயரில் குழுமம் ஆரம்பித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வைகளை வீராப்பாக விவாதிக்கவில்லை? அந்த குழுமத்தின் நிர்வாகி நீங்கள் அல்லவா?

ஆதாரமும் வரும், இன்ஷா அல்லாஹ்.//

இல்லைவே இல்லை, அல்லாஹ்வின் மீது ஆனையாக.. என்னுடைய பெயரில் இருக்கும் முகநூலே தவிர நான் எந்த முகநூல் குழுமைத்தையும் நடத்தவில்லை.. ஆனால் ஒரு சில குழுமத்தில் என்னுடைய முகவரியை இணைத்துள்ளார்கள் அதன் நடத்துனர்கள்.. என்னுடைய நண்பர்களுக்கு தகவல்களை share செய்வேன் அவ்வளவுதான்... குழுமம் ஒன்றும் இல்லை..

நான் எந்த முகநூல் குழுமம் நடத்துகிறேன் ?என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் என் மீது அவதூறு பரப்பிமைக்காக பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும். நாளைக்குள் உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

//உதவவில்லை என்ற தலைப்பின் கீழ் குரல் கொடுப்பது என்ற பதம் அடங்குமா? அடங்கதா?

உங்களின் ஆசைக்காக தலைப்பு மாற்றப்படுகிறது - சிறைவாசிகளுக்கு ஏன் குரல கொடுக்கவில்லை?//

தலைப்பை மாற்றியதுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா... இன்னும் முன்றாவது வரியில் உள்ள உதவவில்லை என்ற வார்த்தை ஏன் இன்னும் மாற்றவில்லை. நான் சொன்னதாக இன்னும் அர்த்தம் கொள்கிறதே... ஏன் இந்த தயக்கம்?

குரல் கொடுப்பது என்பது பேச்சால், எழுத்தால் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசுவது போராடுவது எழுதவது என்பது நேரடியான அர்த்தங்கள்..

உதவுவது என்பது பெருளால், செயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பது. இதில் செயலால் என்பதில் குரல் பேச்சு போராட்டம் மறைமுகமாக வரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் நேரடி அர்த்தம் கொண்ட வார்த்தைகளுக்கு மறைமுக அர்த்தம் கொண்ட வார்த்தையை பிரயோகித்திருப்பது தவறில்லையா? இதற்காகத்தான் நான் உங்களோடு இவ்வளவு தூரம் வேண்டுகோள் வைக்கிறேன்.

//இவ்வாறு சொல்லுவது தான் ஒத்துக்கொள்வது என்பதை எவரும் அறிவர்.//

ஒருவன் பிறர் ஒருவருக்கு விசயத்தை பேசவேண்டாம் வீண் தர்க்க ஏற்படும் என்று சொல்லுவது அந்த நபர் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டதாக அர்த்தம் என்பதற்கான அளவுகோள் எந்த மொழி பெயர்ப்பு புத்தகத்தில் உள்ளது என்பதை காட்டாவிட்டாலும் பரவாயில்லை, குர்ஆன் ஹதீஸ்படி பேசும் நாம் நீங்கள் சொல்லும் அளவுகோளுக்கான ஆதாரத்தை காட்டுங்களேன், சரி என்னும் பட்ச்சத்தில் நான் திருத்திக்கொள்கிறேன்.

//தலைப்பை மாற்றியதுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா... இன்னும் முன்றாவது வரியில் உள்ள உதவவில்லை என்ற வார்த்தை ஏன் இன்னும் மாற்றவில்லை. நான் சொன்னதாக இன்னும் அர்த்தம் கொள்கிறதே... ஏன் இந்த தயக்கம்?//

உங்களின் கோரிக்கைக்கு பிறகு இது மட்டும் தவறுதலாக மாற்றம் செய்யாமல் விடப்பட்டுள்ளது. தற்போது மாற்றப்பட்டுவிட்டது.

//இது பற்றிய பொது விவாதம் ததஜவுக்கு....

சூனியம் செய்வது கொடியபாவம், சூனியம் வெட்ட செல்வது கொடிய பாவம், அல்லாஹ்வை போல் சூனியக்காரன் செய்வான் என்று நம்புவது பாவம், இது பகிரங்கமான வழிகேடு ஆனால் குர்ஆனில் அல்லாஹ் சூனியத்தின் தாக்கம், அதன் தோற்றம் பற்றி நிறைய வசனங்களில் சொல்லியுள்ளான், 1400 வருடங்கலாக ஷஹீஹான ஹதீஸ்கள் சூனியம் என்ற ஒன்றுக்கு தாக்கம் உள்ளது தெளிவு படுத்துக்கிறது ஆகவே சூனியத்துக்கு ஓர் எதார்த்தம் உண்டு அல்லாஹ் நாடினால் அது நடக்கும், நாம் குஃப்ரில் செல்லுகிறோமா இல்லையா என்பதர்காக, அல்லாஹ் சூனியத்தை கொண்டு நம்முடிய ஈமானை சோதிக்கும் செயலாக நாம் ஏன் கருதக்கூடாது///

இல்லாத சூனியம் எப்படி சோதனையாகும்? சூனியம் ஒன்று உண்டு என்றால் அதை செய்பவர்கள் யார்? உலகில் யாரும் உண்டா?

//நபி(ஸல்) அவர்களும் ஸஹப்பாக்களும் நுர்பமான ஷிர்க் வைத்தார்கள் என்று ஒரு யூதன் சுட்டிக்காட்டியதாக வரும் செய்தி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது, //

இது பற்றி பின்னர் தெளிவாக விவாதிக்கலாம். இன்ஷா அல்லாஹ்

//அந்த செய்தி தவறானது என்று இவைகள் அனைத்தையும் செல்லும் மவ்லவி மார்களுக்கும் நடைபெறும் விவாத்தில் உண்மையை நாம் எல்லோரும் தெரிந்துக்கொள்வோம். அதுவரை இந்த விசயத்தில் கொஞ்சம் நிதானம் காக்கலாமே...//

விவாத நடந்து முடிவு வரும் வரை பொருமையாக இருக்கலாம் என்ற அறிவுரை உங்களுக்கு பொருந்துமா? பொருந்துமெனில் குழுமத்தில் இது பற்றி நீங்கள் விமர்சனம் செய்வது ஏன்?

////இவ்வாறு சொல்லுவது தான் ஒத்துக்கொள்வது என்பதை எவரும் அறிவர்.//

ஒருவன் பிறர் ஒருவருக்கு விசயத்தை பேசவேண்டாம் வீண் தர்க்க ஏற்படும் என்று சொல்லுவது அந்த நபர் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டதாக அர்த்தம் என்பதற்கான அளவுகோள் எந்த மொழி பெயர்ப்பு புத்தகத்தில் உள்ளது என்பதை காட்டாவிட்டாலும் பரவாயில்லை, குர்ஆன் ஹதீஸ்படி பேசும் நாம் நீங்கள் சொல்லும் அளவுகோளுக்கான ஆதாரத்தை காட்டுங்களேன், சரி என்னும் பட்ச்சத்தில் நான் திருத்திக்கொள்கிறேன்.////

இறையருட்கவி, ஒழுக்கம் கெட்டவர்களை வைத்து மார்க்க பிரச்சாரம் செய்வது போன்றவற்றில் உங்கள் விவாதிக்க முடியாது. எனவே, இது போன்றவற்றில் இருந்து பின்வாங்குகிறீர்கள் என்பது எங்களின் குற்றச்சாட்டு. வீண் விவாதம் கூடாது என்றால் அது சரியா? தவறா என்பதை ஒற்றை வரியில் உங்களால் சொல்ல முடியுமா?

////நீங்கள் ஃபேஸ்புக்கில் எந்த குழுமமும் நடத்தவில்லை என்று சொல்லுகிறீர்களா? பொதுவான பெயரில் குழுமம் ஆரம்பித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வைகளை வீராப்பாக விவாதிக்கவில்லை? அந்த குழுமத்தின் நிர்வாகி நீங்கள் அல்லவா?

ஆதாரமும் வரும், இன்ஷா அல்லாஹ்.//

இல்லைவே இல்லை, அல்லாஹ்வின் மீது ஆனையாக.. என்னுடைய பெயரில் இருக்கும் முகநூலே தவிர நான் எந்த முகநூல் குழுமைத்தையும் நடத்தவில்லை.. ஆனால் ஒரு சில குழுமத்தில் என்னுடைய முகவரியை இணைத்துள்ளார்கள் அதன் நடத்துனர்கள்.. என்னுடைய நண்பர்களுக்கு தகவல்களை share செய்வேன் அவ்வளவுதான்... குழுமம் ஒன்றும் இல்லை..

நான் எந்த முகநூல் குழுமம் நடத்துகிறேன் ?என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் என் மீது அவதூறு பரப்பிமைக்காக பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும். நாளைக்குள் உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.//

குழுமத்தை நீங்கள் நிர்வகிக்கவில்லை என்பதை தவிர மற்ற அனைத்து தகவல்களும் உண்மை என்று நீங்களே ஒத்துக்கொண்டுள்ளீர்கள். அதாவது, தனி குழுமம் ஒன்று உண்டு, அதில் நீங்கள் அங்கம் வகிக்கிறீர்கள், கண்ணியாமாக பேச சொல்லி அறிவுரை சொல்லும் நீங்கள் அங்கு கண்ணியமற்று பேசுகிறீர்கள். உங்களின் ஆக்கத்திற்கு பதில் வந்தால் அதை நீக்கவும் செய்கிறீர்கள். இவற்றை உங்களால் மறுக்க முடியுமா? குழுமத்தில் விமர்சனம் செய்யலாம்? எங்கள் தளத்திற்கு வந்தால் விவாதம் முடியும் வரை அமைதி காக்கலாமே என்ற வாதம் சரியா?

குழுமத்தை நடத்துவது நீங்கள் குறிப்பிடும் இணையதளம் தான் என்பதும், அந்த தளத்தில் நீங்கள் முக்கிய நிர்வாகி என்பதால் நீங்கள் தான் அதை நடத்த வேண்டும் என்ற சந்தேகம் வருவது இயல்பு. நீங்கள் சூட்டிக்காட்டிய அடிப்படையில் நீங்கள் அந்த குழுமத்தை நிர்வாகிக்கவில்லை என்பதை வாபஸ் பெற்று கொள்கிறோம். அந்த குழுமத்தில் அதிகமான செய்திகளையும் நீங்கள் தான் வெளியிடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் எங்களுக்கு தகவல் கிடைத்தது.

சூனியம் மற்றும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் சம்பந்தமாக நீங்கள் வைக்கும் வாதங்களை இந்த தளத்தில் வைத்து அழகிய முறையில் கலந்துரையாடல் செய்யலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும்,

என் மீது சொல்லப்பட்ட தவறான தகவல்களை நீக்கியமைக்கும், உறுதி படுத்தாத தகவல்கள் சந்தேசகங்கள், யூகங்கள் அடிப்படையில் என் மீது சொல்லப்பட்ட பொய் குற்றச்சாட்டு தவறு என்று நீங்கள் உணர்ந்து கருத்து வெளியிட்டமைக்கு, ஜஸக்கல்லாஹ் ஹைரா...

//ஒருவன் பிறர் ஒருவருக்கு விசயத்தை பேசவேண்டாம் வீண் தர்க்க ஏற்படும் என்று சொல்லுவது அந்த நபர் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டதாக அர்த்தம் என்பதற்கான அளவுகோள் எந்த மொழி பெயர்ப்பு புத்தகத்தில் உள்ளது என்பதை காட்டாவிட்டாலும் பரவாயில்லை, குர்ஆன் ஹதீஸ்படி பேசும் நாம் நீங்கள் சொல்லும் அளவுகோளுக்கான ஆதாரத்தை காட்டுங்களேன், சரி என்னும் பட்ச்சத்தில் நான் திருத்திக்கொள்கிறேன்.//

நான் குர் ஆன் ஹதீஸ்படி ஆதாரம் கேட்டதற்கு, சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்லியிருப்பது உங்களின் சமாளிப்பு என்பதை இதை வாசிக்கும் சகோதரர்கள் புரிந்திருப்பார்கள். மீண்டும் சொல்லுகிறேன் என்னை பற்றி உள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு கொடுப்பதற்கு மட்டுமே நான் பெறுப்பு. நான் கருத்து செல்ல விரும்பவில்லை என்பதை ஒத்துக்கொண்டேன் என்று நீங்கள் சொல்லுவது உங்கள் அறியாமை.

முகநூலில் தம்பி அப்துல் ரஹ்மானுடன் ஆரோக்கியமான முறையில் கருத்தாடினேன். என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ரஸ்மினின் ஆபாச பேச்சுக்கு மட்டும் என்னுடைய கருத்தை பதிந்தேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த முகநூலில் தம்பி அப்துல் ரஹ்மான் share பண்ணியவைகள் தான் அதிகம் உள்ளது என்பது கூடுதல் தகவலாக இங்கு பதிவு செய்கிறேன்.

சூனியம் தொடர்பான கருத்தாடலுக்கு தனி மின்னஞ்சல் உங்கள் முகவரிக்கு அனுப்பி 12மணி மேல் நேரமாகிவிட்டது. பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் ஹக்கை விளங்க நிச்சயம் நியாயமான, தனிமனித சாடல் இல்லாத கருத்தாடல் செய்யமாட்டோம் என்று வாக்களித்தால் நிச்சயம் நேரம் கிடைக்கும் போது என்னுடைய கருத்தை பதிவேன். என்னுடைய மின்னஞ்சலுக்கு பதில் அனுப்புங்கள்.

இனி இந்த பதிவில் கருத்திடுவதை நிறுத்திக்கொள்வோம். சூனியம் பற்றிய வேறு ஒரு பதிவில் கருத்துரையாடலாம் இன்ஷா அல்லாஹ்.

சைத்தான்களின் தீங்கிலிருந்து நம்மை வல்ல ரஹ்மான காப்பாற்றுவானாக

//நான் குர் ஆன் ஹதீஸ்படி ஆதாரம் கேட்டதற்கு, சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்லியிருப்பது உங்களின் சமாளிப்பு என்பதை இதை வாசிக்கும் சகோதரர்கள் புரிந்திருப்பார்கள். மீண்டும் சொல்லுகிறேன் என்னை பற்றி உள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு கொடுப்பதற்கு மட்டுமே நான் பெறுப்பு. நான் கருத்து செல்ல விரும்பவில்லை என்பதை ஒத்துக்கொண்டேன் என்று நீங்கள் சொல்லுவது உங்கள் அறியாமை.//

மார்க்க அடிப்படையில் நீங்கள் சம்பந்தப்பட்ட தளத்தில் வந்த செய்தி குறித்து கேள்வி எழுப்படும் போது நான் பதில் சொல்ல மாட்டேன் என்பது மார்க்க அடிப்படையில் சரியா? இறையருட்கவி போன்றவற்றை தவறு என்று உங்களால் சொல்ல முடியாது காரணம் உங்களின் அட்ஜட்ஸ்மேண்ட் கொள்கை. நீங்கள் முக்கியஸ்தராக இருக்கும் தளத்தில் வரும் செய்திகளுக்கு நீங்கள் பொருப்பாளி இல்லையா (மார்க்க அடிப்படையில்)?

எங்களிடம் தவறு இருந்தால் அதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளோம். விதாண்டவாதம் செய்யவில்லை. இருந்த போதிலும் குறிப்பிட்ட இரண்டு விஷயத்தை பற்றி நீங்கள் பேசினால் தர்க்கமாக மாறும் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மார்க்க அடிப்படையில் நீங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தவறு இருப்பின் அது பற்றி கேள்வி எழுப்பும் போது பதில் தர மாட்டேன் என்பது மார்க்க அடிப்படையில் தவறு என்பதற்கு நீங்கள் ஆதாரம் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

ஒரு விஷயத்திற்கு பதில் தராமல் பின்வாங்குவது மார்க்க அடிப்படையில் தோற்றுவிட்டதற்கு சான்று. இது பற்றி நீங்கள் விவாதிக்க விரும்பினால் ஆதாரத்துடன் விவாதிக்கலாம்.

சூனியம் குறித்த உங்களின் இமேயிலுக்கு பதில் சற்று முன் அனுப்பபட்டுள்ளது. உங்களின் பதிலுக்கு பிறகு நிபந்தனைகளை முடிவு செய்து கலந்துரையாடலை துவங்கலாம், இன்ஷா அல்லாஹ்.

இறையருட்கவி மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள் மார்க்க பிரச்சாரம் செய்யலாமா? என்ற எங்களின் கேள்விக்கு மவுணமே பதிலாக வந்துள்ளதை வைத்து வாசகர்கள் முடிவு செய்யட்டும் என்பதை இங்கே சூட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

மீண்டும் சொல்லுகிறேன், என்னை பற்றி உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல, கேள்வி கேட்க மட்டுமே நான் தகுதியானவன் என்பதை பல முறை சொல்லிவிட்டேன்.

மற்றவர்கள் பற்றி பதில் கூற நான் தகுதியானவன் அல்ல என்பதையும் பல முறை சொல்லிவிட்டேன்.

மீண்டும் மீண்டும் உங்கள் மவுனமே ஒத்துக்கொண்டதற்கு சமம் என்ற ஒரு கருத்துருவாக்கதை வைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இது தான் நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையா?

இவ்வளவு தூரம் நம் சகோதரர்கள் என்று மதிப்பளித்து பதில் கொடுத்தும் நிதானமாக கருத்துரையாடி, மற்றொரு பதிவில் சந்திக்கலாம் என்று சொன்ன பிறகும், வீண் விதாண்டமாக திரும்ப திரும்ப நீங்களாகவே ஒன்றை முடிவு செய்து ஒத்துக்கொண்டீர்கள் ஒத்துக்கொண்டீர்கள் ஒத்துக்கொண்டீர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பது சரியா? என்பதை இதை வாசிக்கும் சகோதரர்களின் பார்வைக்கே நானும் விட்டுவிடுகிறேன்.

பிறரின் செயலை பற்றி என்னிடம் கருத்து கேட்டால், நான் அந்த நபர் மேல் உள்ள அவதூறு அல்லது குற்றம் பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை என்று சொல்லுகிறேன், ஆனால் ஒத்துக்கொண்டேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லுவது என் மீது நீங்கள் கூறும் அவதூறாக கருத தோன்றுகிறது.

கருத்துகூற விரும்பவில்லை என்று சொல்லுவது ஒத்துக்கொண்டதாகத்தான் அர்த்தம் என்பதை குர்ஆன் ஹதீஸ் என்று வார்த்தைக்கு வார்த்தை பற்றி பேசும் நீங்கள் தான் ஆதாரம் தந்து நிரூபிக்க வேண்டும். ஆதாரத்தை காட்டுங்கள். மூன்றாவது முறையாக கேட்கிறேன்.

எனக்கு தொடர்பில்லாத, நான் சொல்லாத இறையருட்கவி என்ற வார்த்தை உங்கள் விமர்சனம் அதிரைநிருபர் www.adirainirubar.in தளத்தில் வந்த ஒரு பதிவு பற்றிய செய்தி, editor@adirainirubar.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பதில் கேட்கலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம் ஒருத்தன் தவறு செய்வது வேவலம் என்றால் அந்த தவறை செய்ய தூண்டி பின்னானியில் இருந்து பல சூழ்ச்சிகள் செய்வது அதைவிட கேவலம் இந்த அளவுகோள் நம் எல்லோருக்கும் பொருந்தும். ஒருவர் பற்றிய அவதூறு, அவருக்கு யார் யார் சூழ்ச்சிகள் செய்து அவரை அந்த தவறு என்று சொல்லப்படுபவைகளை செய்ய வைத்தார்கள் என்ற விமர்சனங்களுக்கு குற்றம் சாட்டப்பாடும் அந்த நபர் தான் உங்களிடம் பதில் சொல்ல வேண்டும். நான் அல்ல.

அல்லாஹ் நம் எல்லோரும் தெளிவான அறிவையும், நல்ல சிந்தனையும் தந்தருள்வானாக.

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

வஅலைக்கும் ஸலாம்.

//மீண்டும் சொல்லுகிறேன், என்னை பற்றி உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல, கேள்வி கேட்க மட்டுமே நான் தகுதியானவன் என்பதை பல முறை சொல்லிவிட்டேன்.

மற்றவர்கள் பற்றி பதில் கூற நான் தகுதியானவன் அல்ல என்பதையும் பல முறை சொல்லிவிட்டேன்.//

நாங்கள் கேட்கும் விஷயம் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் இல்லை. நீங்கள் முக்கியஸ்தராக இருக்கும் இணையதளத்தில் தவ்ஹீத்வாதிகள் என்ற போர்வையில் இருப்பவர்களின் வெளியீடு. எனவே, உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் என்பதை உங்களால் ஏற்றுகொள்ள முடிகிறதா?

//மீண்டும் மீண்டும் உங்கள் மவுனமே ஒத்துக்கொண்டதற்கு சமம் என்ற ஒரு கருத்துருவாக்கதை வைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இது தான் நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையா? //

நீங்கள் அந்த செயலை செய்யவில்லை என்றாலும் நீங்களும் நிர்வாகியாக இருக்கும் தளத்தில் தவறான செயல் நடந்தால் அதற்கு நீங்கள் பொருப்பாளி என்பது மார்க்கத்தின் வழிகாட்டுதல் தானே?

//இவ்வளவு தூரம் நம் சகோதரர்கள் என்று மதிப்பளித்து பதில் கொடுத்தும் நிதானமாக கருத்துரையாடி, மற்றொரு பதிவில் சந்திக்கலாம் என்று சொன்ன பிறகும், வீண் விதாண்டமாக திரும்ப திரும்ப நீங்களாகவே ஒன்றை முடிவு செய்து ஒத்துக்கொண்டீர்கள் ஒத்துக்கொண்டீர்கள் ஒத்துக்கொண்டீர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பது சரியா? என்பதை இதை வாசிக்கும் சகோதரர்களின் பார்வைக்கே நானும் விட்டுவிடுகிறேன்.

பிறரின் செயலை பற்றி என்னிடம் கருத்து கேட்டால், நான் அந்த நபர் மேல் உள்ள அவதூறு அல்லது குற்றம் பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை என்று சொல்லுகிறேன், ஆனால் ஒத்துக்கொண்டேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லுவது என் மீது நீங்கள் கூறும் அவதூறாக கருத தோன்றுகிறது.

கருத்துகூற விரும்பவில்லை என்று சொல்லுவது ஒத்துக்கொண்டதாகத்தான் அர்த்தம் என்பதை குர்ஆன் ஹதீஸ் என்று வார்த்தைக்கு வார்த்தை பற்றி பேசும் நீங்கள் தான் ஆதாரம் தந்து நிரூபிக்க வேண்டும். ஆதாரத்தை காட்டுங்கள். மூன்றாவது முறையாக கேட்கிறேன்.//

மவுனம் சம்மதம் என்பதை கூட கருத் வேண்டாம். நீங்களும் முக்கியஸ்தவராக இருக்கும் ஒரு தளத்தில் தவறான விஷயம் நடந்தால் அதற்கு நீங்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்களா? இல்லையா? இதற்கு மார்க்கத்தின் ஆதாரம் வேண்டுமா?

//எனக்கு தொடர்பில்லாத, நான் சொல்லாத இறையருட்கவி என்ற வார்த்தை உங்கள் விமர்சனம் அதிரைநிருபர் www.adirainirubar.in தளத்தில் வந்த ஒரு பதிவு பற்றிய செய்தி, editor@adirainirubar.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பதில் கேட்கலாம்.//

தங்களின் இந்த விளக்கத்திற்கு நன்றி. இறையருட்கவி என்றும், மார்க்கத்தில் இல்லாத தராவீஹ் தொழுகை, ஹஜ் செய்தவரை ஹாஜி என்ற அடைமொழி இப்படி சத்தியத்துடன் அசத்தியத்தையும் சேர்த்து வைத்து இருப்பவர்களின் விளக்கம் எங்களுக்கு தேவைப்படாது என்றே கருதுகிறோம். தங்களது தளத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட பல ஆக்கங்களின் சகோதரர்கள் கருத்திட்டு, வாதம் வலுவாக சொல்லும் போது, கருத்துச் சுதந்திரத்தின் குரல் நெரிக்கப்பட்டு, காமெண்ட் பாக்ஸ் முடப்பட்டதை சில சகோதரர்கள் எங்களுக்கு ஆதாரத்துடன் அனுப்பி இருந்தார்கள் என்பதையும் மேலதிக தகவலாக பதிய விரும்புகிறோம்.

தொடரும்......

தொடர்ச்சி.....

//ஒன்று மட்டும் நிச்சயம் ஒருத்தன் தவறு செய்வது வேவலம் என்றால் அந்த தவறை செய்ய தூண்டி பின்னானியில் இருந்து பல சூழ்ச்சிகள் செய்வது அதைவிட கேவலம் இந்த அளவுகோள் நம் எல்லோருக்கும் பொருந்தும். ஒருவர் பற்றிய அவதூறு, அவருக்கு யார் யார் சூழ்ச்சிகள் செய்து அவரை அந்த தவறு என்று சொல்லப்படுபவைகளை செய்ய வைத்தார்கள் என்ற விமர்சனங்களுக்கு குற்றம் சாட்டப்பாடும் அந்த நபர் தான் உங்களிடம் பதில் சொல்ல வேண்டும். நான் அல்ல.//

யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று புரிகிறது. தவறை செய்ய செட்டப் செய்து அவரை தவறின் பக்கம் நாம் இழுத்து செல்லவில்லை. தவறு செய்து கொண்டு இருந்தவரை, தவறில் பாதிப்பட்டவர் வெளியே சொல்லி, மார்க்க அறிஞர் இப்படியா இருப்பார் என்று சொன்ன பிறகு, அதே வழியில் சென்று என்ன செய்கிறார் என்று இலங்கையை சார்ந்த சில சகோதரர்கள் சோதித்த போது அம்பலமானது அவரின் அயோக்கியத்தனம். இவ்வாறு செட்டப் செய்வது தவறு என்று தவ்ஹீத் ஜமாஅத் சமபந்தப்பட்ட சகோதரர்களை கண்டித்தது. இதை கேடுகெட்ட அந்த மார்க்க அறிஞரே ஒத்துக்கொண்டார். என்ன செய்கிறார் என்று சோதிக்காமல் இருந்து இருந்தாலும், இவர் அயோக்கியர் இல்லை என்று ஆகாது.

யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று புரிகிறது. தவறை செய்ய செட்டப் செய்து அவரை தவறின் பக்கம் நாம் இழுத்து செல்லவில்லை. தவறு செய்து கொண்டு இருந்தவரை, தவறில் பாதிப்பட்டவர் வெளியே சொல்லி, மார்க்க அறிஞர் இப்படியா இருப்பார் என்று சொன்ன பிறகு, அதே வழியில் சென்று என்ன செய்கிறார் என்று இலங்கையை சார்ந்த சில சகோதரர்கள் சோதித்த போது அம்பலமானது அவரின் அயோக்கியத்தனம். இவ்வாறு செட்டப் செய்வது தவறு என்று தவ்ஹீத் ஜமாஅத் சமபந்தப்பட்ட சகோதரர்களை கண்டித்தது. இதை கேடுகெட்ட அந்த மார்க்க அறிஞரே ஒத்துக்கொண்டார். என்ன செய்கிறார் என்று சோதிக்காமல் இருந்து இருந்தாலும், இவர் அயோக்கியர் இல்லை என்று ஆகாது.

சூனியம் சமபந்தமாக நாம் விவாதிக்க உள்ளோம், இன்ஷா அல்லாஹ்.

உங்களின் இந்த கருத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமததிற்கு மன்னிக்கவும்.

இறுதியாக,

உங்களை சிறுமைப்படுத்தவோ அல்லது நாங்கள் சரியானவர்கள் என்று காட்டவோ நாம் சில தவறுகளை சூட்டிக்காட்டவில்லை. மாறாக, நீங்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள தவறுகளை சூட்டிக்காட்டி, அதை திருத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் சூட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்களிடம் இருக்கும் தவறுகளை நீங்களே அல்லது மாற்றவர்களே சூட்டிக்காட்டலாம். தவறாக இருந்தால் அதை நாங்கள் திருத்திக்கொள்ள தயார்.

உங்களின் மனதை புண்படுத்தும்படி ஏதேனும் கடினமான சொற்கள் பயன்படுத்தப்பட்டுயிருந்தால் மன்னிக்கவும்.

வஸ்ஸலாம்

சகோ. தாஜுதீன் அவர்களுக்கு,

நீங்களும் நிர்வாகியாக இருக்கும் ஒரு தளத்தில் வெளிவரும் மார்க்க முரணான செயல்களுக்கு நீங்களும் பொருப்பாளி என்ற அடிப்படையில் இறையருட்கவி, மார்க்கத்தில் இல்லாத தராவீஹ் தொழுகை, ஹஜ் செய்தவரை ஹாஜி என்ற அடைமொழி போன்ற தவறுகளை செய்யும் இணையதளத்தில் நீங்களும் குற்றவாளி என்பது மார்க்க அடிப்படையில் ஆதாரம் வேண்டுமா? ஒரு வேளை இது உங்களின் பார்வையில் தவறுகள் இல்லையே? இது சம்பந்தமாக எங்களின் இறுதி கருத்திற்கு உங்களிடம் பதில் இல்லை.

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் நீங்கள் கீழ்காணும் கருத்தை முன்வைத்துயிருந்தீர்கள். அந்த கருத்திக்கு நாங்கள் பின்னர் பதில் தருவதாக சொல்லியிருந்தோம்.

//நபி(ஸல்) அவர்களும் ஸஹப்பாக்களும் நுர்பமான ஷிர்க் வைத்தார்கள் என்று ஒரு யூதன் சுட்டிக்காட்டியதாக வரும் செய்தி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது, //

அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை யாரே ஒருவன் சூனியம் செய்து மடக்க முடியும் என்ற உங்களின் நம்பிக்கைக்கும் இந்த வாதம் பொருந்தும் அல்லவா? யாரே ஒருவன் அல்லாஹ்வின் தூதரை சூனியம் செய்து மடக்க முடியும் என்றால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தானே அர்த்தம்?

அதிரை த த ஜ தள நிர்வாகி மற்றும் இந்த பதிவையும் இதனை தொடர்ந்து வரும் கருத்துக்களையும் வாசிக்கும் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரைநிருபர் பதிப்பகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி "இறையருட்கவிமணி" என்ற வார்த்தை பற்றி விளக்கம் கேட்காமல் என்னிடமே சுற்றி சுற்றி பதில் கேட்டுக்கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

நான் அதிரை முஜீப் தளத்தில் இட்ட கருத்துக்கு பதில் அளிக்கிறீர்கள் என்ற இந்த பதிவில் என்னைப் பற்றி சொல்லப்பட்ட பொய் குற்றச்சாட்டு மற்றும் தவறான செய்திக்கு மறுப்பு சொன்னேன்.

தனிப்பட்ட முறையில் என் மேல் தொடுக்கப்பட்ட அவதூறு செய்திகளுக்கு பதில் சொல்லும் தகுதி எனக்கு இருப்பதால் என்னுடைய பதிலை சொல்லிவருகிறேன். அதிரைநிருபர் பதிப்பகத்தில் நானும் ஒருவன் என்பதை நான் மறுக்கவில்லை, இருப்பினும் நீங்கள் சர்ச்சையான வார்த்தை என்று சித்தரிக்கும் "இறையருட்கவி" என்ற வார்த்தை நான் சொல்லாதது, அதிரைநிருபர் தளத்தில் வெளிவந்த வார்த்தை அது பற்றி அதிரைநிருபர் பதிப்பகத்திற்கு விளக்கம் கேட்டு மின்னஞ்சலிட்டு பதில் கேட்பதுதானே சரியான நிலைபாடாக இருக்கும். இதை செய்யாமல் நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் சொல்லுங்கள் என்று மீண்டும் மீண்டும் நிர்பந்திப்பது எந்த வகையில் நியாயம் என்பதை இந்த பதிவின் கருத்துக்களை வாசிக்கும் சகோதரர்கள் அனைவரும் முடிவு செய்துக்கொள்ளட்டும்.

அதிரைநிருபர் தளத்திற்கு நீங்கள் மின்னஞ்சல் அனுப்பி அதற்கு பதில் வரவில்லை என்றால். நீங்கள் தாராளமாக அந்த "இறையருட்கவி" என்ற வார்த்தை ஒருவருக்கு வைத்து சொல்லுவது தவறு என்று ஒரு ஆய்வு பதிவு குர் ஆன் ஹதீஸுடன் தெளிவாக விளக்கமாகவும் குழப்பமில்லாமலும் பதிந்து, அதிரைநிருபர் பதிப்பகத்தில் குறிப்பிட்டது தவறு என்று தெரியப்படுத்துங்கள்.

//Adirai TNTJ said on 25 ஆகஸ்ட், 2013 10:03 AM... இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் நீங்கள் கீழ்காணும் கருத்தை முன்வைத்துயிருந்தீர்கள். அந்த கருத்திக்கு நாங்கள் பின்னர் பதில் தருவதாக சொல்லியிருந்தோம்.

//THAJUDEEN said on 11 ஆகஸ்ட், 2013 10:11 PM... நபி(ஸல்) அவர்களும் ஸஹப்பாக்களும் நுர்பமான ஷிர்க் வைத்தார்கள் என்று ஒரு யூதன் சுட்டிக்காட்டியதாக வரும் செய்தி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது, //

Adirai TNTJ said 25 ஆகஸ்ட், 2013 10:03 AM.... அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை யாரே ஒருவன் சூனியம் செய்து மடக்க முடியும் என்ற உங்களின் நம்பிக்கைக்கும் இந்த வாதம் பொருந்தும் அல்லவா? யாரே ஒருவன் அல்லாஹ்வின் தூதரை சூனியம் செய்து மடக்க முடியும் என்றால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தானே அர்த்தம்?//

நுர்பமான சிர்கிற்கு நீங்கள் அளித்திருக்கும் பதில் உண்மையில் என்னை அச்சரியமளிக்க செய்ததுள்ளது.

நான் இந்த பதிவிலோ அல்லது வேறு எங்கையாவது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை யாரே ஒருவன் சூனியம் செய்து மடக்க முடியும் என்று எங்கையாவது சொல்லியிருக்கிறேனா?" நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இது என் மீது நீங்கள் தொடுத்த அவதூறாகவே கருத நேரிடும்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது தொடர்பான ஹதீஸில் உள்ளவைகளில் என்னுடைய நிலைப்பாட்டை அறியாத நிலையில் நீங்களாகவே அனுமானித்து செய்தியையை போட்டிருப்பது உண்மையில் வருத்தமளிக்கிறது.

ஹக்கை விளங்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில், சூனியம் தொடர்பாக அருமையான ஓர் கருத்தாடலில் நான் பங்கேடுக்க சம்மதம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பிய நிலையில் இது போன்ற தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்திருக்கலாம்.

அல்லாஹ் நம் எல்லோரையும் நேர் வழிபடுத்துவானாக.

நான் கேட்ட கேள்விக்கு இது வரை நீங்கள் ஆதாரம் காட்டவில்லை, மீண்டும் நிணைவூட்டுகிறேன்...

ஒருவன் பிறர் ஒருவருக்கு விசயத்தை பேசவேண்டாம் வீண் தர்க்கம் ஏற்படும் என்று சொல்லுவது அந்த நபர் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டதாக அர்த்தம் என்பதற்கான அளவுகோள் எந்த மொழி பெயர்ப்பு புத்தகத்தில் உள்ளது என்பதை காட்டாவிட்டாலும் பரவாயில்லை, குர்ஆன் ஹதீஸ்படி பேசும் நாம் நீங்கள் சொல்லும் அளவுகோளுக்கான ஆதாரத்தை காட்டுங்களேன்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்...

சகோ. தாஜுதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

'இறையருட்கவிமணி' சம்பந்தமாக நீங்கள் பதில் அளித்தே தீர வேண்டும் என்று நாங்கள் உங்களை வலியுறுத்தவில்லை. நீங்களும் அங்கத்தவராக இருக்கும் ஒரு தளத்தில் வெளியாகும் செய்திகளில் தவறான செய்திகள் இருந்தால் அதற்கு நீங்கள் பொருப்பாளி என்பதற்கு 'நீங்கள் ஒவ்வோருவரும் பொருப்பாளிகள், உங்களின் பொருப்புகள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்' என்ற நபிமொழி ஆதாரமாக உள்ளது.

தெரியாமல் தவறு செய்பவர்களிடம் தான் விளக்கம் கேட்பது சரியானதாக இருக்கும் என்று கருதுகிறோம். நீங்கள் குறிப்பிடும் தளத்தில் வரும் தவறான செய்திகளுக்கு நீங்கள் பொருப்பாளியா? இல்லையா? என்பதை வாசகர்களின் கையிலேயே விட்டுவிடுகிறோம். இறையருட்கவிமணி என்ற வார்த்தை பிரயோகம் சரியானதா? தவறானதா? என்பதை விளக்க கட்டுரை தேவையில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

தொடரும்.....

//நான் இந்த பதிவிலோ அல்லது வேறு எங்கையாவது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை யாரே ஒருவன் சூனியம் செய்து மடக்க முடியும் என்று எங்கையாவது சொல்லியிருக்கிறேனா?" நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இது என் மீது நீங்கள் தொடுத்த அவதூறாகவே கருத நேரிடும்.//

பதில் தரும் போது சற்று அவசரப்படுகிறீர்கள் போல் தெரிகிறது. நீங்கள் இவ்வாறு சொன்னீர்கள் என்று நாங்கள் எங்கே குறிப்பிட்டுளோம்? அவ்வாறு குறிப்பிட்டால் தானே அவதூறாகும். நூற்பாமான ஷிர்க் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தெரியவில்லை எனும்போது, நபி (ஸல்) அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இல்லை என்றாகும் அல்லவா? என்று நீங்கள் கேட்ட அடிப்படையில், உங்களின் சூனியம் சம்பந்தப்பட்ட நம்பிக்கையின் அடிப்டையில் இதே கேள்வியை கேட்டகலாம் அல்லவா? என்று தான் கேட்டுயிருந்தோம். உங்களின் நம்பிக்கை அடிப்படையில் இந்த கேள்வி கேட்கப்பட்டதே தவிர, நீங்கள் இவ்வாறு சொன்னீர்கள் என்று நாங்கள் கேட்கவில்லை.

இருப்பினும், நீங்கள் கீழ்கண்டவாறு குறிப்பிட்ட பிறகு இதை இங்கே விவாத பொருளாக ஆக்க வேண்டாம் என்று கருதுகிறோம். இது குறித்து சூனியம் சம்பந்தமான நமது கலந்துரையாடலில் விவாதிக்கலாம்.

//நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது தொடர்பான ஹதீஸில் உள்ளவைகளில் என்னுடைய நிலைப்பாட்டை அறியாத நிலையில் நீங்களாகவே அனுமானித்து செய்தியையை போட்டிருப்பது உண்மையில் வருத்தமளிக்கிறது.//

தொடரும்....

//ஒருவன் பிறர் ஒருவருக்கு விசயத்தை பேசவேண்டாம் வீண் தர்க்கம் ஏற்படும் என்று சொல்லுவது அந்த நபர் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டதாக அர்த்தம் என்பதற்கான அளவுகோள் எந்த மொழி பெயர்ப்பு புத்தகத்தில் உள்ளது என்பதை காட்டாவிட்டாலும் பரவாயில்லை, குர்ஆன் ஹதீஸ்படி பேசும் நாம் நீங்கள் சொல்லும் அளவுகோளுக்கான ஆதாரத்தை காட்டுங்களேன்.//

உங்களுக்கு சற்று சம்பந்தம் இல்லாத சம்பவத்தை பற்றி உங்களிடம் கேட்டால் அது பற்றி நீங்கள் கருத்துக்கூற விரும்பவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். நீங்கள் பொருப்பாளியாக இருக்கும் ஒரு தளத்தில் வரும் தவறான விஷயங்களுக்கு நீங்களும் பொருப்பாளிகள் நீங்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பதற்கு 'நீங்கள் ஒவ்வோருவரும் பொருப்பாளிகள், உங்களின் பொருப்புகள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்' என்ற நபிமொழி ஆதாரமாக திகழ்கிறது. இதுபற்றி நீங்கள் முழமையாக விவாதிக்க விரும்பினால், இது பற்றி விரிவாக ஆதாரங்களை அடுக்கி நாங்கள் தொடர தயார், இன்ஷா அல்லாஹ்.

இந்த கலந்துரையாடலை நீங்கள் இத்துடன் நிறுத்த விரும்பினால், இதை இத்துடன் முடித்துவிட்டு, சூனியம் சம்பந்தமான நமது கலந்துரையாடலில் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்.

//தெரியாமல் தவறு செய்பவர்களிடம் தான் விளக்கம் கேட்பது சரியானதாக இருக்கும் என்று கருதுகிறோம். நீங்கள் குறிப்பிடும் தளத்தில் வரும் தவறான செய்திகளுக்கு நீங்கள் பொருப்பாளியா? இல்லையா? என்பதை வாசகர்களின் கையிலேயே விட்டுவிடுகிறோம். இறையருட்கவிமணி என்ற வார்த்தை பிரயோகம் சரியானதா? தவறானதா? என்பதை விளக்க கட்டுரை தேவையில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். //

அஸ்ஸலாமு அலைக்கும்,

முதலில் இந்த இறையருட்கவி என்ற சொல் தொடர்பான விவாதத்தை வாசகர்களின் எண்ணத்திற்கு விட்டு முடிவுக்கு கொண்டுவந்ததற்காக.. ஜஸக்கல்லாஹ் ஹைரா..

முதலில் இந்த பதிவு சிறைவாசிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதற்கான ததஜவின் பதில், ஆனால் இங்கு யார் திசை திருப்பி எங்கோ விவாதத்தை கொண்டு சென்றார்கள் என்பதையும் இதனை வாசிக்கும் அன்பர்கள் புரிந்துக்கொள்வார்கள்.

// உங்களின் சூனியம் சம்பந்தப்பட்ட நம்பிக்கையின் அடிப்டையில் இதே கேள்வியை கேட்டகலாம் அல்லவா? //

சூனியம் தொடர்பாக உள்ள இந்த ஹதீஸ் சம்பத்தப்பட்ட என் நம்பிக்கை என் நிலைப்பட்டை நான் எங்கும் சொல்லாததை நீங்கள் எங்கு? எப்படி? அறிந்தீர்கள் என்பதை மட்டுமாவது விளக்கவும். உங்கள் சூனியம் தொடர்பான நம்பிக்கை என்று என்னுடையை நம்பிக்கை பற்றி நீங்கள் சொல்லியதை நான் அவதூறாக கருதுகிறேன்.

நீங்கள் குறிப்பட்டது போன்றுதான் சூனியம் பற்றி என் நம்பிகை உள்ளது என்று நீங்கள் தான் நீரூபிக்க வேண்டும். இல்லை தவறாக அவசரப்பட்டு சொல்லியிருப்பீர்களாயின் வாபஸ் வாங்க வேண்டும்.

//Thajudeen said... ஒருவன் பிறர் ஒருவருக்கு விசயத்தை பேசவேண்டாம் வீண் தர்க்கம் ஏற்படும் என்று சொல்லுவது அந்த நபர் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டதாக அர்த்தம் என்பதற்கான அளவுகோள் எந்த மொழி பெயர்ப்பு புத்தகத்தில் உள்ளது என்பதை காட்டாவிட்டாலும் பரவாயில்லை, குர்ஆன் ஹதீஸ்படி பேசும் நாம் நீங்கள் சொல்லும் அளவுகோளுக்கான ஆதாரத்தை காட்டுங்களேன்.//

உங்களுக்கு சற்று சம்பந்தம் இல்லாத சம்பவத்தை பற்றி உங்களிடம் கேட்டால் அது பற்றி நீங்கள் கருத்துக்கூற விரும்பவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். நீங்கள் பொருப்பாளியாக இருக்கும் ஒரு தளத்தில் வரும் தவறான விஷயங்களுக்கு நீங்களும் பொருப்பாளிகள் நீங்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பதற்கு 'நீங்கள் ஒவ்வோருவரும் பொருப்பாளிகள், உங்களின் பொருப்புகள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்' என்ற நபிமொழி ஆதாரமாக திகழ்கிறது. இதுபற்றி நீங்கள் முழமையாக விவாதிக்க விரும்பினால், இது பற்றி விரிவாக ஆதாரங்களை அடுக்கி நாங்கள் தொடர தயார், இன்ஷா அல்லாஹ்///

நான் கேட்ட ஆதாரத்துக்கும் நீங்கள் சொல்லியிருக்கும் நபிமொழிக்கும் சம்பந்தமில்லை.. தெளிவான ஆதாரத்தை அடுக்குவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.. நீங்கள் விரும்பினால் ஒரு தனி விளக்க பதிவு தாருங்கள்...

என்னிடம் ஒருவரை (எனக்கு அறிமுகமானவரையோ அல்லது அறிமுகமில்லாதவரையோ) பற்றி குற்றம் சுமத்தி கேட்கிறார்கள், இது பற்றி நான் கருத்துகூற விரும்பவில்லை, வீண் விவாதம் வரும் தவறித்துக்கொள்ளலாமே என்று சொல்லுவது நான் அந்த நபர் செய்த தவறை ஒத்துக்கொண்டதாக அர்த்தமாகும் என்ற உங்கள் நிலைப்பாட்டுக்கு தெளிவான ஆதாரத்தை எடுத்து வைக்க மீண்டும் கேருகிறேன்.

அறிவில் மிகத்தவன் அல்லாஹ் ஒருவனே...

//சூனியம் தொடர்பாக உள்ள இந்த ஹதீஸ் சம்பத்தப்பட்ட என் நம்பிக்கை என் நிலைப்பட்டை நான் எங்கும் சொல்லாததை நீங்கள் எங்கு? எப்படி? அறிந்தீர்கள் என்பதை மட்டுமாவது விளக்கவும். உங்கள் சூனியம் தொடர்பான நம்பிக்கை என்று என்னுடையை நம்பிக்கை பற்றி நீங்கள் சொல்லியதை நான் அவதூறாக கருதுகிறேன்.

நீங்கள் குறிப்பட்டது போன்றுதான் சூனியம் பற்றி என் நம்பிகை உள்ளது என்று நீங்கள் தான் நீரூபிக்க வேண்டும். இல்லை தவறாக அவசரப்பட்டு சொல்லியிருப்பீர்களாயின் வாபஸ் வாங்க வேண்டும்.//

சூனியம் என்ற ஒன்று உண்டு என்று நீங்கள் நம்புகிறீர்கள். அதனால் தான் கலந்துரையாடலுக்கு தயார் என்று சொல்லியுள்ளீர்கள். சூனியத்தை நம்புபவர்களிடம் இந்த கேள்வி கேட்பது தவறு இல்லை என்று கருதுகிறோம். இவ்வாறு கேள்வி கேட்டதை எவ்வாறு தவறு என்று சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. சூனியம் குறித்த உங்களின் நிலைபாட்டை தான் சொல்லுங்களேன்....

//நான் கேட்ட ஆதாரத்துக்கும் நீங்கள் சொல்லியிருக்கும் நபிமொழிக்கும் சம்பந்தமில்லை.. தெளிவான ஆதாரத்தை அடுக்குவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.. நீங்கள் விரும்பினால் ஒரு தனி விளக்க பதிவு தாருங்கள்...//

இதற்கு நாங்கள் பதில் தருவதற்கு முன், நீங்கள் நிர்வாகியாக இருக்கும் தளத்தில் வரும் தவறான செய்திகளுக்கு நீங்களும் பொருப்பாளி என்பதை (ஒவ்வோருவரும் பொருப்பாளிகள் என்ற நபிமொழி அடிப்படையில்...) ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? அல்லது மறுக்குகிறீர்களா? வாதம் என்று வரும் போது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதை சூட்டிக்காட்ட விரும்புகிறோம். இதற்கு பதில் வந்த பிறகு ஆதாரங்கள் வரும், இன்ஷா அல்லாஹ். இதற்கும் 'நோ கமெண்ட்ஸ்' என்றால் இத்தோடு முடிப்பதே சிறந்தது.

//Adirai TNTJ says: 26 ஆகஸ்ட், 2013 9:00 PM ... சூனியம் என்ற ஒன்று உண்டு என்று நீங்கள் நம்புகிறீர்கள். அதனால் தான் கலந்துரையாடலுக்கு தயார் என்று சொல்லியுள்ளீர்கள். சூனியத்தை நம்புபவர்களிடம் இந்த கேள்வி கேட்பது தவறு இல்லை என்று கருதுகிறோம். இவ்வாறு கேள்வி கேட்டதை எவ்வாறு தவறு என்று சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. சூனியம் குறித்த உங்களின் நிலைபாட்டை தான் சொல்லுங்களேன்....//

சூனியம் பற்றி தயவுசெய்து அவசரப்பட்டு ஒற்றவரியில் பதில் கேட்க வேண்டாம். அல்குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் என்னுடைய நிலைப்பாட்டை சூனியம் தொடர்பான கருத்துரையாடலில் நிச்சயம் நீங்கள் மிகத் தெளிவாக அறிந்துக்கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்..

அதற்கு முன்பு, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது தொடர்பாக நீங்களாகவே என்னுடைய நம்பிக்கை என்று நீங்கள் தவறாக சொன்ன வாசகத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அந்த வார்த்தை இந்த பதிவில் தொடர்ந்து இருக்குமானால் அது என் மீது நீங்கள் அவதூறு சொல்லியிருப்பதாகவே என்னாலும் இதனை வாசிக்கும் வாசகர்களாலும் கருத நேரிடுகிறது என்பதை பதிவு செய்கிறேன்.

//இதற்கு நாங்கள் பதில் தருவதற்கு முன், நீங்கள் நிர்வாகியாக இருக்கும் தளத்தில் வரும் தவறான செய்திகளுக்கு நீங்களும் பொருப்பாளி என்பதை (ஒவ்வோருவரும் பொருப்பாளிகள் என்ற நபிமொழி அடிப்படையில்...) ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? அல்லது மறுக்குகிறீர்களா? வாதம் என்று வரும் போது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதை சூட்டிக்காட்ட விரும்புகிறோம். இதற்கு பதில் வந்த பிறகு ஆதாரங்கள் வரும், இன்ஷா அல்லாஹ். இதற்கும் 'நோ கமெண்ட்ஸ்' என்றால் இத்தோடு முடிப்பதே சிறந்தது//

நான் ஒரு நிறுவனத்தில் அங்கத்தவராக உள்ளேன், அந்த நிறுவனம் தொடர்பாக குற்றம் சாட்டுகிறார்கள் என்னிடம் கருத்து கேட்கிறார்கள், நான் சொல்லுகிறேன் என்னுடைய தனிப்பட்ட கருத்தை தெரிவிப்பதை நான் தவிர்கிறேன் தயவு செய்து அந்த நிறுவனத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அவர்கள் செய்தது தவறு என்று குர்ஆன் ஹதீஸ்படி ஆதாரத்துடன் விளக்கம் சொல்லி விளக்கம் கேட்க சொல்லுகிறேன். இல்லை இல்லை நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பது அர்த்தமற்றது என்பது இந்த பின்னூட்டங்களை வாசித்து வரும் சகோதரர்களுக்காவது புரிந்திருக்கும்.

நான் இருக்கும் நிறுவனம் குர் ஆன் ஹதீஸ்ஸுக்கு மாற்றமாக தவறு செய்தால், நிச்சயம் அந்த தவறுக்கு எனக்கு உடன்பாடு இருந்தால் நிச்சயம் நான் பொறுப்பாளி என்பதில் சந்தேகமில்லை. அந்த தவறு, அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றால் நிச்சயம் நான் அந்த தவறுக்கு பொறுப்பாக மாட்டேன். அதை தவறு என்று பொதுவில் சொல்ல நிச்சயம் தயக்கம் காட்ட மாட்டேன்.

இறையருள்கவிமணி என்ற வார்த்தை பிறயோகம் தவறு என்று குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கி, அதிரைநிருபர் தவறு செய்துள்ளது என்று நீங்கள் அதிரைநிருபர் பதிப்பகத்திடம் விளக்கம் கேட்ட பிறகு அவர்கள் நிலைப்பாடு சரியா தவறா என்பதை உறுதி இது பற்றி என்னிடம் கேள்வி கேட்பது அறிவுடைமாக இருக்கும் என்று நான் கருதுவது தவறா? அதிரைநிருபர் தளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பித்தான் பாருங்களேன் அதிரைததஜ தள நிர்வாக சகோதரரே.

என்னுடைய நிலைப்பட்டை தெரிவித்துவிட்டேன்.. உங்களிடமிருந்து ஆதாரத்தை எதிர்ப்பார்கிறேன். தருவீர்களா?

//சூனியம் பற்றி தயவுசெய்து அவசரப்பட்டு ஒற்றவரியில் பதில் கேட்க வேண்டாம். அல்குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் என்னுடைய நிலைப்பாட்டை சூனியம் தொடர்பான கருத்துரையாடலில் நிச்சயம் நீங்கள் மிகத் தெளிவாக அறிந்துக்கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்..

அதற்கு முன்பு, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது தொடர்பாக நீங்களாகவே என்னுடைய நம்பிக்கை என்று நீங்கள் தவறாக சொன்ன வாசகத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அந்த வார்த்தை இந்த பதிவில் தொடர்ந்து இருக்குமானால் அது என் மீது நீங்கள் அவதூறு சொல்லியிருப்பதாகவே என்னாலும் இதனை வாசிக்கும் வாசகர்களாலும் கருத நேரிடுகிறது என்பதை பதிவு செய்கிறேன்.//


அவதூறு என்றால் என்னவென்று நீங்கள் சற்று விபரமாக தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். சூனியத்தை நீங்கள் நம்புவதாக சொன்னீர்கள். எனவே, எங்களிடம் நீங்கள் கேட்கும் கேள்வி உங்களிடமும் கேட்கலாமல்லவா? என்று கேட்டால், அவதூறு என்கிறீர்கள். எங்களின் கேள்விக்கும் உங்களின் நம்பிக்கையும் சம்பந்தம் இல்லாமல் இருந்தால், எனது நம்பிக்கை இது தான், உங்களின் கேள்வி எனக்கு பொருந்தாது என்று சொன்னால், எங்களின் கேள்வி அர்த்தமற்றதாகிவிடும். எனவே, உங்களின் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லுங்கள்.

ஆரம்பம் முதலே இந்த ஆக்கத்தில் சாதாரணமாக கேட்கப்படும் கேள்விகளை கூட, ஏதே இமய மலை அளவுக்கு அவதூறு செய்துவிட்டதாக சித்தரிக்க முற்படுகிறீர்கள்.

//நான் ஒரு நிறுவனத்தில் அங்கத்தவராக உள்ளேன், அந்த நிறுவனம் தொடர்பாக குற்றம் சாட்டுகிறார்கள் என்னிடம் கருத்து கேட்கிறார்கள், நான் சொல்லுகிறேன் என்னுடைய தனிப்பட்ட கருத்தை தெரிவிப்பதை நான் தவிர்கிறேன் தயவு செய்து அந்த நிறுவனத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அவர்கள் செய்தது தவறு என்று குர்ஆன் ஹதீஸ்படி ஆதாரத்துடன் விளக்கம் சொல்லி விளக்கம் கேட்க சொல்லுகிறேன். இல்லை இல்லை நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பது அர்த்தமற்றது என்பது இந்த பின்னூட்டங்களை வாசித்து வரும் சகோதரர்களுக்காவது புரிந்திருக்கும்.//

உங்களின் இந்த பதிலில் இரண்டு விஷயத்தை சொல்லியுள்ளீர்கள். ஒன்று, தவறான செயல்கள் நடக்கும் இடங்களில் இருக்கலாம், அதில் அங்கமும் வகிக்கலாம். இரண்டு, இறையருள்கவிமணி என்ற வார்த்தை தவறல்ல.

நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று நாங்கள் அடம்புடிப்பதாக தவறான செய்தியை மீண்டும் மீண்டும் சொல்லுகிறீர்கள்.

தவறான செயல்கள் நடக்கும் இடங்களில் அங்கம் வகித்துக்கொண்டு, தவறான செயல்கள் நடக்கும் பட்சத்தில், அது தவறு என்று எண்ணிக்கொண்டால் அது போதும் என்கிறீர்கள். இதே வாதத்தின் அடிப்படையில் உங்களிடம் ஒரு கேள்வி, ஒரு பள்ளிக்கூடத்தில் நீங்கள் நிர்வாக அங்கத்தினர் என்று வைத்துக்கொள்வோம், அங்கு வார வாரம் ஒரு திரைப்படம் திரையிட்டு காட்டுகிறார்கள். உங்களுக்கு அது தவறு என்று தெரிகிறது. அதை தவறு என்றும் சொல்லுகிறீர்கள். இப்படி சொன்னால் மட்டும் போதுமா? அல்லது அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது தான் மார்க்கத்தின் வழிகாட்டுதலா? இந்த கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதிலே உங்களின் நிலைபாட்டை தெளிவாக எடுத்துரைக்கும்.

//இறையருள்கவிமணி என்ற வார்த்தை பிறயோகம் தவறு என்று குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கி, அதிரைநிருபர் தவறு செய்துள்ளது என்று நீங்கள் அதிரைநிருபர் பதிப்பகத்திடம் விளக்கம் கேட்ட பிறகு அவர்கள் நிலைப்பாடு சரியா தவறா என்பதை உறுதி இது பற்றி என்னிடம் கேள்வி கேட்பது அறிவுடைமாக இருக்கும் என்று நான் கருதுவது தவறா? அதிரைநிருபர் தளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பித்தான் பாருங்களேன் அதிரைததஜ தள நிர்வாக சகோதரரே.//

இறையருள்கவிமணி என்றால் இறையருளை பெறும் கவிஞர் என்ற பொருள் வருகிறது. உங்கள் நிறுவனம் தூக்கிபிடிக்கும் இந்த கவிஞருக்கு இறையருள் வந்தது என்று எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? நாளை நடப்பவற்றை அறியக்கூடியவரே என்று புகழும் மௌலூது பாடலுக்கும், இறையருளை பெறும் கவிஞர் என்று மெச்சுவதற்கும் என்ன வேறுபாடு? இவ்வாறான வார்த்தை பிரயோகம் தவறு என்பது தவ்ஹீத் கொள்கையை நேற்று விளங்கிய பாமரனுக்கும் தெரியுமே! இதற்கு விளக்கம் கேட்டு தான் முடிவு செய்ய வேண்டுமா?

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான்.நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அல்குர்ஆன் (4:140)

தவறான செயல்கள் நடக்கும் இடத்தில் அங்கம் வகிப்பது, அந்த தவறை செய்வதற்கு சமமானது என்பதை சொல்லும் திருக்குர்ஆன் வசனம் இதே!

உங்களிடம் இதற்கான பதில்கள் வந்த பிறகு அடுக்கான ஆதாரங்கள் வரும், இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இந்த கருத்தை வாசிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அதிரை ததஜ தள நிர்வாகிக்கும், அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரைமுஜீப் என்ற அதிரை சகோதரர் தளத்தில் http://adiraimujeeb.blogspot.ae/2013/07/blog-post_28.html சகோதரர் பி ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் ஜூனியர் விகடன் என்ற வாரப் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருந்தார் அதில் நான் பின் வருமாறு கூறியிருந்தேன்

//////// தாஜுதீன்1/8/13 20:08
//அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. //

கோவை குண்டு வெடிப்பில் விசாரணை என்ற பெயரில் குற்றம் சுமத்தப்படாத பல சகோதரர்கள் தங்களுடைய இளமை பொழுதை சிறையில் கழிக்கிறார்களே, அவர்களின் குடும்பத்தின் கண்ணீர் பிற சமுதாய இயக்கங்களை கொஞ்சமாவது குரல் கொடுக்க தூண்டியது, இந்த பேட்டியிலாவது இது பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே.. ஏன் அப்பாவி கோவை சிறைவாசிகள் பற்றி வாய்திறக்க பயப்படுகிறீர்கள்.
/////////

இதற்கு பதில் சொல்லுவதாக சொல்லி இந்த அதிரை ததஜ தளத்தில் சிறைவாசிகளுக்கு ததஜ உதவ வில்லை என்று நான் கூறியதாக சொல்லி ஒரு செய்தி வெளியிட்டாப்பட்டது. நான் சொல்லாத வார்த்தையை நான் சொல்லியது என்று பதிந்தது தவறு என்று ஒன்றுக்கு முன்று முறை சுட்டிக்காட்டிய பின் தலைப்பு பின்னர் பதிவில் உள்ள வாசகம் அதிரை ததஜ தளத்தினரால் நீக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இருப்பினும் இந்த பதிவுக்கு தொடர்பில்லாதவைகளை பின்னூட்டமாக அதிரை ததஜ சார்பாக என்னை பற்றிய் பொய்யான தகவலை இரண்டாவது பின்னூட்டமாக பதியப்பட்ட்தால், நான் அதற்கு மறுப்பு தெர்வித்தேன். பிறகு இந்த பதிவின் நோக்கத்தை திசைத் திருப்பியது யார் என்பதை இந்த பதிவையும் தொடர்ந்து வரும் பின்னூட்டங்களை வாசிக்கும் சகோதர சகோதரிகள் அனைவரும் அறிவார்கள்.

சரி நீங்கள் அதிரை த த ஜ சார்ப்பாக என்னிடம் இறுதியாக கேட்ட விசயத்துக்கு வருகிறேன்.

//இறையருள்கவிமணி என்றால் இறையருளை பெறும் கவிஞர் என்ற பொருள் வருகிறது. உங்கள் நிறுவனம் தூக்கிபிடிக்கும் இந்த கவிஞருக்கு இறையருள் வந்தது என்று எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? நாளை நடப்பவற்றை அறியக்கூடியவரே என்று புகழும் மௌலூது பாடலுக்கும், இறையருளை பெறும் கவிஞர் என்று மெச்சுவதற்கும் என்ன வேறுபாடு? இவ்வாறான வார்த்தை பிரயோகம் தவறு என்பது தவ்ஹீத் கொள்கையை நேற்று விளங்கிய பாமரனுக்கும் தெரியுமே! இதற்கு விளக்கம் கேட்டு தான் முடிவு செய்ய வேண்டுமா?//

பாமரனுக்கு விளங்குவதெல்லாம் இங்கு முக்கியமல்ல, குர்ஆன் ஹதீஸ் ஆதாரப்படி விளக்கி இறையருட்கவிமணி என்ற வார்த்தை தவறு என்று புரிய வைக்க வேண்டும்.

இறையருட்கவிமணி என்ற வார்த்தை தவறு என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதார அடிப்படையில் விளக்கி அதிரைநிருபர் பதிப்பகத்திற்கு சுட்டிக்காட்டி அவர்களின் நிலைப்பாட்டை அறிந்த பின்பு, அவர்கள் நிலைபாடு தவறு என்றிருந்தால், என்னிடம் கேள்வி கேளுங்கள், நிச்சயம் பதில் தருகிறேன். இதை தவிர்த்து சம்பந்தமில்லாத தவறான ஒரிரு வரி விளக்கங்களை, குர்ஆன் ஹதீஸ் ஆதாரமில்லாதவைகளை சுயவிளக்கமாக பதிந்து, fast track ஃபத்வா கொடுப்பதை தவிர்ப்பதை தவிர்த்துக்கொள்ள அன்போடு கோரிக்கை வைக்கிறேன்.

குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்கள் அடிப்படையில் தூய மார்க்கத்தில் உள்ள ஹக்கை விளங்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். அதற்காகத்தான் ஆதாரங்களை தாருங்கள் குர்ஆன் ஹதீஸ்படி விளக்குங்கள் என்று உரிமையோடு கோருகிறேன். ஆனால் நான் திரும்ப திரும்ப கருத்துக்கூற விரும்பவில்லை என்று சொல்லும் விசயத்தில், நீங்கள் அதற்கு பதில் சொன்னால் தான் நாங்கள் நீங்கள் கேட்கும் ஆதரங்களை அடுக்குவோம் என்பது, அதிரை ததஜ மேல் உள்ள நன்பகத்தன்மைக்கு கேள்விக்குறி எழுந்துவிடுமோ என்ற எண்ணம் உங்கள் பதில் பின்னூட்டங்களை வாசிக்கும் வாசகர்களுக்கு எழலாம். அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

தொடரும்...

நான் அங்கத்தவனாக இருக்கும் தளத்தில் தவறு நடந்திருந்தால் அதற்கு நானும் பொறுப்பு என்பதை நான் மறுக்கவே இல்லை. இறையருட்கவிமணி என்ற வார்த்தைக்கு குர்ஆன் ஹதீஸ்படி தவறு என்று தெளிவான குழப்பமில்லாத விளக்கம் மூலம் சுட்டிக்காட்டி அதிரைநிருபர் தளத்திற்கு அந்த விளக்கத்தை நீங்கள் கொடுத்து, அவர்களின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டை அறிந்து மக்கள் முன் வைக்கும் பொறுப்பும் உங்களிடம் உள்ளது. காரணம் இந்த விசயத்தை பெரிதுபடுத்துவது நீங்கள் என்பதால் அந்தப் பொறுப்பு உங்களிடம் உள்ளது. இது தொடர்பாக என்னிடம் மீண்டும் கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது.

என்னுடைய நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துச்சொல்கிறோம் என்று சொல்லும் ஒரு ஜமாத்திடம், எந்த ஒரு மார்க்க சந்தேகத்திற்கும் அறைகுறையான பதில் இல்லாமல் மிகத் தெளிவாக குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்ப்பார்ப்பது தவறில்லை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆகவே இந்த பதிவில் நீங்கள் கூறிய கருத்துக்கு நான் குர்ஆன் ஹதீஸ்படி ஆதாரங்கள் கேட்டவைகளுக்கு ஆதாரம் தரும் பொறுப்பு அதிரை ததஜ தளத்திற்கு உள்ளது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

அல்லாஹ் போதுமானவன்…

அவதூறு பற்றி என் நிலைப்பாடு.

நான் சொல்லாதவைகளை, செய்யாதவைகளை, நம்பாதவைகளை நான் சொன்னதாக சொல்லி சொல்லுவது என் மீது சொல்லப்படும் அவதூறாக கருதுகிறேன் என்பது என்னுடைய நிலைப்பாடு.

நீங்கள் சொல்லும் இமாலைய அவதூறு என்ற ஒன்று இஸ்லாத்தில் இல்லை என்பது உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நினைவூட்டலுக்காக, அவதூறு பற்றி ஒரு சில எடுத்துக்காட்டுகள் இந்த பதிவிலிருந்தே சுட்டிக்காட்டுகிறேன்.

- சிறைவாசிகளுக்கு ததஜ உதவவில்லை என்று நான் கூறியதாக நீங்கள் முதலில் செய்தி பதிந்தது, என் மீது சொல்லப்பட்ட அவதூறு. நான் குரல் கொடுக்கவில்லை என்றுதானே சொல்லியுள்ளேன் என்று ஒன்று மூன்று முறை சுட்டிக்காட்டியபின் உதவவில்லை என்று நான் சொன்னதாக இருந்த வார்த்தையை நீக்கினீர்கள்.

- facebookல் கள்ளக் குழும்ம் நடத்துவதாக நீங்கள் யூகத்தின் அடிப்படையில் என்னைப் பற்றி சொல்லிய செய்தி அவதூறு. நான் உங்களுக்கு விளக்கம் அளித்த பிறகு, “அதிரைநிருபர் குழுவில் நீங்கள் இருப்பதால் உங்கள் மீது சந்தேகம் ஏற்படுவது இயல்பு, அதனால் அப்படி கருத நேரிட்ட்து என்று சொல்லி அந்த குற்றச்சாட்டை வாபஸ் வாங்கினீர்கள்.”


- ஒரு விசயத்தை பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று சொன்னால், அந்த விசயத்தில் உள்ள தவறை நான் ஒத்துக்கொண்டதாக அர்த்தம் என்று நீங்கள் சொல்லியது என் மீது சொல்லப்பட்ட அவதூறு. இது தொடர்பாகத்தான் நான் குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேட்கிறேன். ஆதாரம் தந்து விளக்கினால் அதை அவதூறு என்று நான் சொல்ல மாட்டேன்.

- நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வந்துள்ள ஷஹீஹான ஹதீஸ் பற்றி நான் எங்கும் என்னுடைய நிலைப்பாட்டை சொல்லாத, வெளிப்படுத்தாத நிலையில், “எவனோ நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைத்து அவர்களை முடக்க முடியும்” என்பது என்னுடைய நம்பிக்கை என்று நீங்கள் குறிப்பிட்டது நீங்கள் சொல்லிய அவதூறு. என்னுடைய நம்பிக்கை அது தான் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள், நான் எங்கே, எப்போது சொன்னேன்? சூனியம் பற்றி பேசுபவர்களின் நிலைப்பாடு இது தான் என்று நீங்களாகவே கற்பனை செய்து யூகம் அடிப்படையில் தாஜுதீனுடைய நம்பிக்கையும் இது தான் என்று பொய் சொல்லுவதை அவதூறு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல சொல்லுறீர்கள். என்னுடைய நம்பிக்கை அது தான் என்பதற்கு நீங்கள் ஆதாரம் வைக்க கடமைபட்டுள்ளீர்கள்.

கேள்வி கேட்பது அவதூறு அல்ல… பொய் செய்திகளை முன்னிறுத்தி, அவதூறு பரப்பி அதிலிருந்து கேள்வி கேட்பதை எப்படி கேள்வி என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

அவதூறு பரப்புபவனுக்கு நாளை மறுமையில் என்ன தண்டனை கிடைக்கப்போகிறது என்பதை பற்றி நான் இங்கு உங்களுக்கு குர் ஆன் ஹதீஸ் மூலம் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.

தொடரும்

இருப்பினும் பின் வரும் இறைவசனத்தையும், ஹதீஸையும் நாம் கொஞ்சம் ஞாபக்படுத்திக்கொள்வோம்.

"நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான். என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி

இனி நான் இந்த பதிவில் மேலதிக கருத்தை பதிந்து, வாசிக்கும் வாசகர்களை சலிப்படைய செய்ய விரும்பவில்லை.

அல்லாஹ் போதுமானவன்.

இன்ஷா அல்லாஹ் சூனியம் தொடர்பான கருத்துரையாடலில் நம் கருத்துக்களை பகிந்துக்கொள்ளலாம்.

அல்லாஹ் நம் அனைவரையும் தீய செயல்களில் இருந்து பாதுகாப்பானாக, நான் செய்த பாவங்களை மன்னிப்பானாக.

அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோ. தாஜுதீன் அவர்களுக்கு

//அதிரைமுஜீப் என்ற அதிரை சகோதரர் தளத்தில் http://adiraimujeeb.blogspot.ae/2013/07/blog-post_28.html சகோதரர் பி ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் ஜூனியர் விகடன் என்ற வாரப் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருந்தார் அதில் நான் பின் வருமாறு கூறியிருந்தேன்

//////// தாஜுதீன்1/8/13 20:08
//அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. //

கோவை குண்டு வெடிப்பில் விசாரணை என்ற பெயரில் குற்றம் சுமத்தப்படாத பல சகோதரர்கள் தங்களுடைய இளமை பொழுதை சிறையில் கழிக்கிறார்களே, அவர்களின் குடும்பத்தின் கண்ணீர் பிற சமுதாய இயக்கங்களை கொஞ்சமாவது குரல் கொடுக்க தூண்டியது, இந்த பேட்டியிலாவது இது பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே.. ஏன் அப்பாவி கோவை சிறைவாசிகள் பற்றி வாய்திறக்க பயப்படுகிறீர்கள்.
/////////

இதற்கு பதில் சொல்லுவதாக சொல்லி இந்த அதிரை ததஜ தளத்தில் சிறைவாசிகளுக்கு ததஜ உதவ வில்லை என்று நான் கூறியதாக சொல்லி ஒரு செய்தி வெளியிட்டாப்பட்டது. நான் சொல்லாத வார்த்தையை நான் சொல்லியது என்று பதிந்தது தவறு என்று ஒன்றுக்கு முன்று முறை சுட்டிக்காட்டிய பின் தலைப்பு பின்னர் பதிவில் உள்ள வாசகம் அதிரை ததஜ தளத்தினரால் நீக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.//

உங்களின் மீது திட்டமிட்டு பழி சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் வார்த்தை மாற்றி எழுதவில்லை என்றும், குரல் கொடுப்பதும் உதவுவது என்பதில் அடங்கும் என்ற பொருளில் எழுதப்பட்டது என்பதை இங்கே சூட்டிக்காட்டப்பட்டது. இதில் அவதூறு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதையே ஒரு பெரிய புதாகரமாக நீங்கள் ஆக்கியதால், அந்த வார்த்தையும் நீங்கள் சூட்டிக்காட்டிய பிறகு மாற்றிவிட்டோம். வேண்டுமென்று எழுதவில்லை, இந்த பொருளில் எழுதப்பட்டது, இப்போது மாற்றிவிட்டோம் என்பது எந்த விதத்தில் அவதூறு? உங்களின் கருத்தையை அப்படியே போட்டு பதில் தருபவர்கள், அதில் சொல்லாத விஷயத்தை சொல்ல முற்படுவார்களா? சிறைவாசிகள் சம்பந்தமாக எங்களின் விளக்கத்திற்கு பதில் தர முடியாத நீங்கள், இப்படி உப்ப சப்பில்லாத விஷயத்தை பிடித்துக்கொண்டு குதிப்பது ஏனோ!

//இருப்பினும் இந்த பதிவுக்கு தொடர்பில்லாதவைகளை பின்னூட்டமாக அதிரை ததஜ சார்பாக என்னை பற்றிய் பொய்யான தகவலை இரண்டாவது பின்னூட்டமாக பதியப்பட்ட்தால், நான் அதற்கு மறுப்பு தெர்வித்தேன். பிறகு இந்த பதிவின் நோக்கத்தை திசைத் திருப்பியது யார் என்பதை இந்த பதிவையும் தொடர்ந்து வரும் பின்னூட்டங்களை வாசிக்கும் சகோதர சகோதரிகள் அனைவரும் அறிவார்கள்.//

நீங்கள் குழுமத்தை நிர்வகிவில்லை என்பதை தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் உண்மை என்று ஏற்கனவே நிருவப்பட்டுள்ளது.

//பாமரனுக்கு விளங்குவதெல்லாம் இங்கு முக்கியமல்ல, குர்ஆன் ஹதீஸ் ஆதாரப்படி விளக்கி இறையருட்கவிமணி என்ற வார்த்தை தவறு என்று புரிய வைக்க வேண்டும்.

இறையருட்கவிமணி என்ற வார்த்தை தவறு என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதார அடிப்படையில் விளக்கி அதிரைநிருபர் பதிப்பகத்திற்கு சுட்டிக்காட்டி அவர்களின் நிலைப்பாட்டை அறிந்த பின்பு, அவர்கள் நிலைபாடு தவறு என்றிருந்தால், என்னிடம் கேள்வி கேளுங்கள், நிச்சயம் பதில் தருகிறேன். இதை தவிர்த்து சம்பந்தமில்லாத தவறான ஒரிரு வரி விளக்கங்களை, குர்ஆன் ஹதீஸ் ஆதாரமில்லாதவைகளை சுயவிளக்கமாக பதிந்து, fast track ஃபத்வா கொடுப்பதை தவிர்ப்பதை தவிர்த்துக்கொள்ள அன்போடு கோரிக்கை வைக்கிறேன்.//

ஆதாரம் கேட்பதில் தவறு இல்லை. எல்லாருக்கும் தவறு என்று தெரியும் விஷயத்திற்கு ஆதாரத்தை அடுக்க வேண்டியது இல்லை என்பது எங்களின் நிலைப்பாடு. நீங்கள் கேட்பதால், இதே விளக்கமும் ஆதாரமும். இறையருள் என்பது ஒரு மறைவான விஷயம். அதாவது, யாருக்கு இறையருள் வருகிறது, யாருக்கு இறையருள் வரவில்லை என்று எந்த மனிதனாலும் கண்டுபிடிக்க முடியாது. இறையருள்கவிமணி என்று நீங்கள் ஒருவரை புகழ்ந்தால், அவருக்கு இறையருள் வருகிறது என்று பொருள். இறையருள் என்பது மறைவான விஷயமாக இருக்கும்போது, அந்த மறைவான விஷயம் உங்களுக்கு எப்படி தெரிந்தது என்ற கேள்வி வருகிறது.

மறைவான விஷயம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை சொல்லும் குர்ஆன் வசனம் இதே!

''வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக! அல்குர்ஆன் (27:65)

தவறே இல்லாத ஒரு கருத்தை வைத்து கூட அதிகமாக ஒருவரை புகழ்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு கீழ்காணும் நபிமொழி சான்றாக உள்ளது.

'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல் நீங்கள் என்னை புகழ்ந்து விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடிமை. எனவே, என்னை 'அல்லாஹ்வின் அடிமை' என்றும் 'அல்லாஹ்வின் தூதர்' என்றும் சொல்லுங்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3445

அல்லாஹ்வின் தூதர் அவர்களையே 'அல்லாஹ்வின் அடிமை', 'அல்லாஹ்வின் தூதர்' என்பதை விட அதிகமாக புகழ வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்து இருக்கும் போது, கவிதை எழுதும் திறமை உள்ளவரை 'இறையருளை பெறுபவர்' என்று கூறுவது சரியா? (ஒரு வேளை அந்த கவிஞர் மார்க்க வரம்புகளை மீறாதவராக இருந்தால், அவருக்கு இறையருள் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவருக்கு இறையருள் வந்தா? இல்லையா? என்பதை நம்மால் உறுதி செய்ய முடியாது).

//குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்கள் அடிப்படையில் தூய மார்க்கத்தில் உள்ள ஹக்கை விளங்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். அதற்காகத்தான் ஆதாரங்களை தாருங்கள் குர்ஆன் ஹதீஸ்படி விளக்குங்கள் என்று உரிமையோடு கோருகிறேன். ஆனால் நான் திரும்ப திரும்ப கருத்துக்கூற விரும்பவில்லை என்று சொல்லும் விசயத்தில், நீங்கள் அதற்கு பதில் சொன்னால் தான் நாங்கள் நீங்கள் கேட்கும் ஆதரங்களை அடுக்குவோம் என்பது, அதிரை ததஜ மேல் உள்ள நன்பகத்தன்மைக்கு கேள்விக்குறி எழுந்துவிடுமோ என்ற எண்ணம் உங்கள் பதில் பின்னூட்டங்களை வாசிக்கும் வாசகர்களுக்கு எழலாம். அல்லாஹ் மிக்க அறிந்தவன்.//

எல்லாருக்கும் தவறு என்று புலப்படும் ஒரு விஷயத்திற்கு ஆதாரம் தேவையில்லை என்று தான் சொன்னமே தவிர, ஆதாரம் தர மாட்டோம், முடியாது என்று சொல்லவில்லை. அல்லாஹ்வின் அருளால், வழிகெட்ட கொள்ளைக்கு எதிராக எங்கள் தளத்தில் வரும் ஆக்கங்களில் உள்ள ஆதாரங்களுக்கு பதில் சொல்ல முடியாமல், அது பற்றி வாய் கூட திறக்க முடியாத நிலை உள்ளது என்பதை சூட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆதாரங்களை முன்வைத்து (தேவைப்படும் போது) பேசுவோம், எங்களிடம் தவறு இருந்தால், வெட்கம் இல்லாமல் அதை தவறு என்று ஒத்துக்கொள்வோம். அல்லாஹ் எங்களை இதே நிலையில் நிலைக்க செய்ய வேண்டும்.

//நான் அங்கத்தவனாக இருக்கும் தளத்தில் தவறு நடந்திருந்தால் அதற்கு நானும் பொறுப்பு என்பதை நான் மறுக்கவே இல்லை. இறையருட்கவிமணி என்ற வார்த்தைக்கு குர்ஆன் ஹதீஸ்படி தவறு என்று தெளிவான குழப்பமில்லாத விளக்கம் மூலம் சுட்டிக்காட்டி அதிரைநிருபர் தளத்திற்கு அந்த விளக்கத்தை நீங்கள் கொடுத்து, அவர்களின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டை அறிந்து மக்கள் முன் வைக்கும் பொறுப்பும் உங்களிடம் உள்ளது. காரணம் இந்த விசயத்தை பெரிதுபடுத்துவது நீங்கள் என்பதால் அந்தப் பொறுப்பு உங்களிடம் உள்ளது. இது தொடர்பாக என்னிடம் மீண்டும் கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது.//

நீங்கள் அங்கத்தவராக இருக்கும் ஒரு இடத்தில் தவறு நடந்தால் அதற்கு நீங்களும் பொருப்பு என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. இறையருள்கவிமணி என்பது தவறு என்று மேலே விளக்கப்பட்டுள்ளது. உங்களின் பதிலை தாருங்கள்.

//நான் அங்கத்தவனாக இருக்கும் தளத்தில் தவறு நடந்திருந்தால் அதற்கு நானும் பொறுப்பு என்பதை நான் மறுக்கவே இல்லை. இறையருட்கவிமணி என்ற வார்த்தைக்கு குர்ஆன் ஹதீஸ்படி தவறு என்று தெளிவான குழப்பமில்லாத விளக்கம் மூலம் சுட்டிக்காட்டி அதிரைநிருபர் தளத்திற்கு அந்த விளக்கத்தை நீங்கள் கொடுத்து, அவர்களின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டை அறிந்து மக்கள் முன் வைக்கும் பொறுப்பும் உங்களிடம் உள்ளது. காரணம் இந்த விசயத்தை பெரிதுபடுத்துவது நீங்கள் என்பதால் அந்தப் பொறுப்பு உங்களிடம் உள்ளது. இது தொடர்பாக என்னிடம் மீண்டும் கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது.//

இறையருள்கவிமணி என்பது எவ்வாறு தவறு என்று எங்களிடம் கேட்டுள்ளீர்கள். அதற்கான விளக்கத்தையும் நாங்கள் தந்துள்ளோம். இவ்வாறு நீங்கள் கேட்ட பிறகு உங்களின் இந்த கீழ்காணும் வரி பொருந்தாது என்று தெரியப்படுத்துகிறோம்.

//இது தொடர்பாக என்னிடம் மீண்டும் கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது.//

//என்னுடைய நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துச்சொல்கிறோம் என்று சொல்லும் ஒரு ஜமாத்திடம், எந்த ஒரு மார்க்க சந்தேகத்திற்கும் அறைகுறையான பதில் இல்லாமல் மிகத் தெளிவாக குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்ப்பார்ப்பது தவறில்லை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆகவே இந்த பதிவில் நீங்கள் கூறிய கருத்துக்கு நான் குர்ஆன் ஹதீஸ்படி ஆதாரங்கள் கேட்டவைகளுக்கு ஆதாரம் தரும் பொறுப்பு அதிரை ததஜ தளத்திற்கு உள்ளது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.//

ஏற்றுக்கொள்கிறோம்.

//அவதூறு பற்றி என் நிலைப்பாடு.

நான் சொல்லாதவைகளை, செய்யாதவைகளை, நம்பாதவைகளை நான் சொன்னதாக சொல்லி சொல்லுவது என் மீது சொல்லப்படும் அவதூறாக கருதுகிறேன் என்பது என்னுடைய நிலைப்பாடு.//

நீங்கள் நம்புவதாக நாங்கள் நினைத்து ஒரு விஷயத்தை சொல்லும் பட்சத்தில், அது உங்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக இருந்தால் அதை தெளிவுபடுத்து உங்களின் கடமை. நீங்கள் இவ்வாறு எண்ணீயுள்ளீர்கள், எனது நம்பிக்கை இவ்வாறு இல்லை என்று. நீங்கள் அதை செய்யவில்லை. மாறாக, அவதூறு சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை.

//- சிறைவாசிகளுக்கு ததஜ உதவவில்லை என்று நான் கூறியதாக நீங்கள் முதலில் செய்தி பதிந்தது, என் மீது சொல்லப்பட்ட அவதூறு. நான் குரல் கொடுக்கவில்லை என்றுதானே சொல்லியுள்ளேன் என்று ஒன்று மூன்று முறை சுட்டிக்காட்டியபின் உதவவில்லை என்று நான் சொன்னதாக இருந்த வார்த்தையை நீக்கினீர்கள்.//

இது அவதூறு அல்ல. மாறாக, குரல் கொடுப்பதும் உதவி என்பதில் அடங்கும் என்ற பொருளில் எழுதப்பட்டது. இது குறித்து எங்களின் இன்றைய முதல் கருத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அர்த்தில் எழுதினோம் என்று பல முறை சொன்ன பிறகும், அவதூறு அவதூறு என்று சொல்லிக்கொண்டு இருப்பது, உங்களின் நிலையில் இருந்து நீங்கள் இறங்கி வரும் நபர் அல்ல என்பதை காட்டுகிறீர்கள்.

//- facebookல் கள்ளக் குழும்ம் நடத்துவதாக நீங்கள் யூகத்தின் அடிப்படையில் என்னைப் பற்றி சொல்லிய செய்தி அவதூறு. நான் உங்களுக்கு விளக்கம் அளித்த பிறகு, “அதிரைநிருபர் குழுவில் நீங்கள் இருப்பதால் உங்கள் மீது சந்தேகம் ஏற்படுவது இயல்பு, அதனால் அப்படி கருத நேரிட்ட்து என்று சொல்லி அந்த குற்றச்சாட்டை வாபஸ் வாங்கினீர்கள்.”//

தவறு என்று தெரியும் போது, அதை ஒத்துக்கொள்வது எங்களின் தனித்தன்மை. அல்ஹம்துலில்லாஹ். ஒத்துக்கொண்ட ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சூட்டிக்காட்டுவது விதாண்டவாதம்.

//- ஒரு விசயத்தை பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று சொன்னால், அந்த விசயத்தில் உள்ள தவறை நான் ஒத்துக்கொண்டதாக அர்த்தம் என்று நீங்கள் சொல்லியது என் மீது சொல்லப்பட்ட அவதூறு. இது தொடர்பாகத்தான் நான் குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேட்கிறேன். ஆதாரம் தந்து விளக்கினால் அதை அவதூறு என்று நான் சொல்ல மாட்டேன்.//

குர்ஆன் ஹதீஸ் ஆதாரம்:

தானும் பதில் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தில், மவுனம் காப்பதும் சம்மதேமே என்பதற்கு கீழ்காணும் திருமறை வசனத்தை படித்து பாருங்கள்:

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ''என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, ''நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். ''அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)

திருமணத்தில் பெண்ணுக்கு தேர்வு செய்யும் போது, பெண்ணின் சம்மதமும் தேவை. இதை நபி (ஸல்) அவர்கள் பெண்ணிடம் கேட்க சொல்லியுள்ளார்கள், பெண் இது பற்றி பேசும் போது, வெட்கம் அடைய கூடுமே என்ற வினவாப்பட்ட போது, 'அவளின் மவுனம் சம்மதம்' என்றார்கள். எனவே, தான் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மவுனமாக இருப்பது சம்மதமே.

உங்களுக்கு சம்பந்தம் இல்லாத சூனியத்தை பற்றி பேசுவோன் என்கிறீர்கள். நீங்கள் அங்கத்தவராக இருக்கும் இடத்தில் நடக்கும் தவறை பற்றி பேச மாட்டேன் என்பதிலிருந்தே, உங்களுக்கு அது தவறு என்று தெரிந்து இருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது.

உங்களின் மற்ற கருத்துகளுக்கு விரைவில் பதில் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்.

//- நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வந்துள்ள ஷஹீஹான ஹதீஸ் பற்றி நான் எங்கும் என்னுடைய நிலைப்பாட்டை சொல்லாத, வெளிப்படுத்தாத நிலையில், “எவனோ நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைத்து அவர்களை முடக்க முடியும்” என்பது என்னுடைய நம்பிக்கை என்று நீங்கள் குறிப்பிட்டது நீங்கள் சொல்லிய அவதூறு. என்னுடைய நம்பிக்கை அது தான் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள், நான் எங்கே, எப்போது சொன்னேன்? சூனியம் பற்றி பேசுபவர்களின் நிலைப்பாடு இது தான் என்று நீங்களாகவே கற்பனை செய்து யூகம் அடிப்படையில் தாஜுதீனுடைய நம்பிக்கையும் இது தான் என்று பொய் சொல்லுவதை அவதூறு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல சொல்லுறீர்கள். என்னுடைய நம்பிக்கை அது தான் என்பதற்கு நீங்கள் ஆதாரம் வைக்க கடமைபட்டுள்ளீர்கள்.//

சூனியம் உண்டு என்று நம்புபவர்கள் அனைவரின் நம்பிக்கையும் ஒரே விதமாக தான் உள்ளது. நீங்கள் சூனியத்தை நம்புவதால் உங்களின் நம்பிக்கை இவ்வாராக இருக்கும் என்ற அடிப்படையில் நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஒன்று இதற்கு நீங்கள் பதில் தர வேண்டும். இல்லாவிடில், எனது நம்பிக்கை இவ்வாறு இல்லை என்று சொல்லி எங்களின் கேள்வியை அர்த்தமற்றதாக ஆக்கியிருக்க வேண்டும். நிலையாட்டையும் சொல்ல மாட்டேன், பதிலும் தர மாட்டேன், அவதூறு என்று மட்டும் சொல்லுவோன் என்று அடம்பிடிப்பது, வேண்டுமென்றே படம் காட்டும் வேலை என்பது நன்றாக புரிகிறது. இவ்வாறான படம் காமெண்டு பாக்ஸ் முடும் இடங்களில் வேண்டுமானால் எடுபடலாம்.

//கேள்வி கேட்பது அவதூறு அல்ல… பொய் செய்திகளை முன்னிறுத்தி, அவதூறு பரப்பி அதிலிருந்து கேள்வி கேட்பதை எப்படி கேள்வி என்று ஏற்றுக்கொள்ள முடியும்?//

கேள்வி கேட்பது அவதூறு அல்ல என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. பொய்யான செய்திகளை எங்கே யார் முன்நிறுத்தி அவதூறு பரப்பினார்கள். அவதூறு அவதூறு என்று இப்படி பம்மாத்து காட்டினால் நீங்கள் வென்றுவிட்டீர்கள் என்று அர்த்தமா?

//இனி நான் இந்த பதிவில் மேலதிக கருத்தை பதிந்து, வாசிக்கும் வாசகர்களை சலிப்படைய செய்ய விரும்பவில்லை. //

வாசகர்கள் சலிப்படைந்தாலும் எங்களின் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால் அதை சொல்லி தான் ஆகவேண்டும். இது போன்ற வார்த்தைகள் சற்று வழுவாக சிக்கும் போது வருவது இயல்பானது தான்.

வஸ்ஸலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவில் மேலதிக கருத்துக்கள் பதிவை நிறுத்திக்கொள்கிறேன் என்று சொல்லிய பின்பு, மீண்டும் கருத்திடுவதற்காக இதை வாசிக்கும் எல்லோரும் என்னை மன்னிக்கவும். காரணம் நான் கேட்ட ஆதரத்துக்கு பொருத்தமில்லாத ஆதாரங்கள் இங்கு பதியப்படுள்ளதாலும், என் மேல் தவறான கருத்து மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாலும், இந்த இறுதி கருத்தை பதிகிறேன்.

// Adirai TNTJ says:
28 ஆகஸ்ட், 2013 5:51 AMReply
ஆதாரம் கேட்பதில் தவறு இல்லை. எல்லாருக்கும் தவறு என்று தெரியும் விஷயத்திற்கு ஆதாரத்தை அடுக்க வேண்டியது இல்லை என்பது எங்களின் நிலைப்பாடு. நீங்கள் கேட்பதால், இதே விளக்கமும் ஆதாரமும். இறையருள் என்பது ஒரு மறைவான விஷயம். அதாவது, யாருக்கு இறையருள் வருகிறது, யாருக்கு இறையருள் வரவில்லை என்று எந்த மனிதனாலும் கண்டுபிடிக்க முடியாது. இறையருள்கவிமணி என்று நீங்கள் ஒருவரை புகழ்ந்தால், அவருக்கு இறையருள் வருகிறது என்று பொருள். இறையருள் என்பது மறைவான விஷயமாக இருக்கும்போது, அந்த மறைவான விஷயம் உங்களுக்கு எப்படி தெரிந்தது என்ற கேள்வி வருகிறது.

மறைவான விஷயம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை சொல்லும் குர்ஆன் வசனம் இதே!

''வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக! அல்குர்ஆன் (27:65)

தவறே இல்லாத ஒரு கருத்தை வைத்து கூட அதிகமாக ஒருவரை புகழ்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு கீழ்காணும் நபிமொழி சான்றாக உள்ளது.

'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல் நீங்கள் என்னை புகழ்ந்து விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடிமை. எனவே, என்னை 'அல்லாஹ்வின் அடிமை' என்றும் 'அல்லாஹ்வின் தூதர்' என்றும் சொல்லுங்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3445

அல்லாஹ்வின் தூதர் அவர்களையே 'அல்லாஹ்வின் அடிமை', 'அல்லாஹ்வின் தூதர்' என்பதை விட அதிகமாக புகழ வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்து இருக்கும் போது, கவிதை எழுதும் திறமை உள்ளவரை 'இறையருளை பெறுபவர்' என்று கூறுவது சரியா? (ஒரு வேளை அந்த கவிஞர் மார்க்க வரம்புகளை மீறாதவராக இருந்தால், அவருக்கு இறையருள் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவருக்கு இறையருள் வந்தா? இல்லையா? என்பதை நம்மால் உறுதி செய்ய முடியாது).//

இறையருட்கவிமணி என்ற சாதாரண புரிதல் வார்த்தைக்கும் நீங்கள் கொடுத்துள்ள மறைவான ஞானம் பற்றிய விளக்கத்துக்கும், கொடுத்துள்ள ஹதீஸ்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆதாரங்கள் அடுக்குவீர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். ஏமாற்றமே மிஞ்சியது.
மீண்டும் சொல்லுகிறேன், இறையருட்கவிமணி பற்றி அதிரைநிருபர் பதிப்பகத்திற்கு தகுந்த ஆதாரத்துடன் மின்னஞ்சலிட்டு அவர்களின் நிலைப்பாட்டை அறிந்த பின்பு அது பற்றி தனிபதிவு நல்ல ஆய்வு செய்து எல்லோருக்கும் தெளிவுபடுத்தும்விதமாக உங்கள் தளத்தில் பதியுங்கள், இன்ஷா அல்லாஹ் நான் அதில் கருத்திடுகிறேன். அல்லாஹ் நாடினால் என் கருத்து உங்கள் ஆய்வுக்கு ஆதரவாகக்கூட இருக்கலாம்.

அருள் என்றால் என்ன? இறையருள் என்றால் என்ன? நற்செயல் என்றால் என்ன? கவிதை எழுதுவது கூடுமா? இது போன்ற புனைப்பெயர் வைத்து ஒருவரை அழைப்பது கூடுமா? அல்லாஹ் எந்த அடியார்களுக்கு அவனுடைய அருளை வழங்குகிறான்? என்று ஆய்வு செய்த பிறகு இறையருட்கவிமணி என்ற வார்த்தை கூடுமா கூடாதா? என்பதை தயவு செய்து விளக்குங்கள். ஹக்கை விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்கிறேன். இந்த பதிவின் பின்னூட்டத்தில் வேண்டாம். தனி பதிவாக பதியுங்கள். நிச்சயம் அதில் நான் கருத்திடுகிறேன். இன்ஷா அல்லாஹ்..

//Adirai TNTJ says:
28 ஆகஸ்ட், 2013 6:28 AMReply
//- ஒரு விசயத்தை பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று சொன்னால், அந்த விசயத்தில் உள்ள தவறை நான் ஒத்துக்கொண்டதாக அர்த்தம் என்று நீங்கள் சொல்லியது என் மீது சொல்லப்பட்ட அவதூறு. இது தொடர்பாகத்தான் நான் குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேட்கிறேன். ஆதாரம் தந்து விளக்கினால் அதை அவதூறு என்று நான் சொல்ல மாட்டேன்.//

குர்ஆன் ஹதீஸ் ஆதாரம்:

தானும் பதில் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தில், மவுனம் காப்பதும் சம்மதேமே என்பதற்கு கீழ்காணும் திருமறை வசனத்தை படித்து பாருங்கள்:

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ''என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, ''நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். ''அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப்போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)

//

நான் மிகத் தெளிவாக, குழப்பமில்லாமல், சின்னஞ்சிறு குழந்தைக்குக்கூட புரியும் வண்ணம் கேள்வியுடன் ஆதாரம் கேட்டிருந்தேன். ஆனால் நான் கேட்ட ஆதாரத்திற்கும் நீங்கள் கொடுத்திருக்கும் ஹதிஸுக்கும் துளி அளவும் சம்பந்தமில்லை.

அல்லாஹ்வின் தூதர் எங்கள் அருமை நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் தர்க்க செய்தவன், அல்லாஹ்வை போல் அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்று சொன்னான் உடனே நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் எங்கே மேற்கே சூரியனை உதிக்க செய் என்று சொன்னவுடன் அல்லாஹ்வை மறுத்த அவன் வாயடைத்துப்போனான். இந்த குர் ஆன் வசனத்துக்கும் நான் கேட்ட ஆதாரத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது. நான் தர்க்கமே செய்ய வரல்லப்பா, நீ கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால் வீண் தர்க்க வரும் வேண்டாம், உனக்கு பதில் வேண்டும் என்றால் இன்னாரை கேள் என்று சொல்லி விலகிப்போகிறேன். ஆனால் இந்த வசனத்தில் அந்த மனிதன் இபுறாஹீம் நபியிடம் அல்லாஹ்வை பற்றி தர்க்கம் செய்கிறான். இபுறாஹீம் நபி கொடுத்த பதிலில் பதில் சொல்லமுடியாமல் வாயடைத்துப்போகிறான்.
பொறுத்தமில்லாத வசனத்தை இங்கே பதிந்துள்ளீர்களே..

// திருமணத்தில் பெண்ணுக்கு தேர்வு செய்யும் போது, பெண்ணின் சம்மதமும் தேவை. இதை நபி (ஸல்) அவர்கள் பெண்ணிடம் கேட்க சொல்லியுள்ளார்கள், பெண் இது பற்றி பேசும் போது, வெட்கம் அடைய கூடுமே என்ற வினவாப்பட்ட போது, 'அவளின் மவுனம் சம்மதம்' என்றார்கள். எனவே, தான் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மவுனமாக இருப்பது சம்மதமே.

உங்களுக்கு சம்பந்தம் இல்லாத சூனியத்தை பற்றி பேசுவோன் என்கிறீர்கள். நீங்கள் அங்கத்தவராக இருக்கும் இடத்தில் நடக்கும் தவறை பற்றி பேச மாட்டேன் என்பதிலிருந்தே, உங்களுக்கு அது தவறு என்று தெரிந்து இருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது.//

இங்கு என்ன கல்யாணத்துக்கு பெண் பார்ப்பது, மணப்பெண்ணின் விருப்பத்தை எப்படி அறிந்துக்கொள்வது தொடர்பாகவா நான் ஆதாரம் கேட்டேன்? திருமணப் பெண்ணிடம் அவளில் திருமணம் பற்றிய விருப்பத்தை கேட்கும் போது வெட்கத்தின் காரணமாக மவுனமாக இருந்தால் அது அந்த திருமணத்துக்கு "சம்மதம் என்று அர்த்தம்" என்பது இந்த ஹதீஸிலிருந்து நாம் விளங்குவது.

நீங்கள் கேட்டும் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை, அதில் வீண் தர்க்க வரும், என்னைப் பற்றி சொல்லப்பட்ட தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க மட்டுமே இங்கு நான் தகுதியானவன் என்று சொன்னதை. ஒரு பெண் திருமண விருப்பத்தை வெட்கம் காரணமாக மவுனமாக இருப்பது அவள் சம்மதம் தெரிவித்தால் என்ற ஹதீஸுடன் ஒப்பிட்டு சம்பந்தமில்லாத விளக்கம் தெரிவித்திருப்பது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. தயவு செய்து சரியான ஆதாரம் தாருங்கள் சகோதரே.
தயவுசெய்து குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் சம்பந்தமில்லாதவைகளுக்கு ஒப்பிட்டு விளக்கம் கொடுத்து மக்களை குழப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதையும் ஒரு தனிபதிவாக வெளியிடுட்டு தெளிவு படுத்துங்கள். நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

நான் பதில் அளிக்க வில்லை என்றால் "இவன் இந்த கேள்விக்கு பதில் அளிக்க வில்லை" என்று நீங்கள் சொல்லுங்களே. அதுதானே நியாயம்?

இறையருட்கவிமணி என்ற வார்த்தையை காட்டிலும் பார்வையில் சூனியம் என்ற வார்த்தையை வைத்து 1400 வருடங்களாக புகாரி முஸ்லீம் ஹதீஸ் தொகுப்புகளில் உள்ள ஷஹீஹான ஹதீஸ்களை தட்டிவிட்டு முஸ்லீம்களை முஸ்ரிக்குகளாக்கும் நிலை இன்று உருவாகி இருக்கும் காலகட்டத்தில் இஸ்லாமிய பார்வையில் சூனியம் பற்றி பேசுவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறேன் என்பதை அழுத்தமாக ஒத்துக்கொள்கிறேன். இந்த விசயத்தில் நாம் அனைவரும் ஹக்கை விளங்க வேண்டும். இந்த நிலைப்பாட்டை நீங்கள் 100 சதவீதம் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நான் சொல்லாத, செய்யாத, நம்பாதவைகளை நீங்களாக யூகித்து, சந்தேகித்து, அப்படி அர்த்தத்தில், இப்படி அர்த்ததில் பதிந்தோம் என்று என்னைப் பற்றி தவறான செய்தியை நீங்கள் சொன்னது உண்மை, அவைகளை வாபஸ் வாங்கியதும் உண்மை.

மொத்தத்தில் இந்த பதிவின் பின்னுட்டங்களுக்கு நீங்கள் பதில் சொல்லுகிறோம் என்ற பெயரில் தடுமாற்றத்துடன் நல்ல சமாளித்துள்ளீர்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்ற மமதை எல்லாம் துளி அளவும் இல்லை. அல்லாஹ் மிக்க அறிந்தவன். நான் அப்படி நினைக்கிறேன் என்று நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பில்லை. புகழுக்குரியவன், வெற்றியாளன் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவன் மட்டுமே.

நாளை நம்முடைய சமுதாயத்திற்கு எதை உதாரணமாக விட்டுச்சொல்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை.

அல்லாஹ் நம் எல்லோரையும் தூய இஸ்லாமிய கொள்கையுடன் வாழ்ந்து மரணிக்க செய்வானாக.

இதற்கு பிறகு இந்த நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும், என்னைப் பற்றி எப்படி எழுதினாலும், நான் கருத்திடப் போவதில்லை. இன்ஷா அல்லாஹ் தனி பதிவுகளில் மேலே உள்ள விசயங்கள் வந்தால் நிச்சயம் என்னுடைய கருத்தை பதிவேன், சந்தேகங்கள் கேட்பேன். தெளிவுபடுத்த வேண்டியது உங்கள் கடமை.

ஒரே ஒரு கோரிக்கை, யூகம், அவரோட நம்பிக்கை, இவரோட நம்பிக்கை, பொதுவான நம்பிக்கை, அனுமானம், சந்தேகம், அந்த அர்த்தத்தில், இந்த அர்த்தத்தில், பொது அர்த்த்ததில் என்று செய்திகளை அவசரப்பட்டு போட்டுவிட்டு உறுதியற்ற தகவலை பதியவேண்டாம் என்று நல்லெண்ணத்தில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நான் பதிந்த என்னுடைய கருத்துக்களில் யாரையும் புண்படுத்தும் விதமாக எழுதியிருந்தாலும், இதனால் உங்கள் அனைவரின் நேரத்தை வீண்ணடித்திருந்தாலும் அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்துவிடுங்கள். என்னைப் பற்றி தவறாக கருத்துக்கள் பரப்பியது எனக்கு மிகவும் வேதனையளித்தது, அவைகள் அனைத்தையும் அல்லாஹ்வுக்காக மன்னித்துவிட்டேன்.

சுய வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, கண்மூடித்தனமாக மார்க்கத்தைப் பின்பற்றாமல், தெளிவான சிந்தனையுடன் தூய இஸ்லாத்தை முழுமையாக அறிந்து விளங்கி பின்பற்றி வாழ்ந்து மரணிக்க நம் எல்லோருக்கும் வல்ல ரஹ்மான நல்லருள் புரிவானாக.

சகோ. தாஜுதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள்கவிமணி என்பதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றீர்கள், அதை பற்றி நான் வாய் திறக்க மாட்டேன் என்றீர்கள், பின்னர் அது எவ்வாறு தவறு என்றீர்கள். நாங்கள் இவ்வாறு தவறு என்று விளக்கிய பிறகு, மீண்டும் நான் அதை பற்றி பேச மாட்டேன் என்கிறீர்கள். தனி பதிவாக இட்டால் பேசுவேன் என்கிறீர்கள், உங்களின் இணையதளத்தில் விளக்கம் வந்தால் கருத்து போடுவோன் என்கிறீர்கள். சூனியம் தான் இப்போதைக்கு முக்கியம் என்கிறீர்கள். மொத்ததில் குழப்பத்தில் உள்ளீர்கள் என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.

இறையருள்கவிமணி என்பதில் உள்ள தவறு கூட உங்கள் கண்களுக்கு தெரியவில்லை. நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி வர தேவையில்லை. தவ்ஹீதை நோக்கிச் செல்லுங்கள்.

இறையருள்கவிமணி என்பது சம்பந்தமாக எங்களின் ஆதாரம் சம்பந்தம் இல்லாதவை என்று ஒரே வார்த்தையில் சொல்லியுள்ளீர்கள். எங்களின் சம்பந்தம்யுள்ளவையா அல்லது சம்பந்தம் இல்லாதவையா? என்று வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

சூனியம் சம்பந்தமாக உங்களின் நம்பிக்கை என்று கருதி நாங்கள் கேட்ட கேள்வியை அவதூறு என்றீர்கள். சரி உங்களின் நிலைபாட்டை சொல்லுங்கள், எங்களின் கேள்வி தவறாக இருந்தால் வாபஸ் வாங்குகிறோம் என்று சொன்னனோம், நிலைபாட்டை சொல்லவும் வில்லை, அவதூறு எது என்று நாங்கள் வைத்த கேள்விக்கும் பதில் இல்லை.

தானும் சம்பந்தப்பட்டுள்ள ஒரு விஷயத்தில் கேள்வி வரும் போது அதில் மௌனமாக இருப்பது சம்பந்தமே என்று நாங்கள் வைத்த ஆதாரத்தையும் சற்றும் சம்பந்தம் இல்லை என்று பதில் சொல்லியுள்ளீர்கள். இதையும் வாசகர்களே முடிவு செய்யட்டும்.

குர்ஆன் ஹதீஸில் இறையருள்கவிமணி என்று நேரடியாக எடுத்துக்காட்டினால் தான் கேட்போன் என்று ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போல பேசுகிறீர்கள். இறையருள்கவிமணி என்பது சரி தான் என்று உங்கள் அறிஞர் கவிஞர்களுக்கு அறிவுறுத்தினால் என்ன?

மவுனம் சம்மதம் என்பதற்கு கோவை அய்யுப் மற்றும் முஜாஹித் போன்ற பொருக்கிகளுக்கு மறைமுகமாக அவர்கள் செய்தது சரி என்று கூறி விட்டு, பின்னர் அமைதியானது மேலதிக ஆதாரமாகிறது.

இறையருள்கவிக்கு இறையருள் வந்ததை என்ன கண்ணால் பார்த்தீர்கள் என்று சற்று முதலில் எங்கையாவது விளக்குங்கள். பின்னர், ஹாஜி, தராவீஹ் போன்றவற்றை விளக்கலாம்.

வஸ்ஸலாம்.

//இறையருள்கவிமணி என்பது சரி தான் என்று உங்கள் அறிஞர் கவிஞர்களுக்கு அறிவுறுத்தினால் என்ன?//

நாங்கள் சொல்ல வந்த கருத்து சற்று தவறாக இடம் பெற்றுள்ளது. சொல்ல வந்தவை இதே:

இறையருள்கவிமணி என்பது சரி தான் என்று உங்கள் அறிஞர் கவிஞர்களை வைத்து விளக்கும் போட அறிவுறுத்தினால் என்ன?

உப்பு சப்பில்லாத விஷயத்திற்கு எல்லாம் கட்டுரை போடும் நிருபர்கள், தங்களின் மார்க்க விரோத போக்கு இங்கு கிழிக்கப்படும் போது, அதற்கும் மவுனம் சாதிப்பது சம்மதேமே!

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.