நாகப்பட்டினத்தில் இருந்து மீன் லோடு ஏற்றி வந்த மினி லாரி பிலால் நகர்
அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தை கடந்து செல்லும் போது எதிரே வந்த இரு சக்கர
வாகனத்தில் மோதியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி
சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் இரு சக்கர வாகனம் சுக்கு
நூறாக நொறுங்கியதுடன் அதில் பயணம் செய்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து முதலுதவி செய்தனர். மேலும்
விரைவாக ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
இரவு 1 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு லாரியின் உரிமையாளர் வந்தார் கவிழ்நத லாரியில் சுமார் ரூ 4 லட்சம் மதிப்புள்ளான மீன்கள் இருப்பதாகவும் அதனை உடனே வேறு வாகனத்தில் மாற்றாவிட்டால் அனைத்து மீன்களும் கேட்டுப்போகிவிடும் என்று கூறினார் இதை கேட்டவுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கழத்தில் இறங்கி அவர்களுடன் சேர்ந்து அவர்கள் கொண்டு வந்த மாற்று வாகத்தில் ஏற்றுவதற்கு அனைத்து உதவிகளும் செய்தனர். கடைசியாக உரிமையாளர் செல்லும் போது காசு கொடுத்தாலும் இந்த நேரத்தில் யாரும் வராத போது தானாக முன் வந்து நீங்கள் செய்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று தவ்ஹீத் ஜமாத்தினரிடம் நன்றியை சொல்லிவிட்டு சென்றார்கள்.
1 கருத்துரைகள் :
இதுபோன்ற விபத்துக்கள் மற்ற ஊர்களில் நடந்தால் 1 மணி நேரத்தில் லாரியில் இருந்த அனைத்து பொருள்களும் காணாமல் போகியிருக்கும் இந்த விபத்து நடந்த இடத்தில் யாரும் எந்த பொருள்களை எடுக்கவில்லை என்பது அதிரைக்கு கிடைத்த பெறுமை
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.