Tuesday, July 30, 2013

ஊர் ஒற்றுமைக்காக சர்வதேச பிறையை பின்பற்றினால் என்ன?

ஊர் ஒற்றுமைக்காக சர்வதேச பிறையை பின்பற்றினால் என்ன?


தஸ்பீஹ் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

தஸ்பீஹ் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?



Monday, July 29, 2013

அதிரையில் பேருந்து விபத்து

இன்று மதியம்  1:50 மணியளவில்  கோட்டைப்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சொல்லும்  SRM பேருந்து அதிராம்பட்டினம்  காளி கோயில் அருகில் எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதி பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். தகவல் கிடைத்தது போலீஸ் மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் இதில் பலத்த காயமடைந்த 7 பேரில் தஞ்சை மெடிக்கல் கல்லூரி மருத்துவமனை மினாஷி மருத்துவமனை மற்றும் வினோதகன் மருத்துவமனைகளில் சிகி்ச்சை பெற்றுவருகிறார்கள்


 புகைப்படங்கள்
ஜஹபர் சாதிக்

Sunday, July 28, 2013

Saturday, July 27, 2013

பாகிஸ்தான் தீவிரவாதியை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தாதீர்கள்!

பாகிஸ்தான் தீவிரவாதியை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தாதீர்கள்!

வெடிக்கும் ஜைனுல் ஆபிதீன்



'இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் சில  முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''

''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை. கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக்கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.''

''உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?''

''ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது. நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில்  அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்துவிடுவதும் பிறகு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும்போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.''

''தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?''

''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது. நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச்செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது. தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன் உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்தபோதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைதுசெய்' என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.கலிவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர்தான், தி.மு.கலிவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.

தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம். இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''

''தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?''

''தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவு உள்ளது. ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பான்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்? நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலைசெய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ள சகோதார முஸ்லிமையும் ஒன்றாக  அடையாளப்படுத்தாதீர்கள்.''

ஜோ.ஸ்டாலின், படம்: வீ.நாகமணி
நன்றி ஜுனியா் விகடன்

Friday, July 26, 2013

என்னைக் கவர்ந்த இஸ்லாம் - எதிர்ப்புகளை வென்று ஏகத்துவ கொள்கைக்கு வந்த சகோதரி சரண்யா!

என்னைக் கவர்ந்த இஸ்லாம் - எதிர்ப்புகளை வென்று ஏகத்துவ கொள்கைக்கு வந்த சகோதரி சரண்யா!



Thursday, July 25, 2013

ரமளானில் வாரி வழங்கிடுவீர்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சேவை நிறுவனங்களுக்கு ரமளானில் வாரி வழங்கிடுவீர்கள்!

தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
அவனியாபுரம் , மதுரை.



ஒரு வருட ஆ­லிமா பட்டப்படிப்பு வகுப்பில்  நபி வழிச் சட்டங்கள், அரபி இலக்கணம், நபி (ஸல்) அவர்கள் வரலாறு, திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், இஸ்லாமியக் கொள்கை விளக்கம், அரபி மொழியியல், வாரிசுரிமைச் சட்டங்கள், சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, சிறு தொழில் பயிற்சி, கணணி பயிற்சி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் தகுதியான ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடைபெறுகிறது.


அல் ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்
திருமங்கலம் ,  மதுரை.

இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில் ஆண்களுக்காக மதுரையில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.



பாடத்திட்டங்கள்:
  1. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
  2. திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
  3. துஆ மனனம்
  4. தொழுமை முறை
  5. நபிகளார் வரலாறு
  6. இஸ்லாமிய ஒழுங்குகள்
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக  இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
 தொலைபேசி : 9790892220 – 9842199976


இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்.

செலவு விபரங்கள்:



அர்ரஹீம் முதியோர் இல்லம்
பண்டாரவடை, தஞ்சை.




பிள்ளைகள் மற்றும உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டத்தில் முதியோர் இல்லம் நடத்தி வருகின்றது.

முதியோர் இல்ல புகைப்படங்கள்

இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
  1. பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்
  2. அவருடைய தேவையை (மலம் ஜலம் கழித்தல், குளித்தல் மட்டும்) அவரே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முதியோர் இல்லத்திற்கு வந்த பிறகு அவர்களுக்கு எந்நிலை ஏற்பட்டாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதை கவனித்துக் கொள்ளும்.

இல்லத்தில் சேருவோருக்கு
உணவு,
தங்குமிடம்,
மருத்துவம்,
ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
சேருவதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

 தொலைபேசி :04374 250837

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

செலவு விபரங்கள்:

Sevai Niruvanagal
தஞ்சையில் தற்போது இயங்கி வரும் முதியோர் இல்லம்:

அல் ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்
அவனியாபுரம் , மதுரை.

இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமான பெண்கள் வருகை தருகிறார்கள். அவர்களுக்காக மதுரையில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி பெண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.


பாடத்திட்டங்கள்:
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
துஆ மனனம்
தொழுமை முறை
நபிகளார் வரலாறு
இஸ்லாமிய ஒழுங்குகள்
பெண்கள் என்பதால் மிகுந்த பாதுகாப்போடும் சரியான கண்காணிப்புடனும் இந்நிறுவனம் நடத்தப்படுகின்றது.
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
தொலைபேசி : 0452 2676222,9976649599
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் 

செலவு விபரங்கள்
Sevai Niruvanagal - Copy (3)


அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்
சுவாமிமலை, கும்பகோணம்.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் ஆண் குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் அநாதை இல்லம் நடத்தி வருகின்றது.

இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:

பெற்றோர்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
அல்லது பெற்றோர்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்க வேண்டும்
குறைந்த பட்சம் 8 வயது இருக்க வேண்டும்.

இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு:
  1. இவர்கள் அரசு பள்ளியில் சேர்த்து கல்வி பயில வைக்கப்படுவார்.
  2. இவர்களுக்கு மாலையில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் டியூஷன் எடுக்கப்படும்
  3. காலையில் TNTJ தாயிகள் மூலம் இஸ்லாமிய வகுப்புகள் நடத்தப்படும்
  4. நல்லொழுக்க பயிற்றிகள் அளிக்கப்படும்
மேலும் இவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவம், ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
தொலைபேசி :04352454486,9150505009

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

செலவு விபரங்கள்

Sevai Niruvanagal - Copy (4)



அர்ரஹ்மான் சிறுமியர் ஆதரவு இல்லம்
அவனியாபுரம் , மதுரை.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் பெண் குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரையில் அநாதை இல்லம் நடத்தி வருகின்றது.

தொலைபேசி : தொலைபேசி : 0452 2676222,9976649599

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்



செலவு விபரங்கள்
Sevai Niruvanagal - Copy

Tuesday, July 23, 2013

பிற மேடைகளில் பங்கேற்காதது ஏன்? (வீடியோ)

பிற மேடைகளில் பங்கேற்காதது ஏன்?

தவ்ஹீத் ஜமாத்தின் மனிதநேய பணி

நாகப்பட்டினத்தில் இருந்து மீன் லோடு ஏற்றி வந்த மினி லாரி பிலால் நகர் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தை கடந்து செல்லும் போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் இரு சக்கர வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியதுடன் அதில் பயணம் செய்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து முதலுதவி செய்தனர். மேலும் விரைவாக ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 இரவு 1 மணிக்கு  சம்பவம் நடந்த இடத்திற்கு லாரியின் உரிமையாளர் வந்தார் கவிழ்நத லாரியில் சுமார் ரூ 4 லட்சம் மதிப்புள்ளான மீன்கள் இருப்பதாகவும் அதனை உடனே வேறு வாகனத்தில் மாற்றாவிட்டால் அனைத்து மீன்களும் கேட்டுப்போகிவிடும் என்று கூறினார் இதை கேட்டவுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கழத்தில் இறங்கி அவர்களுடன் சேர்ந்து அவர்கள் கொண்டு வந்த மாற்று வாகத்தில் ஏற்றுவதற்கு அனைத்து உதவிகளும் செய்தனர். கடைசியாக உரிமையாளர் செல்லும் போது காசு கொடுத்தாலும் இந்த நேரத்தில் யாரும் வராத போது தானாக முன் வந்து நீங்கள் செய்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று தவ்ஹீத் ஜமாத்தினரிடம் நன்றியை சொல்லிவிட்டு சென்றார்கள்.








Sunday, July 21, 2013

அதிரை மேலதெரு சவுக்கு கொள்ளையில் நடைபெற்ற பெண்கள் பயான்

மேலதெரு சவுக்கு கொள்ளையில் நடைபெற்ற பெண்கள் பயான்
மேலத்தெருவில் நோன்பு முதல் தொடர் பெண்கள் பயான் ஆலிமாவை வைத்து நடந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று 21.07.13 காலை மணி 11 முதல் லுகர் வரை பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பயான் செய்தார்கள் .இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்