Sunday, October 21, 2012

எல்லாம் கேட்டுங்குங்க! நாங்க தான் உண்மையான தவ்ஹீத்!!


கொஞ்ச நாளைக்கு முன்னாலே பிஜேபி தலைவரின் கையை பிடித்து கொண்டு, கோயிலுக்காக போராட்டம் நடத்தினார் தவ்ஹீத்வியாதியான என் வாத்தியர். இப்போ  நான் பூஜையோடு திறப்பு விழா காணுகிறேன் . எங்கள் கொள்கையும் பிஜேபி கொள்கையும் ஒன்றாக இருக்கிறது. எனவே, பிஜேபி தலைவரோடு சேர்ந்து கோவில் மிட்பு பேராட்டம். 

சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாம் தமுமுக மற்றும் மம கட்சியின் இரண்டே இரண்டு கண்னே கண்னு வேட்பாளர்களில் ஒருவரான அஸ்லம் பாஷா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய அங்கன்வாடியை பூஜை செய்து திறந்து வைப்பதை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள். அல்லாஹ்விற்க்கு இனைவைத்து தான் இதை செய்ய வேண்டுமா ?? இஸ்லாத்தின் ஆணிவேரான தவ்ஹீதை காப்பாற்றி இந்த நிகழ்ச்சியை செய்ய இயலாதா என்ன ?? மறுமையை மறந்து இன்மை வாழ்விற்க்காக இஸ்லாத்தை இழக்கும் இவர்களை தானே தமுமுக தொண்டர்கள் சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று நம்புகின்றார்கள்.

கேட்டால் அனைத்து சமுதாய மக்களையும் திருப்திபடுத்த என்று கூறுவார்கள். அனைத்து சமுதாய மக்களை திருப்திபடுத்த இஸ்லாத்தை  இழக்கலாமா ? என்று கேள்வி வைத்தால். பூஜை நடக்கும் போது அவர் அங்கே இல்லை இங்கே இல்லை என்று கதை கட்டுவார்கள். எப்படியோ புதிய அரசியல் படைக்க போகின்றோம் என்று களத்தில் குதித்த இவர்களும்
 சாக்கடையில் தான் குதித்துள்ளார்கள் என்பதை இவர்களின் ஒவ்வொரு நிகழ்வும் செயலும் முஸ்லிம் மக்களுக்கு நிரூபித்து கொண்டு தான் இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் இவர்களை நம்பி இயக்கத்தில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மக்களுக்கும் இறைவன் நேர்வழி காட்ட நாம் துவா செய்வோம்.

நன்றி: கலீல் ரஹ்மான் பேஸ்புக் பக்கம்

தமுமுக வும் தவ்ஹீத் இயக்கம்  தாம்மா, இந்த தவ்ஹீத் ஜமாஅத் தாம்மா அவங்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்ய மாட்டேங்கு என்று கதை விடும், அக்மார்க் தவ்ஹீத்வாதிகளே, அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்.

பூஜை செய்வது உங்களுக்கு வேண்டுமானால் தவ்ஹீதாக இருக்கலாம். 

அரசியலுக்கு போனால் இப்படி தான் மார்க்க முரணான இணைவைப்பு காரியங்களில் ஈடுபட வேண்டிவரும் என்று அன்றைக்கே சொன்னோமே! கேட்டிங்களா? 



ஒட்டுபிச்சைக்காக மறுமை வாழ்வை நாசம் செய்யாதீர்கள்.

நாங்க தான் கொஞ்ச நாளைக்கு முன்னாலே ஒரு ஊரிலே, கந்தூரியை தடுக்க பாத்தோம். கந்தூரியை தடுக்க முன்வந்த நீங்கள், இப்படி பூஜையோடு திறப்பு விழா காணாலாமா? வேடம் புரிகிறாதா? 

1 கருத்துரைகள் :

இதற்குத்தான் தவ்ஹீத் வேண்டாம் என்று அரசியல் பக்கம் சென்றார்களோ.? அரசியல் வேண்டாம் என்ற நிலைபாட்டில் இருப்பதால் தான் தவ்ஹீத் ஜமாஅத் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.