Wednesday, October 03, 2012

"முஸ்லிம்களின் போராட்டம் போதும்” - கிழிந்து தொங்கியது ஷம்சுதீன் காஸிமீ என்ற விசமியின் இரட்டை நாக்கு


ஷம்சுதீன் காஸிமி என்ற காமெடியரை பற்றி பொதுவாக எல்லாருக்கும் தெரியும். இவர் தாடி வைச்ச கேடி என்று. தவ்ஹீத் ஜமாஅத் எதை செய்தாலும் அதற்கு எதிராக பேசுவார். ஒரு வார இதழ் நபி (ஸல்) அவர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து எழுதியது, அதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தியது. நபி (ஸல்) அவர்களை வம்புக்கு இழுத்தை பற்றி கவலைபடாமல், தவ்ஹீத் ஜமாஅத் அந்த இதழுக்கு எதிராக பேராட்டம் நடத்திய உடன், அந்த இதழுக்கு ஜால்ரா தட்டினார் இந்த தலைப்பாகை அணிந்த உத்தம மகான். இப்போது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து முஸ்லிம்கள் பேராடிய உடன், போராடும் முஸ்லிம்களை கண்டித்து பேசுகிறார். ஊரில் உள்ளவர்கள் அனைவரும் ஆடை அணிந்தால், அம்பனமாக போய் நான் வித்தியாசமானவன் என்ற காட்டி, பெயர் (?) வாங்குவது எப்படியே, அதுபோல் தான் இவரின் செயல் எப்போதும் இருக்கும்.

சமீபத்தில் குர்ஆன் ஹதீசை மட்டும் பார்த்தால், ஒரு வருடம் ஆனாலும் ஒருவன் தொழ முடியாது என்று கூறி தனது மார்க்க அறிவையும், இவர் குர்ஆன் ஹதீசை மதிக்கும் லட்சணத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த சம்சுதீன் காஸிமி என்ற உத்தம புத்திரரின் உண்மை முகத்தை அறிய கீழ்காணும் ஆக்கத்தை படிக்கவும்.

"முஸ்லிம்களின் போராட்டம் போதும்” - கிழிந்து தொங்கியது ஷம்சுதீன் காஸிமீ என்ற விசமியின் இரட்டை நாக்கு

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை   இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான போராட்டங்கள் போதும்” என்று சென்னை மக்கா பள்ளியின் பேஷ் இமாம் சம்சுதீன் காசிமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நபிகள் நாயகத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப் படுத்தி திரைப்படம் எடுத்த யூதன் சாம் பெசிலி, அந்தப் படத்தை “யுடியூப்” மூலம் விளம்பரம் செய்த கிறிஸ்தவ பிஷப் டெர்ரி ஜோன்ஸ், இந்த படத்திற்கு பரிபூரண ஆசி வழங்கி, அனைத்து உதவிகளையும் செய்த அமெரிக்க அரசு ஆகியவற்றிற்கு  எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் போராடி வருகிறார்கள்.  

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அதே சமயம் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் தலைமை ஏற்கும் வகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் முஸ்லிம்களின் போராட்டம் நடந்து, அமெரிக்க துணை தூதரகத்திற்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டம் இருந்தது என்பது யாவரும் அறிந்ததே!

சென்னையில் மட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் போராட்டத்தைப் பார்த்து வேலூர் மாவட்டம் போன்ற ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தாமே திரண்டு போராட்டம் நடத்தியது தமிழகம் கண்டிராத ஒன்றாகும்.

இவ்வாறு இந்தியாவுக்கே தலைமை தாங்கும் விதத்தில் தமிழக முஸ்லிம்களின் போராட்டம் இருக்க, அதை முனை மழுங்கச் செய்யும் வகையில் “போராட்டம் போதும்” என்று அறிக்கை வெளியிட்டு அமெரிக்க அடிமை ஆகி இருக்கிறார் சம்சுதீன் காசிமி என்ற பேஷ் இமாம். ஊரில் எல்லோரும் ஆடை அணிந்து சென்றால் தான் மட்டும் அம்மணமாகச் சென்று விளம்பரம் தேட நினைப்பவர் மக்கா பள்ளி பேஷ் இமாம். இந்த எண்ணம் அவரிடம் இல்லாவிட்டால் இது போன்ற அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கவே மாட்டார்.
நபிகள் நாயகம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் அவதூறாக படம் எடுத்த சாம் பெசிலியோ, பிஷப் டெர்ரியோ அல்லது அமெரிக்க அதிபர் ஒபாமாவோ மன்னிப்பு கேட்டு, நடவடிக்கை எடுத்து, அதற்குப் பிறகும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினால், “போராட்டம் போதும்” என்று சொல்லலாம். ஆனால் இவர்களுக்கு எதிராக முஸ்லிம் உலகமே கிளர்ந்தெழுந்த போதும் இன்று வரை இவர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

தங்கள் நடவடிக்கையை திருத்திக் கொள்ளவும் இல்லை. மாறாக முஸ்லிம்களின் போராட்டத்தை தான் ஒபாமா போன்றவர்கள் கண்டிக்கிறார்கள். இந்நிலையில் “போராட்டம் போதாது. இன்னும் வீரியம் பெற வேண்டும்” என்று சொல்வதுதான் ஒரு முஸ்லிமுக்கு அழகாக இருக்கும். இந்த அழகுணர்ச்சி சம்சுதீன் காசிமிக்கு வர வேண்டும். வர வேண்டும் என்று தமிழக முஸ்லிம்களும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வரக் கூடாத ஒன்று இவருக்கு வந்து, அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் புரிவதை முஸ்லிம்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தமிழக முஸ்லிம்களின் உணர்வு வை.கோ.வுக்கு புரிகிறது. திருமாவளவனுக்கு புரிகிறது. ராமாதாஸுக்கு புரிகிறது. கருணாநிதிக்கும் புரிகிறது. மதச்சார்பின்மை மீது நம்பிக்கையுள்ள அனைவருக்கும் புரிகிறது. அதனால் அந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் அறிக்கை வெளியிட்டு “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” படத்தை வெளியிடக்கூடாது.  அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறார்கள். அந்த அறிக்கைகளில் “முஸ்லிம்களின் போராட்டம் போதும்” என்று ஒருவருமே சொல்லவில்லை.

இந்த அரசியல் தலைவர்களுக்கு உள்ள மான உணர்ச்சி சம்சுதின் காசிமிக்கு இல்லாமல் போனது  ஏனோ?  அமெரிக்காவில் ஒரு சீக்கியரின் தலைப்பாகை அவமதிக்கப்பட்டால் பிரதமரும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்கு எதிராக கண்டன அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” படத்திற்கு எதிராக பிரதமரோ, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவோ இதுவரை வாயே திறக்கவில்லை. இவர்கள் வாய் திறந்து முத்து உதிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய காசிமி “முஸ்லிம்களின் போராட்டங்கள் போதும்” என முழங்கியது இன துரோகம் இல்லாமல் வேறென்ன?

அமெரிக்க நிறுவனம் ஒன்று சாமி படம் போட்ட செருப்பை தயாரித்து விற்றது. இது அமெரிக்க விவகாரம் என்று மத்திய அரசு வாய் மூடி இருக்கவில்லை. உடனே கண்டனம் தெரிவித்து, செருப்புகளை வாபஸ் பெற வைத்தது. செருப்பு விவகாரத்தில் இப்படி மதச்சார்பின்மையை உலகுக்கு வெளிக்காட்டிய மத்திய அரசு “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்பட விவகாரத்திலும் இவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டுமா? இல்லையா? நடக்கவில்லை எனில் அதை காசிமி சுட்டிக் காட்ட வேண்டும்.  ஆனால் இவரோ மானமிழந்து, மதி கெட்டு “போராட்டங்கள் போதும்” என்கிறார்.

“காளி” என்ற பெயரில் இங்கிலாந்தில் புதிய ரக பீர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பீர் ஒரு போதைப் பொருள். அந்த காளியின் பெயரிலும் விற்கக்கூடாது. வேறு பெயரிலும் விற்கக்கூடாது என்று மத்திய அரசு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் என்ன சொன்னது தெரியுமா? பீருக்கு காளியின் பெயரை வைத்ததை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லி, எடுக்க வைத்துவிட்டது.

இதுபோன்ற உறுதியான அணுகுமுறை “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்பட விவகாரத்தில் இல்லையே! இது இந்திய முஸ்லிம்களை கிள்ளுக் கீரையாக நடத்துவது இல்லையா? மத்திய அரசாவது மௌனம்தான் காக்கிறது. ஆனால் காசிமியோ “முஸ்லிம்களின் போராட்டம் போதும்” என்று அறிக்கை வெளியிட்டு முஸ்லிம்களின் உணர்ச்சியோடு விளையாடுகிறார்.

சென்னை மக்கா பள்ளியின் தலைமை இமாம் என்று லெட்டர் பேடு அடித்து அறிக்கை வெளியிட்டவுடன் எல்லா இமாம்களுக்கும் இவர் தலைவர் போலும் என்று பத்திரிகைகாரர்கள் நினைத்துவிடுகின்றனர். சென்னை மக்கா பள்ளிக்கு உலகின் எந்தப் பகுதியிலும் இன்னொரு கிளைப் பள்ளி கிடையாது. உலகின் எந்தவொரு பள்ளிவாசல் இமாமுக்கும் இவர் தலைவரும் கிடையாது. எல்லா பள்ளிவாசல்களிலும் இமாம் ஒருவர் இருப்பார். இவர் விடுமுறை எடுக்கும் போது தொழுகை நடத்த துணை இமாம் இருப்பார். இதுபோல் மக்கா பள்ளியில் இவர் இமாமாக பணிபுரிகிறார். இவர் விடுமுறை எடுத்துவிட்டால் இன்னொருவர் தொழுகை நடத்துவார். இந்த சாதாரண பதவியைத்தான் தமிழகத்தின் பெரும் பதவி போல் “பில்டப்” செய்து இவர் ஊடகங்களில் விளம்பரம் தேடுகிறார்.

இந்தியாவின் எந்த ஒரு பள்ளிவாசல் இமாமும் தன்னை தலைமை இமாம் என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதில்லை. காசிமி மட்டும் இப்படிச் சொல்லிக் கொள்வதின் மூலம் இவருடைய பதவி மோகத்தையும், விளம்பர வெறியையும் தெரிந்து கொள்ளலாம்.  

தர்கா வழிபாட்டுக்கு எதிராக இவர் அனல் கக்கி, பெரிய ஏகத்துவவாதி போல் தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் ஏகத்துவ கொள்கையையும் இவர் தர்கா வழிபாடு அளவுக்கு விமர்சிப்பார்.

முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பது கட்டாயம். முஸ்லிம் பெண்களைப் போல் தலையில் துப்பட்டா போட்டுக் கொண்டு ஜுமுஆ சொற்பொழிவு நிகழ்த்தும் இவருடைய பேச்சில் அமெரிக்க எதிர்ப்பு அதிகமிருக்கும். அந்த அமெரிக்க எதிர்ப்பை பொதுமக்கள் கையில் தூக்கும் போது அதை மழுங்க வைக்கும்   வகையில் இவருடைய நாக்கு தடம் புரளும். இப்படி இரட்டை நாக்கு படைத்த இவரை முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆக மொத்தத்தில் இவர் காசிமி அல்ல, தனது இரட்டை நாக்கால் விஷம் கக்கும் விஷமி.

நன்றி: ஆன்லைன் பிஜே

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.