அதிராம்பட்டிணம்
நில(வி)வ(கா)ரம்:
அதிராம்பட்டிணம்
புதுமனைத் தெருவில் உள்ளது சித்தீக் பள்ளி வளாகம். இப்பள்ளிக்கு அருகில் உள்ள இடத்தில்
பல ஆண்டுகளாக 11 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புப் பகுதியையும்
பள்ளியையும் இணைக்கும் பொதுப்பாதையானது சில மாதங்களுக்கு முன் பள்ளி நிர்வாகத்தினரால்
சுவர் எழுப்பி அடைக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தினரின் இச்செயலுக்கு எதிராக வெகுண்டெழுந்தனர்
வசிப்பிடவாசிகள்.
நிலப்
பிரச்சினையின் மூலமான சுவர் எழுப்பியதைப் பற்றிக் குறிப்பிடும்போது பின் வரும் தகவலையும்
தருகின்றனர் மஹல்லா வாசிகள். ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவரான காலம் சென்ற செய்யதலி மரைக்காயர்
என்பவர் இரு வருடங்களுக்கு முன் தேங்காய் மண்டி வைத்திருந்ததாகவும் அப்போதெல்லாம் அங்கே
பாதை இருந்தது கிடையாது என்றும் குறிப்பிடுகின்றனர். மேலோட்டமாகக் கேட்கும்போது காலம்
காலமாக இருந்த பொதுப்பாதையை பள்ளி நிர்வாகம் மூடிவிட்டது என்று எண்ணி விடவேண்டாம் என்பதற்கே
இதைக் கூறுகின்றனர்.
பாதையில்
சுவர் எழுப்பியது தவறு என்றும் சரியே என்றும் ஊரில் இரு வேறு கருத்துக்கள் எழுந்தன.
இந்த விவகாரம் பூதாகரமாக ஆனதால், பள்ளி நிர்வாகம் பழைய பத்திர ஆவணங்களை ஆய்வு செய்யத்
தொடங்கியது. அப்போதுதான் பலஆண்டுகளாக வசித்துவரும்
இக்குடும்பங்கள் இருந்து வருவதே பள்ளிக்குச் சொந்தமான இடத்தில்தான் என்பது புலனாகியது.
பல
ஆண்டுகளுக்கு முன் சின்னப்பள்ளி மான்யம் என்ற பெயரில் இப்பள்ளிக்கு (சித்தீக் பள்ளி)
வழங்கப்பட்ட இந்த இடத்தில்தான் குடியிருப்போர் இருந்து வந்துள்ளனரே தவிர, அவ்விடம்
இவர்களது பூர்வீக இடம் அல்ல என்பதை அறிந்து
பள்ளி நிர்வாகமும், ஊர்வாசிகளும் அதிர்ச்சி அடைந்தனர். எந்தவித ஆவணமும் வசிப்பிடவாசிகளிடம்
இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
இந்த
இடத்தில் வசிப்பவர்கள் இதை தங்களது சொந்த இடம் போன்று பாவித்து வந்ததும், சில இடங்கள்
விற்பனை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக உமர்தம்பி மரைக்காயர், (தகப்பனார்
பெயர் பாட்சா மரைக்காயர்), அப்துல் லத்தீப் மெளலவி (தகப்பனார் பெயர் அப்துல்லா), அபுபக்கர்
(அப்துல் லத்தீபின் சகோதரர்) மற்றும் அப்துல் காதர் ஆலிம் ஆகியோர்களும் இவர்களுடைய
உறவின்முறையினரும் வசிப்பிடவாசிகளாவர்.
மேலும்
இப்பள்ளிவளாகத்தில் மேற்கொண்டு சில வீடுகள் கட்டுமளவிற்கு இடப்பரப்பு உள்ளது. கிட்டத்தட்ட
மொத்தம் ஒரு ஏக்கரும் 59 சென்டுகளும் கொண்டதாகும் பள்ளிவளாகப் பரப்பு. தற்போது குடியிருந்து வருவோர்
நில உரிமையாளர்கள் அல்ல என்ற செய்தி ஆவணங்களின் அடிப்படையில் காலதாமமாகத் தெரிய வர,
மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை பள்ளி நிர்வாகம் கூடி ஆலோசித்தது. முதற்கட்டமாக மார்க்க
அறிஞர்களைக் கொண்ட மதராஸாக்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துக்களைக் கேட்பது
என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி
வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிகாத், தேவ்பந்த் மதரஸா உட்பட முன்னனி மதரஸாக்களுக்கு பின்
வரும் அம்சங்களைக் கூறி கடிதம் எழுதி பத்வா கேட்கப்பட்டது. இம்மாதிரியான கடிதம் தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கும் வந்துள்ளது.
சுமார்
ஐம்பது ஆண்டுகளாக இருந்து வரும் சில குடும்பத்தினர் சித்தீக் பள்ளி வளாக இடத்தை தங்களது
சொத்து போல் பாவித்து வாழ்ந்து வந்ததோடு, சிலர் அதை மற்றவர்களுக்கும் விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையில் இப்பிரச்சினையை எப்படி அணுகலாம் என்ற ரீதியில் அந்த பத்வா கேட்புக் கடிதங்கள்
அமைந்திருந்தன.
பெரும்பாலான
மார்க்க அறிஞர்களின் ஃபத்வா பின் வருமாறே இருந்தது.
அதாவது
சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளிடம் ஒரு காலக் கெடு விதித்து காலி செய்யச் சொல்லலாம்
என்றும் அதுவரை ஒரு நியாயமான தரை வாடகையை பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கலாம் என்றும்
கூறப்பட்டிருந்தது. உள்ளாட்சி வரி மற்றும்
மின் உபயோகம் போன்றவற்றின் பெயர்மாற்றங்களை உடனே சித்தீக் பள்ளியின் பெயருக்கு மாற்றிட
வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்களின் போக்குவரத்திற்காக பாதை அமைப்பதும்
கூடாது என்ற அம்சத்தையும் ஃபத்வா வழங்கியவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பள்ளி
நிர்வாகம் இந்த பத்வாவின் அடிப்படையில் நில
அனுபவிப்பாளர்களிடம் பேசியபோதுதான் பிரச்சினையை திசை திருப்பும் முயற்சிகள் முடுக்கி
விடப்பட்டுள்ளன. வசிப்பிடவாசிகளில் ஒருவரான அப்துல்காதர் ஆலிம் போன்றோர் இந்த ஃபத்வாவின்
அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்ள முன் வந்துள்ளதாகவும், உமர் தம்பி மரைக்காயர்
போன்றோர் இதைக் கடுமையாக எதிர்த்து வருவதாகவும் ஊர் பிரமுகர்களிடம் பேசியபோது தெரிந்தது.
இப்பிரச்சினையில் இணக்கமாகப் போக எண்ணும் ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவரான அப்துல் காதர்
ஆலிம் தமிழக அளவில் தப்லீக் ஜமாஅத் வட்டாரத்தில் பெரிதும் மதிக்கப்படும் ஒருவராக உள்ளார்.
மேலும்
உமர்தம்பி மரைக்காயர் ஒருபடி மேலே போய் பள்ளி நிர்வாகத் தலைமை மீது – குறிப்பாக தலைவரான
ஹைதர் அலி ஆலிம் மீது பல குற்றச் சாட்டுகளைக் கூறி வருகிறார். தமுமுக முந்நாள் நகரத் தலைவரான இவர் தக்வா பள்ளியின் நிர்வாகத்திலும்
இருப்பதால் அப்பள்ளி சம்பந்தப்பட்ட மார்க்கப் பிரச்சாரங்களிலிருந்து ஹைதர் அலி ஆலிமை
ஓரங்கட்டிவிட்டு, தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தி வருகிறார்
(பார்க்க -பெட்டிச் செய்தி)
இந்த
இடம் வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசின் பத்திரப்பதிவுத் துறை ஆகியவற்றின்
உதவியோடு உள்ளூர் பிரமுகர்கள் சிலர் திரட்டிய ஆவண நகல்கள் இப்பிரச்சினையை வெளிக் கொணர
உதவியிருக்கின்றன.
பொதுவாக
தமிழகத்தில் பள்ளி மற்றும் தர்கா வளாகங்களில் குடியிருந்து வருவோர் பெயருக்கு ஒரு சின்ன
தொகை தரை வாடகை தந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சித்திக் பள்ளி வளாக வாசிகள்
பொருளதார ரீதியில் நல்ல நிலையில் இருப்பதாகவே ஊர்வாசிகள் கூறுகின்றனர். எனவே பள்ளி
நிர்வாகத்துடன் இணக்கமாகப் போவதே நல்லது என்பதே நமது கருத்தும்.
பின்னுக்குத்
தள்ளப்பட்ட முன்னணிப் பிரச்சினை
அதிராம்பட்டிணம்
புதுமணைத் தெருவில் வசிக்கும் சித்தீக் பள்ளியின் முத்தவல்லியான ஹைதர் அலி ஆலிம்சா
பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
நாம்
அதிராம்பட்டிணம் சென்றிருந்தபோது இவரையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறப்படும் சிலரையும்
சந்திக்க முயன்றோம். ஆனால் அன்றைய தினம் பட்டுக்கோட்டையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில்
நடந்த இது சம்பந்தமான விசாரணைக்கு சம்பந்தப்பட்டவர்கள் சென்றிருந்ததால் அவர்களை நேரில்
சந்திக்க இயலவில்லை. இருப்பினும் ஹைதர் அலி ஆலிமைப் பற்றி விசாரித்தவரை இவரைப்பற்றி
பெரும்பாலும் ஊரில் நல்லவிதமாகவே கூறுகின்றனர்.
இவர்மீது
தீவிரவாதத்திற்குத் துணை போகிறார், ஊரின் ஐக்கியத்தைக் கெடுக்கிறார், சில இயக்க இளைஞர்களின்
துணையோடு வேற்றுமை உணர்வை வளர்க்கிறார் என்றெல்லாம் காவல் நிலையத்திலும், நீதி மன்றத்திலும்
மற்றும் உள்ளூரில் பல ஆண்டுகளாக செயல்படும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்கள்
சிலர்.
இந்த
நில விவகாரத்திற்குப் பின்னர் இவரை நஜாத்துக்காரர்களின் ஆதரவாளர் என்றும் இந்தத் தரப்பினர்
கூறி வருகின்றனர். ஆக்கிரமிப்பு தரப்பினரில் பெரும்பாலோர் தப்லீக் ஜமாஅத் ஆதவாளர்கள்
ஆவர். உமர்தம்பி மரைக்காயர் இயக்கவாதி என்று ஊர்வாசிகள் கூறுகின்றனர். சில பித்அத்துக்களை
எதிர்த்த இவரை ஓரம் கட்டக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் புகார் கூறி வருகிறார்கள்.
மேலும்
தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பயான் செய்து வந்த மேலத் தெரு பள்ளி (அதிரை முதல் குத்பா
பள்ளி) மற்றும் தக்வா பள்ளி ஆகியற்றில் இவரது மார்க்கச் சொற்பொழிவுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
சம்சுல் இஸ்லாம் சங்க தரப்பிலும் இவரை நாங்கள் சந்திக்கச் சென்றபோது எங்களை அவமதித்தார்
எனக் கூறுகின்றனர். அதையும் மீறி சில வீடுகளில்
இவரது ஆதராவாளர்களால் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதில் தனது கருத்துக்களை
கூறி வருகிறார் என்ற செய்தியும் வருகிறது.
இவ்வாறு
இவர் அலைக்கழிக்கப்படுவதற்கும் அவமதிக்கப்படுவதற்கும் இந்தப்பள்ளி நில விவகாரத்தில்
நடுநிலையோடு செயல்படுகிறார் என்ற ஒற்றைக் காரணம் தவிர வேறில்லை என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்புதான் இந்த ஊருக்கு வந்தவர் இவர் என்பதால் வெளியூர்க்காரர்
என்று கொச்சைப்படுத்தியும் இந்த நில விவகாரம் திசை திருப்பப்படுகிறது.
சென்ற
மாதம் இதுசம்பந்தமாக நடந்த கோட்டாட்சியர் விசாரணை இந்தமாதத்தின் முதல் வாரத்திற்கு
தள்ளி வைக்கப்பட்டது. உமர் தம்பி மரைக்காயரும் அவரது ஆதரவாளர்களும் தாங்களே இப்பிரச்சினையை
கோட்டாட்சியர் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டனர் என்றும்,
வாதி பிரதிவாதி என இரு தரப்பினரையும் இவர்களே தயார் செய்து கோட்டாட்சியருக்கு மனுக்
கொடுத்து குழப்பினர் என்றும் பெயர் கூற விரும்பாத அதிரைவாசி ஒருவர் தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பாளர்கள்
அல்லது அபகரிப்பாளர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு ஒரு நியாயமான தரை வாடகை தரவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இடத்தை பள்ளி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும்
என்பதையே சித்தீக் பள்ளி நிர்வாகத்தினர் கோட்டாட்சியர் முன்னிலையிலும் கூறி வந்துள்ளனர். இந்தக்கூற்றில் நியாயம் இருப்பதை நம்மால் உணர முடிந்தது.
மேலும்
இந்தப்பள்ளி நிர்வாகக் குழுவின் பெரும்பான்மையோரின் கருத்தும் மற்றும் பொதுமக்களின்
கருத்தும் இதுவாகவே இருக்கிறது. தற்போது, நில
விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதற்கு தீர்வு காண்பதையும் விட்டுவிட்டு ஹைதர்
அலி ஆலிம்சாமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்பற்றியே அதிரை இணைய தளங்களில் பதிவுகளும்
பின்னூட்டங்களும் இடம் பெற்றுவருவது நமக்கு
ஆச்சரியமாக இருக்கிறது.
மீண்டும் தள்ளி
வைக்கப்பட்ட ஆர்.டி.ஓ. விசாரணை
கடந்த
13.09.2012 அன்று நடந்த ஆர்.டி.ஓ.விசாரணை தள்ளி வைக்கப்பட்டு கடந்த 06.10.2012 அன்று
நடந்தது. அது மீண்டும் வருகிற 22.10.2012க்கு தள்ளி வைக்கப்பட்டதாக அதிராம்பட்டிணத்திலிருந்து
வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த விசாரணையை ரஹ்மத்துல்லாகான் என்ற முஸ்லிம் கோட்டாட்சியர்தான்
நடத்தி வருகிறார். கூச்சலும் குழப்பமுமாக நடந்து முடிந்த இந்த விசாரணைகளில் ஹைதரலி
தரப்பினரைவிட அதிக அளவில் கூட்டமாக எதிர் தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர். அவரது கருத்தைப்
பேசவிடாமல் வெளியூர்க்காரர் என்ற ரீதியிலேயே அவர் அவமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு
கட்டத்தில் கோட்டட்சியரான ரஹ்மத்துல்லாவே ஆக்கிரமிப்பு தரப்பினரைப் பார்த்து அப்பயெல்லாம்
ஒரு மனிதரை மட்டம் தட்டாதீர்கள் என்று கூறுமளவிற்கு சம்பவங்கள் நடந்ததாக உடன் சென்ற
சகோதரர் ஒருவர் கூறினார். மேலும் தங்களுக்குள் இந்த சொத்து தொடர்பாக ஒரு டிரஸ்ட் அமைத்துக்
கொண்டதாகவும் ஆகவே இதில் பள்ளி நிர்வாகமோ ஹைதரலியோ எதுவும் செய்ய முடியாது என எதிர்
தரப்பினர் கூறியதும் விந்தையான ஒன்றாகும்.
இந்த
சூழலில் எப்படி அவ்வாறு டிரஸ்ட் அமைக்க முடியும் என்ற ரீதியில் கோட்டாட்சியர் கேட்காததையும் சுட்டிக்காட்டுகின்றனர்
நடுநிலையாளர்கள். பள்ளி இடங்களை வசிப்பிமாக்கிக் கொண்டோர் நியாயமான தரை வாடகை தருவதற்கு
ஒப்புக் கொள்ளவேண்டும் என்பதையே ஹைதரலி தரப்பினர் (சித்தீக் பள்ளி நிர்வாகம்) மீண்டும்
வலியுறுத்திவிட்டு வந்துள்ளனர். இதற்கு உடன்படாத பட்சத்தில் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு
முடிவுக்கு வராது என்பதே அதிரை வாசிகளின் பெரும்பாலோரது கருத்தாகும்.
அதிரை டிஎன்டிஜே
உதவியுடன்
களத்தொகுப்பு
மற்றும் படங்கள் எம்.எஸ்.
நன்றி உணர்வு