Thursday, June 12, 2014

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் ஆலோசனைக் கூட்டம்

எதிர் வரும் ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றிய ஆலோசனைக்கூட்டம் அதிரை தவ்ஹீத் பள்ளியில்(10.6.2014) கிளைத்தலைவர் பீர்முகம்மது தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. விலைவாசிகள் அதிகமான இருப்பதால் இந்த வருடம் கஞ்சிக்கு ரூ 6000 என்று தீர்மானிக்கப்பட்டது அதற்கு பெறுப்பாளராக சகோதரர் S.P பக்கீர் முகம்மது அவர்களை நியமிக்கப்பட்டுள்ளது.

2. இஷா தொழுகை 8.30 மணிக்கு இரவு தொழுகை 8.45 மணிக்கு தொழுகைக்கு பிறகு பயான் 30 நிமிடங்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

3. சென்ற வருடங்களை போல் இந்த வருடமும் ஸஹர் பாங்கு சொல்லுவது.

4. பெண்களுக்கும் பள்ளியிலேயே இரவு தொழுகை நடத்துவது.

5.  ஸஹர் உணவு தேவைப்படுபவர்களுக்கு ஏற்பாடு செய்வது.

6. அதிகமான பெண்கள் கலந்துக்கொள்ளுவதாக இருந்தால் காலை 11.30 மணி முதல் 12.30 மணிவரை அயிஷா மகளிர் அரங்கில் பெண்களுக்கு பயான் நடத்துவது.

ரமலான் மாதத்தில் பள்ளியில் நடைபெறும் பணிகளில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு ஒத்துழைப்பு தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கஞ்சி மற்றும் இதர பணிகளுக்கு பணம் தருபவர்கள் இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் 99448 24510 - 95008 21430


1 கருத்துரைகள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற் காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.
அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 621

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.