Monday, June 30, 2014
இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 34) - வியாபாரத்தில் ஏமாற்றுதல்
Monday, June 30, 2014
No comments
இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 34) - வியாபாரத்தில் ஏமாற்றுதல்
இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.
குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-2) - ஒரே இறைவன் தான் இருக்கிறான்
Monday, June 30, 2014
No comments
குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-2) - ஒரே இறைவன் தான் இருக்கிறான்
ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன் வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:163
வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.
திருக்குர்ஆன் 4:171
'மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்' என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.
திருக்குர்ஆன் 5:73
'அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா? நான் (அவ்வாறு) சாட்சி கூற மாட்டேன்' என்று நீர் கூறுவீராக! 'வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே. நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டவன்' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:19
'வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?' என்று கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 13:16
இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும்,வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.)
திருக்குர்ஆன் 14:52
உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள்.
திருக்குர்ஆன் 16:22
'இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!' என்று அல்லாஹ் கூறுகிறான்.
திருக்குர்ஆன் 16:51
'நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 18:110
'உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்பதே எனக்கு அறிவிக்கப்படுகிறது. நீங்கள் (இதை) ஏற்கிறீர்களா?' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 21:108
(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.
திருக்குர்ஆன் 37:4,5
'நான் எச்சரிக்கை செய்பவனே. அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன். மிகைத்தவன்; அதிகம் மன்னிப்பவன்.
திருக்குர்ஆன் 38:65,66
'நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 41:6
'அல்லாஹ் ஒருவன்' எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
திருக்குர்ஆன் 112:1-4
குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை (தொடர்-1) - முன்னுரை
Monday, June 30, 2014
No comments
குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை
தொகுப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன்
ஏகத்துவ கொள்கையை எடுத்துக்கூறும் திருக்குர்ஆன் வசனங்களை தொகுத்து 'குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை' என்ற தொகுப்பு நூல் சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோ. பீஜே அவர்களால் வெளியிடப்பட்டது. ஏகத்துவ கொள்கையில் இருந்து தடம் புரண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு நேர்வழி அடைய இந்த தொகுப்பு நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள திருமறை வசனங்கள் மட்டுமே போதுமானவை. இந்த தொகுப்பு நூலை நமது தளத்தில் தொடராக வெளியிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ். இதை அதிகமாக ஷேர் செய்து, ஏகத்துவ கொள்கையில் தடம் புரண்ட சகோதர சகோதரிகளை நேர்வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
முன்னுரை
ஓரிறைக் கொள்கையை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அனைத்து வழிகளையும் திருக்குர்ஆன் அடைத்து விட்டாலும், குர்ஆனுடன் தொடர்பு இல்லாத முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகத்தைச் செய்து வருகின்றனர்.
இத்தகையோர் ஓரிறைக் கொள்கை குறித்து அறிந்து கொள்வதற்காக இந்நூல் வெளியிடப்படுகிறது.
இதில் ஒவ்வொரு தலைப்பின் கீழ் குர்ஆன் வசனங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. யாருடைய சொந்த கருத்தும் இதில் சேர்க்கப்படவில்லை. யாருடைய விளக்கமும் இல்லாமல், இவ்வசனங்களே ஏகத்துவக் கொள்கையை அழுத்தமாகவும் தெளிவாகவும் சொல்லி விடுகிறது.
இறைவனுக்கு இணைகற்பிப்போருக்கு அன்பளிப்பு செய்ய ஏற்ற நூலாக இது திகழ்கிறது.
கீழ்க்காணும் தலைப்புக்களில் குர்ஆன் வசனங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
- ஒரே இறைவன் தான் இருக்கிறான்
- ஒரே இறைவன் தான் இருக்க முடியும்
- தொன்று தொட்டு வரும் ஓரிறைக் கொள்கை
- இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை
- ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை
- படைத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்
- காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்
- அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம்
- அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம்
- குழந்தையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம்
- ஆட்சி அல்லாஹ்வின் அதிகாரம்
- செல்வம் அல்லாஹ்வின் அதிகாரம்
- மழை அல்லாஹ்வின் அதிகாரம்
- நோய் நிவாரணம் அல்லாஹ்வின் அதிகாரம்
- காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்
- அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம்
- அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம்
- குழந்தையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம்
- ஆட்சி அல்லாஹ்வின் அதிகாரம்
- செல்வம் அல்லாஹ்வின் அதிகாரம்
- மழை அல்லாஹ்வின் அதிகாரம்
- நோய் நிவாரணம் அல்லாஹ்வின் அதிகாரம்
- கால் நடைகளைக் கடவுளாக்கக் கூடாது
- வானவர்களை வணங்கக் கூடாது
- சிலைகளை வணங்கக் கூடாது
- மகான்களை வணங்கக் கூடாது
- இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது
- மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது
- நபிமார்களும் மனிதர்கள் தாம்
- நபிமார்கள் உணவு உட்கொண்டனர்
- நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்
- நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர்
- நபிமார்கள் மரணித்தனர்
- நபிமார்கள் கவலைப்பட்டனர்
- நபிமார்கள் கொல்லப்பட்டனர்
- நபிமார்கள் நோய் நொடிக்கு ஆளானார்கள்
- நபிமார்களும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்
- நபிமார்கள் மறுமையில் கை விடுவார்கள்
- தவறு செய்தால் நபிமார்களும் தப்ப முடியாது
- நன்மையோ, தீமையோ செய்ய நபிமார்களுக்கு இயலாது
- நபிமார்களையும் அல்லாஹ் தான் மன்னிக்க முடியும்
- நபிமார்களும் இறைவனின் அடிமைகளே
- நபிகள் நாயகம் அல்லாஹ்வின் அடிமை
- அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகத்திடம் இல்லை
- நேர் வழியில் சேர்ப்பது நபிகள் நாயகத்தின் அதிகாரத்தில் இல்லை
- நபிகள் நாயகமும் மனிதரே
- நபிமார்களின் அற்புதங்கள்
- அற்புதங்கள் அல்லாஹ் நாடினால் மட்டுமே
- கெட்டவர்க்கும் அற்புதம்
- மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்
- மறைவானவை நபிமார்களுக்குத் தெரியாது
- மறைவானவை நபிகள் நாயகத்துக்குத் தெரியாது
- நபிமார்களுக்கு சிலவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிப்பான்
- அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது
- அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவம்
- அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க எந்த நியாயமும் இல்லை
- இறைவனை யாரும் கண்டதில்லை; காண முடியாது
- மறுமையில் இறைவனைக் காண முடியும்
- இறைவனின் இலக்கணம்
Sunday, June 29, 2014
மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா?
Sunday, June 29, 2014
No comments
வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த அமாவாசை தினத்தில் சூரிய ஒளி
சந்திரன் மீது படாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவ்வாறில்லை. பௌர்ணமி
தினத்தில் சூரிய ஒளி சந்திரனில் படுவது போல் தான் அமாவாசையிலும் படுகிறது.
சந்திரனில் பிரதிபலிக்கவும் செய்கிறது. ஆனால் அது பூமியின் எதிர்த்
திசையில் பிரதிபலிக்கிறது.
பூமியின் பக்கம் உள்ள சந்திரன்
இருட்டாக உள்ளது. ஆனால் சந்திரனின் அடுத்த பக்கம் பௌர்ணமியாக உள்ளது.
ராக்கெட்டில் மேலே போய் பார்க்கலாம் என்றால் குறிப்பிட்ட இடத்துக்கு
ராக்கெட்டில் போனால் அமாவாசை தினத்திலே பௌர்ணமியைக் காணலாம். குறிப்பிட்ட
கோணத்தை அடைந்தால் ஏழு அல்லது எட்டாம் பிறை அளவைக் காணலாம்.
அதை
வைத்து ஏழாம் நாள் என்று அமாவாசை தினத்தில் முடிவு செய்ய மாட்டோம்.
பூமிக்கு சந்திரனிலிருந்து ஒளி வருகிறதா என்பதும் அது நம் கண்களுக்குத்
தெரிகிறதா என்பதும் நமக்கு தேவை.
ஆகாயத்தில் ஏறிச் சென்றால்
சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நாளைத் தவிர வேறு எந்த நாளிலும் நாம்
விரும்புகிற எந்த அளவிலும் பிறையைக் காண முடியும். எனவே இதை அளவுகோலாக
வைத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளாகக் கூறுவார்கள். மக்களுக்குப்
பைத்தியம் பிடித்துவிடும்.
ஓர் ஊரில் பிறை பார்க்கப்பட்டால் அந்த
நேரத்தில் எந்த நாடுகளெல்லாம் சுப்ஹு நேரத்தைக் கடக்கவில்லையோ அந்த
நாடுகளில் அது தலைப்பிறையாகவும் சுபுஹு நேரத்தைக் கடந்துவிட்ட நாடுகளில்
மறுநாள் தலைப்பிறையாகவும் முடிவு செய்ய வேண்டும் என்ற கருத்தும் இருந்து
வருகின்றது. இந்தக் கருத்தும் மார்க்க அடிப்படையில் எந்த வித ஆதாரமும்
இல்லாத ஒரு கருத்தாகும்.
இந்தக் கருத்தின்படி ஒவ்வொரு ஆண்டும்
ஷாஃபான் மாத இறுதியில் இரவு முழுவதும் கண்விழித்து பிறையை எதிர்பார்க்க
வேண்டும். ஏனென்றால் சுபுஹ் வரை எங்கிருந்தாவது பிறை பார்த்த தகவல் வந்து
விடலாம். அப்படி தகவல் வந்து விட்டால் அவசர அவசரமாக எதையாவது
சாப்பிட்டுவிட்டு அல்லது எதையும் சாப்பிடாமல் நோன்பு வைக்க வேண்டும் என்ற
நிலை உருவாகின்றது.
இது ஒரு புறமிருக்க அந்த நேரத்தில் தகவல்
கிடைத்தது தெரியாமல் யாரெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கிறார்களோ
அவர்களெல்லாம் இறைவனிடம் குற்றவாளிகளா?
சரி! அப்படியாவது உலகம்
முழுவதும் ஒரே நாளில் அவர்களால் கொண்டு வர முடியுமா என்றால் அதுவும்
சரியில்லை. உலகில் ஏதோ ஒரு பகுதியில் பிறை பார்க்கப்படும் போது
திருச்சியில் சுபுஹ் நேரத்தை அடைந்திருக்கிறார்கள் என்று வைத்துக்
கொள்வோம். திருச்சியில் சுபுஹ் நேர இறுதியில் இருக்கும் போது மணப்பாறையிலோ
அல்லது அருகிலுள்ள பகுதியிலோ சுபுஹ் நேரம் அதாவது ஸஹர் இறுதி நேரம்
கடந்திருக்கும். இப்போது பக்கத்து பக்கத்து ஊரிலேயே இரண்டு நாட்களில்
நோன்பையும் பெருநாளையும் அடைகிறார்களே?
இந்தக் கேள்விகளையும்
இதற்கு முன்னர் நாம் எழுப்பியுள்ள கேள்விகளையும் மனதில் வைத்துக் கொண்டு
உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும் என்ற
அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவரவர் பகுதிகளில் பிறையைப் பார்த்து நோன்பு
வைக்க வேண்டும் எனக்கூறும் ஹதீஸ்களையும் சிந்தித்துப் பாருங்கள்.
சுப்ஹானல்லாஹ் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.
முப்பதாம் நாள் இரவில் நாம் பிறை பார்க்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது
முப்பதாம் நாளாக இருப்பதற்குச் சாத்தியம் உள்ளது போல் அடுத்த மாதத்தின்
முதல் நாளாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
நமக்குப் பிறை தென்பட்டால் இந்த மாதம் 29 உடன் முடிந்து விட்டது என்றும், மறு மாதம் துவங்கி வட்டது என்றும் கருதிக் கொள்ள வேண்டும்.
நமக்குப் பிறை தெரியாமல் வேறு ஊர்களில் பிறை காணப்பட்ட தகவல் நமக்குக்
கிடைக்கிறது. எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது என்று பார்க்க வேண்டும்.
அலட்சியப்படுத்தி ஒதுக்கி விடும் அளவுக்குக் குறைந்த நேரம் இரண்டு
ஊர்களுக்கும் வித்தியாசம் இருந்தால் அத்தகவலை ஏற்றுக் கொண்டு, அதுவும் நமது
பகுதியைச் சேர்ந்தது தான் என்று முடிவு செய்ய வேண்டும்.
ரமளானின்
கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள்
வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்
சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும்,
பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக்
கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்
நூல்: அபூதாவூத்
அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமான நிமிடங்கள் அல்லது மணிகள்
இரண்டு ஊர்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தால் அந்தத் தகவலை அலட்சியம்
செய்து விட்டு, அதை முப்பதாம் நாளாக முடிவு செய்ய வேண்டும். மறு நாள்
அடுத்த மாதம் பிறந்து விட்டதாக முடிவு செய்ய வேண்டும்.
மேக
மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு
நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு
வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள்
பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள்
திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீ, பைஹகீ, தாரகுத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான், அஹ்மத்
எத்தனை நிமிடம் அல்லது எத்தனை மைல் வித்தியாசத்தை அலட்சியப்படுத்தலாம்?
என்பதற்கு அல்லாஹ்வோ, அவனது தூதரோ எந்த வரையறையும் செய்யவில்லை. அந்த
அதிகாரம் நம்மிடம் தான் உள்ளது.
இந்த தாலுகா, இந்த மாவட்டம்,
இத்தனை மைல், அல்லது இத்தனை நிமிடம் என்று அந்தந்த பகுதியினர் முடிவு
செய்து, அந்த தூரத்தைப் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்.
நீங்கள்
நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என
நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப்
பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்''
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ
இதற்கான அதிகாரம் அந்தந்த பகுதி மக்களுக்கு அல்லது அந்தந்த ஊர் மக்களுக்கு
உள்ளது தானே தவிர எங்கோ இருந்து கொண்டு யாரும் கட்டளை பிறப்பிக்க
முடியாது.
இது தான் பிறை பற்றிய தெளிவான முடிவு! மேலே நாம்
எடுத்துக் காட்டிய ஆதாரங்களைச் சிந்தித்தால் இந்த முடிவுக்குத் தான் யாரும்
வர முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
Saturday, June 28, 2014
அதிரை மின்சாரவரியத்திற்கு எச்சரிக்கை (வீடியோ)
Saturday, June 28, 2014
No comments
மாதாரந்திர பராமரிப்புக்காக அதிரை மின்சாரவாரியம் நாள் முழுவதும் மின்சாரத்தை நிறுத்திவைக்கின்றனர். இனிவரும் காலங்களில் வெள்ளிக்கிழமையை தவிர்த்து மற்ற கிழமைகளில் பராமரிப்பு பணிகளை செய்யுமாறும் இனி வெள்ளிக்கிழமை மின்சாரம் துன்டிக்கப்பட்டால் தவ்ஹீத் ஜமாஅத் மக்களை திரட்டி போரட்டம் நடத்தவேண்டிவரும் என்ற எச்சரிக்கையை அதிரை மின்சார வாரியத்திற்கு தெரிவித்துக்கொள்கிறது.
Friday, June 27, 2014
தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு
Friday, June 27, 2014
No comments
தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அதிராம்பட்டினம் தவஹீத் பள்ளியில் வியாழக்கிழமை 26.6.2014 நடைபெற்றது மாவட்டத்தலைவர் சாதிக் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் தவ்ஹீத் வாதிகளிடம் இருக்கக்கூடாத தீய பண்புகள் என்ற தலைப்பில் உரை
தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மாவட்ட சார்பாக தஞ்சையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவது
மாவட்ட தர்பியா நிகழ்ச்சி நடத்துவது
ரமலான் மாதத்தில் அதிகமான தாவா பணிகள் செய்யவேண்டும்
ரமலானின் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஜும்ஆ வசூல் மாநில தலைமைக்கு அனுப்புவது
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அனைத்து கிளைகளிலும் இரவுத்தொழுகை அதனை தொடர்ந்து பயான் நிகழ்ச்சி நடத்துவது
பெருநாளைக்கு முன்பாகவே பித்ரா வினியோகம் செய்வது
மாநில தலைமையினால் நடத்தப்படும் அனாதை சிறுவர் சிறுமியர் இல்லம், முதியோர் இல்லம், தாவா சென்டர், போன்றவைகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக அதிகமான நிதிகளை வசூல் செய்து தலைமைக்கு கொடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
நிகழ்த்தினார்கள்மாவட்ட தர்பியா நிகழ்ச்சி நடத்துவது
ரமலான் மாதத்தில் அதிகமான தாவா பணிகள் செய்யவேண்டும்
ரமலானின் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஜும்ஆ வசூல் மாநில தலைமைக்கு அனுப்புவது
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அனைத்து கிளைகளிலும் இரவுத்தொழுகை அதனை தொடர்ந்து பயான் நிகழ்ச்சி நடத்துவது
பெருநாளைக்கு முன்பாகவே பித்ரா வினியோகம் செய்வது
மாநில தலைமையினால் நடத்தப்படும் அனாதை சிறுவர் சிறுமியர் இல்லம், முதியோர் இல்லம், தாவா சென்டர், போன்றவைகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக அதிகமான நிதிகளை வசூல் செய்து தலைமைக்கு கொடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Thursday, June 26, 2014
ரமலான் பிறை அறிவிப்பு வேண்டுகோள்
Thursday, June 26, 2014
No comments
ரமலான் பிறை அறிவிப்பு!
கடந்த மே 30.05.14 வெள்ளிக் கிழமை மஹரிப் முதல் தமிழகத்தில் ஷாஃபான் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 28.06.14 சனிக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
28.06.14 சனிக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷாஃபான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
மாநில தலைமையகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
தொடர்புக்கு:
Wednesday, June 25, 2014
மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர்
Wednesday, June 25, 2014
No comments
அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் தெருவைச் சார்ந்த முகம்மது சித்தீக் அவர்களின் மகன் அப்துல்லாஹ் (திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்) கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சமிபத்தில் அவருக்கு கேன்சர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்நோயாளிளாக சிகிச்சை பெற்றுவருகிறார் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த சகோதரின் மருத்துவ செலவுகளுக்காக உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
தொடர்புக்கு
99448-24510
95008-21430
Monday, June 23, 2014
அதிரை TNTJ துபாய் கிளை மாதாந்திர கூட்டம்
Monday, June 23, 2014
No comments
இன்ஷா அல்லாஹ், வருகின்ற 27.06.2014 வெள்ளிக்கிழமையன்று இரவு 7.30 மணியளவில் துபாய் அதிரை TNTJ’வின் மாதாந்திரக் கூட்டம் நடக்க இருக்கின்றது.
இந்தக் கூட்டத்தில் ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் பற்றிய ஆலோசனைகள் நடக்க இருப்பதால், தவறாமல் அனைத்து அதிரை தவ்ஹித் ஜமாத் ஆதரவாளர்களும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இடம்: துபாய் தேய்ரா TNTJ (JT) மர்கஸில்
மேலும் விபரங்களுக்கு, கீழ்கண்ட சகோதரர்களைத் தொடர்பு கொள்ளவும்:
சகோ. ஷாகுல் ஹமீத் – 0505063755
சகோ. நஸீர் - 0559081550
சகோ. மக்தூம் நைனா - 0507397093
கடற்கரைத் தெருவில் நடைபெற்ற நபிவழித் திருமணம்!
Monday, June 23, 2014
No comments
தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி அவர்களின் இல்லத்தில்
இன்று (22-06-2014) காலை 11.00 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம்
நடைபெற்றது.
இதில் சென்னை ஆவடியை சேர்ந்த கபீர் அவர்களின் மகன் அப்துல்
மாலிக் மணமகனுக்கு கடற்கரைதெருவை சேர்ந்த அஹமது ஜலீல் அவர்களின் மகளை 40
கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் சகோதரரிடம் கொடுத்து மணமுடித்தார்.
இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர்
முஜாஹிதீன் மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி
சிறப்புரையாற்றினார். இதில் கடற்கரைதெரு ஜமாஅத் நிர்வாகிகள், உட்பட பல கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
Sunday, June 22, 2014
TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம்
Sunday, June 22, 2014
No comments
TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பி ன் ஒருங்கிணைப்புக் கூட்டம்
TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பி ன் ஒருங்கிணைப்புக் கூட்டம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். .
TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
அபுதாபி அதிரை TNTJ கூட்டமைப்பி ன் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 13.06.2014 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 8.10 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.
அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதனையடுத்து எதிர்வரும் ரமலான் மற்றும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன.
மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
ஜசாக்கல்லாஹ்..
Saturday, June 21, 2014
இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 33) - அமானிதம் பேணல்
Saturday, June 21, 2014
No comments
இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 33) - அமானிதம் பேணல்
இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.
Wednesday, June 18, 2014
இலங்கையில் இஸ்லாமியர் மீது தாக்குதல்: மத்திய அரசு குரல் கொடுக்க கருணாநிதி கோரிக்கை
Wednesday, June 18, 2014
No comments
இலங்கையில் இனவெறி தாக்குதலுக்குள்ளாகும் இஸ்லாமியர்களை பாதுகாக்கும்
வகையில் மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வரவேண்டும் என திமுக
தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கையின் ஆட்சி
அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக்கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச்
சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையினரான தமிழர்கள்,
இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி
செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந்து
கடைப்பிடித்து வருகிறார்கள்.
இலங்கை அரசின் இத்தகைய மோதல் போக்கின் காரணமாகவே, இலங்கையில் சிறுபான்மை
மக்களாக உள்ள தமிழர்களைத் தாக்கிச் சின்னாபின்னப்படுத்திய சிங்கள
வெறியர்கள், கடந்த சில நாட்களாக மற்றொரு சிறுபான்மைப் பகுதியினரான
முஸ்லீம்கள், அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதால் அவர்களையும் தாக்கத்
தொடங்கியுள்ளார்கள்.
2012ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும்,
முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாகவும், தொடர்ச்சியாகவும் கடந்த 2012ஆம் ஆண்டு
முதல் இலங்கையிலும், இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி வன்முறைச்
சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கொழும்பு நகருக்கருகில் அலுதமா பகுதியில் கடந்த நான்கு
நாட்களுக்கு முன் திடீரென வன்முறை மூண்டு, முஸ்லீம்கள் கடுமையாகத்
தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மோதலில் 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
100க்கு மேற்பட்டோர் படுகாயமுற்றிருக்கிறார்கள். மேலும் பள்ளிவாசல்களும்,
முஸ்லீம்களுக்குச் சொந்தமான வீடுகளும், கடைகளும்
தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையே இலங்கை அரசின் அமைச்சர் பைசர் முஸ்தபா என்பவர், கல்லூரி விழா
ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள், அவரைத்
தடுத்து நிறுத்திய தோடு, அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற விடாமல் சிறைப்
பிடித்திருக்கிறார்கள்.
பின்னர் காவலர் வந்து ஒரு மணி நேரத்துக்குப் பின் அவரை
மீட்டிருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் மற்றும்
இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்கள் இந்தத் தாக்குதலை நடத்தி
வருகிறார்கள்.
சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான இலங்கையின் இந்தக் கடினமான போக்குக்கு
அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வேறு பல நாடுகளும் கண்டனம்
தெரிவித்துள்ளன.
தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய அமைப்பினர்
தொடர்ந்து தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை அரசைக்
கண்டித்து தமிழகத்திலே போராட்டம் நடத்திப் பலர் கைது
செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து இங்கேயுள்ள மத்திய, மாநில
அரசுகள் எதுவும் தெரிவிக்காத நிலையில் இருக்கின்றன.
இலங்கையில் இதுவரை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை நடத்தி
முடித்ததை அடுத்து, இஸ்லாமியர்களும் கடுமையாகத் தாக்கப்படுகின்ற நிலையில்,
அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் குரல்
கொடுக்க முன்வரவேண்டும்". இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
நன்றி : தி இந்து
சென்னையில் நடைபெற்ற இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்
Wednesday, June 18, 2014
No comments
இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று
குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து நேற்று (17.06.2014) 11 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து நேற்று (17.06.2014) 11 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்ககானோர் இதில் கலந்து கொண்டனர்.
Sunday, June 15, 2014
மேலத்தெருவில் நடைபெற்ற நபிவழி திருமணம்!
Sunday, June 15, 2014
2
comments
மேலத்தெரு சூனா வீட்டு அலி அக்பர் அவர்களின் மகன் தையுப் (தம்பி ராஜா) மணமகனுக்கு இன்று (15.6.2014) காலை 11.30 மணிக்கு மணமகன் இல்லத்தில் 24 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் தந்தையிடம் கொடுத்து நபிவழித் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் மாநில பேசாளர் கபுர் மிஸ்பாயி மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள்.