தவ்ஹீத் ஜமாத்துக்கு கருணாநிதி வரவேற்பு அவரது அறிக்கை: சிறுபான்மையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,
தமிழகத்தில், 36 தொகுதிகளில், தி.மு.க.,வை ஆதரிப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாத் அறிவித்திருப்பதை, வரவேற்கிறேன்; நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன். தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில், நான் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்
அமைப்பினரை, இருகரம் கூப்பி வரவேற்பதாக அறிவித்தேன். மேலும், அவர்கள்,
தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், 36 தொகுதிகளில் மட்டும், தி.மு.க.,
அணியினரை ஆதரிப்பதாக அறிவித்திருக்கின்றனர். மற்ற 3 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியிலும். தி.மு.க., அணியினரை ஆதரிக்க வேண்டும்.
மத்தியில், மதச் சார்பற்ற ஓர் அரசு அமைவதற்கான அனைத்து முயற்சிகளிலும்,
தி.மு.க., ஈடுபடும் என்ற உறுதியையும், அவர்களுக்கு தெரிவித்துக்
கொள்கிறேன்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
நன்றி தினமலர்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.