திருடும் நிருபர்களின் மிரட்டும் உளறல்களும் உண்மைகளும்! - போதும் எங்களை அடிக்காதீங்க! - பகுதி-2
பொய்களை அள்ளிவிடுவோம், பதில் தந்தால் திட்டி தீர்போம்! ஓட்டப்பந்தயத்தில் எங்களை யாரும் மிஞ்ச முடியாது.திருடும் நிருபர்களின் அற்புத கொள்கை |
ஏண்டா இப்படி உளறித்தள்ளினோம் என்று இவர்களே வருந்தும் அளவுக்கு இவர்களுக்கு தொடர் கேவலங்கள் வரும். நீங்கள் என்ன எழுதினாலும், நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்றவர்கள், நமது பதிலடி இவர்களுக்கு ஏற்படுத்திய கேவலத்தை தாங்க முடியாமல், 'பக்தர்கள்' என்றெல்லாம் தம்பி ஒருவர் திட்டுகிறார். அதிரை ததஜவினர் எங்களை காப்பாற்ற மாட்டார்களா என்றும் புலம்புகிறார் அந்த தம்பி. அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தினர் அஜால் குஜால் செய்தார்கள் என்று ஒரு ஒருவர் திட்டுகிறார். இந்த கருத்தை எழுதியவருக்கும் அதை வெளியிட்டு சந்தோஷம் அடையும் திருடும் நிருபர்களுக்கும் மானம் சூடு சுரணை இருந்தால் இதை நிரூபிக்க முன்வர வேண்டும் (இது போன்ற எதுவும் அவர்களுக்கு கிடையாது என்று முன்னர் நிரூபித்துள்ளார்கள்). 'இறைவனுக்கு பயந்து கருத்தை எழுதுங்கள்' என்று கருத்து பகுதியில் போட்டு வைத்து இருக்கும் திருடும் நிருபர்கள், இதை நீக்க முன்வரவில்லை. இவர்கள் புதிதாக உளறி உள்ள அவதூறுகளுக்கு தேவைப்படும் போது பதில் தரப்படும்.
இவர்கள் 'நேருக்கு நேர்(?)' என்ற பெயரில் உளறிய பொய்கள் பலவற்றை நாம் நமது முந்தைய பதிலில் அம்பலப்படுத்தினோம். அதில் உள்ள மேலும் மற்ற உளறல்களுக்கும் அவதூறுகளுக்கும் இந்த ஆக்கத்தில் பதில் அளிக்கிறோம். மிச்சம் உள்ள உளறல்களுக்கு அடுத்த பகுதியில் பதில் வரும், இன்ஷா அல்லாஹ்.
பிஜே மீது அவதூறு:
இவர்கள் இட ஒதுக்கீடு குறித்து உளறிய முதல் காப்பி போஸ்ட் ஆக்கத்தில், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது பல கற்பனையான சந்தேகங்களை எழுப்பியிருந்தார்கள், அதன் அடிப்படையில் நாம் பதில் தரும் போது 'அங்கும் இங்கும் ஆட்டையை போட்டு அதையே புத்தகமாக பணம் பார்க்கத்தான் இவ்வாறு செய்கிறார்களோ' என்று நாமும் சந்தேகத்தை கிளப்பலாமா? என்று கேள்வி கேட்டுயிருந்தோம். இதற்கு பதில் சொல்ல புகுந்த 'திருடும் நிருபர் பதிப்பகம்', 'புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியிலில் சேர்ந்தது யார்?' என்று சகோதரர் பிஜேவை பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தார்கள். இவர்கள் பிஜேவை பெயர் குறிப்பிடவில்லையென்றாலும், இவர்கள் பிஜேவை தான் குறிப்பிடுகிறார்கள் என்று அவர்களின் வரிகளை படிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள். பிஜே மீது இவ்வாறு அவதூறு சொன்னீர்களே, அதை நிரூபிக்க திராணியிருக்கா என்று நாம் கேட்டு இரண்டு மாதங்கள் ஆக போகிறது. இது பற்றி வாய்திறக்க முடியாமல் இருந்த இவர்கள், என்னடா இவர்கள் பிஜேவின் புத்தகத்தில் இருந்து திருடவும் செய்கிறார்கள், பிஜே வழிகேடர் என்றும் சொல்லுகிறார்கள், பிஜே புத்தகம் போட்டு பணக்காரர் ஆகிவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள் என்று அவர்களுக்குள்ளேயே குழப்பம் எற்பட்டு, மக்கள் மத்தியில் இவர்களின் வண்டவாளம் கிழிய தொடங்கியவுடன், அதற்கு பதில் தருகிறோம் என்று மீண்டும் உளறி மாட்டியுள்ளார்கள்.
அதாவது, 'புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியிலில் பிஜே இடம்பெற்றுவிட்டார்' என்று எங்கே சொன்னோம் என்று கேட்டுவிட்டு, நாங்கள் சொன்னது பொதுவான விமர்சனம், புத்தகம் வெளியிடுபவர்கள் அனைவரையும் குறிக்கும் பொதுவான விமர்சனம் (எல்லாரும் அண்ணண்மார்கள் மாதிரி இருப்பார்கள் என்று நினைப்பு) என்று பச்சை பொய்யை சொல்லுகிறார்கள். இவர்கள் எந்த அளவிற்கு அல்லாஹ்வை சாட்சியாக வைத்து பொய் சொல்லுவார்கள் என்பதற்கு இவர்களின் இந்த பதில் ஆதாரம்.
அவர்களின் பதிலை முதலில் படியுங்கள்:
நாங்கள் பிஜேவை பெயர் குறிப்பிட்டு சொன்னோமா? என்று ஈனத்தனமாக வினவி, அதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக வைத்து மிரட்டுவதை பாருங்கள். |
இவர்கள் பிஜே நூல் போட்டு பணக்காரர் பட்டியிலில் இடம்பெற்றுவிட்டார் என்று பெயர் குறிப்பிடாமல் எழுதிய விஷயத்தை கீழே உள்ள படத்தில் படியுங்கள்:
நாங்கள் பிஜேவை புத்தகம் போட்டு பணக்காரர் ஆகிவிட்டார் என்று சொல்லவில்லை என்று பச்சையாக புளுகிறார்கள் என்பதை மேலே உள்ள படத்தில் இவர்கள் எழுதிய செய்திகளை படித்தாலே, இவர்கள் பிஜேவை தான் சொல்லுகிறார்கள் என்று விளங்கும் அளவுக்கு இவர்கள் தெளிவாக எழுதியுள்ளார்கள் என்பதை அறியலாம். மக்கள் மறந்திருப்பார்கள், எனவே, விட்டு அடிப்போம் என்று 'நாங்கள் பிஜேவை தான் சொன்னோமா?' என்று கேட்கிறார்கள். இவர்கள் ஒரு வேளை பிஜேவின் பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தால் கூட, பிஜே என்றால் இவர் மட்டும் தான் பிஜேயா என்று கூட கேட்பார்கள். இவர்கள் பிஜேவை தான் பெயர் சொல்லாமல் சொல்லியுள்ளார்கள் என்பதற்கு இவர்களின் எழுத்தில் பல ஆதாரம் உள்ளது. முதலில் நாம் இவர்கள் மீது கேள்வி எழுப்பும் போது தான் இவ்வாறு இவர்கள் கேட்டார்கள். நாம் ஒருவரை நோக்கி குற்றம்சாட்டினால், அவர்கள் நம்மை நோக்கி தான் குற்றம்சாட்டுவார்கள் என்பது மூளை கொஞ்சம் உள்ளவனுக்கு கூட தெரியும்.
இவர்கள் பிஜேவை புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் என்று சொல்ல ஆரம்பிக்கும் அதே பத்தியில் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தையும் பிஜேவையும் தான் சொல்லுகிறார்கள் என்பதற்கு அவர்களின் எழுத்திலேயே ஆதாரம் உள்ளது. அவர்களின் வரிகளை காணுங்கள்:
உண்மையான தாவாப் பணிக்காக அர்ப்பணிக்கப் பட்ட ஒரு பணியை களங்கப் படுத்தும் அந்த நண்பர்களின் முதுகுக்குப் பின்னால் பார்த்தால் “முதுகு அரித்தால் சொரிவது மார்க்கத்தில் கூடுமா? “ என்று மூவாயிரம் நூல்கள் போட்டு அதற்கும் அதை வெளியிடும் இயக்கத்திற்கு சேர்த்து விலை வைத்து இருப்பதும் “தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாமா? விளக்கெண்ணெய் தேய்க்கலாமா – ஆராய்ச்சி” என்ற தலைப்பில் ஐந்தாயிரம் சிடிகளும் அடுத்த மாநாட்டில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் காட்சிகளையும் காணலாம். தேவை இருக்கிறதோ இல்லையோ பெயர் போட்டால் விற்பனையாகும் என்று உப்புக்குப் பெறாத தலைப்புகளில் எல்லாம் நூல் வெளியிட்டு பணக்காரர்களின் பட்டியிலில் இடம் பிடித்திருப்பவர்கள் யார் என்று சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
நாம் சிகப்பு எழுத்துக்களில் அடிக்கோடிட்டு காட்டியுள்ளவற்றை பாருங்கள். புத்தகம் போட்டு பிஜே பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார் என்று பொய் கூறும் பத்தியின் ஆரம்பித்திலேயே இவர்கள் 'அந்த நண்பர்களின்' என்று நமது கேள்விக்கு தான் பதில் சொல்லுகிறார்கள் என்பதை காட்டுகிறார்கள். பொதுவான விமர்சனம் என்றால், 'தாவாப் பணிக்காக' என்று ஆரம்பிப்பது ஏன்? புத்தகம் போடும் அனைவரும் தஃவா செய்கிறார்களா? மார்க்கத்தில் கூடுமா?' என்று சொல்லியது ஏன்? புத்தகம் போடும் அனைவருக்கும் மார்க்கம் உண்டா? புத்தகம் வெளியிடுபவர்கள் எல்லாம் முஸ்லிம்களா? நூல்கள் வெளியிடும் இயக்கத்திற்கும் விலை வைத்து என்று எந்த இயக்கத்தை குறிப்பிடுகிறீர்கள்? புத்தகம் வெளியிடும் அனைவருக்கும் இயக்கம் உண்டே? மாநாட்டில் விற்பனை என்று யாரை சொல்லுகிறீர்கள்? புத்தகம் வெளியிடும் அனைவரும் மாநாடு நடத்துகிறார்களே?
இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தையும் பிஜேவையும் தான் சொல்லுகிறார்கள் என்பதற்கு இவர்களின் எழுத்துக்களே ஆதாரமாக உள்ளது. வழக்கம் போல திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக இந்த விஷயத்திலும் இவர்கள் மாட்டியுள்ளார்கள்.
இவ்வளவு தெளிவாக பிஜேவை குறிப்பிட்டு விட்டு, நாம் அவதூறு சொல்லுகிறாம் என்று சொல்லுவதற்கு இவர்களுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும். இப்படி அயோக்கியத்தனம் செய்துவிட்டு, அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று நம்மிடம் சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனம். நீங்கள் யாரை குறிப்பிட்டு எழுதினீர்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும், மறுமையில் இதற்கு எதிரான நாங்கள் உங்களிடம் கேள்வி எழுப்புவோம், இன்ஷா அல்லாஹ். இங்கே தப்பித்தாலும் நீங்கள் மறுமையில் மாட்டுவீர்கள்.
ஹாஜி நிருபர்களும், இறையருள் நிருபர்களும்:
அடுத்து, திருடும் நிருபர்கள் தவ்ஹீத்வாதிகள் என்று தவ்ஹீத் போர்வையில் இருக்கும் வேடதாரிகள். இவர்களுக்கும் தவ்ஹீத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இவர்களுக்கு புகழ் கிடைக்கும் என்றால் எந்த வேடம் வேண்டுமானலும் போடுவார்கள் என்று சொல்லி, அதற்கு ஆதாரமாக, 'அதிரையில் இணைவைப்பையும் தரீக்கா கொள்கையும் பெண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, பெண்களை வழிகெடுபவர்களில் முன்னிலையில் இருக்கும் தாஹா அவர்களை ஆகா ஓஹா என்று புகழ்ந்து எழுதியதையும், தாஹா அவர்களின் பெயருக்கு முன்னால் 'ஹாஜி' என்று எழுதி தங்களின் உண்மை தவ்ஹீதை வெளிப்படுத்தியதையும் எடுத்துக்காட்டியிருந்தோம். அது போல, 'இறையருட்கவிமணி' என்று கவிஞரை புகழ்ந்து எழுதியதையும் எடுத்துக்காட்டி, 'இறை அருளை பெறும் கவிஞர்' என்ற பொருள் வருகிறதே, அந்த கவிஞருக்கு 'இறையருள்' வருவதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டிருந்தோம். இதற்கும் வழக்கம் போல ஏன் கடுதாசி போடவில்லை என்று கேட்டுள்ளார்கள்.
ஹாஜி என்று இவர்கள் எழுதியதற்கு பதில் சொல்லுகிறாம் என்ற பெயரில் பல காமெடிகளை செய்துள்ளார்கள். அதில், முதல் காமெடி இவர்கள் ஹாஜி என்று சேர்ப்பதை இவர்கள் சுன்னத் என்றோ, பர்ளு என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ செய்யவில்லையாம். நல்ல வேளை இது போன்ற திறமைசாலிகள் இருப்பது ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்றவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது, தெரிந்து இருந்தால் தேடி வந்து தனது அணியில் சேர்த்து விடுவார். ஒருவர் புகைப்பிடிக்கிறார், அதை பார்த்த ஒருவர், புகை பிடிக்காதீர்கள், இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்கிறார். உடனே, புகைப்பிடிக்கும் நபர், நான் இதை சுன்னத் என்றோ, பர்ளு என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ நினைத்து செய்யவில்லை என்று சொன்னால், அதை கேட்டும் நாம் எந்த அளவுக்கு சிரிப்போம். மௌலூது ஓதுபவன் நான் இதை சுன்னத் என்றோ, பர்ளு என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ செய்யலில்லை என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாமா? திருடும் நிருபர்களின் கொள்கை இது தான். மார்க்கம் சம்பந்தப்பட்ட அல்லது உலகம் சம்பந்தப்பட்ட செயல்களில் மார்க்கத்தின் நேரடியான தடையோ அல்லது மறைமுகமான தடையோ இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும் அல்லவா?
ஹஜ் என்பது மார்க்க கடமை. ஹஜ் முடிந்தவுடன் 'ஹாஜி', 'அல்ஹாஜ்' என்று தனது பெயருக்கு முன் சேர்ப்பது பித்அத் (மார்க்கத்தில் புதுமையான காரியம்). இது போன்ற செயலை நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தரவில்லை. நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத மார்க்கம் சம்பந்தப்பட்ட செயல் பித்அத்.
பித்அத் செய்பவர்களுக்கு நரகம் தான் செல்லுமிடம் என்பதை கீழ்காணும் நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ (1560)
மேலும், ஹாஜி என்ற எழுதுவது நான் ஹஜ் செய்துள்ளேன் என்று பெருமையடிப்பதற்காக தான். இபாதத்தை புகழுக்காகவும், விளம்பரத்திற்க்காகவும் பயன்படுத்துபவர்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எந்த நன்மையும் பெற்றுத்தராது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளது. புகழ் விரும்பிகளுக்கு கடுமையான தண்டனையும் உண்டு என்று பல ஆதாரங்கள் உள்ளது.
அடுத்து, இவர்கள் ஹாஜி என்று எழுதியதற்கு காரணம், ஊரில் தாஹா அவர்களை 'தாஹா' என்றால் தெரியாதாம்,ஹாஜி தாஹா என்றால் தான் தெரியுமாம். நாம் அறிந்தவரை யாரும் அவரை ஹாஜி தாஹா என்று அழைக்கவில்லை. 'கவிஞர் தாஹா' என்று தான் அழைப்பார்கள். புகைப்படம் போட்டு அறிமுகம் செய்து இருக்கும் போது 'ஹாஜி' என்று சேர்த்து எழுதினால் தான் தெரியுமே? சமாளிக்க வேண்டும் என்று எண்ணி இவ்வாறு கேவலப்படுவது ஏன்? நாங்கள் தவறு செய்யவில்லை என்று காட்ட நிருபர்கள், கவிஞர் தாஹா என்று அறியப்பட்டவரை 'ஹாஜி தாஹா' என்று அறிப்பட்டதாக பச்சை பொய் கூறுகிறார்கள். இவ்வாறு 'ஹாஜி தாஹா' என்று அழைப்பட்டதினால் தான் நாங்கள் 'ஹாஜி' என்று சேர்த்தோம் என்று இவர்கள் சொல்லுவதிலும் பொய்யர்கள் என்பதற்கு ஆதாரம், இவர்களின் தளத்திலேயே உள்ளது.
தாஹா அவர்கள் குறித்து ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிய இவர்கள் 'ஹாஜி' என்று சேர்த்து எழுத மறந்துவிட்டார்கள். இதை ஒரு சகோதரர், சுட்டிக்காட்டி, 'தாஹா' அவர்கள் ஹஜ்ஜை முடித்துள்ளார்கள், தாஹா அவர்களின் அனைத்து பட்டங்களையும் சேர்த்த நீங்கள், ஹாஜி என்பதை மட்டும் சேர்க்க மறந்துவிட்டீர்களே என்று கேட்டவுடன், உடனே இவர்கள் 'ஹாஜி' என்று சேர்த்து தங்களின் தவ்ஹீத் பிடிப்பை வெளிக்காட்டினார்கள். அதற்க்கான ஆதாரத்தை கீழே பாருங்கள்:
அவர்கள் தளத்திலேயே மிச்சம் உள்ள ஆதாரம். எப்படி உளறினாலும் சிக்கி கொள்ளுகிறார்கள்... பாவம்.... |
இவர்கள் 'ஹாஜி' என்பது அவ்வாறு அழைக்கப்பட்டார் என்று பச்சையாக பொய்க்கூறியவர்கள், இவர்கள் தளத்தில் பல பேருக்கு 'அல்ஹாஜ்' என்று சேர்த்து எழுதியுள்ளார்கள். யாரையும் அழைக்கும் போது அல்ஹாஜ் என்று பெயர் கூறி அழைப்பது இல்லை. மேடைகளில் புகழ வேண்டும் என்று இவ்வாறு அழைப்பது நடைமுறையில் உள்ளது. தவ்ஹீத் வேடமிட்டு திரிந்த இந்த நிருபர் கும்பலுக்கு, 'ஹாஜி' என்று ஹஜ் செய்தவருக்கு போட்டு எழுதக்கூடாது என்ற அடிப்படை கூட தெரியவில்லை. மேலும், ஹாஜி என்று எழுதுவது எல்லாம் உப்பு சப்பில்லாத விஷயமாம், அதுவெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லையாம், ஆம், கொள்கையே இல்லை எனும் போது இதுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை தான். 'ஸஹாபக்களின் வாழ்வும் நமது வாழ்வும்' என்று தொடர் போடும் தம்பி, எந்த ஸஹாபியாவது 'ஹாஜி' என்று எழுதியுள்ளார்களா? என்று எடுத்துக்காட்டினால் என்ன? வண்டி வண்டியாக பொய்யை அள்ளிவிட்டுவிட்டு, அடுத்த வாரம் பொய் கூறக்கூடாது என் ஹதீஸ்கள் வெளியிடும் இவர்களின் உண்மை முகத்தை மக்கள் அறியாமல் இல்லை.
ஹாஜி என்று எழுதுவது கூடாது என்று இவர்கள் சொன்னாலும், இவர்கள் கூடாரத்தில் உள்ள பலர் சும்மா இருக்க மாட்டார்கள்.
'ஹாஜி' என்று எழுதுவது குறித்து அந்த நிருபர் கொடுத்த அற்புத விளக்கம்:
இறையருள் கவிஞருக்கு வந்ததை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டோம் பதில் இல்லை. இறையருள் என்பது மறைவான விஷயம். இது யாருக்கு கிடைக்கிறது, யாருக்கு கிடைக்கவில்லை என்பதை நம்மால் கண்டிபிடிக்க முடியாது. இதற்கு ஆதாரமாக திருமறையின் ஒரு ஆதாரமே போதுமானது.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
(அல்குர்ஆன் 6:59)
திருமறையின் இந்த வசனத்தையும் தாண்டி கவிஞருக்கு வந்த இறையருளை கண்டுபிடிக்க நிருபர்களுக்கு உதவிய பூத கண்ணாடியை எல்லோருக்கும் காட்டினால் நலம்.
இவ்வாறு ஹாஜி என்று எழுவதையும், இறையருள்கவிமணி என்று எழுதுவதையும் நாம் சுட்டிக்காட்டியது இயக்க மாயையாம். இது போன்ற மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்களை இவர்கள் செய்வதை நாம் விமர்சனம் செய்வது இது இவர்களுக்கு இயக்க மாயையாக தெரிகிறது. பிஜேவின் ஆய்வை திருடி அதை தங்கள் ஆக்கமாக காட்டுவது இயக்க மாயை இல்லையா? நீங்கள் திண்ணுவது இயக்க மலம் இல்லையா? ஹாஜி என்று எழுதுவது கூடாது என்று தம்பிமார்களுக்கு தர்பியா நடத்திய ஒழுக்க சீலர் கோவை அய்யுப் சொல்லுகிறார் என்பது ரகசியம். தர்பியா நடத்திய உத்தமன் கூட ஜாக் இயக்கத்தில் தான் இருக்கிறார். இயக்கம் கூடாது என்றால் ஒரு இயக்கத்தில் துணைத்தலைவராக இருக்கும் மன்மதனை வைத்து தர்பியா நடத்தியது ஏன்?
ஹாஜி என்று எழுதுவதும், இறையருளை பெறுபவர் என்று ஒருவரை புகழ்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்களை அடுக்க வேண்டிய தேவையில்லை. இது தவறு என்று நேற்று தவ்ஹீதை பற்றி விளங்கியவருக்கு கூட தெரியும். சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூட ஹாஜி என்று எழுதுவது தவறு என்று அதை தவிர்த்து வரும் நேரத்தில், இந்த தவ்ஹீத் நடிகர்களுக்கு இது தெரியாதது அல்லாஹ் இவர்களை எந்த அளவிற்கு வழிகேட்டில் தள்ளியுள்ளான் என்பதற்கு சான்று.

நிருபர்களின் சூனிய கொள்கை:
அடுத்து, ஒரு யூதர் சொன்னதை வைத்து, நபி (ஸல்) அவர்களையும் ஸஹாபாக்களும் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார்கள் என்று சொல்லியதாக சொல்லுகிறார் அந்த நிருபர். இந்த சம்பவம் பற்றி ஹதீஸ் கீழே உள்ளது. நபி (ஸல்) அவர்கள் யூதரின் கூற்றில் உண்மை இருந்ததின் காரணத்தினால் தான், நபி தோழர்களுக்கு இவ்வாறு சொல்ல வேண்டாம் என்று பணித்தார்கள். ஹதீஸில் இந்த சம்பவம் தெளிவாக இருக்கும் போது, நாம் பொய் சொல்லி விட்டோம் என்று புளுகுகிறார் நிருபர்.
ஒரு யூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்தார். 'கஅபாவின் மீது சத்தியமாக' என்று கூறி நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறீர்கள். உங்கள் தோழர்கள் உங்களை நோக்கிப் பேசும்போது 'அல்லாஹ் நாடியதும் நீங்கள் நாடியதும் நடந்துவிட்டது' என்று கூறுகின்றனர். இதன் மூலம் நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறீர்கள் என்று கூறினார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இனி சத்தியம் செய்யும்போது 'கஅபாவின் மீது ஆணையாக என்று சொல்லாமல் கஅபாவின் இறைவனின் மீது ஆணையாக' என்று சொல்லுமாறு கட்டளை இட்டார்கள். 'அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்துவிட்டது' எனக் கூறாமல் 'அல்லாஹ் நாடியது நடந்து விட்டது. பின்னர் நீங்கள் நாடினீர்கள்' என்று கூறுங்கள் என்றும் கட்டளையிட்டார்கள்.
நூல்கள்: நஸாயீ, பைஹகீ
அடுத்தாக, ஹாஜி என்று எழுதுவது தவறு என்று கூட விளங்காத அந்த நிருபர், தவ்ஹீத் ஜமாஅத்தின் சில மார்க்க ஆய்வைகளை விமர்சனம் செய்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வுகளை விமர்சனம் செய்பவர்கள் அது பற்றி விவாதிக்க தைரியமும் திரணியும் வேண்டும். இப்படி திராணியற்றவர்களை என்ன செய்வது? ஒருவர் குற்றம்சாட்டுகிறார், அது பற்றி பகிரங்கமாக பேசுவோம் வா என்றால், ஒடுகிறார், இவரை என்ன செய்வது?
சூனியம் குறித்து 1400 ஆண்டுகளாக யாரும் சொல்லாத கருத்தை தவ்ஹீத் ஜமாஅத் சொல்லிவிட்டதாம், தமிழில் கூட சுயமாக எழுத தெரியாமல், காப்பி அடிக்கும் இவர்கள் 1400 ஆண்டுகளில் வாழ்ந்த அத்துனை அறிஞர்களின் ஆய்வையும் கரைத்து குடித்து விட்டு, நிருபர்கள் சொல்லுகிறார்கள் (சிரிக்காதீங்க).
சூனியம் என்பது கற்பனை என்றும், அப்படி ஒன்று இல்லை என்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். நிருபர்கள் பின்பற்றும் ஷாஃபி மத்ஹபின் அறிஞர்கள் கூட சூனியம் இல்லை என்று கூறியுள்ளார்கள். யாரு சொன்னாலும், சொல்லாவிட்டாலும், நபி (ஸல்) அவர்கள் சூனியத்தை இருக்கிறது என்று நம்புபவன் சொர்க்கம் சொல்ல மாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுதர்தா (ரலி)
நூல் : அஹ்மது (26212)
ஹஜ்ஜத்துல்விதாவில் நபி (ஸல்) அவர்கள் மார்க்கம் பூரணமாகிவிட்டது என்ற சொன்னதில் இந்த ஹதீஸூம் அடங்குமல்லவா?
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை நான் ஏற்கவில்லை என்று ஒரு சூனிய நிருபர் கூட நமது தளத்தில் வாக்குமூலம் தந்துள்ளார்.
மேலும், குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டையும் விமர்சனம் செய்கிறார்கள். ஆதாரம் வேண்டுமா என்றெல்லாம் பயந்து கொண்டே தைரியமாக கேட்கிறார்கள். அறிவிப்பாளர் அடிப்படையில் ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படாது என்று நிருப அறிஞர்கள் சொல்லுகிறார்கள். இவர்களுக்கு எந்த சுய அறிவும் கிடையாது என்று நிருபிப்பதற்காக ஒரு ஹதீசை முன்வைக்கிறோம், இது குர்ஆனோடு முரண்படவில்லை என்று அறிவாளி நிருபர்கள் நிருபிக்க வேண்டும்.
குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2876)
குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் என்று இந்த ஹதீஸ் சொல்லுகிறது. இந்த ஹதீஸ் சொல்லும்படி எந்த குர்ஆன் வசனமும் இல்லை. குர்ஆனை பாதுகாக்கப்படும் என்பதை கீழ்காணும் வசனம் தெளிவாக சொல்லுகிறது.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
அல்குர்ஆன் (15 : 9)
இந்த ஹதீஸ் குர்ஆனுடன் மோதுகிறது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் அடிப்படையில் ஸஹீஹானது. இது குர்ஆனுடன் மோதவில்லை என்பதை அறிவாளி நிருபர்கள் நிரூபிக்க வேண்டும்.
ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொன்னால், அது நமது ஆய்வில் கோளாறாம். இதற்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், குர்ஆன் முரண்படுவதாக சொல்லப்படும் செய்திகளை மறுக்கவில்லையாம். எத்தனை அறிஞர்கள் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை மறுத்துள்ளார்கள் என்று காட்டடுமா? இது பற்றி விவாதிக்க தயாரா? எதையாவது அள்ளிவிடுவேன், அதற்கு பதில் தந்தால், திட்டி தீர்பேன் என்ற கேடு கெட்ட தன்மையுடன் அலைவதற்கு வெட்கமாக இல்லையா?
ஸஹாபாக்களை கண்ணியக்குறைவாக பேசிவிட்டதாகவும் அள்ளிவிடுகிறார் நிருபர். ஸஹாபாக்களை திட்டுவது கூடாது என்றும், ஸஹாபாக்களின் தியாகத்தோடு ஒப்பிடும் போது நாம் அவர்களின் கால் தூசிக்கு சமமாக மாட்டோம் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. ஸஹாபாக்கள் மனிதர்கள் என்ற முறையில் செய்த தவறுகளை எடுத்துக்காட்டுவது, ஸஹாபாக்களை திட்டுவதாக ஆகாது, ஸஹாபாக்கள் மனிதர்கள் என்ற முறையில் செய்த தவறுகள் மன்னிக்கப்படும் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. ஸஹாபாக்களை திட்டுபவர்கள் வழிகேடர்கள் என்று தெளிவாக சொல்லுகிறோம். ஸஹாபாக்கள் மனிதர்கள் என்ற முறையில் செய்த தவறுகளை வரலாற்று உரையில் எடுத்துக்காட்டியதை தான் ஸஹாபாக்களை திட்டிவிட்டதாக சொல்லுகிறார்கள். நாம் ஏதோ இல்லாத விஷயத்தை சொல்லிவிட்டதை போல துடிக்கிறார்கள். நாம் சொல்லிய விஷயங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் உள்ளவை தான். அதற்கு ஆதாரமாக புகாரியில் இடம்பெற்றுள்ள ஹதீசை காணுங்கள்.
முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்:
அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்:
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்ளோது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆம்விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்" என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்" என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 4447
இப்போது இந்த ஹதீசை தேடி பிடித்து அதை தனது நூலில பதிந்த புகாரி அவர்கள் ஸஹாபாக்களை திட்டுகிறார் என்று சொல்லுவோமா? ஸஹாபாக்களை நாம் திட்டியதாக சொல்லப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில் தரப்பட்டுள்ளது.
இது பற்றி இந்திய மற்றும் இலங்கை உலமாக்கள் விளக்கம் தருகிறார்களாம், இவர்களை தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்ய அழைத்து வர நிருபர் கும்பலுக்கு திராணி உண்டா? இப்படிப்பட்ட ஆலிம்களை நாம் பெண் பித்தர்கள் என்று சொல்லுகிறோமாம். பெண் பித்தர்களை பெண் பித்தர்கள் என்று தானே சொல்ல முடியும். எல்லாரையும் சொல்ல மாட்டோம். கேடித்தனம் செய்து கொண்டு, ஆலிம் வேஷம் போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றும் கேடுகேட்டவர்களை அவ்வாறு தானே சொல்ல முடியும். கேடிகளை வைத்து தர்பியா நடத்துபவர்கள் இதை குறை காணுவதில் ஆச்சரியம் இல்லை. கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று நாம் சிலரை விமர்சனம் செய்வதற்கு காரணம், சவூதியில் போடப்படும் சம்பளத்திற்கு ஏற்ப தங்களின் கொள்கைகளை மாற்றி வருகிறார்கள். உதாரணத்திற்கு, தவ்ஹீத் ஜமாஅத் ஹதீஸ்களின் அறிவிப்பாளருடன் ஹதீஸின் கருத்தும் சரியாக (குர்ஆனுக்கு முரண்படாத வகையில்) இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது, இதை இலங்கை இஸ்மாயில் ஸலஃபி என்பவர் ஏற்கவில்லை, இவ்வாறு இவர் சொல்லிக்கொண்டு இருக்கும் நேரத்தில் மதீனா பல்கலைகழகத்தில் இருந்து இதே கருத்தில் ஒரு ஃபத்வா வெளியிடப்படுகிறது, இதன் பிறகு, அதே இஸ்மாயில் ஸலஃபி இந்த கருத்தை பேசுகிறார், இதனால் தான் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும், சவூதி சம்பளத்திற்கு அடிமைப்பட்டவர்கள் என்றும் கூறுகிறோம், இதில் என்ன தவறை கண்டீர்கள்? அதே போல், இலங்கையில் சூனியம் குறித்து சமீபத்தில் பேசி, தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத்திப்பேன் என்று வந்து, பின்னர் அந்தர் பெல்டி அடித்து பீஜேவுடன் மட்டும் தான் விவாதிப்பேன், இல்லையென்றால், ஸ்ரீலங்க தவ்ஹீத் ஜமாஅத்திடம் மட்டும் தான் விவாதிப்பேன் (ஸ்ரீலங்க தவ்ஹீத் ஜமாஅத்திடம் தனியாக விவாதிக்க பயந்து பின்வாங்கி விட்டார்) என்ற ஒரு கேடி மௌலவி, ஒரு பெண்ணுடன் சல்லாப பேச்சில் ஈடுபட்டு, பின்னர் மாட்டிக்கொண்டு, இனிமேல் நான் தஃவா செய்ய அருகதையற்றவன் என்று அழுது புலம்பிய ஒருவனை பெண் பித்தன் என்கிறோம், அதை சம்பந்தப்பட்ட மௌலவியே மறுக்கவில்லை. இதில் என்ன தவறு? இலங்கையில் பலர் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வுகளை விமர்சனம் செய்யும் போது, அந்த பெண் பித்தன் பேச்சு தான் என்னையும் கவரும் என்று அடம்பிடித்தால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.
கேடுகெட்ட செயல் செய்பனை அறியனையில் ஏற்றி, அவனுக்கு சமூக அங்கீகாரம் தருவது எவ்வளது பெரிய அயோக்கியத்தனம்.
மார்க்க விஷயங்களில் நாம் தில்லுமுல்லு செய்கிறோமாம், பட்டியலை எடுத்தால் தாங்காதாம். பட்டியல் போடுங்கள் பார்ப்போம், பட்டியல் போட்டு, இது பற்றி விவாதிப்போமா என்று தைரியமாக சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களுக்கு திராணி இருந்தால் அனைத்தையும் பட்டியல் போட்டு, அது பற்றி விவாதிக்க முன்வாருங்கள், ஹாஜி என்று எழுதுவதற்கு நீங்கள் கொடுத்த விளக்கமே உங்களின் மார்க்க அறிவை அம்பலப்படுத்திவிட்டதே!
நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் கிறிஸ்தவர்களை வழிபட அனுமதித்தார்கள், நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்கவிட்டால் இந்த உலகத்தையே படைத்து இருக்க மாட்டான். ஹாஜி என்று எழுதுவது தவறல்ல. இறையருட்கவி என்று எழுதுவது தவறல்ல என்று உங்களின் வழிகேட்டு கொள்கைகளையும் நாம் பட்டியல் இட்டோமே, முறையான பதில் வந்ததா? சமாளிக்க தான் முடிந்தது சிலவற்றிக்கு, பலவற்றிக்கு வாயே திறக்க முடியலையே! இன்னும் வெளியிட வேண்டியவை பல உள்ளது.
பத்வா செய்வார்களாம்!
அடுத்து, ததஜவால் எத்தனை சக முஸ்லிம்கள் கேவலப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று புலம்புகிறார்கள். தாங்கள் கேவலப்பட்டு போனதை எல்லாரும் மற்றவர்கள் கேவலப்படுத்தப்பட்டதை போன்று எழுதுகிறார்கள். உங்களை நாங்கள் கேவலப்படுத்தவில்லை, பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி போட்டு, உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொண்டீர்கள். இவர்கள் பத்வா செய்வார்களாம். பொய்களை அள்ளிவிசிவிட்டு, அதனால் கேபலப்பட்டு போய்விட்டு, பத்வா செய்வோம் என்பது உங்களுக்கே காமெடியாக தெரியவில்லை.
கேட்ட கேள்வி அத்தனைக்கும் பதில் சொல்லுங்க பா, அப்பறம் பத்வா கொடுக்கலாம். பொய்க்கு மேல் பொய், 100 பொய்களை மறைக்க ஆயிரம் பொய் சொல்லும் உங்களுக்கு தான் கேவலத்திற்கு மேல் கேவலம் வருகிறது. கேட்ட கேள்விகளுக்க பதில் சொல்ல முடியாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அஜால் குஜால் செய்தாரகள் என்று புளுகும் உங்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும், இன்ஷா அல்லாஹ். இந்த உலகில் நீங்கள் கேவலப்பட்டதை போல மறுமையில் கேவலப்படாமல் இருக்க தவ்பா செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள். கேட்ட கேள்வி அத்தனைக்கும் ஆதாரத்துடன் பதிலை அடுக்குபவர்களுக்கு பதுவா கிடைக்குமா? கேட்ட கேள்விகளுக்கு பதில் தராமல் வசைபாடுபவர்களுக்கு பதுவா கிடைக்குமா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தங்களின் நேருக்கு நேர் கட்டுரையில் பல காமெடியான தலைப்புகளை போட்டுள்ளார்கள், உதாரணத்திற்கு, 'ததஜ அதிரை கிளையின் முரண்பாடுகள்' என்ற தலைப்பிட்டுள்ளார்கள், அதில் என்ன எழுதியுள்ளார்கள் என்று படித்து பார்த்தால், அவர்களின் முரண்பாடுகளை அடுக்குகிறார்கள்.
குறிப்பு:
திருடும் நிருபர்கள் நாம் இதுவரை எடுத்து வைத்த வாதங்களுக்கு பதில் தர முடியாமல் போய்யுள்ளதால், இவர்களின் விடுப்பட்ட சில உளறல்களை நாம் அலட்சியப்படுத்தி விட்டுவிடுகிறோம். நாம் இதுவரை எடுத்து வைத்த வாதங்களுக்கு இவர்கள் பதில் தந்தால், இவர்களின் மற்ற வாதங்களுக்கு பதில் தருவோம், இன்ஷா அல்லாஹ்.

- திருடும் நிருபர்களின் மிரட்டும் உளறல்களும் உண்மைகளும்! - போதும் எங்களை அடிக்காதீங்க! - பகுதி-1
- தவ்ஹீத் ஜமாஅத்தின் இடஒதுக்கீடு போராட்டமும் நிருபர்களின் உளரல்களும்! - காப்பி பேஸ்ட் செய்து வசமாக மாட்டிய அறிவாளிகள் (?)
- தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் - விடையில்லா கேள்விகளும் தொடரும் உளரல்களும்!
- காப்பி பேஸ்ட் குறித்து அற்புத விளக்கம் - திருட்டுக்கு புது விளக்கம்!
- சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?
- தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு - திருடும் நிருபர்களின் உளறல்களும் உண்மைகளும்!
- அதிமுகவிற்கு ஆதரவு ஏன்? விமர்சனங்களும் விளக்கங்களும்
- மீண்டும் காப்பி பேஸ்ட் - பிஜே புத்தகத்தில் இருந்து ஆட்டை போட்டு கட்டுரை உருவாக்கி கேவலப்படும் நிருபர்கள்!
3 கருத்துரைகள் :
இந்த மட நிருபர் கூட்டம் அவர்கள் கூறும் கருத்தில் உண்மை இருந்தால் தவ்ஹீத் ஜமாஅத்தை நேரடி விவாதத்திற்கு அழைக்கலாமே..?
அதிரை நிருபரில் உள்ள முக்கிய பங்களிப்பாளர் இப்படி சொல்லுகிறார்ரே இது உண்மை?
Thajudeen Mohamed தத ஜமாத்து தேர்தல்ல ஆதரிக்கும் கூட்டனி தோற்கும் கூட்டனியாகவே உள்ளது என்ற கடந்த கால வரலாறு ஊருல எல்லோருக்கும் தெரியும்.... பேசாம இவங்க யாரையும் ஆதரிக்காம இருப்பது தத ஜமாத்துக்கு நல்லது, இந்த தேர்தல்ல அடக்கி வாசித்தால் அடுத்த எலக்ஷன்ல தமிழ்நாட்டுல ம்ரியாதையா கொஞ்சம் தலை காட்டலாம்.. இத நான் சொல்லல... நேற்று ஒருத்தரு இப்படி முகநூலில் கருத்து சொல்லி இருந்தாரு.
அஷ்ரப்,
தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது இவர்கள் கொண்ட காழ்ப்புணர்வு இவர்களை எந்த அளவிற்கு வழிகேட்டில் தள்ளியுள்ளது என்பதற்கு நீங்கள் காட்டும் வரிகள் சாட்சி.
வெற்றி தோல்வி என்பது இறைவனிடம் இருந்து வருவது. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தால் அந்த கட்சி தோற்கும் என்று இவர்கள் சொல்லுவது, கிளி ஜோசியம் பார்பதற்கு ஒப்பானது. தேர்தல் நேரத்தில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியும். தேர்தலில் ஓட்டு பொறுக்கி, சட்டமன்றம் நாடாளமன்றம் சென்று பணம் பார்க்க நினைப்பவர்கள், வெற்றி எந்த பக்கம் தெரிகிறதே அந்த பக்கம் சாய்வார்கள். தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய கோரிக்கைகளை முன்வைத்து, தனது ஆதரவை வழங்கும். வெற்றி பெரும் அணியை கணித்து தனது ஆதரவை வழங்காது.
தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு அளித்த கட்சிகள் கடந்த காலங்களில் வெற்றியும் அடைந்துள்ளன, தோல்வியும் அடைந்துள்ளன. இது பற்றி நீங்கள் குறிப்பிடும் காப்பி அறிஞர் இங்கே வந்தால் இதை நிரூபிப்போம் (இங்கே வறுவதற்கு நீங்கள் குறிப்பிடும் சிங்கத்தற்கு தைரியம் இருக்காது). இந்த கருத்தை கூட தம்பி காப்பி போஸ்ட் தான் செய்துள்ளார். ஹாஜி என்று எழுதுவதற்கு அற்புத விளக்கம் தந்த இவரிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் முடிவுகள் தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது, தவ்ஹீத் ஜமாஅத் எந்த நிலை எடுக்க வேண்டும் என்று சொல்லுவதற்கு இது போன்ற சில்லரைகளுக்கு எந்த உரிமையும் இல்லை.
மம கட்சி பிஜேபிகாரனுடன் கைகோர்க்கும் போது இந்த தம்பி எங்கே போனார் என்று தெரியவில்லை.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.