Tuesday, April 29, 2014

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

நமது நாட்டில் எல்லா மக்களுக்கும் ஒரே சிவில் சட்டம்தான் உள்ளது. இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சிவில் எனும், உரிமை சம்மந்தப்பட்ட விவகாரங்களில் முஸ்லிம்கள் நீதிமன்றத்தை அணுகினால் அல்லது முஸ்லிமுக்கு எதிராக மற்றவர் நீதிமன்றத்தை அணுகினால் அப்போது இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்கப்படும்.

உதாரணமாக ஒரு 15 வயது சிறுவன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதாக வைத்துக் கொள்வோம். ஒருவன் விரும்பும் மதத்தைத் தழுவுவது சிவில் - உரிமை சம்மந்தப்பட்ட விஷயமாகும்.

இது குறித்து யாராவது நீதிமன்றத்தை அணுகினால் இஸ்லாமியச் சட்டப்படி 15 வயதில் ஒருவன் மேஜர் ஆகிறான் என்பதால் அந்தச் சட்டப்படி நீதிமன்றம் தீர்ப்பளிக்காது. பொதுவான சிவில் சட்டப்படி 18 வயதில்தான் மேஜர் ஆக முடியும் என்பதால் சிறுவன் இஸ்லாத்தை ஏற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அத்துடன் அந்தச் சிறுவனை இஸ்லாத்தில் இணைக்க துணை நின்றவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும்.

இஸ்லாத்தில் இதற்கு வேறு சிவில் சட்டம் இருந்தும் அதற்கு மாற்றமான பொது சிவில் சட்டத்தின்படிதான் நமது நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படும்.

ஒருவர் தனது இடத்தை வாடகைக்கு விடுகிறார். இன்னொருவர் வாடகைக்குப் பெறுகிறார், இது சிவில் பிரச்சனை.

இதற்கு இஸ்லாத்தில் தனிச் சட்டம் உள்ளது. இந்தியாவில் வேறு சட்டம் உள்ளது. வீட்டின் உரிமையாளருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இந்தியச் சட்டப்படி தான்  தீர்ப்பு  அளிக்கப்படுமே தவிர, இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது.

இரண்டு முஸ்லிம்கள் மத்தியில் இப்பிரச்சனை ஏற்பட்டாலும் இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் பொதுவான சட்டப்படி தான் இதில் தீர்ப்பளிக்கப்படும்.

ஒருவர் ஒரு பொருளை வாங்குகிறார். அல்லது விற்கிறார். இது சிவில் உரிமை சம்மந்தப்பட்ட விஷயம். இஸ்லாத்தில் வியாபாரத்துக்கு என தனியாக சிவில் சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டப்படி தீர்ப்பு அளிக்காமல் இந்திய சட்டப்படிதான் முஸ்லிமுக்கும் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

கடன் வாங்குதல், கொடுத்தல் ஆகியன சிவில் பிரச்சனையாகும். எந்தக் கடனுக்கும் வட்டி இல்லை என்பது இஸ்லாமியச் சிவில் சட்டம். ஆனால் முஸ்லிம்கள் சம்மப்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் வழக்கு, நீதிமன்றத்துக்குப் போனால் இஸ்லாத்துக்கு எதிரான இந்தியச் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்க முடியும். அப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

இப்படி ஆயிரமாயிரம் சிவில் உரிமை சம்மந்தப்பட வழக்குகளில் இந்து முஸ்லிம் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் பொதுவான சட்டம்தான் உள்ளது.

ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எல்லா விஷயத்திலும் தனியாகச் சட்டம் உள்ளது போல் சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றது.

திருமணம், ஆண் செய்யும் விவாக ரத்து, பெண் செய்யும் விவாக ரத்து, இறந்தவரின் சொத்துக்களை அவரது உறவினர்கள் பிரித்துக் கொள்ளுதல், வஃக்பு சொத்துக்களை நிர்வகித்தல் ஆகிய விஷயங்கள் தவிர மற்ற அனைத்திலும் பொதுவான சட்டம்தான் முஸ்லிம்களுக்கும் உள்ளது.

மேற்கண்ட விஷயங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் நடக்கக் கூடியதாகும். இதில் முஸ்லிம்கள் தமது மதச் சட்டப்படி நடந்து கொண்டால், பிற சமுதாய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நாட்டுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் தனது அக்காவின் மகளைத் திருமணம் செய்தால் அது செல்லாது என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நீதி மன்றமும் இப்படித்தான் கூறும்.

இதுபோல் திருமண விஷயத்தில் எல்லா மதத்துக்கும் தனியான சட்டங்கள் உள்ளன.

ஒரு இந்து, உடன் பிறந்த சகோதரியைத் திருமணம் செய்தால் அதை இந்து மதம் திருமணமாக ஏற்காது என்பதால் நீதி மன்றமும் ஏற்காது.

ஒருவர் இறந்துவிட்டால் அவரது சொத்தை அவரது உறவினர்கள் எந்த விகிதாச்சாரத்தில் பிரித்துக் கொள்வது என்பதிலும் மற்ற சமுதாயத்துக்குச் சம்மந்தம் இல்லை. வஃக்பு சொத்தை இஸ்லாம் கூறும் முறைப்படிதான் செலவிட வேண்டும் என்பதிலும் மற்ற மதத்துக்கோ, சமுதாயத்துக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை.

இப்படி இந்துக்களுக்கும் தனியாக சிவில் சட்டம் இந்தியாவில் உள்ளது.

இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு வருமான விலக்கு உண்டு. இது முஸ்லிம்களுக்கு இல்லை. உண்மையில் இது அநியாயம். முஸ்லிமுக்கு அதிக வரியும் இந்துக்களுக்கு குறைந்த வரியும் என்ற நிலை இருந்தும் இது போல் இந்துக்களுக்கு மட்டும் சலுகை உள்ளது.

தத்தெடுக்கும் குழந்தை சொந்தப் பிள்ளையாகக் கருதப்படுவான் என்று இந்துக்களுக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளது.

நிர்வாணமாகக் காட்சி தருவது சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு அனுமதியிருப்பதால் நிர்வாணச் சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர்.

குருவாள் என்ற பெயரில் கத்தியை எப்போதும் வைத்துக் கொள்ள சீக்கியர்களுக்கு நம் நாட்டுச் சட்டம் அனுமதி வழங்குகிறது. இதை மற்றவர்கள் செய்தால் சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.

இப்படி எல்லா மதத்தவர்களுக்கும் ஐந்தாறு விஷயங்களில் அவரவர் மதப்படி நடக்க அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.

இந்து முறைப்படி எல்லோரும் தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால், வஃக்பு சொத்தை ஆடல் பாடலுக்கும் கோவில் திருவிழாக்களுக்கும் செலவிட வேண்டும் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா? அது நியாயமாகுமா?

இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் சிவில் சட்டங்கள் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளன. ஆனால் கிரிமினல் சட்டங்கள்தான் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றன. அனைவருக்கும் ஒரே மாதிரியான கிரிமினல் சட்டம் வேண்டும் என்று கூறுவதுதான் நியாயமாகும். அதுதான் இந்த நாட்டுக்கு மிக அவசியம்.

ஒரு மாநிலத்தில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசாங்கமே மதுக் கடைகளை நடத்தும். இதனால் கட்டுக்கோப்பு குலைந்து விடாதா? மதுவைத் தடை செய்த மாநிலத்திலும் பெர்மிட் உள்ளவர்கள் மது குடிக்கத் தடை இல்லை. இது பாரபட்சம் இல்லையா?

நாட்டு மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படவில்லையே இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

விபச்சாரமும், சூதாட்டமும், நைட் கிளப்புகளும், ஆடை அவிழ்ப்பு நடனங்களும் ஒரு மாநிலத்தில் தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள். தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கூட, நட்சத்திர ஹோட்டல்களில் இவற்றுக்கு அனுமதியும் பிற இடங்களில் தடையும் உள்ளன.

நாட்டு மக்கள் அனைவரும் இப்போது சமமாக நடத்தப்படவில்லையே? இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?

சைக்கிளில் இருவர் செல்வது, இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் போன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள்வரை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான சட்டங்கள்; வித்தியாசமான நடைமுறைகள்.

நாட்டு மக்கள் அனைவரும் இப்போது சமமாக நடத்தப்படவில்லையே? இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?

ஒரே செயலை இருவர் செய்கின்றனர். ஆனால் ஒருவன் செய்தது குற்றம். மற்றவன் செய்தது குற்றம் இல்லை. இப்படி சட்டம் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? ஒரு நாடு என்று சொல்லிக் கொண்டு நாட்டு மக்களைப் பாரபட்சமாக நடத்துவது பற்றி இவர்களுக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லை.

மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பில் வித்தியாசங்கள் உள்ளதா இல்லையா?

தமிழ்நாட்டுக்காரன் ஒரு கார் வாங்கினால் அவன் அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரி கட்டுகிறான். ஆனால் அருகில் உள்ள பாண்டிச்சேரிக்காரன் அதே காரை வாங்கினால் அவன் பத்தாயிரம்தான் வரி கட்டுகிறான். ஒரே பொருளுக்கு குடிமக்களிடம் பாரபட்சமாக வரி விதிப்பதற்குத்தான் இவர்கள் வெட்கப்பட வேண்டும். இதை மாற்றுவதற்குத்தான் துடிக்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் வாங்கும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமாக  வரி போடப்படுகிறதே, இது நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக நடத்தவில்லை என்பதற்கு ஆதாரமாக இல்லையா?

ஒரு மாநிலத்தின் உணவுப் பொருட்களை இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லத் தடை!

நாட்டில் ஓடும் நதிகளின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தகராறு!

இவற்றால் எல்லாம் கட்டுக்கோப்பு குலையாதாம். இப்படி வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதாம். நான்கே நான்கு விஷயங்களில் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் கட்டளைப்படி நடந்தால் மட்டும் கட்டுக்கோப்பு குலைந்து விடுமாம். இப்படிக் கூறக் கூடியவர்கள்தான் அறிவுஜீவிகளாம்.

முஸ்லிம்கள் நான்கே நான்கு விஷயங்களில் தமது மார்க்கப்படி நடந்து கொண்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் எத்தனை? இதன் காரணமாகப் பிரிந்து போன மாநிலங்கள் எத்தனை? கூறுவார்களா?

மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்டபோது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத்தான் மாறின. இதுதான் உண்மை.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தம் மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

வெள்ளையர்களும், மொகலாய (முஸ்லிம்) மன்னர்களும் வழங்கிய தனி சிவில் சட்ட உரிமையால் ஒன்றுபட்ட இந்தியா, இவர்கள் கொண்டு வர எண்ணுகின்ற பொது சிவில் சட்டத்தினால் சிதறுண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். நாட்டில் குழப்பங்களும் கொந்தளிப்பும் ஏற்படும். இதைத்தான் சில விஷம சக்திகள் விரும்புகின்றன. இதற்காகவே பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகின்றன.

புத்த மதத்தவர்கள் பெரும் பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. புத்தமத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது. கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.

அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொது சிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.

அடுத்து அரசியல் சாசனத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு பாஜக இதை தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளது என்றால் பாஜகவுக்கு சட்ட அறிவு இல்லை என்று தான் பொருள்.

குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்' என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுகிறது.

அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.

இந்தியாவின் எல்லைகள்

குடியுரிமை

பொதுவானவை

கொள்கை விளக்கம்

அடிப்படைக் கடமைகள் 

 ஆகிய ஐந்து தலைப்புகள் அரசியல் சாசனத்தில் உள்ளன.

 கொள்கை விளக்கம் என்ற தலைப்பின் கீழ் 36முதல் 51முடிய உள்ள பிரிவுகள் கூறப்பட்டுள்ளன.

 44வது பிரிவும் இந்தத் தலைப்பின் கீழ் தான் வருகின்றது.

 கொள்கை விளக்கம் என்ற இந்தத் தலைப்பு ஏனைய தலைப்புகளிலிருந்து மாறுபட்டது. ஏனைய தலைப்புக்களில் கூறப்பட்டவைகளை அமல் செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடலாம். அமல் செய்யாதவர்கள் அரசியல் சாசனத்தை அவமதித்தவர்களாகக் கருதப்படலாம். ஆனால் கொள்கை விளக்கம்' என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை அரசு கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. செயல்படுத்துமாறு நீதிமன்றமும் கட்டளை ஏதும் வழங்க முடியாது. இது அரசுக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகள்தான். இது கொள்கை விளக்கம் என்ற தலைப்பிலேயே கூறப்பட்டுள்ளது.

'இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது'

என்று கொள்கை விளக்கத்தின் 37வது பிரிவு கூறுகின்றது.

விருப்பமான மதத்தில் குடிமக்கள் நம்பிக்கை கொள்ளலாம்; ஏற்கலாம்; பின்பற்றலாம்; பிரச்சாரம் செய்யலாம்

 என்று 25 (1) பிரிவு உரிமை வழங்கியுள்ளது.

எப்படித் திருமணம் செய்யலாம்? யாரைத்  திருமணம்  செய்யலாம்?  என்பன போன்ற விஷயங்களும், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற  சட்டங்களும் முஸ்லிம்களுக்கு  அவர்களின்  மார்க்கம் சம்பந்தப்பட்டவை   ஆகும். தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகள் எவ்வாறு மார்க்கம்  சம்பந்தப்பட்டதாக உள்ளனவோ அவ்வாறே இந்தக் காரியங்களும் மார்க்கம் சம்பந்தப்பட்டவையாகும். இதற்கான கட்டளையும் வழிகாட்டுதல்களும் முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளன.

இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட இந்தக் காரியங்களை இஸ்லாம் கூறக்கூடிய முறையில் நடைமுறைப் படுத்துவதற்குத் தடுக்கப்பட்டால், அவர்களின் மதச் சுதந்திரமும், வழிபாட்டுச் சுதந்திரமும் பறிக்கப்படுகின்றது என்பதே பொருள்.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த உரிமையை,  அவசியம் வழங்கியே தீர வேண்டிய இந்த உரிமையை,  மறுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. இதற்கு முரணாக அமைந்துள்ள கொள்கை விளக்கத்தைத்தான் விட்டுவிட வேண்டுமே தவிர, அடிப்படை உரிமையை மறுக்க முடியாது.

அரசியல் சாசனத்தில் கூறப்படும் கொள்கை விளக்கம் எனும் தலைப்பில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்தாததால் நாடு சீரழிந்து வருகின்றது. அந்தப் பிரிவுகள் பற்றியெல்லாம் பாஜகவுக்கு அக்கறை இல்லை.

இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள், குழந்தைகள் அனைவருக்கும் 14வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

(அரசியல் சாசனம் 45வது பிரிவு)

 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் பத்து ஆண்டுகளுக்குள் கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது. இன்று வரை கட்டாயக் கல்வி கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் இது கொள்கை விளக்கம் தலைப்பில் உள்ள விஷயங்கள். இதைச் செய்வது கட்டாயம் இல்லை என்று பதில் கூறுகிறார்கள். அதே தலைப்பில் தானே பொதுசிவில் சட்டம் பற்றிய ஆலோசனையும் உள்ளது?

உணவுச்   சத்துக்களை   மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தமது தலையாய கடமையாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாக, போதையூட்டும் மது வகைகளையும் உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருட்களையும் மருந்துக்காக அன்றி வேறு விதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

கொள்கை விளக்கம், 47வது பிரிவு

 இன்றுவரை இந்தக் கொள்கை பின்பற்றப்படவில்லை.

மக்களுக்குக் கேடு தரும் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றால் மதுவையும் தடுக்க வேண்டும். நச்சுப்புகை உள்ளதால் பட்டாசுகளையும் தடை செய்ய வேண்டும். ஆனால் நாடு முழுவதும் அரசே மதுபானத்தை விற்பனை செய்கிறது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பவர்களையும் விற்பவர்களையும் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டால் இது கொள்கை விளக்கம்தான்; கட்டாயம் இல்லை என்கிறார்கள்.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாது. பெரும்பாலான மக்கள், குறிப்பாகப் பெண்கள் முழுமையாக இதை வரவேற்பார்கள். இதைப் பற்றிப் பேசத் துப்பில்லாத பாஜக பொதுசிவில் சட்டம் பற்றி மட்டும் ஊளையிடுவது ஏன்?

தனது பொருளாதார சக்திக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும், வேலை இல்லாத போதும் வயது முதிர்ந்தோருக்கும் ஊனமுற்றோருக்கும் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோருக்கும் பொது நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு உற்ற துணை புரிவதற்கேற்ற வழிவகைகள் காணப்பட வேண்டும்.

அரசியல் சாசனம் 41வது பிரிவு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக்கூடாது வேலையில்லாதோருக்கும் முதியோருக்கும், நோயாளிக்கும், பொது நிதியிலிருந்து உதவ வேண்டும் என்றெல்லாம் இந்தப் பிரிவு கூறுகின்றது.

தேவையான, அவசியமான இந்தக் கொள்கைகள் யாவும் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள தீய விளைவுகளைக் கண்ட பின்பும் இதைச் செய்வோம் என்று சொல்ல பாஜகவுக்கு திராணி இல்லை.

இதுபோல் சொல்லப்பட்ட கொள்கை விளக்கத்தை அடிப்படையை உரிமையைப் பறிக்கும் கொள்கை விளக்கத்தை அமல்படுத்த துடிப்பது முஸ்லிம்களுடன் மோதிப்பார்க்கும் நோக்கம் தவிர வேறு இல்லை.

இஸ்லாமிய சிவில் சட்டம் கோருபவர்கள், இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கோர மறுப்பதேன்?  என்ற கேள்விக்கு வருவோம்.

திருமணம் உள்ளிட்ட அந்த ஐந்து விஷயங்கள் முஸ்லிம்கள் தமக்குள் செயல்படுத்தக் கூடியவை. அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை.

கிரிமினல் சட்டங்கள் ஆட்சியாளர்களால் நடைமுறைப் படுத்தப்படுபவை. சிவில் சட்டங்களிலும் பெரும்பாலானவை ஆட்சியாளர்களால் அமல் படுத்தப்படுபவை. மக்கள் இதைத் தாங்களாகவே அமல்படுத்த முடியாது. மக்கள் தமக்கிடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக் கூடிய,  மதம் சம்பந்தப்பட்ட, மிகச் சில விஷயங்களில் மட்டுமே தனியார் சிவில் சட்டம் உள்ளது.

இஸ்லாமிய ஆட்சி முறையில் கூட கிரிமினல் சட்டத்தை ஆட்சியாளர்கள்தாம் அமல்படுத்த முடியும். இந்தச் சாதாரண உண்மை கூட அறிவுஜீவிகளான இவர்களுக்கு விளங்கவில்லை.

கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய கடுமையான தண்டனைகளை உங்களுக்குள் நீங்களே அமல்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு, முஸ்லிம்களை நச்சரித்து வருவது போலவும், அச்சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி முஸ்லிம்கள் தயங்குவது போலவும் இத்தகைய கேள்விகளால் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

 இஸ்லாமியக் கிரிமினல் சட்டங்களை, முஸ்லிம்கள் கிரிமினல் விவகாரங்களில் அமல்படுத்திக் கொள்ள அரசு அனுமதித்தால் முஸ்லிம்கள் அதை மனப்பூர்வமாக ஏற்கத் தயாராக உள்ளனர். இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதில் முஸ்லிம்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு என்பதை அறிவுஜீவிகள் உணரட்டும்

ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தை உலகில் எந்த நாடும் குறிப்பிட்ட சமுதாயத்தின் கைகளில் கொடுக்காது. ஒருவன் கொலை செய்து விட்டால் அவனை ஜமாஅத்தில் இழுத்து வந்து தூக்கில் போட்டுக் கொள்ளுங்கள் என்று ஒரு நாடு கூறினால் அந்த ஜமாஅத் மீது அந்த நாட்டுக்கு ஆளுமை இல்லை என்று ஆகிவிடும். இதனால்தான் இந்தக் கிறுக்குத்தனமான சட்ட விரோதமான இக்கோரிக்கையை முஸ்லிம்கள் வைக்கவில்லை.

ஆனால் முஸ்லிம்கள் செய்யும் கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாமிய அடிப்படையில் தீர்ப்பு அளிப்போம் என்று அரசு முடிவு செய்தால், இஸ்லாம் கூறுகின்ற அடிப்படையில் முஸ்லிம்களைக் கொண்ட தனி நீதிமன்றம் அமைத்தால் நாட்டில் உள்ள ஒரு முஸ்லிமும் அதை மறுக்கமாட்டான்.

இந்த்த் தண்டனைகளால் முஸ்லிம்களில் கொலையாளிகளும் திருடர்களும் இல்லாமல் போனால் அல்லது பெருமளவில் குறைந்தால் அது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறோம்.

அறிவுஜீவிகள் என்போர், "இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் சிறுபான்மையினருக்குத் தனி சிவில் சட்டம் உண்டா?" என  சிறுபிள்ளைத்  தனமான கேள்வி கேட்கின்றனர்.

சவூதி அரேபியா முழுக்க முழுக்க முஸ்லிம்களை மட்டுமே குடிமக்களாகக் கொண்ட நாடு. இங்கு பிற சமய மக்கள் குடிமக்களாக இல்லை. இந்தியாவில் ஏறத்தாழ எட்டு சமயத்தவர்கள் குடிமக்களாகவும், மண்ணின் மைந்தர்களாகவும் வாழ்கின்றனர்.

நாட்டில்  குடிமக்களாக உள்ளவர்கள் மத அடிப்படையிலான தனி சிவில் சட்டத்தின்படி வாழ்வதற்கும், பிழைப்புக்காக அயல்நாடு சென்று அந்நாட்டுக் குடிமக்களாக ஆக முடியாதவர்கள் தனி சிவில் சட்டம் கோருவதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே அதை மாற்ற வேண்டும் என்பது இவர்களின் கடைசி அஸ்திரம்.

பெண்களுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது என்ற கூற்றில் உண்மை இருக்கின்றதா? என்றால் அதுவும் இல்லை.

ஒரு மனைவி இருக்கும்போது இன்னொரு மனைவியைத் திருமணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள்; இது கொடுமை என்கின்றனர்.

இன்னொருத்தியை மணந்து கொள்வது கொடுமை! ஆனால் வைப்பாட்டியாக வைத்துக் கொள்வது கொடுமை இல்லை. என்னே அறிவுஜீவித்தனம் இது!

திருமணம் செய்து மனைவியுடன் வாழ்பவர், விபச்சாரம் செய்யலாம்; சிவப்பு விளக்குப் பகுதியில் சல்லாபம் செய்யலாம்; எத்தனை பெண்களையும் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் எந்தத் தண்டனையும் கிடையாது. இதனாலெல்லாம் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள். இவர்களின் அறிவு எவ்வளவு விசாலமானது என்பது தெரிகின்றதல்லவா?

முதல் மனைவி இருக்கும்போது, இன்னொருத்தியை மனைவி என்று பிரகடனம் செய்வதுதான் தவறு! மற்றபடி மனைவியிடம் அனுபவிப்பது போன்ற இன்பத்தை மனைவி அல்லாத பெண்களிடம் அனுபவிக்கலாம். அது தவறில்லை என்பது தான் இங்குள்ள பொது சிவில் சட்டம்.

வைப்பாட்டிகளின் குழந்தைகளுக்கு சொத்துரிமை உள்ளதாக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது.

இப்போது நாம் கேட்கிறோம்.

எதற்காக இன்னொருத்தியைத் திருமணம் செய்கிறானோ அவை அனைத்தையும் இன்னொரு பெண்ணிடம் அனுபவிக்கலாம். வசதிகள் செய்து கொடுக்கலாம். மனைவி என்று மட்டும் சொல்லக் கூடாது. இதுதான் பொது சிவில் சட்டம்.

இதற்கும் பலதார மணத்திற்கும் அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? பொது சிவில் சட்டமும் (மனைவி என்று பிரகடனம் செய்யாமல்) வைப்பாட்டி வைத்துக் கொள்ளவும், விரும்பி விபச்சாரம் செய்யவும் அனுமதித்து முதல் மனைவியைத் துன்புறுத்தத்தான் செய்கிறது.

ஒரு பெண்ணுடைய அழகை, இளமையை அனுபவிக்கக்கூடியவன், அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்தை அளித்துவிட்டு அனுபவிக்கட்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுவது இவர்கள் ஆதரிக்கும் சட்டத்தை விட எந்த விதத்தில் குறைவானது? விளக்குவார்களா?

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதிதான். அதுவும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதியே! வைப்பாட்டிகளை வைத்துள்ள மற்ற சமுதாயத்தவரைவிட இரண்டு மனைவியரை மணந்த முஸ்லிம்களின் சதவிகிதம் மிகவும் குறைவானது என்பதையும் இவர்கள் உணர வேண்டும்.

கண்ட பெண்களுடன் கூடி விட்டுப் பெருநோய்க்கு ஆளாகி, மனைவிக்கு அந்த நோயைப் பரிசாகக் கொடுப்பதை விட, இன்னொருத்திக்குச் சட்டப் பூர்வமான மதிப்பு அளித்து, மணந்து கொள்வது எல்லா வகையிலும் சிறந்தது என்பதில் ஐயமில்லை.

நீதிமன்றத்தை அணுகாமல் முஸ்லிம் கணவன், தனது முதல் மனைவியை விவாகரத்துச் செய்யலாம் என்பது கொடுமையில்லையா? இதனால் பெண்களுக்குப் பாதிப்பில்லையா? என்பதும் அறிவுஜீவிகளின் மற்றொரு அபத்தக் கேள்வி!

நிச்சயமாகக் கொடுமை இல்லை. பெண்களுக்கு இதை விடப் பாதுகாப்பான சட்டம் வேறு இருக்க முடியாது என்பதுதான் உண்மை.

நீதிமன்றத்தை அணுகித்தான் விவாகரத்துப் பெற முடியும் என்ற சட்டத்திற்கு உட்பட்ட பிற சமுதாயத்தில்தான் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

நீதிமன்றத்தில்தான் விவாகரத்துப் பெற வேண்டும் என்றால் விவாகரத்துப் பெறுவதற்காக மனைவியின் மேல் கணவன் பகிரங்கமாக அவதூறு கூறுகின்றான். அல்லது தீயிட்டுக் கொளுத்திவிட்டு, ஸ்டவ் வெடித்து விட்டது என்று கூறுகின்றான். இதற்குக் காரணம் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள கடுமைதான்.

எந்த முஸ்லிம் கணவனும், தன் மனைவியை தீயிட்டுக் கொளுத்தியதாக வரலாறு இல்லை. காரணம், மனைவியைப் பிடிக்காவிட்டால் எளிதாக அவன் விவாகரத்துச் செய்ய முடியும் என்பதுதான்.

மேலும் மனைவிக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவளும் கணவனை விவாகரத்துச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. இந்த அறிவுஜீவிகள் எதிர்க்கக் கூடிய முஸ்லிம் தனியார் சட்டத்திலேயே இது கூறப்பட்டுள்ளது.

விவாகரத்துச் செய்யும் உரிமையை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இஸ்லாம் வழங்கி இருப்பதாலும், விவாகரத்துச் செய்த பின் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதித்து ஆர்வமூட்டுவதாலும், விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருந்தால் ஏற்படும் தீய விளைவுகள், இஸ்லாமிய சட்டத்தில் இல்லாததாலும் இதில் பெண்களுக்கு எந்தக் கொடுமையும் இல்லை. மாறாக அவர்களுக்கு இதில் பாதுகாப்பே இருக்கின்றது என்பதுதான் உண்மை.

விவாகரத்துச் செய்தபின் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை என்பது கொடுமையில்லையா? என்பதும் அறிவுஜீவிகளின் கேள்வி!

விவாகரத்துச் செய்யப்பட்டவள் மறுமணம் செய்யும்வரை அல்லது மரணிக்கும்வரை ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தில் திருத்தம் கோருகிறார்கள்.

இப்படி ஒரு சட்டம் இருந்தால் எந்தப் பெண்ணும் பெரும்பாலும் மறுமணம் செய்ய மாட்டாள். மாறாகக் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டு, மற்ற ஆண்களுடன் சல்லாபம் நடத்தத் துணிவாள். ஜீவனாம்சம் இல்லை என்றால்தான் தனது வாழ்க்கையின் பாதுகாப்புக்காகப் பொருத்தமான துணையைத் தேடிக் கொள்வாள். இரண்டில் எது சரியானது என்று சிந்திக்க வேண்டாமா?

பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வந்தால் முஸ்லிம்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு வருவோம்.

பொதுவாக சிவில் விஷயங்களில் அரசு நேரடியாகத் தலையிட முடியாது. ஒருவர் வாங்கிய கடனைக் கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றமோ அரசோ அதில் தலையிட முடியாது. கடன் கொடுத்தவன் வழக்கு தொடுத்தால் மட்டுமே தலையிட முடியும்.

இவர்கள் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எதைக் கொண்டு வந்தாலும் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டத்தின் படி நடப்போம், நீதிமன்றத்தை நாட மாட்டோம் என்று முடிவு செய்தால் அந்தச் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதைப் படித்துப் படித்து சந்தோசப்பட்டுக் கொள்ளலாமே தவிர, நம்மை அது ஒன்றும் செய்யாது என்பது தான் இதற்கான பதில்.

இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு சிறந்தது என்பதை முஸ்லிம் சமுதாயத்துக்கு விளக்கி நீதிமன்றத்தை அணுகாத நிலையை ஏற்படுத்துவோம். முஸ்லிம் சமுதாயம் அதிகத் தெளிவுடனும் மார்க்கப் பற்றுடனும் திகழ்ந்து அதை முறியடிக்கும். (இறைவன் நாடினால்)

பொதுசிவில் சட்டம் என்ற பெயரில், முஸ்லிம்களாக வாழும் உரிமை பறிக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொங்கி எழுவார்கள். உலகத்துச் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பார்கள்.

ஆனால் முஸ்லிம்களாக வாழ்வதற்கே தடை என்றால் இஸ்லாத்தை விட உயிர் பெரிதில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டால் எந்தச் சக்தியாலும் அவர்களைத் தடுக்க முடியாது என்று ஆட்சியாளர்களை எச்சரித்து வைக்கிறோம்.

Monday, April 28, 2014

ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில்

அதிரை தவ்ஹீத் பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்டும் கட்டிலை ஒருவர் இலவசமாக தந்துள்ளார்கள் எனவே ஜனாஸா குளிப்பாட்டுவதற்கு கட்டில் தேவைப்படுபவர்கள் தவ்ஹீத் பள்ளி நிர்வாகிகளிடம் தொடர்புக்கொண்டு கட்டிலை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

தொடர்புக்கு  9566104755


Sunday, April 27, 2014

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 27) - கொடுத்ததை திரும்பக் கேட்டல்

இஸ்லாம் கூறும் பொருளியல் (தொடர் 27) - கொடுத்ததை திரும்பக் கேட்டல்

இந்த உரையின் முழுமையான தொகுப்பை கேட்க இங்கே செல்லவும்.

Saturday, April 26, 2014

ஜும்ஆ தொழுகைக்கு வருபவர்களுக்கு மோர் வினியோகம்

கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயிலின் காரணமாக அதிரை தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழுகைக்கு வரும் ஆண்கள் பெண்களுக்கு மோர் வினியோகம் செய்து வருகிறோம் இது தொழுகைக்கு வருபவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு வாரத்திற்கு மோர் தயாரிப்பதற்கு ரூ 800 செலவாகிறது விருப்பம் உள்ளனர்கள் கிளை நிர்வாகிகனை தொடர்பு கொண்டு தங்களுடைய பங்களிப்பை செலுத்தலாம் 
  தொடர்புக்கு  : 8015379211, 9629115317, 9944824510

(மதினாவில்) எங்களிடையே பெண்மனி ஒருவர் இருந்தார் அவர் தமது தோட்டத்தின் வாய்கால் வரப்பில் தண்டு கிரை செடியை பயிர் செய்வார் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்த கிரையின் தண்டுகளை பிடிங்கிவந்து ஒரு பாத்திரத்தில் போடுவார் அதில் ஒரு கையளவு வார் கோதுமையை போட்டு கடைவார் அந்த கிரை தண்டுதான் எங்கள் உணவில் மாமிசம் போன்று அமையும்  நாங்கள் ஜும்ஆ தொழுகை தொழுதுவிட்டு திரும்பிவந்து அவருக்கு சலாம் சொல்லுவோம் அந்த உணவை எங்களுக்கு பரிமாறுவார் அதை நாங்கள் ருசித்து சாப்பிடுவோம் அவருடை அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்துக்கொண்டு இருப்போம்  புஹாரி 938





.

ஜூம்ஆ தொழுகையின் சட்டங்கள்

ஜூம்ஆ தொழுகையின் சட்டங்கள்

ஜுமுஆத் தொழுகை:

வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும்.

நேரம்:

ஜுமுஆத் தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது.

சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 904

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது. 

அறிவிப்பவர்: ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரீ 4168, முஸ்லிம் 1424

ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 940

ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) 
நூல்கள்: புகாரீ 939, முஸ்லிம் 1422

ஜுமுஆக்குக் குளிப்பது:

ஜுமுஆத் தொழுகைக்காக வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது கட்டாயக் கடமையாகும். தலைக்கு எண்ணெய் மற்றும் நறுமணமும் பூசிக் கொண்டு பள்ளிக்கு வரவேண்டும்.

'உங்களில் எவரும் ஜுமுஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 894

'ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 895, முஸ்லிம் 1397

'ஜுமுஆ நாளில் குளித்து விட்டு, இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு, தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து, (அங்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல் தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜுமுஆவிற்கும் அடுத்த ஜுமுஆவிற்கும் இடையிலான (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பாரிஸீ (ரலி)
நூல்: புகாரீ 880

குத்பாவிற்கு முன்பே வருதல்:

ஜும்ஆவில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பாகப் பள்ளிக்கு வர வேண்டும்.

'ஜுமுஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும்,அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 929, முஸ்லிம் 1416

வியாபாரத்தை விட்டு விடுதல்:

ஜுமுஆ நாள் அன்று தொழுகை நேரத்தில் வியாபாரம் செய்வது கூடாது. பாங்கு சொல்லப்பட்டு விட்டால் உடனடியாகத் தொழுகைக்கு விரைய வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. 

அல்குர்ஆன் 62:9

ஜுமுஆவில் பெண்களும் கலந்து கொள்ளுதல்:

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளார்கள்.

காஃப் வல்குர்ஆனில் மஜீத் என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442

ஜுமுஆத் தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்:

ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள். 

1. பருவ வயதை அடையாதவர்கள். 
2. பெண்கள்
3. நோயாளி 
4. பயணி

'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்: அபூதாவூத் 901

ஜுமுஆ பாங்கு:

ஐவேளைத் தொழுகைக்கு உள்ளது போல் ஜுமுஆ தொழுகைக்கும் ஒரு பாங்கு சொல்லப்பட வேண்டும். அந்த பாங்கு இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரீ 916

உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கைப் போன்றது அல்ல! மக்கள் அதிகமானதால் உஸ்மான் (ரலி) அவர்கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்லச் சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள ஒரு வீடாகும் (இப்னுமாஜா 1125)

உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பைக் கூட பள்ளிவாசலில் செய்யவில்லை. எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியானதாகும்.

ஒரு வேளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டாவது பாங்கைத் தான் ஏற்படுத்தினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான் முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களது நடைமுறைக்கு முரணாக யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது. எனவே ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வதே நபிவழியாகும்.

குத்பாவின் போது பேசக் கூடாது:

ஜுமுஆத் தொழுகையில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவரது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பேசக் கூடாது.

'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு' என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 934, முஸ்லிம் 1404

ஜுமுஆவுடைய சுன்னத்:

ஜுமுஆத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இமாம் பயான் செய்து கொண்டிருந்தாலும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுது விட வேண்டும்.

ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் 'நீர் தொழுது விட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். '(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: புகாரீ 931, முஸ்லிம் 1449

முஸ்லிம் அறிவிப்பில் கூடுதலாக 'அந்த இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழு!' என்று இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆவிற்குப் பின்னர் (வீட்டிற்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1462

'உங்களில் ஒருவர் ஜுமுஆத் தொழுதால் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1457

இந்த கட்டுரை சகோதரர் எம்.ஐ சுலைமான் அவர்கள் எழுதிய 'நபிவழியில் தொழுகை சட்டங்கள்' என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த நூலை முழுமையாக படிக்க இங்கே செல்லவும்.

திருடும் நிருபர்களின் மிரட்டும் உளறல்களும் உண்மைகளும்! - போதும் எங்களை அடிக்காதீங்க! - பகுதி-2

திருடும் நிருபர்களின் மிரட்டும் உளறல்களும் உண்மைகளும்! - போதும் எங்களை அடிக்காதீங்க! - பகுதி-2

பொய்களை அள்ளிவிடுவோம், பதில் தந்தால் திட்டி தீர்போம்! ஓட்டப்பந்தயத்தில் எங்களை யாரும் மிஞ்ச முடியாது.திருடும் நிருபர்களின் அற்புத கொள்கை
திருடும் நிருபர்களின் மிரட்டல் உளறல்கள் பலவற்றிக்கு நமது முதல் பதிவில் பதிலடி கொடுத்து இருந்தோம். வழக்கம் போல இதற்கு பதில் சொல்ல முடியாமல் கேவலப்பட்டுள்ளார்கள். 'தவ்ஹீகான்' என்ற பெயரில் மீண்டும் தவ்ஹீதை கிண்டல் செய்து, கேட்ட கேள்விக்கு பதில் தர முடியாமல் 'திருடன் தான் திருடிவிட்டு மற்றவனை திருடன்' என்பான் என்ற கதையை ஆதாரமாக காட்டி தங்களின் திருட்டை மறைக்க பார்க்கிறார்கள். உளறி உளறி இவர்களின் அத்தனை கொள்கைகளையும் முரண்பாடுகளையும் அம்பலப்படுத்த உதவி வருகிறார்கள். இவர்கள் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் கொடுத்து இவர்களின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவோம். இன்ஷா அல்லாஹ். தாம் செய்யாதவற்றிக்காக பெருமைப்படுபவர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனை உண்டு என்ற திருக்குர்ஆனின் போதனையை (அல்குர்ஆன் 3:188) எடுத்துக்காட்டி, இவர்களின் திருட்டை அம்பலப்படுத்தி இருக்கும் போது, அந்த குர்ஆன் வசனத்திற்கு பதில் தராமல், இஸ்லாத்தில் எந்த வகை திருட்டு கூடும் என்று இந்த மார்க்க காப்பி விற்பனர்கள் பத்வா கொடுத்துள்ளார்கள்.

ஏண்டா இப்படி உளறித்தள்ளினோம் என்று இவர்களே வருந்தும் அளவுக்கு இவர்களுக்கு தொடர் கேவலங்கள் வரும். நீங்கள் என்ன எழுதினாலும், நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்றவர்கள், நமது பதிலடி இவர்களுக்கு ஏற்படுத்திய கேவலத்தை தாங்க முடியாமல், 'பக்தர்கள்' என்றெல்லாம் தம்பி ஒருவர் திட்டுகிறார். அதிரை ததஜவினர் எங்களை காப்பாற்ற மாட்டார்களா என்றும் புலம்புகிறார் அந்த தம்பி. அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தினர் அஜால் குஜால் செய்தார்கள் என்று ஒரு ஒருவர் திட்டுகிறார். இந்த கருத்தை எழுதியவருக்கும் அதை வெளியிட்டு சந்தோஷம் அடையும் திருடும் நிருபர்களுக்கும் மானம் சூடு சுரணை இருந்தால் இதை நிரூபிக்க முன்வர வேண்டும் (இது போன்ற எதுவும் அவர்களுக்கு கிடையாது என்று முன்னர் நிரூபித்துள்ளார்கள்). 'இறைவனுக்கு பயந்து கருத்தை எழுதுங்கள்' என்று கருத்து பகுதியில் போட்டு வைத்து இருக்கும் திருடும் நிருபர்கள், இதை நீக்க முன்வரவில்லை. இவர்கள் புதிதாக உளறி உள்ள அவதூறுகளுக்கு தேவைப்படும் போது பதில் தரப்படும்.

இவர்கள் 'நேருக்கு நேர்(?)' என்ற பெயரில் உளறிய பொய்கள் பலவற்றை நாம் நமது முந்தைய பதிலில் அம்பலப்படுத்தினோம். அதில் உள்ள மேலும் மற்ற உளறல்களுக்கும் அவதூறுகளுக்கும் இந்த ஆக்கத்தில் பதில் அளிக்கிறோம். மிச்சம் உள்ள உளறல்களுக்கு அடுத்த பகுதியில் பதில் வரும், இன்ஷா அல்லாஹ்.

பிஜே மீது அவதூறு:

இவர்கள் இட ஒதுக்கீடு குறித்து உளறிய முதல் காப்பி போஸ்ட் ஆக்கத்தில், தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது பல கற்பனையான சந்தேகங்களை எழுப்பியிருந்தார்கள், அதன் அடிப்படையில் நாம் பதில் தரும் போது 'அங்கும் இங்கும் ஆட்டையை போட்டு அதையே புத்தகமாக பணம் பார்க்கத்தான் இவ்வாறு செய்கிறார்களோ' என்று நாமும் சந்தேகத்தை கிளப்பலாமா? என்று கேள்வி கேட்டுயிருந்தோம். இதற்கு பதில் சொல்ல புகுந்த 'திருடும் நிருபர் பதிப்பகம்', 'புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியிலில் சேர்ந்தது யார்?' என்று சகோதரர் பிஜேவை பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தார்கள். இவர்கள் பிஜேவை பெயர் குறிப்பிடவில்லையென்றாலும், இவர்கள் பிஜேவை தான் குறிப்பிடுகிறார்கள் என்று அவர்களின் வரிகளை படிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள். பிஜே மீது இவ்வாறு அவதூறு சொன்னீர்களே, அதை நிரூபிக்க திராணியிருக்கா என்று நாம் கேட்டு இரண்டு மாதங்கள் ஆக போகிறது. இது பற்றி வாய்திறக்க முடியாமல் இருந்த இவர்கள், என்னடா இவர்கள் பிஜேவின் புத்தகத்தில் இருந்து திருடவும் செய்கிறார்கள், பிஜே வழிகேடர் என்றும் சொல்லுகிறார்கள், பிஜே புத்தகம் போட்டு பணக்காரர் ஆகிவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள் என்று அவர்களுக்குள்ளேயே குழப்பம் எற்பட்டு, மக்கள் மத்தியில் இவர்களின் வண்டவாளம் கிழிய தொடங்கியவுடன், அதற்கு பதில் தருகிறோம் என்று மீண்டும் உளறி மாட்டியுள்ளார்கள்.

அதாவது, 'புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியிலில் பிஜே இடம்பெற்றுவிட்டார்' என்று எங்கே சொன்னோம் என்று கேட்டுவிட்டு, நாங்கள் சொன்னது பொதுவான விமர்சனம், புத்தகம் வெளியிடுபவர்கள் அனைவரையும் குறிக்கும் பொதுவான விமர்சனம் (எல்லாரும் அண்ணண்மார்கள் மாதிரி இருப்பார்கள் என்று நினைப்பு) என்று பச்சை பொய்யை சொல்லுகிறார்கள். இவர்கள் எந்த அளவிற்கு அல்லாஹ்வை சாட்சியாக வைத்து பொய் சொல்லுவார்கள் என்பதற்கு இவர்களின் இந்த பதில் ஆதாரம்.

அவர்களின் பதிலை முதலில் படியுங்கள்:
நாங்கள் பிஜேவை பெயர் குறிப்பிட்டு சொன்னோமா? என்று ஈனத்தனமாக வினவி, அதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக வைத்து மிரட்டுவதை பாருங்கள்.
இவர்கள் பிஜே நூல் போட்டு பணக்காரர் பட்டியிலில் இடம்பெற்றுவிட்டார் என்று பெயர் குறிப்பிடாமல் எழுதிய விஷயத்தை கீழே உள்ள படத்தில் படியுங்கள்:
பிஜே புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் என்று இவர்கள் புழுகிய புளுகல்.
புத்தகம் போடுபவர்கள் அதை விற்பனை செய்யலாம், இவ்வாறு செய்யா விட்டால் ஒரு புத்தகமும் வெளியிடப்படாது என்பது உண்மை, ஆனால், அடுத்தவனின் ஆய்வையும் செய்தியையும் திருடி அதை புத்தகமாக ஆக்கி வெளியிடுவது தானே திருட்டு பதிப்பகம்?
நாங்கள் பிஜேவை புத்தகம் போட்டு பணக்காரர் ஆகிவிட்டார் என்று சொல்லவில்லை என்று பச்சையாக புளுகிறார்கள் என்பதை மேலே உள்ள படத்தில் இவர்கள் எழுதிய செய்திகளை படித்தாலே, இவர்கள் பிஜேவை தான் சொல்லுகிறார்கள் என்று விளங்கும் அளவுக்கு இவர்கள் தெளிவாக எழுதியுள்ளார்கள் என்பதை அறியலாம். மக்கள் மறந்திருப்பார்கள், எனவே, விட்டு அடிப்போம் என்று 'நாங்கள் பிஜேவை தான் சொன்னோமா?' என்று கேட்கிறார்கள். இவர்கள் ஒரு வேளை பிஜேவின் பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தால் கூட, பிஜே என்றால் இவர் மட்டும் தான் பிஜேயா என்று கூட கேட்பார்கள். இவர்கள் பிஜேவை தான் பெயர் சொல்லாமல் சொல்லியுள்ளார்கள் என்பதற்கு இவர்களின் எழுத்தில் பல ஆதாரம் உள்ளது. முதலில் நாம் இவர்கள் மீது கேள்வி எழுப்பும் போது தான் இவ்வாறு இவர்கள் கேட்டார்கள். நாம் ஒருவரை நோக்கி குற்றம்சாட்டினால், அவர்கள் நம்மை நோக்கி தான் குற்றம்சாட்டுவார்கள் என்பது மூளை கொஞ்சம் உள்ளவனுக்கு கூட தெரியும். 

இவர்கள் பிஜேவை புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் என்று சொல்ல ஆரம்பிக்கும் அதே பத்தியில் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தையும் பிஜேவையும் தான் சொல்லுகிறார்கள் என்பதற்கு அவர்களின் எழுத்திலேயே ஆதாரம் உள்ளது. அவர்களின் வரிகளை காணுங்கள்:
உண்மையான தாவாப் பணிக்காக அர்ப்பணிக்கப் பட்ட ஒரு பணியை களங்கப் படுத்தும் அந்த நண்பர்களின் முதுகுக்குப் பின்னால் பார்த்தால் “முதுகு அரித்தால் சொரிவது மார்க்கத்தில் கூடுமா? “ என்று மூவாயிரம் நூல்கள் போட்டு அதற்கும் அதை வெளியிடும் இயக்கத்திற்கு சேர்த்து விலை வைத்து இருப்பதும் “தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாமா? விளக்கெண்ணெய் தேய்க்கலாமா – ஆராய்ச்சி” என்ற தலைப்பில் ஐந்தாயிரம் சிடிகளும் அடுத்த மாநாட்டில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் காட்சிகளையும் காணலாம். தேவை இருக்கிறதோ இல்லையோ பெயர் போட்டால் விற்பனையாகும் என்று உப்புக்குப் பெறாத தலைப்புகளில் எல்லாம் நூல் வெளியிட்டு பணக்காரர்களின் பட்டியிலில் இடம் பிடித்திருப்பவர்கள் யார் என்று சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
நாம் சிகப்பு எழுத்துக்களில் அடிக்கோடிட்டு காட்டியுள்ளவற்றை பாருங்கள். புத்தகம் போட்டு பிஜே பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார் என்று பொய் கூறும் பத்தியின் ஆரம்பித்திலேயே இவர்கள் 'அந்த நண்பர்களின்' என்று நமது கேள்விக்கு தான் பதில் சொல்லுகிறார்கள் என்பதை காட்டுகிறார்கள். பொதுவான விமர்சனம் என்றால், 'தாவாப் பணிக்காக' என்று ஆரம்பிப்பது ஏன்? புத்தகம் போடும் அனைவரும் தஃவா செய்கிறார்களா? மார்க்கத்தில் கூடுமா?' என்று சொல்லியது ஏன்? புத்தகம் போடும் அனைவருக்கும் மார்க்கம் உண்டா? புத்தகம் வெளியிடுபவர்கள் எல்லாம் முஸ்லிம்களா? நூல்கள் வெளியிடும் இயக்கத்திற்கும் விலை வைத்து என்று எந்த இயக்கத்தை குறிப்பிடுகிறீர்கள்? புத்தகம் வெளியிடும் அனைவருக்கும் இயக்கம் உண்டே? மாநாட்டில் விற்பனை என்று யாரை சொல்லுகிறீர்கள்? புத்தகம் வெளியிடும் அனைவரும் மாநாடு நடத்துகிறார்களே?

இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தையும் பிஜேவையும் தான் சொல்லுகிறார்கள் என்பதற்கு இவர்களின் எழுத்துக்களே ஆதாரமாக உள்ளது. வழக்கம் போல திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக இந்த விஷயத்திலும் இவர்கள் மாட்டியுள்ளார்கள். 

இவ்வளவு தெளிவாக பிஜேவை குறிப்பிட்டு விட்டு, நாம் அவதூறு சொல்லுகிறாம் என்று சொல்லுவதற்கு இவர்களுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும். இப்படி அயோக்கியத்தனம் செய்துவிட்டு, அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று நம்மிடம் சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனம். நீங்கள் யாரை குறிப்பிட்டு எழுதினீர்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும், மறுமையில் இதற்கு எதிரான நாங்கள் உங்களிடம் கேள்வி எழுப்புவோம், இன்ஷா அல்லாஹ். இங்கே தப்பித்தாலும் நீங்கள் மறுமையில் மாட்டுவீர்கள்.

ஹாஜி நிருபர்களும், இறையருள் நிருபர்களும்:

அடுத்து, திருடும் நிருபர்கள் தவ்ஹீத்வாதிகள் என்று தவ்ஹீத் போர்வையில் இருக்கும் வேடதாரிகள். இவர்களுக்கும் தவ்ஹீத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இவர்களுக்கு புகழ் கிடைக்கும் என்றால் எந்த வேடம் வேண்டுமானலும் போடுவார்கள் என்று சொல்லி, அதற்கு ஆதாரமாக, 'அதிரையில் இணைவைப்பையும் தரீக்கா கொள்கையும் பெண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, பெண்களை வழிகெடுபவர்களில் முன்னிலையில் இருக்கும் தாஹா அவர்களை ஆகா ஓஹா என்று புகழ்ந்து எழுதியதையும், தாஹா அவர்களின் பெயருக்கு முன்னால் 'ஹாஜி' என்று எழுதி தங்களின் உண்மை தவ்ஹீதை வெளிப்படுத்தியதையும் எடுத்துக்காட்டியிருந்தோம். அது போல, 'இறையருட்கவிமணி' என்று கவிஞரை புகழ்ந்து எழுதியதையும் எடுத்துக்காட்டி, 'இறை அருளை பெறும் கவிஞர்' என்ற பொருள் வருகிறதே, அந்த கவிஞருக்கு 'இறையருள்' வருவதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டிருந்தோம். இதற்கும் வழக்கம் போல ஏன் கடுதாசி போடவில்லை என்று கேட்டுள்ளார்கள்.

ஹாஜி என்று இவர்கள் எழுதியதற்கு பதில் சொல்லுகிறாம் என்ற பெயரில் பல காமெடிகளை செய்துள்ளார்கள். அதில், முதல் காமெடி இவர்கள் ஹாஜி என்று சேர்ப்பதை இவர்கள் சுன்னத் என்றோ, பர்ளு என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ செய்யவில்லையாம். நல்ல வேளை இது போன்ற திறமைசாலிகள் இருப்பது ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்றவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது, தெரிந்து இருந்தால் தேடி வந்து தனது அணியில் சேர்த்து விடுவார். ஒருவர் புகைப்பிடிக்கிறார், அதை பார்த்த ஒருவர், புகை பிடிக்காதீர்கள், இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்கிறார். உடனே, புகைப்பிடிக்கும் நபர், நான் இதை சுன்னத் என்றோ, பர்ளு என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ நினைத்து செய்யவில்லை என்று சொன்னால், அதை கேட்டும் நாம் எந்த அளவுக்கு சிரிப்போம். மௌலூது ஓதுபவன் நான் இதை சுன்னத் என்றோ, பர்ளு என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ செய்யலில்லை என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாமா? திருடும் நிருபர்களின் கொள்கை இது தான். மார்க்கம் சம்பந்தப்பட்ட அல்லது உலகம் சம்பந்தப்பட்ட செயல்களில் மார்க்கத்தின் நேரடியான தடையோ அல்லது மறைமுகமான தடையோ இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும் அல்லவா? 

ஹஜ் என்பது மார்க்க கடமை. ஹஜ் முடிந்தவுடன் 'ஹாஜி', 'அல்ஹாஜ்' என்று தனது பெயருக்கு முன் சேர்ப்பது பித்அத் (மார்க்கத்தில் புதுமையான காரியம்). இது போன்ற செயலை நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தரவில்லை. நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத மார்க்கம் சம்பந்தப்பட்ட செயல் பித்அத். 

பித்அத் செய்பவர்களுக்கு நரகம் தான் செல்லுமிடம் என்பதை கீழ்காணும் நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ (1560)

மேலும், ஹாஜி என்ற எழுதுவது நான் ஹஜ் செய்துள்ளேன் என்று பெருமையடிப்பதற்காக தான். இபாதத்தை புகழுக்காகவும், விளம்பரத்திற்க்காகவும் பயன்படுத்துபவர்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எந்த நன்மையும் பெற்றுத்தராது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளது. புகழ் விரும்பிகளுக்கு கடுமையான தண்டனையும் உண்டு என்று பல ஆதாரங்கள் உள்ளது.

அடுத்து, இவர்கள் ஹாஜி என்று எழுதியதற்கு காரணம், ஊரில் தாஹா அவர்களை 'தாஹா' என்றால் தெரியாதாம்,ஹாஜி தாஹா என்றால் தான் தெரியுமாம். நாம் அறிந்தவரை யாரும் அவரை ஹாஜி தாஹா என்று அழைக்கவில்லை. 'கவிஞர் தாஹா' என்று தான் அழைப்பார்கள். புகைப்படம் போட்டு அறிமுகம் செய்து இருக்கும் போது 'ஹாஜி' என்று சேர்த்து எழுதினால் தான் தெரியுமே? சமாளிக்க வேண்டும் என்று எண்ணி இவ்வாறு கேவலப்படுவது ஏன்? நாங்கள் தவறு செய்யவில்லை என்று காட்ட நிருபர்கள், கவிஞர் தாஹா என்று அறியப்பட்டவரை 'ஹாஜி தாஹா' என்று அறிப்பட்டதாக பச்சை பொய் கூறுகிறார்கள். இவ்வாறு 'ஹாஜி தாஹா' என்று அழைப்பட்டதினால் தான் நாங்கள் 'ஹாஜி' என்று சேர்த்தோம் என்று இவர்கள் சொல்லுவதிலும் பொய்யர்கள் என்பதற்கு ஆதாரம், இவர்களின் தளத்திலேயே உள்ளது.

தாஹா அவர்கள் குறித்து ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிய இவர்கள் 'ஹாஜி' என்று சேர்த்து எழுத மறந்துவிட்டார்கள். இதை ஒரு சகோதரர், சுட்டிக்காட்டி, 'தாஹா' அவர்கள் ஹஜ்ஜை முடித்துள்ளார்கள், தாஹா அவர்களின் அனைத்து பட்டங்களையும் சேர்த்த நீங்கள், ஹாஜி என்பதை மட்டும் சேர்க்க மறந்துவிட்டீர்களே என்று கேட்டவுடன், உடனே இவர்கள் 'ஹாஜி' என்று சேர்த்து தங்களின் தவ்ஹீத் பிடிப்பை வெளிக்காட்டினார்கள். அதற்க்கான ஆதாரத்தை கீழே பாருங்கள்:

அவர்கள் தளத்திலேயே மிச்சம் உள்ள ஆதாரம். எப்படி உளறினாலும் சிக்கி கொள்ளுகிறார்கள்... பாவம்....
இவர்கள் 'ஹாஜி' என்பது அவ்வாறு அழைக்கப்பட்டார் என்று பச்சையாக பொய்க்கூறியவர்கள், இவர்கள் தளத்தில் பல பேருக்கு 'அல்ஹாஜ்' என்று சேர்த்து எழுதியுள்ளார்கள். யாரையும் அழைக்கும் போது அல்ஹாஜ் என்று பெயர் கூறி அழைப்பது இல்லை. மேடைகளில் புகழ வேண்டும் என்று இவ்வாறு அழைப்பது நடைமுறையில் உள்ளது. தவ்ஹீத் வேடமிட்டு திரிந்த இந்த நிருபர் கும்பலுக்கு, 'ஹாஜி' என்று ஹஜ் செய்தவருக்கு போட்டு எழுதக்கூடாது என்ற அடிப்படை கூட தெரியவில்லை. மேலும், ஹாஜி என்று எழுதுவது எல்லாம் உப்பு சப்பில்லாத விஷயமாம், அதுவெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லையாம், ஆம், கொள்கையே இல்லை எனும் போது இதுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை தான். 'ஸஹாபக்களின் வாழ்வும் நமது வாழ்வும்' என்று தொடர் போடும் தம்பி, எந்த ஸஹாபியாவது 'ஹாஜி' என்று எழுதியுள்ளார்களா? என்று எடுத்துக்காட்டினால் என்ன? வண்டி வண்டியாக பொய்யை அள்ளிவிட்டுவிட்டு, அடுத்த வாரம் பொய் கூறக்கூடாது என் ஹதீஸ்கள் வெளியிடும் இவர்களின் உண்மை முகத்தை மக்கள் அறியாமல் இல்லை.

ஹாஜி என்று எழுதுவது கூடாது என்று இவர்கள் சொன்னாலும், இவர்கள் கூடாரத்தில் உள்ள பலர் சும்மா இருக்க மாட்டார்கள். 

'ஹாஜி' என்று எழுதுவது குறித்து அந்த நிருபர் கொடுத்த அற்புத விளக்கம்:

இறையருள் கவிஞருக்கு வந்ததை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டோம் பதில் இல்லை. இறையருள் என்பது மறைவான விஷயம். இது யாருக்கு கிடைக்கிறது, யாருக்கு கிடைக்கவில்லை என்பதை நம்மால் கண்டிபிடிக்க முடியாது. இதற்கு ஆதாரமாக திருமறையின் ஒரு ஆதாரமே போதுமானது.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. 
(அல்குர்ஆன் 6:59)

திருமறையின் இந்த வசனத்தையும் தாண்டி கவிஞருக்கு வந்த இறையருளை கண்டுபிடிக்க நிருபர்களுக்கு உதவிய பூத கண்ணாடியை எல்லோருக்கும் காட்டினால் நலம்.

இவ்வாறு ஹாஜி என்று எழுவதையும், இறையருள்கவிமணி என்று எழுதுவதையும் நாம் சுட்டிக்காட்டியது இயக்க மாயையாம். இது போன்ற மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்களை இவர்கள் செய்வதை நாம் விமர்சனம் செய்வது இது இவர்களுக்கு இயக்க மாயையாக தெரிகிறது. பிஜேவின் ஆய்வை திருடி அதை தங்கள் ஆக்கமாக காட்டுவது இயக்க மாயை இல்லையா? நீங்கள் திண்ணுவது இயக்க மலம் இல்லையா? ஹாஜி என்று எழுதுவது கூடாது என்று தம்பிமார்களுக்கு தர்பியா நடத்திய ஒழுக்க சீலர் கோவை அய்யுப் சொல்லுகிறார் என்பது ரகசியம். தர்பியா நடத்திய உத்தமன் கூட ஜாக் இயக்கத்தில் தான் இருக்கிறார். இயக்கம் கூடாது என்றால் ஒரு இயக்கத்தில் துணைத்தலைவராக இருக்கும் மன்மதனை வைத்து தர்பியா நடத்தியது ஏன்?

ஹாஜி என்று எழுதுவதும், இறையருளை பெறுபவர் என்று ஒருவரை புகழ்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்களை அடுக்க வேண்டிய தேவையில்லை. இது தவறு என்று நேற்று தவ்ஹீதை பற்றி விளங்கியவருக்கு கூட தெரியும். சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூட ஹாஜி என்று எழுதுவது தவறு என்று அதை தவிர்த்து வரும் நேரத்தில், இந்த தவ்ஹீத் நடிகர்களுக்கு இது தெரியாதது அல்லாஹ் இவர்களை எந்த அளவிற்கு வழிகேட்டில் தள்ளியுள்ளான் என்பதற்கு சான்று.

நிருபர்களின் சூனிய கொள்கை:

அடுத்து, ஒரு யூதர் சொன்னதை வைத்து, நபி (ஸல்) அவர்களையும் ஸஹாபாக்களும் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார்கள் என்று சொல்லியதாக சொல்லுகிறார் அந்த நிருபர். இந்த சம்பவம் பற்றி ஹதீஸ் கீழே உள்ளது. நபி (ஸல்) அவர்கள் யூதரின் கூற்றில் உண்மை இருந்ததின் காரணத்தினால் தான், நபி தோழர்களுக்கு இவ்வாறு சொல்ல வேண்டாம் என்று பணித்தார்கள். ஹதீஸில் இந்த சம்பவம் தெளிவாக இருக்கும் போது, நாம் பொய் சொல்லி விட்டோம் என்று புளுகுகிறார் நிருபர்.

ஒரு யூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்தார். 'கஅபாவின் மீது சத்தியமாக' என்று கூறி நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறீர்கள். உங்கள் தோழர்கள் உங்களை நோக்கிப் பேசும்போது 'அல்லாஹ் நாடியதும் நீங்கள் நாடியதும் நடந்துவிட்டது' என்று கூறுகின்றனர். இதன் மூலம் நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறீர்கள் என்று கூறினார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இனி சத்தியம் செய்யும்போது 'கஅபாவின் மீது ஆணையாக என்று சொல்லாமல் கஅபாவின் இறைவனின் மீது ஆணையாக' என்று சொல்லுமாறு கட்டளை இட்டார்கள். 'அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்துவிட்டது' எனக் கூறாமல் 'அல்லாஹ் நாடியது நடந்து விட்டது. பின்னர் நீங்கள் நாடினீர்கள்' என்று கூறுங்கள் என்றும் கட்டளையிட்டார்கள். 


நூல்கள்: நஸாயீ, பைஹகீ

அடுத்தாக, ஹாஜி என்று எழுதுவது தவறு என்று கூட விளங்காத அந்த நிருபர், தவ்ஹீத் ஜமாஅத்தின் சில மார்க்க ஆய்வைகளை விமர்சனம் செய்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வுகளை விமர்சனம் செய்பவர்கள் அது பற்றி விவாதிக்க தைரியமும் திரணியும் வேண்டும். இப்படி திராணியற்றவர்களை என்ன செய்வது? ஒருவர் குற்றம்சாட்டுகிறார், அது பற்றி பகிரங்கமாக பேசுவோம் வா என்றால், ஒடுகிறார், இவரை என்ன செய்வது?

சூனியம் குறித்து 1400 ஆண்டுகளாக யாரும் சொல்லாத கருத்தை தவ்ஹீத் ஜமாஅத் சொல்லிவிட்டதாம், தமிழில் கூட சுயமாக எழுத தெரியாமல், காப்பி அடிக்கும் இவர்கள் 1400 ஆண்டுகளில் வாழ்ந்த அத்துனை அறிஞர்களின் ஆய்வையும் கரைத்து குடித்து விட்டு, நிருபர்கள் சொல்லுகிறார்கள் (சிரிக்காதீங்க).

சூனியம் என்பது கற்பனை என்றும், அப்படி ஒன்று இல்லை என்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். நிருபர்கள் பின்பற்றும் ஷாஃபி மத்ஹபின் அறிஞர்கள் கூட சூனியம் இல்லை என்று கூறியுள்ளார்கள். யாரு சொன்னாலும், சொல்லாவிட்டாலும், நபி (ஸல்) அவர்கள் சூனியத்தை இருக்கிறது என்று நம்புபவன் சொர்க்கம் சொல்ல மாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுதர்தா (ரலி)
நூல் : அஹ்மது (26212)

ஹஜ்ஜத்துல்விதாவில் நபி (ஸல்) அவர்கள் மார்க்கம் பூரணமாகிவிட்டது என்ற சொன்னதில் இந்த ஹதீஸூம் அடங்குமல்லவா?

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை நான் ஏற்கவில்லை என்று ஒரு சூனிய நிருபர் கூட நமது தளத்தில் வாக்குமூலம் தந்துள்ளார்.

மேலும், குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டையும் விமர்சனம் செய்கிறார்கள். ஆதாரம் வேண்டுமா என்றெல்லாம் பயந்து கொண்டே தைரியமாக கேட்கிறார்கள். அறிவிப்பாளர் அடிப்படையில் ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படாது என்று நிருப அறிஞர்கள் சொல்லுகிறார்கள். இவர்களுக்கு எந்த சுய அறிவும் கிடையாது என்று நிருபிப்பதற்காக ஒரு ஹதீசை முன்வைக்கிறோம், இது குர்ஆனோடு முரண்படவில்லை என்று அறிவாளி நிருபர்கள் நிருபிக்க வேண்டும்.

குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2876)

குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் என்று இந்த ஹதீஸ் சொல்லுகிறது. இந்த ஹதீஸ் சொல்லும்படி எந்த குர்ஆன் வசனமும் இல்லை. குர்ஆனை பாதுகாக்கப்படும் என்பதை கீழ்காணும் வசனம் தெளிவாக சொல்லுகிறது.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் (15 : 9)

இந்த ஹதீஸ் குர்ஆனுடன் மோதுகிறது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் அடிப்படையில் ஸஹீஹானது. இது குர்ஆனுடன் மோதவில்லை என்பதை அறிவாளி நிருபர்கள் நிரூபிக்க வேண்டும்.

ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொன்னால், அது நமது ஆய்வில் கோளாறாம். இதற்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், குர்ஆன் முரண்படுவதாக சொல்லப்படும் செய்திகளை மறுக்கவில்லையாம். எத்தனை அறிஞர்கள் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை மறுத்துள்ளார்கள் என்று காட்டடுமா? இது பற்றி விவாதிக்க தயாரா? எதையாவது அள்ளிவிடுவேன், அதற்கு பதில் தந்தால், திட்டி தீர்பேன் என்ற கேடு கெட்ட தன்மையுடன் அலைவதற்கு வெட்கமாக இல்லையா?

ஸஹாபாக்களை கண்ணியக்குறைவாக பேசிவிட்டதாகவும் அள்ளிவிடுகிறார் நிருபர். ஸஹாபாக்களை திட்டுவது கூடாது என்றும், ஸஹாபாக்களின் தியாகத்தோடு ஒப்பிடும் போது நாம் அவர்களின் கால் தூசிக்கு சமமாக மாட்டோம் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. ஸஹாபாக்கள் மனிதர்கள் என்ற முறையில் செய்த தவறுகளை எடுத்துக்காட்டுவது, ஸஹாபாக்களை திட்டுவதாக ஆகாது, ஸஹாபாக்கள் மனிதர்கள் என்ற முறையில் செய்த தவறுகள் மன்னிக்கப்படும் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுகிறது. ஸஹாபாக்களை திட்டுபவர்கள் வழிகேடர்கள் என்று தெளிவாக சொல்லுகிறோம். ஸஹாபாக்கள் மனிதர்கள் என்ற முறையில் செய்த தவறுகளை வரலாற்று உரையில் எடுத்துக்காட்டியதை தான் ஸஹாபாக்களை திட்டிவிட்டதாக சொல்லுகிறார்கள். நாம் ஏதோ இல்லாத விஷயத்தை சொல்லிவிட்டதை போல துடிக்கிறார்கள். நாம் சொல்லிய விஷயங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் உள்ளவை தான். அதற்கு ஆதாரமாக புகாரியில் இடம்பெற்றுள்ள ஹதீசை காணுங்கள்.

முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்:

அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்:

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்ளோது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆம்விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்" என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்" என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 4447

இப்போது இந்த ஹதீசை தேடி பிடித்து அதை தனது நூலில பதிந்த புகாரி அவர்கள் ஸஹாபாக்களை திட்டுகிறார் என்று சொல்லுவோமா? ஸஹாபாக்களை நாம் திட்டியதாக சொல்லப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில் தரப்பட்டுள்ளது.

இது பற்றி இந்திய மற்றும் இலங்கை உலமாக்கள் விளக்கம் தருகிறார்களாம், இவர்களை தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்ய அழைத்து வர நிருபர் கும்பலுக்கு திராணி உண்டா? இப்படிப்பட்ட ஆலிம்களை நாம் பெண் பித்தர்கள் என்று சொல்லுகிறோமாம். பெண் பித்தர்களை பெண் பித்தர்கள் என்று தானே சொல்ல முடியும். எல்லாரையும் சொல்ல மாட்டோம். கேடித்தனம் செய்து கொண்டு, ஆலிம் வேஷம் போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றும் கேடுகேட்டவர்களை அவ்வாறு தானே சொல்ல முடியும். கேடிகளை வைத்து தர்பியா நடத்துபவர்கள் இதை குறை காணுவதில் ஆச்சரியம் இல்லை. கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று நாம் சிலரை விமர்சனம் செய்வதற்கு காரணம், சவூதியில் போடப்படும் சம்பளத்திற்கு ஏற்ப தங்களின் கொள்கைகளை மாற்றி வருகிறார்கள். உதாரணத்திற்கு, தவ்ஹீத் ஜமாஅத் ஹதீஸ்களின் அறிவிப்பாளருடன் ஹதீஸின் கருத்தும் சரியாக (குர்ஆனுக்கு முரண்படாத வகையில்) இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது, இதை இலங்கை இஸ்மாயில் ஸலஃபி என்பவர் ஏற்கவில்லை, இவ்வாறு இவர் சொல்லிக்கொண்டு இருக்கும் நேரத்தில் மதீனா பல்கலைகழகத்தில் இருந்து இதே கருத்தில் ஒரு ஃபத்வா வெளியிடப்படுகிறது, இதன் பிறகு, அதே இஸ்மாயில் ஸலஃபி இந்த கருத்தை பேசுகிறார், இதனால் தான் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும், சவூதி சம்பளத்திற்கு அடிமைப்பட்டவர்கள் என்றும் கூறுகிறோம், இதில் என்ன தவறை கண்டீர்கள்? அதே போல், இலங்கையில் சூனியம் குறித்து சமீபத்தில் பேசி, தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாத்திப்பேன் என்று வந்து, பின்னர் அந்தர் பெல்டி அடித்து பீஜேவுடன் மட்டும் தான் விவாதிப்பேன், இல்லையென்றால், ஸ்ரீலங்க தவ்ஹீத் ஜமாஅத்திடம் மட்டும் தான் விவாதிப்பேன் (ஸ்ரீலங்க தவ்ஹீத் ஜமாஅத்திடம் தனியாக விவாதிக்க பயந்து பின்வாங்கி விட்டார்) என்ற ஒரு கேடி மௌலவி, ஒரு பெண்ணுடன் சல்லாப பேச்சில் ஈடுபட்டு, பின்னர் மாட்டிக்கொண்டு, இனிமேல் நான் தஃவா செய்ய அருகதையற்றவன் என்று அழுது புலம்பிய ஒருவனை பெண் பித்தன் என்கிறோம், அதை சம்பந்தப்பட்ட மௌலவியே மறுக்கவில்லை. இதில் என்ன தவறு? இலங்கையில் பலர் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வுகளை விமர்சனம் செய்யும் போது, அந்த பெண் பித்தன் பேச்சு தான் என்னையும் கவரும் என்று அடம்பிடித்தால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

கேடுகெட்ட செயல் செய்பனை அறியனையில் ஏற்றி, அவனுக்கு சமூக அங்கீகாரம் தருவது எவ்வளது பெரிய அயோக்கியத்தனம்.

மார்க்க விஷயங்களில் நாம் தில்லுமுல்லு செய்கிறோமாம், பட்டியலை எடுத்தால் தாங்காதாம். பட்டியல் போடுங்கள் பார்ப்போம், பட்டியல் போட்டு, இது பற்றி விவாதிப்போமா என்று தைரியமாக சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களுக்கு திராணி இருந்தால் அனைத்தையும் பட்டியல் போட்டு, அது பற்றி விவாதிக்க முன்வாருங்கள், ஹாஜி என்று எழுதுவதற்கு நீங்கள் கொடுத்த விளக்கமே உங்களின் மார்க்க அறிவை அம்பலப்படுத்திவிட்டதே!

நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் கிறிஸ்தவர்களை வழிபட அனுமதித்தார்கள், நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைக்கவிட்டால் இந்த உலகத்தையே படைத்து இருக்க மாட்டான். ஹாஜி என்று எழுதுவது தவறல்ல. இறையருட்கவி என்று எழுதுவது தவறல்ல என்று உங்களின் வழிகேட்டு கொள்கைகளையும் நாம் பட்டியல் இட்டோமே, முறையான பதில் வந்ததா? சமாளிக்க தான் முடிந்தது சிலவற்றிக்கு, பலவற்றிக்கு வாயே திறக்க முடியலையே! இன்னும் வெளியிட வேண்டியவை பல உள்ளது.

பத்வா செய்வார்களாம்!

அடுத்து, ததஜவால் எத்தனை சக முஸ்லிம்கள் கேவலப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று புலம்புகிறார்கள். தாங்கள் கேவலப்பட்டு போனதை எல்லாரும் மற்றவர்கள் கேவலப்படுத்தப்பட்டதை போன்று எழுதுகிறார்கள். உங்களை நாங்கள் கேவலப்படுத்தவில்லை, பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி போட்டு, உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொண்டீர்கள். இவர்கள் பத்வா செய்வார்களாம். பொய்களை அள்ளிவிசிவிட்டு, அதனால் கேபலப்பட்டு போய்விட்டு, பத்வா செய்வோம் என்பது உங்களுக்கே காமெடியாக தெரியவில்லை.

கேட்ட கேள்வி அத்தனைக்கும் பதில் சொல்லுங்க பா, அப்பறம் பத்வா கொடுக்கலாம். பொய்க்கு மேல் பொய், 100 பொய்களை மறைக்க ஆயிரம் பொய் சொல்லும் உங்களுக்கு தான் கேவலத்திற்கு மேல் கேவலம் வருகிறது. கேட்ட கேள்விகளுக்க பதில் சொல்ல முடியாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அஜால் குஜால் செய்தாரகள் என்று புளுகும் உங்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும், இன்ஷா அல்லாஹ். இந்த உலகில் நீங்கள் கேவலப்பட்டதை போல மறுமையில் கேவலப்படாமல் இருக்க தவ்பா செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள். கேட்ட கேள்வி அத்தனைக்கும் ஆதாரத்துடன் பதிலை அடுக்குபவர்களுக்கு பதுவா கிடைக்குமா? கேட்ட கேள்விகளுக்கு பதில் தராமல் வசைபாடுபவர்களுக்கு பதுவா கிடைக்குமா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தங்களின் நேருக்கு நேர் கட்டுரையில் பல காமெடியான தலைப்புகளை போட்டுள்ளார்கள், உதாரணத்திற்கு, 'ததஜ அதிரை கிளையின் முரண்பாடுகள்' என்ற தலைப்பிட்டுள்ளார்கள், அதில் என்ன எழுதியுள்ளார்கள் என்று படித்து பார்த்தால், அவர்களின் முரண்பாடுகளை அடுக்குகிறார்கள்.

குறிப்பு: 
திருடும் நிருபர்கள் நாம் இதுவரை எடுத்து வைத்த வாதங்களுக்கு பதில் தர முடியாமல் போய்யுள்ளதால், இவர்களின் விடுப்பட்ட சில உளறல்களை நாம் அலட்சியப்படுத்தி  விட்டுவிடுகிறோம். நாம் இதுவரை எடுத்து வைத்த வாதங்களுக்கு இவர்கள் பதில் தந்தால், இவர்களின் மற்ற வாதங்களுக்கு பதில் தருவோம், இன்ஷா அல்லாஹ்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விட்ட தமுமுக ரவுடிகள்!

தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விட்ட தமுமுக ரவுடிகள்!

கொலை மிரட்டல் விட்ட தமுமுக ரவுடிகள்!



காவல்துறை முன்னிலையில் மன்னிப்பு கேட்ட தமுமுகவினரை பெரும்தன்மையாக மன்னித்த தவ்ஹீத் ஜமாஅத்!

Thursday, April 24, 2014

TNTJ ஷார்ஜா அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.. 

ஷார்ஜா அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 18.04.2014 வெள்ளிக் கிழமைன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு 2.30 மணியளவில் ஷார்ஜா சிட்டி TNTJ மர்கஸில் நடைப்பெற்றது.  அதில், கடந்த மாத தீர்மானத்தின் செயல்பாடுகள்பற்றி பேசப்பட்டன.  எதிர்வரும் ஜூன் மாத கட்டுரை போட்டி சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டன.  மேலும், கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.

அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

அதிரை TNTJ துபாய் கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 25/04/14 வெள்ளிகிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு இரவு 7.15 மணியளவில் துபாய் TNTJ மர்கசில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்


CONTACT NO
SHAHUL 0505063755 NAZEER 0559081550 NINA CMP LINE 0553907189 
ஜசாக்கல்லாஹ்

Wednesday, April 23, 2014

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம்

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சார்ந்த சகோதரர் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் மகன் சுலைமான் மணமகனுக்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் நேற்று  22-04-2013  மாலை 5 மணியளவில் மணமகன் 10 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்து நபிவழி திருமணம் நடைபெற்றது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாமிய திருமணங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.





Tuesday, April 22, 2014

திமுகவிற்கு வாக்குகேட்டு தவ்ஹீத் ஜமாஅத் தீவிர பிரச்சாரம்!

கடந்த மூன்று நாட்களாக தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக திமுகவிற்கு ஆதரவாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இந்த தேர்தலில் பீஜேபீ கூட்டணி மற்றும் அதன் கள்ள கூட்டணி அதிமுகவையும் புறக்கணிக்க சொல்லியும் மத்தியில் மத சார்பற்ற ஆட்சி அமைவதற்கு திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று நோடீஸ் வினியோகித்து பிரச்சாரம்  செய்துவருகிறது அதன் தொடர்ச்சியாக நேற்று கடைத்தெரு தக்வா பள்ளி அருகில் தவ்ஹீத் ஜமாஅத் திமுகவிற்கு ஆதரவு ஏன்? என்ற தலைப்பில் தெரு முனை பிரச்சாரமும் நடைபெற்றது இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழத்தினார்கள் இந்த பிரச்சாரத்தில் 100க்கு அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள்