பி.ஜேவுடன் தான் விவாதிப்பேன் என்பது சரியா?
கேள்வி:
விவாதம் என்றால் ஓட்டம் எடுத்துக் ண்டிருந்தவர்களில் சிலர் தற்போது விவாத அறைகூவல் விடுவதும், நெருங்கிச் சென்றால் பீ.ஜே.யுடன் தான் விவாதிப்பேன்; வேறு எவரிடமும் விவாதிக்க மாட்டேன் என்றும் கூறுவதும் அதிகரித்து வருகின்றனர். இது சரியா? இதற்குக் காரணம் என்ன?
பதில்:
பொதுவாக ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் உள்ள விவகாரம் பற்றிப் பேசுவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட இரு மனிதர்கள் தான் விவாதிக்க வேண்டும் என்று கோருவது ஏற்கத்தக்கது. நியாயமானது. ஒரு மனிதன் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கும் போது நான் வரமாட்டேன் என் சார்பில் வேறு ஒருவரை அனுப்புகிறேன் என்று அவன் கூறினால் அதில் நியாயம் இல்லை என்று சொல்லலாம்.
ஆனால் ஒரு இயக்கம் கொண்டுள்ள கொள்கை, கோட்பாடுகள் பற்றி விவாதிப்பது என்றால் இன்னார் தான் வரவேண்டும் எனக் கூறுவது மடமையாகும். தனக்குத்தானே முரண்படுவதாகும்.
உதாரணமாக பிஜேயுடன் மட்டும்தான் விவாதிப்பேன். கொள்கையில் அவருடன் இணைந்துள்ள எந்த அறிஞருடனும் விவாதிக்க மாட்டேன் என்று ஒருவர் கூறினால் அந்தக் கூற்றுக்குள்ளேயே அவருக்கான மறுப்பும் அடங்கியுள்ளது.
பீ.ஜே. அல்லாத எந்த அறிஞரும் எனக்குச் சமமானவர்கள் அல்லர். என்னை விட தரத்தில் தாழ்ந்தவர்கள். அவர்களுடன் விவாதிப்பது என் தகுதிக்கு குறைவானது என்பதுதான் இதன் அர்த்தம்.
பீ.ஜே.என்ற ஒரு மனிதனைத் தவிர மற்ற எவருக்கும் அறிவு இல்லை என்பதுதான் இதன் உள்ளர்த்தம்.
உன் தரத்தைவிட மேலே உள்ளவருடன் தான் நீ விவாதிப்பாயானால் பீ.ஜேயும் அவரது தரத்தைவிட மேலே உள்ளவரிடம் தான் விவாதிப்பார் என்று எடக்கு மடக்காக நாமும் பதில் சொல்ல முடியும். ஆனால் நாம் அவ்வாறு சொல்வதில்லை.
ஒரு கொள்கை சரியா தவறா என்பதுதான் பிரச்சனை. எங்கள் கொள்கையை நிலை நாட்ட யார் தகுதியானவர்கள் என்ற அக்கறை எங்களுக்குத்தான் இருக்கும். விவாதத்தில் தோல்வி ஏற்பட்டால் பீ.ஜே. உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த அனைவரையும் தான் பாதிக்கும். எனவே உங்களுடன் உங்களைவிட மேலானவர்களை அல்லது சமமானவர்களைத் தான் விவாதிக்க ஏற்பாடு செய்வோம். உங்கள் கர்வத்துக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என்று நாம் பதில் சொல்கிறொம்.
பீஜேயைத் தவிர மற்றவர்கள் எனக்கு நிகர் இல்லை என்று கருதுவோரின் கர்வத்தையும் ஆணவத்தையும் நாம் அங்கீகரிக்க முடியாது. சில விஷயங்களில் பீஜேயை விடச் சிறப்பாக விவாதிப்பவர்கள் இந்த ஜமாஅத்தில் உள்ளனர். ஒருவன் கிறுக்குத்தனமாக கேட்கிறான் என்பதற்காக மரியாதைக்குரிய எங்கள் அறிஞர்கள் தகுதியற்றவர்கள் என்று ஒப்புக் கொள்ள முடியாது.
பீ.ஜே.என்ற நபர் பலரால் அறியப்பட்டவராக இருக்கிறார். தினசரி ஒரு ஊரிலே இருந்து ஒருவன் புறப்பட்டு என்னுடன் விவாதிக்கத் தயாரா என்று கேட்டால் தினசரி ஒருவருடன் பீஜே விவாதித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
அவர் கேட்பதன் நோக்கம் விவாதம் அல்ல. பி.ஜேயுடன் விவாதித்தேன் என்று பெருமையடிக்கவே இப்படி செய்கிறார் என்பதால் அந்த மடமைக்கு அடிபணியக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். ஆய்வும், அறிவும் இல்லாத பலரும் இப்படி இறங்குவதற்கு இதுதான் காரணம்.
விவாதத்துக்கு யார் அழைத்தாலும் அவருடன் விவாதிக்க யாரை அனுப்புவது என்று முடிவு செய்யும் அதிகாரம் ஜமாஅத்துக்குத் தான் உள்ளது. இவ்வாறு அறைகூவல் விடுவோரின் தகுதி, தரம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு அறிமுகம் இல்லாத அறிஞரை நாம் அனுப்பினால் தங்களுக்கு இதனால் பெயர் கிடைக்காது என்பதற்காக பின்வாங்கி விடுகின்றனர்.
ஒரு விவாதத்தில் பீஜே பங்கு பெற்றுத் தான் ஆக வேண்டும் என்று நிர்வாகக் குழு கருதி அந்த முடிவை எடுத்த போதெல்லாம் நான் விவாதத்தில் பங்கேற்றுள்ளேன்.
நாங்களே இதை சிறப்பாக விவாதிப்போம். பீஜேயைக் கண்மூடி நாங்கள் பின்பற்றுகிறோம் என்ற பொய்ப்பிரச்சாரத்தை இவ்விவாதத்தின் மூலம் உடைத்துக் காட்டும் அளவுக்கு நாங்கள் தெளிவில் இருக்கிறோம் என்று மற்ற அறிஞர்கள் உறுதிபடக் கூறினால் அதை நிர்வாகமும் சரி கண்டால் பீ.ஜே. இல்லாமல் விவாதம் நடக்கும்.
குறிப்பிட்ட இன்னார் கலந்து கொண்டால் தான் சரியாக இருக்கும் என்று நிர்வாகம் கருதி பீஜேயை அல்லது குறிப்பிட்ட ஒருவரை நியமித்தால் அப்போது அதை ஏற்றுக் கொள்வோம்.
ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதைப் பத்து பேர் கூட ஏற்கவில்லை என்றால் அவருடன் விவாதிக்க மூன்றாம் நிலையில் உள்ளவர்களைத் தான் ஜமாஅத் ஏற்பாடு செய்யும்.
ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லி நாடு முழுவதும் அது பரவி மக்கள் மததியிலே சந்தேகம் விளையும் அளவிற்கு இருந்தால் பெரிய விளம்பரத்துடனும் முழு பலத்துடனும் ஜமாஅத் விவாதத்தைச் சந்திக்கும்.
இதுபோல் உளறக்கூடியவர்களைச் சந்திக்க நேர்ந்தால் பி.ஜே கிடக்கிறார் விடுங்கள். நானும் அந்தக் கருத்தில்தான் இருக்கிறேன். என்னுடன் விவாதிக்கத் தயாரா என்று கேளுங்கள். இவர்கள் விவாத அறைகூவலின் லட்சணம் தெரிந்துவிடும்.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்பதுதான் தனி மனிதனும் இயக்கமும் அரசாங்கமும் ஏற்று செயல்படுத்தி வரும் கோட்பாடாகும்.
இந்தக் காரியத்தை இந்தக் காரணத்தினால் இவன செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து முடிவு செய்து அந்தக் காரியத்தை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவு உள்ளவர்கள் இதுபோல் கிறுக்குத் தனமாக கோரிக்கை வைக்க மாட்டார்கள்.
நன்றி: ஆன்லைன் பிஜே
2 கருத்துரைகள் :
அஸ்ஸலாமு அழைக்கும்
அருமை நமது கழக நிர்வாகத்திற்கு உண்மையில் அதிகம் சகோதரர் பீ.ஜே. அவர்களின் விவாத களம் என்றால் என்னைபோன்ற அனைத்து மக்களும் மிகவும் ஆர்வமாக காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள் அப்படி இருக்கும்போது சகோதரர் முஜாஹித் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சகோதரர் பீ.ஜே. அவர்கள் விவாதத்தில் கலந்துகொள்ளவேண்டியதுதானே இப்படி தொடர்ந்து நாம் மறுப்பு தெரிவித்தால் நம்மைபோன்ற அறிவுள்ள மக்களுக்கு சந்தேகம் எழக்கூடும் ஆகையால் அவர் அழைப்பை ஏற்று சகோதரர் பீ.ஜே அவர்களும் விவாததத்தில் கலந்து கொள்வது அனைவரின் ஆசையாக இருக்குமென்பதில் எந்தவித அய்யமுமில்லை
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை மடல் என்ற பொதுவான பெயரில் எழுகிறீர்கள். தங்களின் பெயருடன் கருத்துயிட்டால் நலமாக இருக்கும்.
பிஜே அவர்களின் பேச்சும் விவாதமும் தட்டி எழுப்பக்கூடிய வகையிலும் தெளிவாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரத்தில், பிஜே பேசினால் கேட்பேன் என்பது தவறான வழிக்கு நம்மை இட்டுச்சென்றுவிடும். அல்லாஹ் நம்மை பாதுபாப்பனாக.
முஜாஹித்தின் உண்மையான நோக்கம் தப்பி ஓடுவதும் தான். பிஜே வந்தால் முஜாஹித்தின் வாதம் தவிடுபெடியாகிவிடும் என்பது முஜாஹித்துக்கு நன்றாக தெரியும். இருந்த போதிலும், முஜாஹித் பிஜேவை வைத்து விளம்பரம் தேட பார்க்கிறார் என்பது உறுதி. இதற்கு சான்றாக விவாத ஒப்பந்ததிலேயே பிஜே சும்ம வந்து அமர்ந்து இருந்தால் போதும் என்ற அவரின் கோரிக்கை போதும். தினம் தினம் பிஜேவுடன் விவாதம் செய்ய தயாரா என்று கேட்டு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வரும் கோரிக்கைகள் அதிகம். இவர்கள் அனைவருடனும் பிஜே விவாதம் செய்ய முனைந்தால், பிஜே விவாத அரங்கிலேயே தான் இருக்க வேண்டும்.
முஜாஹித் என்பவர் பிஜேவுடன் தான் விவாதிப்பேன் என்று சவால் விடவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்வேன் என்று தான் கடிதம் எழுதினார். விவாத ஒப்பந்தத்தில் இதை ஒரு நிபந்தனையாக வைத்தால், தப்பிக்கலாம் என்பது அவரின் நோக்கம். அத்தோடு, தன்னுடன் விவாதிக்க பிஜே தான் தகுதியானவர் என்ற முஜாஹித்தின் ஆணவத்தையும் அடக்கியாக வேண்டும். பிஜேவை விட, நன்றாக விவாதம் செய்யக்கூடியவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளார்கள் என்பதை சகோதார் பிஜே அவர்களே இந்த ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவ பிரிவை சார்ந்த பலர் பிஜேவுடன் தான் விவாதம் செய்ய விரும்புவதாக கடிதம் எழுதினார்கள். அவர்களுடன் பிஜே விவாதம் செய்யாமல், தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற அறிஞர்கள் தான் விவாதம் செய்யதார்கள். இன்னும் சொல்லப்போனால், பிஜே அவர்கள் கிறிஸ்தவம் சம்பந்தமாக எழுதிய புத்தகம் சம்பந்தமாக தான் விவாதம் செய்ய வந்தார்கள். முற்றிலும் பிஜே சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தும், கிறிஸ்தவர்கள் கூட பிஜேவுடன் மட்டும் தான் விவாதம் செய்வேன் என்று முரண்டு பிடிக்கவில்லை.
முஜாஹித் தவ்ஹீத் ஜமாஅத்துடன் நடைபெற இருந்த விவாததத்தில் பின் வாங்கி விட்டேன் என்பதை ஒத்துக்கொண்டும்விட்டார். பார்க்க - http://www.adiraitntj.com/2014/01/blog-post.html
ஸ்ரீலங்க தவ்ஹீத் ஜமாஅத்திடம் தனியாக விவாதம் செய்வேன் என்ற முஜாஹித் அதில் ஒட்மெடுத்துவிட்டார். பார்க்க - http://www.adiraitntj.com/2014/01/sltj-sltj.html
அல்ஹம்துலில்லாஹ்.
தனி நபர்களை வைத்து சத்தியம் வெல்லாது. சத்தியம் யார் கையில் இருந்தாலும் அது வெல்லும். ஒரு காலத்தில் பிஜேவிற்கே பல விஷயங்களை கற்றுக்கொடுத்தவர் ஹாமீத் பக்ரி. இவரின் பேச்சு பலரை தவ்ஹீத் கொள்கைக்கு கொண்டு வந்தது. அதே, ஹாமீத் பக்ரி இன்று அசத்தியத்தில் இருக்கிறார், அவரின் வசீகர பேச்சு இன்றும் அவரிடம் உள்ளது, ஆனால் சத்தியம் அவரிடம் இல்லை. அவரின் வசீகர பேச்சாலும் திறமையாலும் அவர் மக்களை அசத்தியத்தின் பக்கம் அழைக்க முடியவில்லை, அவரின் வாதமும் எடுபடவில்லை.
தனது திறமையால் தனது கொள்கையை காப்பாற்ற முடியும் என்றால் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அது நடந்து இருக்க வேண்டும். பிஜேவை விட வாத திறமை கொண்டவர் ஜமாலி. பிஜேவுடன் தொடர்ச்சியாக அவர் செய்த விவாதத்திற்கு பிறகு அவரின் அஸ்திவராம் காலியானது.
பிஜே மாநில தலைவராக இருந்து கொண்டு நடக்கும் விவாதம் பிஜேவின் அங்கீகாரத்துடன் தான் நடக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் முஜாஹித்துடன் நடக்கும் விவாதத்தில் தோற்றால், அந்த தோல்வி பிஜேவும் தோற்றுவிட்டதாக அறிவிக்க தயார் என்ற போதிலும், அதை முஜாஹித் ஏற்கவில்லை. முஜாஹித்தின் நோக்கம் விளம்பரமே.
உங்களின் பதிலை எதிர்பார்த்து....
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.