Sunday, January 19, 2014

அதிரையில் நடைபெற்ற மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் !

இந்தியாவில் வாழுகின்ற இஸ்லாமியர்களின் பின் தங்கிய நிலையை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழகத்தின் முக்கிய மாநகர்களில் எதிர் வரும் ஜனவரி 28ல் நடைபெற இருக்கிற சிறை செல்லும் போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்று மாலை 6.30 மணியளவில் நமதூர் தக்வா பள்ளி அருகில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறை நிரப்பும் போராட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும், சையது இப்ராஹிம் அவர்கள் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி ! என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக கூட்டத்திற்கு தலைமை வகித்த அதிரை நகர கிளை செயலாளர் Y. அன்வர் அலி அவர்கள் 'இறையச்சம்' என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. நீதிபதி ரெங்கராஜ் மிஸ்ரா, சச்சார் கமிசன் ஆய்வு அறிக்கைகளை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலதாமதப்படுத்திவரும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

2. தேர்தலின் போது இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெற்று வெற்றிபெற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கபட நாடகமாடும் அரசியல் கட்சிகளை இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

3.  ஆட்சிக்கு வந்தால் 3.5 சதவித இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவோம் என தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். இதன்படி இவற்றை காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்றி தர வேண்டும் என இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. எதிர் வரும் ஜனவரி 28ல் இடஒதுக்கீடு வழங்க கோரி திருச்சியில் நடைபெற உள்ள சிறை செல்லும் போராட்டத்தில் அதிரையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், அனைத்து பொதுமக்களும் பெரும் திரளாக கலந்துகொள்ள இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

5. அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

6. அதிரை தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக கடந்த இரண்டு பொதுக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அதிரை பேருந்து நிலையம் - பழைய போஸ்ட்ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலை பணிகளை துவக்கிய பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் அதிரை நகர இணைச்செயலாளர் சுலைமான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.










1 கருத்துரைகள் :

ஜனவரி - 28 சிறையை நிரபபுவோம்.!! குறையை நீக்குவோம்.!! நிச்சயமாய் வெல்வோம் ..!! நம் சமுதாயம் உயர்வை அடைவோம் ..!! இன்ஷா அல்லாஹ்..!!

இன்னும் பணிகளை வீரியப்படுத்துங்கள்.முயற்சி நம்முடையது.நிறை வேற்றி வைப்பது அல்லாஹ்வுடையது.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.