Sunday, September 22, 2013

அதிரையில் நடைபெற்ற இரத்ததான முகாம்!

அதிரையில் நடைபெற்ற இரத்த தான முகாம்

ஒருவரை கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், 'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' (அல்குர்ஆன் 5:32).

தஞ்சை காளி இரத்த வங்கியுடன் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை இணைந்து  நடத்திய இரத்ததான முகாம் இன்று 22.9.13 தவ்ஹீத் பள்ளியில் காலை 10 மணிக்கு தொடங்கியது இதில் நிர்வாகிகள் கல்லூரி மாணவர்கள் உட்பட பல பகுதிகளில் இருந்தும் 75 க்கு அதிகமானவர்கள் இரத்ததானம் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


















18 கருத்துரைகள் :

’இரத்தம் குத்தி எடுத்தல்’(ஹிஜாமா) என்று ஒரு நபி வழி மருத்துவ முறை இருப்பதாக சொல்கிறார்களே. இது உண்மைதானா? இவ்வாறு மருத்துவம் செய்வது சிறப்பிற்குரிய நபிவழிச் செயலா? இது விஷயத்தில் ததஜவின் நிலைப்பாடு என்ன? விரிவாக விளக்கினால் நன்றாய் இருக்கும்.

அஹமது ஃபிர்தவ்ஸ்,

உங்களின் கேள்விகான விளக்கம் கீழ்காணும் ஆக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/iratham_kuthi_eduthal_enna/

//இந்த வழக்கம் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலத்திலும் இருந்ததால் அவர்களும் இது போன்ற ச்கிச்சையை தமக்காக செய்து கொண்டார்கள். ஆனால் இதற்கும் மார்க்கத்துக்கும் சம்மந்தம் இல்லை. இது வஹியின் அடிப்படையில் செய்த ஒன்றல்ல.//

இதுதான் நீங்கள் கொடுத்த ஆக்கத்தின் சாரம். உங்களுடைய நிலையைச் சுருக்கமாக சொல்வதானால் “ஹிஜாமா (இரத்தம் குத்தி எடுத்தல்) என்பது ஒரு பண்டைய அரேபிய மருத்துவமுறை. மற்றபடி அதற்கு எந்த சிறப்புமில்லை; வஹியின் அங்கீகாரம் இல்லை” எனச் சொல்கிறீர்கள்.

அப்படியானால் புஹாரியில் பதிவாகியிருக்கும் கீழ்காணும் ஹதீஸிற்கு தங்களின் விளக்கம் என்ன?

“மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு; நூல்:புஹாரி .”

மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு; நூல்:புஹாரி .5680

இந்த மூன்றில் நோய்க்கு நிவாரணம் தேடுவது அன்றைய அராபிய மருத்துவ முறை .இதில் நெருப்பால் சூடிட்டு கொள்வதை ரசூலுல்லாஹ் தடை செய்து விட்டார்கள் .மற்ற இருமுறைகளில் நீங்கள் மருத்துவம் செய்ய அனுமதி இருக்கிறது என்று புரிந்து கொண்டால் குழப்பம் இல்லை

”ஹிஜாமா (இரத்தம் குத்தி எடுத்தல்) ஒரு பண்டைய அரேபிய மருத்துவமுறை, அதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது; மற்றபடி அதற்கு எந்த சிறப்புமில்லை; அதற்கு வஹியின் அங்கீகாரமில்லை; அது சுன்னாவுமில்லை” என்று கூறுகிறீர்கள்.

அப்படியானால் கீழ்கண்ட ஹதீஸ்கள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்

1) நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17 , 19 , 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ , அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். ஸஹிஹ் சுனன் அபி தாவுத்

2)நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மிஃராஜ் பயணத்தின் போது மலக்கு மார்களின் கூட்டங்களை கடக்கும் போது " ஒ முஹம்மத் , ஹிஜாமா செய்யுங்கள் " என்று சொல்லப்படாமல் தவிர கடக்கவில்லை. திர்மிதி, இப்னு மாஜா

மேலுள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான வலுவான ஹதீஸ்கள். இது தவிர மேலும் சில குறைபாடுகளுள்ள, பலவீனமான ஹதீஸ்களும் உண்டு. எனினும் ‘பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமல் செய்ய கூடாது’ என்ற அடிப்படையில் அவற்றை இங்கு நான் தவிர்த்துக் கொண்டேன்.

இப்போது சொல்லுங்கள் “ஹிஜாமா சுன்னாவா இல்லையா?; ஹிஜாமாவிற்கு வஹியின் அங்கீகாரம் உண்டா இல்லையா?” தெளிவுபடுத்தவும்.

தாங்கள் கொடுத்து இருக்கும் அபூதாவுத் ,மற்றும் இப்னுமாஜா ஹதீஸ்களின் சனதை அனுப்பி வைக்கவும்

இன்ஷா அல்லாஹ் நான் இந்த ஹதீஸ்களின் இஸ்னாதை (அறிவிப்பாளர் தொடர்களை) பெற்றுதருகிறேன். இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் என நீருபிக்கப்பட்டால், நீங்கள் ஹிஜாமா (இரத்தம் குத்தி எடுத்தல்) பற்றிய உங்களது இப்போதைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வீர்கள் தானே?

ஒரு ஹதீஸின் தரம் சஹீஹ் என்று நிரூபிக்க பட்டால் அது குரானுக்கு முரண் இல்லாவிட்டால் ஏற்று கொள்ள வேண்டும் அதை தான் இஸ்லாம் சொல்கிறது .இன்ஷா அல்லாஹ் நாங்கள் ஏற்று கொள்வோம்

நான் மேற்கோளிட்ட 1ம் எண் ஹதீஸிற்கான அறிவிப்பாளர் தொடர் இதோ

حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجُمَحِيُّ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنِ احْتَجَمَ لِسَبْعَ عَشْرَةَ وَتِسْعَ عَشْرَةَ وَإِحْدَى وَعِشْرِينَ كَانَ شِفَاءً مِنْ كُلِّ دَاءٍ ‏"‏ ‏.‏

2ம் எண் ஹதீஸிற்கான் அறிவிப்பாளர் தொடரை தருவதில் கால தாமதம் ஏற்படலாம். நீங்கள் இபோதைக்கு முதலாம் எண் ஹதீஸின் தரம் பற்றிய தங்களின் கருத்தை அறிய தரவும்.

This comment has been removed by the author.

நீங்கள் அனுப்பிய சனதை சரி பார்த்து விட்டு எங்கள் கருத்தை பதிகிறோம் இன்ஷா அல்லாஹ் அதற்கு முன்

//1) நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17 , 19 , 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ , அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். ஸஹிஹ் சுனன் அபி தாவுத் //

இந்த ஹதீஸின் படி வருட மாத மாதம் 17, 19, 21 ஆகிய பிறைகளில் ஹிஜாமா செய்ய வேண்டும் அல்லவா? நீங்கள் இதை கடைபிடிக்கிறீர்களா?

என்ற விளக்கத்தையும் பதியும்படி கேட்டுக்கொள்கிறோம்

ஹிஜாமாவும் மூட நம்பிக்கையும் !!!!!

17 , 19 , 21 பிறைகளில் ஹிஜாமா செய்தால் நிவாரணம் உண்டு என்று 3486 இப்னு மாஜாஹ் செய்திகள் அறிவிக்கின்றன அதே கிதாபில் அடுத்து வரும் இரண்டு ஹதீஸ்கள் வியாழன் அன்று செய்தால் அல்லாஹ்வின் அருள் உள்ளதாகவும் . புதன் அன்று செய்தால் நோய்ப்பட்டு அயுப் நபி போல் ஆகிவிடும் என்றும் கருத்து கூறுகிறது .

நம் கேள்வி என்னெவென்றால்

ஹதீஸில் உள்ளது போல் 17 , 19 , 21 புதன் வந்தால் அன்று ஹிஜாம கூடாது என்று ஆகிவிடும் , அதுமட்டும் அல்லாமல் வெள்ளி சனி நாயிறு போன்ற நாட்களிலும் ஹிஜாம செய்யகூடாதாம் . பிறையும் இந்த விளக்கப்பட்ட நாளும் ஒரே நாளில் வந்தால் என்ன செய்வார்கள் ?

அப்போ புதன் கிழமை ரத்தம் குத்தி எடுத்தால் அயுப் நபிக்கு வந்த அந்த கொடிய நோய் வந்துவிடுமாம் ?

எனக்கு தெரிந்து புதன் அன்று ரத்தம் கொடுத்தவர்களுக்கு நோய் வந்ததாக தெரியவில்லை.

இந்த இப்னு மாஜாஹ் ஹதீஸ் 3486-88 உண்மை என்று சொல்பவர்கள் இதனை நிறுபித்து காட்டட்டும் !

நம் ஏற்கனவே சொன்னது போல் குரான் மட்டும் தான் தாலிகள் கிதாப்

ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ

2.2. இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.

ஹதீஸ்கள் சரியான அறிவிப்பாளர் தொடரோடு வந்தாலும் , அதில் பிழை இருக்க வாயப்பு உண்டு என்பதற்கு இதுவும் ஒரு சான்று !

சிந்தியுங்கள் மக்களே !

@TNTJ Adirai

நான் இதுவரை ஹிஜாமா செய்ததில்லை. எனினும் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் ஹிஜாமா சுன்னத்தான் வழிமுறையில் செய்யும் எண்ணம் உண்டு. நான் அறிந்த வெளிநாட்டுச் சகோதரர்கள் சிலர் ஹிஜாமா செய்தாலும், உரிய முறையில் ஹிஜாமா செய்யும் யாரையும் என்னால் இங்கு (எமிரேட்ஸில்) அடையாளம் காணமுடியவில்லை என்பதும் தாமதத்திற்கு ஒரு காரணம். மேலும், ஹிஜாமா செய்வது கடமையான செயல் அல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவும். அது ஒரு சுன்னா மற்றும் ஷிஃபா.

அடுத்து, ஹதீஸை ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் 1)அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் 2)குரானிற்கு முரண்படக்கூடாது என இரண்டு நிபந்தனைகளை வைத்திருக்கிறீர்கள். இதில் அறிவிப்பாளர் தொடரை சரி பார்த்துக்கொண்டிருக்கும் இதே சமயத்தில் இரண்டாவது நிபந்தனையான குரானிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறதா என்ற அம்சத்தையும் ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சொல்வதானால், இந்த இரண்டாவது நிபந்தனையை இந்த விஷயத்தில் முற்படுத்துமாறு வேண்டுகிறேன். இதன் மூலம் நீங்கள் ஸனதை ஆய்வு செய்வதில் ஏற்படும் காலதாமதத்தையும், ஆற்றல் விரயத்தையும் தவிர்க்க முடியும் என்பது எனது கூற்று.
ததஜவால் நிராகரிக்கப்பட்ட அஜ்வா பேரீச்சம்பழம், கருஞ்சீரகம் ஹதீஸ்களுடன் இந்த ஹதீஸிற்கு ஒற்றுமையான அம்சங்கள் இருப்பதாகவே நான் உணர்கிறேன். அதனாலேயே இந்த கோரிக்கை.


​​

என்ன பாவா. சுன்னத் என்கிறீர்கள். சுன்னத்தை செய்தீர்களா என்று கேட்டால், செய்யலாம் என்று ஈக்கிறேன் என்கிறீர்கள். செய்துவிட்டு இங்கே வந்து செய்துவிட்டேன் என்று கருத்து எழுதுங்கள்.

கருஞ்சிரகம் மரணத்தை தவிர அனைத்துக்கும் மருந்து என்ற ஹதீசை நாங்கள் ஏற்கிறோம் என்கிறீர்கள். இப்படி சொல்லிக்கொண்டே அனைத்து நோய்களுக்கும் டாக்டரிடம் தான் செல்லுகிறீர்கள். எவ்வளவு காலம் தான் இப்படி ஏமாற்ற போகிறீர்கள்?

முதலில் நேர்மையாக இருக்க பலவுங்களேன்.

@TNTJ Adirai

தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.உங்களின் ஆய்வு முற்று பெற்றிருக்கும் என நம்புகிறேன். தங்களின் தற்போதைய நிலையை தெரியப்படுத்தவும்.

அகமது ஃபிர்தவ்ஸ் ,

இது குறித்து பின்னர் விளக்கம் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.