Monday, December 01, 2014

அதிரை நகைக்கடையில் கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டது

அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் பேபி ஜுவல்லரி என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஒரு நகைகடை உள்ளது இந்த கடையில் உரிமையாளர் வழக்கம் போல் இன்றும் காலை 10.30 மணிக்கு கடையை திறக்கும் போது தன்னிடம் உள்ள நகை மற்றும் கொலுசுகளை ஒரு பையில் எடுத்துவந்துள்ளார் இதை நோட்டமிட்ட முகமுடி அணிந்த இருவர் பைக்கில் கடையில் அருகில் பைக்கை நிறுத்தி அதில் ஒருவர் நகை பையை தூக்குவதற்கு முயற்சித்தபோது உரிமையாளர் சேகரின் சத்தத்தை கேட்டு பக்கத்தில் உள்ள பத்திரக்கடை உரிமையாளர் மீரா முகைதீன் (தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை பொருளாராக உள்ளார்) கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது ஒருவன் பைக்கை எடுத்துக்கொண்டு நான்கு கடைகளுக்கு தள்ளி பைக்கை தயாராக வைத்துள்ளான் மற்றொருவனை மீரா முகைதீன் அடித்து கீழலே தள்ளிவிட்டு அவனை பிடிக்க பாய்ந்தபோது கொள்ளையன் மறைந்து வைத்திருந்த அறுவாளை எடுத்து மீரா முகைதீனை நோக்கி வெட்டுவதற்கு முயற்சித்தபோது இதை சற்றும் எதிர்பார்க்காத மீரா முகைதீன் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்தவுடன் அல்லாஹ்வின் உதவியால் எந்த காயமும் ஏற்படவில்லை கொள்ளையன் இதை சாதகமான பயன்படுத்திக்கொண்டு தயாராக இருந்த பைக்கில் ஏறி தப்பிவிட்டான் இதில் கொள்ளையனிடம் இருந்து நகையை காப்பாற்றியதற்கு கடை உரிமையாளர் சேகர் மீரா முகைதீனை பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டார்














0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.