Saturday, December 27, 2014

அமீரகம் துபாய் மண்டல TNTJ அதிரை கிளையினர் நடத்திய மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் !




இன்று 26/12/2014 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் டேரா துபையில் உள்ள JT மர்க்கஜில் துபாய் மண்டல அதிரை TNTJ கிளையின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துபாய் மண்டல அதிரை TNTJ கிளையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துபாய் மண்டல அதிரை TNTJ கிளையின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களுடனும், ஆதரவாளர்களுடனும்   நல்லபல பயன்தரக்கூடிய  திட்டங்கள் யாவும் கலந்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் பேசப்பட்டு ஆலோசிக்கப்பட்ட திட்டங்கள்: 
-----------------------------------------------------------------------------

1, 2015 கல்வியாண்டில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால்  நமதூரில் துவங்கயிருக்கும் இஸ்லாமிய பெண்கள் மதரஸா கல்லூரி  பற்றி அது சம்மந்தமாக பல ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டன.

2, அதிரையில் TNTJ சார்பாக இஸ்லாமிய  நூலகம் அமைப்பது குறித்து பேசப்பட்டன.

3, நடுத்தெருவில் உள்ள ஆயிஷா மகளிர் அரங்கத்தில் வாரம் தோறும்  வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் நடத்தும் மார்க்க சொற்ப்பொழிவு பயானை மேலும் விரிவுபடுத்துவது  குறித்தும்  அனைவரிடத்திலும் கலந்து ஆலோசிக்கப் பட்டன.
 
 

.


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.