ஒரு இஸ்லாம் அல்லாத குடும்பம் பத்து வருடமாக ஒரு பிள்ளையை வளர்த்து பின் இஸ்லாத்துக்கு வந்தால் பிள்ளையை விடணுமா இஸ்லாத்தை விடணுமா? --அர்ஹம்
ஸைனப் பின்த் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் அந்தச் சிறுவன் உங்களுடைய வீட்டிற்குள் வருகிறானே! ஆனால், அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்பமாட்டேன்" என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்க வில்லையா?" என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அபூஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் என் வீட்டிற்குள் வருகிறார்; அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் - மகன் உறவு ஏற்பட்டு) அவர் உனது வீட்டிற்குள் வரலாமே!" என்று கூறினார்கள். (முஸ்லிம் 2881 )
விதிவிலக்கு என்று சொல்லாத ஒன்றை முன்மாதிரி என்று ஆயிஷா( ரலி ) அவர்கள் சொன்னதாக வரும் ஹதீஸை இவர்கள் ஏற்காமல் பால்குடி சட்டம் சாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமேயான விதிவிலக்கு என்று சொல்வார்களாம். விதிவிலக்கு என்று சொல்லிக்கொண்டே மாற்றுமதத்தில் இருந்து இஸ்லாம் வந்தால் இந்த ஹதீஸின்படி பால் கொடுக்கணும் என்பார்களாம்.
இது என்ன விதிவிலக்கா? அல்லது உங்கள் மதிவிலக்கா??
இஸ்லாத்தையும் விடாமல் பிள்ளையையும் விடாமல் இருக்க ஐடியா சொல்லிக்கொடுக்க வந்து இருக்கார் அர்ஹம் மௌலானா (சொல்லிட்டோம்...!மௌலானா என்று சொல்லனுமாம் மரியாதையை கேட்டு வாங்குறார் !!)
இந்த சூழ்நிலையில் இஸ்லாம் சொல்வது என்ன? தெரியாவிட்டால் கேளுங்கள் மௌலானா
நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன்.
உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாகரத்துச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். (புஹாரி 88)
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 33:5)
வளர்ப்பு பிள்ளையை தன் பிள்ளை என்று சொல்லாமல்
பிள்ளையை விட்டுடனும்ங்கோ.... மௌலானோவ்...!!!
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.