இஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)! |
உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம மிகச் சிறந்த மார்க்கமாகத் திகழ்கிறது. ஆனால் இந்த மார்க்கம் எப்படிச் சிறந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் திகழ்கிறது என்பதை முஸ்லிமல்லாதவர்களூம் முஸ்லிம்களில் பலரும் அறியாமல் உள்ளனர்.
சமீபத்தில் நமது ஊரில் நிகழ்ந்த மரணத்தில் தனது தாய்க்கு ஜனாஸா தொழுகை நடத்த வந்த சகோதரனை தடுத்து நிறுத்த முயன்ற லப்பை உனக்கு அல்ஹம்து சூரா ஓத தெரியுமா என்று கேட்டு தலைக்கு தொப்பி போடாமல் தொழ வைக்க கூடாது என்று சொல்லி முரண்டு பிடித்ததும் அதை கேட்டு சுன்னத்தானா தாடியை வைக்காமல் வழித்து சிறைத்த கூட்டம் தொப்பி போடு ,தொப்பி போடு என்று ஜனாஸாவை வைத்து கொண்டு காச், மூச் என்று கத்தி ஓலமிட்டது .
அந்த நேரத்தில் சச்சரவை விரும்பாத சகோதரன் தொப்பி போட்டு தொழ வைத்தான் .தொழுகை முடிந்த உடனேயே அதை தொடர்ந்து அவர்கள் நடத்தும் துவா, தல்கீன் என்று இஸ்லாத்தில் இல்லாத அனைத்து அனாச்சாரங்களும் நடந்து முடிந்தது .அதை தடுக்க முடியாமல் தொழுகையை மட்டும் நடத்திய திருப்தியுடன் அந்த சகோதரன் பார்த்து கொண்டு நின்றான் .
நமது ஊர் ஆலீம்கள் நிறைந்த ஊர் என்று சொல்கிறார்கள் அப்படி இருக்க இந்த ஆலீம்கள் மார்க்கத்தை சொல்லாமல் இருப்பதால் தானே இந்த லப்பைமார்கள் ஓநாய்களை போல ஓலமிடுகிறார்கள். மார்க்கத்தை சொல்ல விடாமல் அவர்களை தடுப்பது எது ?
'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.(புகாரி 79)
நபி (ஸல்) அவர்கள் மார்க்க அறிவை ஒரு பெரிய மழையுடன் ஒப்பிட்டு அது சென்றடைகிற இடங்களை,மார்க்க அறிவை தேடி அதை பிறர்க்கு கற்று கொடுப்பவர் மார்க்க அறிவை அறிந்து கொள்ள முடியாதவர் இவர்களின் நிலைகளை உதாரணம் காட்டி மார்க்க அறிவின் அவசியத்தை பற்றி வலியுறுத்தினார்கள்.
மார்க்க அறிவை தானும் கற்று பிறர்க்கும் பயன்பெறும் வகையில் நடப்பவர்களை நீரை உறிஞ்சி அதன் மூலமாக புற்பூண்டுகள் முளைக்க கூடிய நிலங்களுக்கும் தண்ணீரை தேக்கி வைத்து மக்கள் பருகி விவசாயத்திற்கு நீர் பாய்ச்சி பயன் பெறக் கூடிய கிணறுகள், குளம் குட்டைகள் இருக்கும் நிலங்களுக்கும் ஒப்பிட்டு கூறுவதிலிருந்து மார்க்க அறிவை அறிந்து அதை பிறர்க்கு பயன்பெற செய்பவர்கள் சிறப்பு பற்றி விளங்குகிறது .
இதை பற்றி அல்லாஹ் தன் திருமறையில்:
உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்(58:11)
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன். (35:28)
தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடை யோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.(2:269)
இவ்வாறு பல்வேறு சிறப்புக்களையும் உலகம் முழுவதும் பரவி மக்களின் அடிப்படை தேவைகளாக இருக்கின்ற நீர்நிலைகளை போல இருக்க வேண்டிய ஆலீம்கள் அறிவை கற்று அதனை மக்களுக்கும் போதிக்கின்றார்களா ?என்று பார்த்தால் மார்க்கம் என்ற பெயரில் மத்ஹப் குப்பைகளையும் ,மவ்லீதுகளையும் ,பிதத்களையும் அதனையே வணக்க வழிபாடுகளாக மக்களுக்கும் போதிக்கிறார்கள் .மக்களுக்கு அறிவுரை கூற கூடிய இவர்களின் சொற்பொழிவுகளில் இந்த அடிப்படையில் கட்டுகதைகளும் ,நகைச்சுவைகளும் நிறைந்து இருக்கும் .இதற்கு காரணம் சரியான மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாததும் அல்லது தெரிந்து கொண்டு மார்க்கத்தை தன் வயிற்று பிழைப்புக்காக மறைப்பதும் தான்.
இது போன்றவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர் (2:159).
இப்போது அடிக்கல் நாட்டு விழா என்று மார்க்கத்தில் இல்லாத ஒன்றை நடத்தி காட்டி இருக்கிறது ஊருக்குள் வந்த சாப கேடு ஒன்று. மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று கூறி இவருடைய மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு கற்று கொடுக்க வந்து இருக்கிறது.
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக! (Al-Hujuraat: 16)
இந்த குள்ளநரி சாயம் பூசி வந்ததை அறிந்தோ அறியாமலோ நமது ஊர் ஆலீம்? என்று சொல்லி கொள்ளும் சிங்கங்கள் கண் மூடி மவுனம் சாதிக்கின்றார்கள் .
மாற்று மத கலாசாரத்தை பின்பற்றுபவன் என்னை சேர்ந்தவன் இல்லை என்று ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்களே அது இந்த குள்ளநரிக்கு தெரியாதா?
நமது ஊர் மார்கத்தை கற்ற ஆலீம்களுக்கு(?) தெரியாதா ?
இவர்கள் மவுனமாக இருக்க வெளியூரில் இருந்து வந்து ஓரளவு அரசல்புரசலாக மார்க்கத்தை சொல்லும் ஹைதர் அலி ஆலிமுக்கு தெரியாதா ?
ஆலீம்மார்களே சனிக்கிழமை மீன் பிடித்த சமுதாயம் பற்றி உங்களுக்கு தெரியும் அப்போது நமக்கென்ன வம்பு என்று அதை தடுக்காமலும் தடுத்தவர்களை தடுத்தும் வந்தவர்களையும் தான் அல்லாஹ் அழித்தான், என்பதை ஞாபக படுத்தி இந்த அனாச்சாரங்களை வெளியே சொல்ல வாருங்கள்
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (Al-Maaida: 57)
அவர்கள் தமது மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டனர். இவ்வுலக வாழ்க்கை அவர்களை மயக்கி விட்டது. இந்த நாளைச்சந்திக்க வேண்டிவரும் என்பதை அவர்கள் மறந்து, நமது வசனங்களை அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தது போல் இன்று அவர்களை நாமும் மறந்து விட்டோம்6. (Al-A'raaf: 51)
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ் தன் அடியார்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக ஓரேயடியாக மார்க்க அறிவை இல்லாமல் ஆக்கிவிடமாட்டான்.ஆனால் மார்க்கம் தெரிந்தவர்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக எந்த மார்க்க அறிஞரும் இல்லாத அளவுக்கு மார்க்கறிவை இல்லாமல் ஆக்குகிறான். இறுதியில் மக்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்குவார்கள். அவர்களிடத்தில் மார்க்கத் தீர்ப்பு கேட்கப்படும்போது மார்க்கத்தில் இல்லாததைத் தீர்ப்பாக வழங்கி தாங்களும் வழி கெட்டு மக்களையும் வழிகெடுப்பார்கள்.
அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ்
நூல்: புகாரி 100
மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்கும் வரை முஹம்மது குட்டி போன்ற மார்க்க வியாபாரிகளின் அட்டகாசம் அடங்காது.
இவ்வாறு பூமி பூஜை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்று தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்கள் முன்வர வேண்டும். விவாதத்திற்கு வந்தால் தலைப்பாகை கழன்று விடும். இன்ஷா அல்லாஹ்.
இவ்வாறு பூமி பூஜை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்று தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்கள் முன்வர வேண்டும். விவாதத்திற்கு வந்தால் தலைப்பாகை கழன்று விடும். இன்ஷா அல்லாஹ்.
தொடர்புடையவை:
1 கருத்துரைகள் :
எந்த பள்ளியில் இது நடந்ததோ அதே பள்ளியில் மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் செய்கிறார்கள் அவருக்கு என்று ஒரு கூட்டமும் உள்ளது அவர்தான் தயவு தாசனையின்றி சத்தியத்தை சொல்லுகிறார் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளுகிறார்கள். அவர் மக்களை வைத்து அரசியல் செய்யவில்லை என்றால் இந்த இனை வைப்பு தீமையை வரும் வாரம் ஜூம்ஆ பயானிலும் தக்வா பள்ளியிலும் பயானிலும் இதை கண்டிப்பார்களோ
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.