Sunday, June 30, 2013

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..அபுதாபி அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 28.06.2013 வெள்ளிக் கிழமையன்று  மக்ரிப்தொழுகைக்குப்பிறகு இரவு 8.05 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.  அதிரைஅபுதாபி TNTJ கிளையின் கடந்த மஷூராவில் (ஆலோசனைக் கூட்டத்தின்) செயல்பாடுகளைப் பற்றிஅறிமுகம்செய்தும், அதனையடுத்து புதிய முக்கிய தீர்மானங்களும், ரமலான் நோன்பின் தஃவா வளர்ச்சிக்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.   கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவாவளர்ச்சிகளுக்கான நல்ல பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

ஜசாக்கல்லாஹ்  ஹைர்


மாற்று மத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழக்கம் 27.6.13 அன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



Saturday, June 29, 2013

நபிமார்களை இறைவனாக்கிய அதிரை காம ஸலஃபிகள்!


அதிரை ஸலஃபிகள் என்ற பெயரில் தங்களை தாங்களே பெரிய அறிஞர்களாக நினைத்து கொண்டு, உளறித்திரியும் காம வெறியர்களின் காம களியாட்டத்தை சமீபத்தில் வெளிப்படுத்தினோம். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற இவர்களின் அதிரடி ஃபத்வாவை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம். எமது ஆக்கம் இவர்களை ஆட்டம் காண வைத்தது. அல்பானியின் மாணவன் என்று பில்டப் கொடுத்து திரிந்த யஹ்யா சில்மியாளே அல்லது அவனின் காம பக்த கோடிகளான அதிரை காம ஸலஃபிகளாலே எமது ஆக்கம் சம்பந்தமாக பதில் தர முடியாத கேவலம் ஏற்பட்டது. நமது ஆக்கம் உலகெங்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம்களிடம் காம ஸலஃபிகளின் கொள்கையை படம் பிடித்து காட்டியது. நமது ஆக்கம் ஆன்லைன் பிஜே இணையதளத்திலும் வெளிவந்து இவர்களின் முதுகு எலும்பை முறித்தது. நமது ஆக்கம் இவர்களை எந்த அளவுக்கு ஆட்டம் காண வைத்தது என்றால், அதிரை ஸலஃபி என்ற பெயரையே மாற்றி எழுத வேண்டிய அளவுக்கு ஆட்டம் கண்டார்கள்.

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வது என்ற இவர்களின் ஃபத்வாவை பற்றி இவர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல், ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களில் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற ஃபத்வா சரியானது தான் என்று சொல்லி திரிந்தார்கள். 

மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. நபிமார்கள் உள்பட யாரும் தவறு செய்வதில் இருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் இல்லை. அதிரை ஸலஃபிகள் சரிகாணும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அதன் மொழிபெயர்ப்பாளர் இக்பால் மதனி அவர்கள், தனது திருக்குர்ஆன் தமிழாக்கம் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டது என்று தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் முன்னுரையில் குறிப்பிடுவதை பாருங்கள்.


நமது ஆக்கத்தை கண்டு உண்மையை தானே சொல்லுகிறார்கள் என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்த அதிரை காம ஸலஃபிகள், நோன்பு காலம் நெருங்குவதால், மீண்டும் உளற ஆரம்பித்துள்ளார்கள்.

நீங்கள் எவ்வளவு தான் எங்களின் அசிங்கங்களை அம்பலப்படுத்தினாலும் நாங்கள் அசர மாட்டேம் என்று அதிரை காம ஸலஃபிகளின் மூத்த அறிஞர் ஒருவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

அதிரை காம ஸலஃபிகளின் ஒரே கொள்கை காமம் தான். இவர்களின் காம கொள்கையை தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பதால், தவ்ஹீத் ஜமாஅத்தை இவர்கள் எதிர்க்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்ன சொல்லுகிறது என்று கூட ஆய்வு செய்யாமல், அரைகுறையாக இவர்களும் கடந்த ஐந்து வருடங்களாக உளறி வருகிறார்கள். என்ன என்னவே செய்து பார்க்கிறார்கள். இவர்களின் பேச்சை யாரும் கேட்பது இல்லை.

நாம் மற்றவரின் தவறை பற்றி பேசும் போது, அது போன்ற தவறுகள் அல்லது அதைவிட பாரதூரமான தவறு நம்மிடம் உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். அதிரை சுயஇன்ப ஸலஃபிகள் தவ்ஹீத் ஜமாஅத்திடம் பாரதூரமான தவறுகள் உள்ளதை போல படம் காட்டி வருகிறது. இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முதுகெழும்பை முறிக்கும் பதில்களை நாம் ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டுளோம். எமது பதில்கள் வந்த பின் இவர்கள் ஊமை சாமிகளாக மாறிவிட்டார்கள்.

இவர்கள் அடிக்கடி உளறுவதால் இவர்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இவர்களின் சுயஇன்ப கொள்கையை அம்பலப்படுத்தினோம். இப்போது இவர்களின் தவ்ஹீத் கொள்கையை அம்பலப்படுத்த உள்ளோம். அடுத்தாக, இவர்களின் மற்றோரு காம கொள்கை அம்பலத்திற்கு வரும், இன்ஷா அல்லாஹ். 

இக்பால் மதனி என்பவர் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மொழிபெயர்ப்பு சவூதி அரசாங்கத்தால் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது.

அதிரை காம ஸலஃபிகளும் அவர்களின் காம குருக்களும் இக்பால் மதனியின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு மட்டும் தான் தமிழ் மொழியில் வெளிவந்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் சரியானது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். 

தங்களின் தமிழாக்கத்தில் தவறே இல்லை என்று சொல்லும் இக்பால் மதனி மற்றும் அவரின் அங்கத்தவர்கள், சிறிய பிழை செய்துயிருந்தால் கூட சரி என்று விட்டுவிடலாம். மார்க்க அடிப்படையையே தகர்ந்து மனிதன் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவன் என்று சொல்லிய இவர்கள், செய்துள்ள தவறை பாருங்கள்.

அல்லாஹ் 26 வது அத்தியாத்தின் 16 வது வசனத்தில், முஸா (அலை) மற்றும் ஹாருனை (அலை) அவர்களையும் ஃபிர்அவ்னிடம் சென்று, 'நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம்' என்று சொல்லி, 'பிர்அவ்னால் கொடுமைப்படுத்தப்படும் இஸ்ராயீலீன் மக்களை தங்களுடன் அனுப்பும்படி பிர்அவ்னிடம் கேட்க முஸா (அலை) மற்றும் ஹாருன் (அலை) அவர்களுக்கு கட்டளையிடுகிறான்'.

இந்த வசனத்தின் சரியான பொருளை அறிய 26 வது அத்தியாயத்தின் 15, 16 மற்றும் 17 வது வசனத்தின் தமிழாக்கத்தை கீழே படியுங்கள் (இது பிஜே அவர்களின் மொழியாக்கம்).

''அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம்'' என்று (இறைவன்) கூறினான். ஃபிர்அவ்னிடம் சென்று ''நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!'' என்று கூறுங்கள்! (என்றும் இறைவன் கூறினான்).

இந்த வசனத்திற்கு சவூதியின் சான்றிதழ் பெற்ற சன்மார்க்க அறிஞர்(?) இக்பால் மதனி அவர்கள் செய்துள்ள தமிழாக்கத்தை கீழே பாருங்கள். 

இக்பால் மதனி தமிழாக்கம்:

ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, நிச்சயமாக நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய தூதராவோம் என்று நீங்களிருவரும் கூறுங்கள். (அல்குர்ஆன் 26:16)

'நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய தூதராவோம்' என்ற மொழியாக்கம் எதை சொல்லுகிறது? முஸா (அலை) மற்றும் ஹாருன் (அலை) அவர்களை அகிலத்தாரின் இரட்சகனாக ஆக்கவில்லையா? இந்த மொழிபெயர்ப்பு இணைவனுக்கு இணை கற்பிக்கும் அர்த்ததை கொடுக்கிறது என்பதை விளக்க வேண்டிய தேவை கூட இல்லாத அளவிற்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

மனிதர்கள் யாரும் தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. நாங்கள் தவறே செய்ய மாட்டோம் என்று சொல்லும் அரபுநாட்டு அடிமைகள் இது போன்ற பகிரங்கமான இணைவைப்பை தூண்டும் செயலை செய்யலாமா? 

இது போன்ற ஒரு தவறு உள்ளது என்று மூன்று வருடங்களுக்கு முன்பே சூட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுவரை அரபுநாட்டு அடிமைகள் சவூதி அரசாங்கத்திற்கு சொல்லி இந்த தவறை சரி செய்தாக தெரியவில்லை.

இக்பால் மதனியின் தமிழாக்கம் தமிழில் தான் உள்ளதா? என்பது பலருக்கு சந்தோகம். காரணம், தமிழர்களுக்கு புரியாமலே தமிழில் மொழியாக்கம் செய்த பெருமை இக்பால் மதினியை சாரும்.

நாலு திருமணம் செய்தாலும், சுயஇன்பம் செய்தாலும், ஏழை பெண்களை திருமணம் செய்யாமல் திருவிளையாடல் செய்தாலும் எனது காமம் அடங்காது. நோன்பில் கூட அடங்காது என்று காம புரட்சி செய்யும் காம வெறியன் யஹ்யா சில்மியால் சரி காணப்படும் இக்பால் மதனி மொழியாக்கம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை விளக்கியுள்ளோம்.

யஹ்யா சில்மி சில்மிஷ பக்த கோடிகளான அதிரை காம ஸலஃபிகள் இக்பால் மதனியின் திருக்குர்ஆன் தமிழாக்கம் சரியனாது என்று கூறி, அதை பரப்பி வருகிறார்கள். 

பிஜேவின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் தவறு இருப்பதாக குறைக்கும் அதிரை சுயஇன்ப ஸலஃபிகள், தங்களால் தலையில் வைத்து போற்றப்படும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் உள்ள தவறுகளை கண்டுகொள்ளததன் அர்த்தம் புரிகிறதா?

அதிரை காம ஸலஃபிகளின் அடுத்த காம கொள்கை விரைவில் வெளியிடப்படும். அந்த ஆக்கம் அதிரை காம ஸலஃபிகளை முச்சந்தியில் வந்து நிறுத்தும், இன்ஷா அல்லாஹ்.

இவர்களின் முழு வண்டவாளங்களை அறிய இங்கே சொல்லவும்

Friday, June 28, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.06.13( வீடியோ)


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை
உரை :சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

அபூபக்கர் (ரலி ) அவர்களின் சிறப்பு

உரை :அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 28.06.13 from Adiraitntj on Vimeo.

ஆயிஷா (ரலி) அவர;கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு (இரவில்) கொண்டு செல்லப்பட்ட போது அதிகாலையில் இதைப் பற்றி மக்கள் (ஆச்சரியமாகப்) பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை நம்பி உண்மைப்படுத்திய சிலர (கொள்கையை விட்டும்) தடம் புரண்டாரகள். சில இணைவைப்பாளர்கள் அபுபக்கர (ரலி) அவரகளிடம் சென்று இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உமது தோழர (முஹம்மது) கூறிக் கொண்டிருக்கிறாரே அதைப் பற்றி நீர்
என்ன நினைகிறீர? என்று கேட்டாரகள். அதற்கு அபுபக்கர்(ரலி) அவரகள் இவ்வாறு அவர (முஹம்மத்) கூறினாரா? என்று கேட்டார;கள். அதற்கு அவரகள் ஆம் என்றவுடன் முஹம்மத் இதை சொல்லியிருந்தால் திட்டமாக அவர உண்மை தான் சொன்னார; என்று அபு+பக்ர (ரலி) அவரகள் கூறினாரகள். இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்குச் சென்று பகல் வருவதற்கு முன்பே அவர திரும்பினார்  என்பதையா உண்மை என்று நீர் நினைக்கிறீர? என்று இணை வைப்பாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் இதை விட பாரதூரமான விஷயங்களில் எல்லாம் அவரை உண்மையாளர்
என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன். வானத்திலிருந்து காலையிலும் மாலையிலும் (இறைச்) செய்தி (வருவதாக முஹம்மத் கூறுவதையும்) உண்மை என்று நான் நம்புகிறேன் என்று கூறினார் எனவே தான் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அஸ்ஸித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர) என்ற பெயர் இடப்பட்டது.

நூல் : ஹாகிம் பாகம் : 10 பக்கம் : 250



3675. 
அனஸ்(ரலி) அறிவித்தார் 
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்" என்று கூறினார்கள். 
 புகாரி 3675

3671. முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா (ரஹ்) அறிவித்தார். 
நான் என் தந்தை (அலீ - ரலி - அவர்கள்) இடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அபூ பக்ர் அவர்கள்" என பதிலளித்தார்கள். நான், '(அவர்களுக்குப்) பிறகு யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் அவர்கள் (தாம் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள். 'பிறகு (மக்களில் சிறந்தவர்) உஸ்மான்(ரலி) தாம்" என்று (என் தந்தை) சொல்லிவிடுவார்களோ என நான் அஞ்சியவனாக, 'பிறகு (மக்களில் சிறந்தவர்) நீங்கள் தாமே!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'நான் முஸ்லிம்களில் ஒருவன்; அவ்வளவு தான்" என்று பதிலளித்தார்கள்.3660. ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார். 
"(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்" என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன்.466. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் 'அல்லாஹ், தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்ததெடுக்க ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்தார்" என்றார்கள். (இதைக் கேட்ட) அபூ பக்ரு(ரலி) அழலானார்கள். 'இந்த மதுஹகூழ் ஏன் அழகிறார்? தன்னிடம் உள்ளது வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா என்று ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தபோது அந்த அடியார் இறைவனிடம் உள்ளதைத் தேர்ந்தெடுத்தால் அதற்காக அழ வேண்டுமா என்ன?' என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். அந்த அடியார் நபி(ஸல்) அவர்கள் தாம். (தங்களின் மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன்) அபூ பக்ரு(ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
"அபூ பக்ரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூ பக்ரு தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்றிருப்பேன். என்றாலும் இஸ்லாம் என்ற அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும்தான் (இஸ்லாத்தில்) உண்டு. பள்ளியில் (என் இல்லத்திற்கு வருவதற்காக) உள்ள அபூ பக்ரின் வாசல் தவிர ஏனைய வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்."467. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் எந்த நோயினால் மரணமடைந்தார்களோ அந்த நோயின்போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக வெளியே வந்து மேடை மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்பு 'தம் உயிராலும் பொருளாலும் எனக்கு அபூ குஹாஃபாவின் மகன் அபூ பக்ரை விட வேறெவரும் பேருதவியாக எவரையேனும் உற்ற நண்பராக நான் ஏற்படுத்திக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்படுத்திக் கொள்வேன். என்றாலும் (தனிப்பட்ட உதவிகளுக்காக நேசிப்பதை விட) இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்தது. அபூ பக்ரின் வழியைத் தவிர என்னிடம் வருவதற்காகப் பள்ளிவாசலிலுள்ள எல்லா வழிகளையும் அடைத்து விடுங்கள்!" என்று கூறினார்கள்.
3660. ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார். 
"(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்" என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன். 
3661. அபுத் தர்தா(ரலி) அறிவித்தார். 
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.
3662. அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார். 
நபி(ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆயிஷா" என்று பதிலளித்தார்கள். நான், 'ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)" என்று பதிலளித்தார்கள். 'பிறகு யார் (பிரியமானவர்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)" என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.

3655. இப்னு உமர்(ரலி) கூறினார். 
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.
3685. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
உமர்(ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) தாம். அவர்கள், 'உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!" என்று பிரார்த்தித்துவிட்டு, '(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூ பக்ர் - ரலி - அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்" என்றும் 'நானும் அபூ பக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்" என்றும் 'நானும் அபூ பக்ரும் உமரும் புறப்பட்டோம்" என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன். 

3919. நபி(ஸல்) அவர்களின் ஊழியரான அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூ பக்ர்(ரலி) மட்டுமே கருப்பு - வெள்ளை முடி உடையவர்களாக இருந்தார்கள். அன்னார் மருதாணியாலும், 'கத்தம்' எனும் (ஒரு வகை) இலைச் சாயத்தாலும் தம் (தாடி) முடியைத் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள்.

6679. இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா (ரஹ் - அலைஹிம்) ஆகியோர், நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா(ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொரு வரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:) 
அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளினான். (ஆயிஷா(ரலி) கூறினார்:) என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். -அப்போது அல்லாஹ், 'உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான். 
அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்' என்றும் கூறினார்கள்.
3092. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அது இறைத்தூதர்(ஸல்), அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த, (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள்விட்டுச் சென்ற சொத்தாகும்.
3093. ஃபாத்திமாவுக்கு அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசுவதைவிட்டுவிட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தனி நிதியாக)விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த அவர்கள் தர்மமாகவிட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். அபூ பக்ர்(ரலி) ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன். ஏனெனில், அவர்களின் செயல்களில் எதனையாவது நான்விட்டுவிட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்றார்கள். (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் தருமமாகவிட்டுச் சென்ற சொத்தை உமர் அவர்கள், அலீ அவர்களுக்கும் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் (அதன் வருமானத்திலிருந்து தம் பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும் படி) கொடுத்துவிட்டார்கள். கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துக்களை உமர் அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்தி வைத்துக் கொண்டு, 'அவ்விரண்டும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தருமமாகவிட்டுச் சென்றவை. அவை நபி(ஸல்) அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளதாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்)களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்றார்கள். 
இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) (இந்த ஹதீஸை அறிவித்த போது), 'அந்த (கைபர், ஃபதக் பகுதியிலிருந்த) இரண்டு சொத்துக்களும் இன்று வரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன" என்றார்கள்.

ரமலானின் சட்டங்கள்-4 (வீடியோ)

நோன்பை ஆரம்பிக்கும் போது நியத் என்று சில வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்களா? நோன்பை முறிக்கின்ற காரியங்கள் எவை இன்னும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இந்த வீடியோவை பாருங்கள்.

Thursday, June 27, 2013

Wednesday, June 26, 2013

திமுகவை மமகட்சி ஆதரிப்பது ஏன்?

திமுகவை மமகட்சி ஆதரிப்பது ஏன்?


அரசியல்வாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்குச் சொல்லும் காரணம் ஒருகாலத்திலும் உண்மையானதாக இருக்காது.

எங்களின் ஆதாயத்துக்கு எது சரிப்பட்டு வருமோ, அந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அவர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.

இவர்கள் சொல்லும் போலியான மற்ற காரணங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றாலும் இந்த நடவடிக்கை சமுதாயத்துக்காக அல்லது நாட்டு மக்களுக்காக அல்லது தமிழுக்காக என்று எதையாவது வெட்கமில்லாமல் சொல்வது அரசியல்வாதிகளின் வாடிக்கையாக இருக்கிறது.

மமகட்சி என்பதும் ஒரு அரசியல் கட்சியாக இருப்பதால், பல வகைகளில் கடைசித் தரத்தில் உள்ள கட்சி என்பதால் இடஒதுக்கீட்டிற்காக ஆதரித்தோம் என்கிறார்கள்.

இடஒதுக்கீட்டிற்காக ஆதரிப்பது என்றால் கருணாநிதி தமிழக முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ இருக்கிறாரா? அந்த அடிப்படையில் அவர் வாக்குறுதி கொடுத்தால் இடஒதுக்கீட்டிற்காக ஆதரித்தோம் என்பதில்  கொஞ்சமாவது அர்த்தமிருக்கும். மத்திய அரசில் இப்போது அங்கம் வகிக்காத கருணாநிதி இடஒதுக்கீட்டிற்காக என்ன செய்வார் என்பதற்காக ஆதரித்தார்கள்?

மத்திய அரசை வற்புறுத்துவதற்காக ஆதரித்தார்கள் என்றால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போது கருணாநிதி இடஒதுக்கீட்டிற்காக கடிதம் எழுதினாரே, அப்போது திமுகவை ஆதரிக்கவில்லையே ஏன்?
இரண்டாண்டுகளுக்கும் மேலாக அதிமுகவினரைவிட அதிகமாக ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்துவிட்டு ஒரே நாளில் அந்தர்பல்டி அடிக்கும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்தினான் என்று தான் நமக்குத் தெரிகிறது.

34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றால்தான் ஒருவர் ராஜ்யசபா உறுப்பினர் ஆக முடியும். காலியான 6 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற முடியாது. அதிமுகவிடம் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு ராஜ்யசபா  எம்பிக்கு 34 வாக்குகள் வீதம் நான்கு பேரை அதிமுக வெற்றி பெறச் செய்வதற்கு 136 உறுப்பினர்கள் போதும். ஆனால் மேலதிகமாக 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஐந்து பேரை தேர்வு செய்ய அதிமுக விரும்பினால், 170 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும். ஆனால் அதிமுகவிடம் 150 உறுப்பினர்கள் உள்ளதால் மேலும் 20 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். பிறகட்சிகளின் ஆதரவைப் பெற்று ஐந்தாவது உறுப்பினரையும் தேர்வு செய்வது அதிமுகவுக்குச் சிரமமானதல்ல.

ஜெயலலிதா நான்கு பேரை நிறுத்தினால் மமகட்சி, புதிய தமிழகம், சரத்குமார், தமிழரசன், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட யாருடைய ஆதரவும் அதிமுகவுக்குத் தேவைப்படாது. நான்கு பேரை தேர்வு செய்வதற்குத் தேவையான உறுப்பினர்களைவிட மேலதிகமாக 14 உறுப்பினர்கள் இக்கட்சியிடம் உள்ளனர்.

நான்கு பேர் போக மீதமுள்ள வாக்குகளை தங்களுக்குத் தரவேண்டும்  என்ற  கோரிக்கைகளை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து அதிமுகவிடம் வைத்தனர். டெல்லி சென்ற ஜெயலலிதாவை நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தினர்.

அதிமுக ஐந்து பேரை நிறுத்தினால், பற்றாக்குறையான வாக்குகளுக்காக நம்மை அணுகுவார்கள். தகுந்த முறையில் பேரம் பேசலாம், கம்யூனிஸ்ட்டுகளுக்கு விட்டுக் கொடுத்தால் அதிமுகவுக்கு நம் தயவு தேவைப்படாது என்று மம கட்சியினர் கதி கலங்கி நின்றார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்த பின்னரும் ஜெயலலிதா ஐந்து வேட்பாளர்களை நிறுத்தினார். மமகட்சி வட்டாரம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது.

அதிமுக அணுகியது, திமுக அணுகியது என்றவாறு செய்திகளைக் கொடுத்தார்கள். 

ஜெயலலிதாவிடமிருந்து விரைவில் அழைப்பு வரும் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். இரண்டு  நாட்கள்கூட இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஜெயலலிதா நிறுத்திய ஐவரில் ஒருவரை வாபஸ் பெற்று நால்வர் மட்டுமே அதிமுக வேட்பாளர் என்று முடிவை மாற்றினார். தனது எஞ்சிய வாக்குகளை கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழங்கப்போவதாகவும் அறிவித்தார்.

ஜெயலலிதா நான்கு பேரை நிறுத்தினால் தனது ஓட்டுக்கள் மூலமாகவே வென்றுவிடுவாரே? அதைவிட அதிகமாகவும் அவரிடம்  ஓட்டுக்கள் உள்ளதே? இனிமேல் நம்மைச் சீண்ட மாட்டார்களே? 
கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜெயலலிதாவின் ஆதரவு கிடைத்தால், கம்யூனிஸ்டுகளிடம் என்ன பேரம் பேச முடியும் என்று குழம்பிப் போனார்கள்.

தனது குடும்பத்தினருக்காக மட்டுமே கட்சி நடத்தும் கருணாநிதிக்கு மட்டுமே இவர்களின் ஆதரவு தேவையாக இருந்தது. மகளை வெற்றி பெறச் செய்வதற்காக அவர் எது வேண்டுமானாலும் செய்வார். எந்த வாக்குறுதியையும் கொடுப்பார். (பின்னர் அல்வாவும் கொடுப்பார்)

ஒரு பொருள் பலருக்கும் தேவைப்படும் போதுதான் எதையும்  நல்ல விலைக்கு விற்க முடியும். ஒரேயொரு நுகர்வோருக்கு மட்டுமே விற்பது என்றால் பெரிய அளவில் பேரம் பேச இயலாது. ஏதோ வந்த வரைக்கும் லாபம் என்ற நிலைக்கு அவர்களின் ஓட்டு மதிப்பை அல்லாஹ் குறைத்து விட்டான்.
ஜெயலலிதா ஐந்து பேரை நிறுத்துவதாக அறிவித்து, ஐந்து பேரை வெற்றி பெற வைக்க முடியும் என்ற நிலையிலும் ஜெயலலிதா அதைச் செய்யவில்லை.

பிறர் தயவால் ஜெயலலிதா ஜெயித்தார் என்ற விமர்சனம்தான் ஜெயலலிதாவை அதிகம் கோபப்படுத்தும் என்பது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

காங்கிரஸோடு கூட்டணி வைத்து அவர் ஜெயித்தபின், எங்களால்தான் அதிமுக ஜெயித்தது என்று காங்கிரஸ் சொன்னபோது சோனியாவை அவரது பூர்வீகப் பெயரைச் சொல்லி கிழிகிழி என்று ஜெயலலிதா கிழித்தார்.

தேமுதிகவுடன் கூட்டணி வைத்து ஜெயித்த ஜெயலலிதாவுக்கும், தேமுதிகவுக்கும் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாமல் இருந்தது. தேமுதிக மூலம்தான் அவர் ஜெயித்தார் என்ற பிரச்சாரம் காரணமாகத்தான் அக்கட்சியை பிரதான எதிரியாக ஆக்கினார்.

பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை என்னால்தான் நீ ஜெயித்தாய் என்று இருவரும் சொல்லிக் கொள்ள முடியும். வாக்களித்தவர்கள் யாருக்காக வாக்களித்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. இவரது வாக்கு அவருக்கும் அவரது வாக்கு இவருக்கும் பயன் பட்டிருக்கலாம்.

ஆனால் ராஜ்யசபா தேர்தல் என்பது சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவதாகும். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற கம்யூனிஸ்டுகள் உதவினாலும், தங்களது தயவில்தான் அதிமுக வென்றது எனக்கூறினால் அதை மறுக்க இயலாது. எங்கள் ஆதரவில்தான் அதிமுக வென்றது என மமகட்சியும் கூறலாம். மமகட்சியின் இருவர் வாக்களித்து இப்படிக் கூறினால் ஜெயலலிதாவால் அதை மறுக்க இயலாது.

பிறர் தயவில் வெற்றி பெற்றுள்ளதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளாத  ஜெயலலிதா ஒரு ராஜ்யசபா எம்.பி.க்காக அல்லரை சில்லரைகளிடம் ஏன் கெஞ்ச வேண்டும் என்ற ரீதியில்தான் முடிவு எடுப்பார்.
மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடுவதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு எம்.பி.சீட் கேட்டார்கள் என்றால் இது ரொம்ப ஓவர் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

ஒருவன் 100 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கச் செல்லும்போது இரண்டு ரூபாய் குறைகிறது. அருகில் இருந்த ஒருவர் நான் அதைத் தருகிறேன் என்று கூறி இரண்டு ரூபாயைத் தருகிறார். இதனால் அந்தப் பொருளை அவரால் வாங்க முடிகிறது. மறுநாள் அதைச் சொல்லிக்காட்டி இந்தப் பொருள் வாங்க உனக்கு நான்தான் உதவினேன். எனவே என்னிடம் 2 ரூபாய் உள்ளது. நீ 98 ரூபாய் போட்டு இதை எனக்கு வாங்கித் தரலாமே என்று கேட்க  முடியுமா?

ராஜ்யசபாவிற்கு, இரண்டு ஓட்டைப் போட்டுவிட்டு ஒரு எம்.பி. (34 எம்.எல்.ஏ.க்கள் மதிப்புடையது) கேட்டால் இது சரிப்பட்டு வராது. இப்படிப் பேரம் பேசும் நிலை சில்லரைக் கட்சிகளுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக  ஜெயலலிதா இம்முடிவை எடுத்தார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு தனது 15 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுக்களைப் போட்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டுச் சேர நேர்ந்தால் அவர்களின்  பேரம் பேசும் பலத்தை வெகுவாகக் குறைத்துவிட்டார்.

கருணாநிதிக்கு இது மகளின் பிரச்சினை என்பதால், மமகட்சிக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கலாம். இரண்டு ஓட்டிற்காக இரண்டு எம்.பி.க்கள் சீட்டு தருவதாகவும் சொல்லியிருக்கலாம். என்ன பேசப்பட்டது என்பது பேசியவர்களுக்குத்தான் தெரியும்.

இவர்கள் என்ன வாங்கியிருந்தாலும், ஜெயலலிதாவின் அதிரடி முடிவால் பெரிய அளவில் பேரம் பேசும் வாய்ப்பை அல்லாஹ் பறித்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

Tuesday, June 25, 2013

நோன்பின் சட்டங்கள்-3 (வீடியோ)

நோன்பின் சட்டங்கள்-3 (வீடியோ)

நம்மை நோக்கி நன்மைகளை கொள்ளை அடிக்கும் மாதமான ரமலான் மாதம் வந்து கொண்டு இருக்கிறது .அதை வரவேற்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் தினம் சிறிது நேரம் நோன்பின் சட்டங்களை சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பேசுவார்கள் அது நமது தளத்தில் தினம் வெளியிடப்படும் .

சகோதரர்கள் ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் எனில் நமது தளத்தில் கேட்கலாம் .சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பதில் அளிப்பார்கள்.

மாற்று மதத்தினர் உள்பட இருவருக்கு கல்வி உதவி!

மாற்று மதத்தினர் உள்பட இருவருக்கு கல்வி உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகிற்து அதன் அடிப்படையில் இந்த வருடமும் முதல் தவனையாக 11ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு ஒரு வருட கல்வி கட்டணமாக தலா  ரூ5250 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


வெற்றிலைக்காரத் தெருவை சார்ந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கான கல்வி கட்டணம் ரூ 5250 அவரின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.


கரையுர் தெரு சார்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் பவித்ரா என்ற மாணவிக்கான ஒரு வருட கல்வி கட்டணம் ரூ5250 அவரின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது

Monday, June 24, 2013

மாற்றுமத சகோதரிக்கு அல்குரான் அன்பளிப்பு

அதிரை கிளையின் சார்பாக பட்டுக்கோட்டையில் மாற்றுமத சகோதரிக்கு அல்குரான் வழங்கப்பட்டது






Sunday, June 23, 2013

நோன்பின் சட்டங்கள்-2 (வீடியோ)


நோன்பின் சட்டங்கள்-2 (வீடியோ)

நம்மை நோக்கி நன்மைகளை கொள்ளை அடிக்கும் மாதமான ரமலான் மாதம் வந்து கொண்டு இருக்கிறது .அதை வரவேற்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் தினம் சிறிது நேரம் நோன்பின் சட்டங்களை சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பேசுவார்கள் அது நமது தளத்தில் தினம் வெளியிடப்படும் .

சகோதரர்கள் ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் எனில் நமது தளத்தில் கேட்கலாம் .சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பதில் அளிப்பார்கள்.

Saturday, June 22, 2013

நோன்பின் சட்டங்கள்-1 (வீடியோ)

நோன்பின் சட்டங்கள்-1 (வீடியோ)

நம்மை நோக்கி நன்மைகளை கொள்ளை அடிக்கும் மாதமான ரமலான் மாதம் வந்து கொண்டு இருக்கிறது .அதை வரவேற்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் தினம் சிறிது நேரம் நோன்பின் சட்டங்களை சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பேசுவார்கள் அது நமது தளத்தில் தினம் வெளியிடப்படும் .

சகோதரர்கள் ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் எனில் நமது தளத்தில் கேட்கலாம் .சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பதில் அளிப்பார்கள்.

ரமலானின் சட்டங்கள் from Adiraitntj on Vimeo.

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக தையல் மிஷின் வாழ்வாதார உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நெசவுத்தெருவை சார்ந்த சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷன் ஒன்று வழங்கப்பட்டது.

பூமி பூஜை செய்வது மார்க்கமா? மடமையா? - விளக்க வீடியோ


பூமி பூஜை செய்வது மார்க்கமா? மடமையா? - விளக்க வீடியோ
உரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

Friday, June 21, 2013

இஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)!


இஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)!
உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம மிகச் சிறந்த மார்க்கமாகத் திகழ்கிறது. ஆனால் இந்த மார்க்கம் எப்படிச் சிறந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் திகழ்கிறது என்பதை முஸ்லிமல்லாதவர்களூம் முஸ்லிம்களில் பலரும் அறியாமல் உள்ளனர். 

சமீபத்தில் நமது ஊரில் நிகழ்ந்த மரணத்தில் தனது தாய்க்கு ஜனாஸா தொழுகை நடத்த வந்த சகோதரனை தடுத்து நிறுத்த முயன்ற லப்பை உனக்கு அல்ஹம்து சூரா ஓத தெரியுமா என்று கேட்டு தலைக்கு தொப்பி போடாமல் தொழ வைக்க கூடாது என்று சொல்லி முரண்டு பிடித்ததும் அதை கேட்டு சுன்னத்தானா தாடியை வைக்காமல் வழித்து சிறைத்த கூட்டம் தொப்பி போடு ,தொப்பி போடு என்று ஜனாஸாவை வைத்து கொண்டு காச், மூச் என்று கத்தி ஓலமிட்டது .

அந்த நேரத்தில் சச்சரவை விரும்பாத சகோதரன் தொப்பி போட்டு தொழ வைத்தான் .தொழுகை முடிந்த உடனேயே அதை தொடர்ந்து அவர்கள் நடத்தும் துவா, தல்கீன் என்று இஸ்லாத்தில் இல்லாத அனைத்து அனாச்சாரங்களும் நடந்து முடிந்தது .அதை தடுக்க முடியாமல் தொழுகையை மட்டும் நடத்திய திருப்தியுடன் அந்த சகோதரன் பார்த்து கொண்டு நின்றான் .

நமது ஊர் ஆலீம்கள் நிறைந்த ஊர் என்று சொல்கிறார்கள் அப்படி இருக்க இந்த ஆலீம்கள் மார்க்கத்தை சொல்லாமல் இருப்பதால் தானே இந்த லப்பைமார்கள் ஓநாய்களை போல ஓலமிடுகிறார்கள். மார்க்கத்தை சொல்ல விடாமல் அவர்களை தடுப்பது எது ?

'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.(புகாரி 79)

நபி (ஸல்) அவர்கள் மார்க்க அறிவை ஒரு பெரிய மழையுடன் ஒப்பிட்டு அது சென்றடைகிற இடங்களை,மார்க்க அறிவை தேடி அதை பிறர்க்கு கற்று கொடுப்பவர் மார்க்க அறிவை அறிந்து கொள்ள முடியாதவர் இவர்களின் நிலைகளை உதாரணம் காட்டி மார்க்க அறிவின் அவசியத்தை பற்றி வலியுறுத்தினார்கள்.

மார்க்க அறிவை தானும் கற்று பிறர்க்கும் பயன்பெறும் வகையில் நடப்பவர்களை நீரை உறிஞ்சி அதன் மூலமாக புற்பூண்டுகள் முளைக்க கூடிய நிலங்களுக்கும் தண்ணீரை தேக்கி வைத்து மக்கள் பருகி விவசாயத்திற்கு நீர் பாய்ச்சி பயன் பெறக் கூடிய கிணறுகள், குளம் குட்டைகள் இருக்கும் நிலங்களுக்கும் ஒப்பிட்டு கூறுவதிலிருந்து மார்க்க அறிவை அறிந்து அதை பிறர்க்கு பயன்பெற செய்பவர்கள் சிறப்பு பற்றி விளங்குகிறது .

இதை பற்றி அல்லாஹ் தன் திருமறையில்:

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்(58:11)

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன். (35:28)

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடை யோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.(2:269)

இவ்வாறு பல்வேறு சிறப்புக்களையும் உலகம் முழுவதும் பரவி மக்களின் அடிப்படை தேவைகளாக இருக்கின்ற நீர்நிலைகளை போல இருக்க வேண்டிய ஆலீம்கள் அறிவை கற்று அதனை மக்களுக்கும் போதிக்கின்றார்களா ?என்று பார்த்தால் மார்க்கம் என்ற பெயரில் மத்ஹப் குப்பைகளையும் ,மவ்லீதுகளையும் ,பிதத்களையும் அதனையே வணக்க வழிபாடுகளாக மக்களுக்கும் போதிக்கிறார்கள் .மக்களுக்கு அறிவுரை கூற கூடிய இவர்களின் சொற்பொழிவுகளில் இந்த அடிப்படையில் கட்டுகதைகளும் ,நகைச்சுவைகளும் நிறைந்து இருக்கும் .இதற்கு காரணம் சரியான மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாததும் அல்லது தெரிந்து கொண்டு மார்க்கத்தை தன் வயிற்று பிழைப்புக்காக மறைப்பதும் தான்.

இது போன்றவர்களை அல்லாஹ் சபிக்கின்றான் 


வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர் (2:159).

இப்போது அடிக்கல் நாட்டு விழா என்று மார்க்கத்தில் இல்லாத ஒன்றை நடத்தி காட்டி இருக்கிறது ஊருக்குள் வந்த சாப கேடு ஒன்று. மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று கூறி இவருடைய மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு கற்று கொடுக்க வந்து இருக்கிறது.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக! (Al-Hujuraat: 16)

இந்த குள்ளநரி சாயம் பூசி வந்ததை அறிந்தோ அறியாமலோ நமது ஊர் ஆலீம்? என்று சொல்லி கொள்ளும் சிங்கங்கள் கண் மூடி மவுனம் சாதிக்கின்றார்கள் .

மாற்று மத கலாசாரத்தை பின்பற்றுபவன் என்னை சேர்ந்தவன் இல்லை என்று ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்களே அது இந்த குள்ளநரிக்கு தெரியாதா?

நமது ஊர் மார்கத்தை கற்ற ஆலீம்களுக்கு(?) தெரியாதா ?

இவர்கள் மவுனமாக இருக்க வெளியூரில் இருந்து வந்து ஓரளவு அரசல்புரசலாக மார்க்கத்தை சொல்லும் ஹைதர் அலி ஆலிமுக்கு தெரியாதா ?

ஆலீம்மார்களே சனிக்கிழமை மீன் பிடித்த சமுதாயம் பற்றி உங்களுக்கு தெரியும் அப்போது நமக்கென்ன வம்பு என்று அதை தடுக்காமலும் தடுத்தவர்களை தடுத்தும் வந்தவர்களையும் தான் அல்லாஹ் அழித்தான், என்பதை ஞாபக படுத்தி இந்த அனாச்சாரங்களை வெளியே சொல்ல வாருங்கள் 

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (Al-Maaida: 57) 

அவர்கள் தமது மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டனர். இவ்வுலக வாழ்க்கை அவர்களை மயக்கி விட்டது. இந்த நாளைச்சந்திக்க வேண்டிவரும் என்பதை அவர்கள் மறந்து, நமது வசனங்களை அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தது போல் இன்று அவர்களை நாமும் மறந்து விட்டோம்6. (Al-A'raaf: 51)


தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (Al-An'aam: 159)

 நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ் தன் அடியார்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக ஓரேயடியாக மார்க்க அறிவை இல்லாமல் ஆக்கிவிடமாட்டான்.ஆனால் மார்க்கம் தெரிந்தவர்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக எந்த மார்க்க அறிஞரும் இல்லாத அளவுக்கு மார்க்கறிவை இல்லாமல் ஆக்குகிறான். இறுதியில் மக்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்குவார்கள். அவர்களிடத்தில் மார்க்கத் தீர்ப்பு கேட்கப்படும்போது மார்க்கத்தில் இல்லாததைத் தீர்ப்பாக வழங்கி தாங்களும் வழி கெட்டு மக்களையும் வழிகெடுப்பார்கள்.

 அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ்
 நூல்: புகாரி 100

மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்கும் வரை முஹம்மது குட்டி போன்ற மார்க்க வியாபாரிகளின்  அட்டகாசம் அடங்காது.

இவ்வாறு பூமி பூஜை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது  என்று  தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்கள் முன்வர வேண்டும். விவாதத்திற்கு வந்தால் தலைப்பாகை கழன்று விடும். இன்ஷா அல்லாஹ்.

தொடர்புடையவை:

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.06.13(வீடியோ )


அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்
உரை :யாசர் அரஃபாத் இம்தாதி
தலைப்பு  பராஅத் இரவு



அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.06.13 from Adiraitntj on Vimeo.

Thursday, June 20, 2013

அல்லாஹ்விற்கு மட்டும் சக்தி உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? கப்ர் வணங்கிகளின் கேள்வி (வீடியோ)

அல்லாஹ்விற்கு மட்டும் சக்தி உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? கப்ர் வணங்கிகளின் கேள்வி (வீடியோ)

கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளை என்ற ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள கப்ர் வணங்கிகளுக்கும் விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்திற்கு பின்னர் தமிழ் உலகில் இணைவைப்பு மற்றும் மத்ஹபு கொள்கை மலுங்கி போனது. அல்ஹம்துலில்லாஹ்.

களியக்காவிளை விவாதத்தில் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள கப்ர் வணங்கிகள் 'அல்லாஹ்விற்கு மட்டும் தான் சக்தி உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்கும் அற்புத காட்சி. இந்த கப்ர் வணங்கிகளுக்கு அல்லாஹ்வின் மீது இருக்கும் நம்பிக்கையை இந்த வீடியோ படம் பிடித்து காட்டுகிறது.

Sunday, June 16, 2013

இணைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் டிஎன்டிஜே! (வீடியோ)

ணைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் டிஎன்டிஜே! (வீடியோ)

ஒரே நாளில் 121 வீடுகளில் இணைவைப்பு பொருட்கள் அகற்றம்.

மந்திரித்து கட்டப்பட்ட தட்டு, தாயத்து, தகடுகளில் கைவைத்தால் அதை அறுப்பவருக்கு தீங்கு ஏற்படும் என்று மக்கள் பயந்துவரும் நிலையில், ஏகத்துவ பிரச்சாரத்தின் வாயிலாக இத்தகைய இணைவைப்பு பொருட்களை அகற்றி ஏகத்துவ புரட்சி செய்துள்ளனர் டிஎன்டிஜேயினர்.


உலகமே திரும்பிப் பார்க்கும் இவர் யார்? (வீடியோ)

உலகமே திரும்பிப் பார்க்கும் இவர் யார்?

Saturday, June 15, 2013

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசல் கட்டுமான பணி முழுமையடைய உதவுங்கள்

அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசல் கட்டுமான பணி முழுமையடைய உதவுங்கள்


அதிராம்பட்டிணத்தில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து, இணைவைப்பு, பித்அத் போன்ற பெரும்பாவங்களில் இருந்து மக்களை மீட்டு எடுக்கும் பணியை செவ்வனே செய்ய உதவும், 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' என்ற ஏகத்துவ முழக்க பள்ளிவாசலின் கட்டிட பணி முழுமையடைய உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.

சத்திய பணியில் உங்களின் பங்களிப்பின் மூலம் நன்மையில் உங்களின் பங்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ் பள்ளி கட்டுமான பணி வெகு விரைவாகவும் சிறப்பாகவும் நடந்து வருகிறது .வரும் ரமலான் மாதம் தொழுகை பள்ளிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம் .அனைவரும் அதற்காக துவா செய்வதுடன் தங்களால் இயன்ற அளவு பள்ளிக்கு வாரி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்

பள்ளி வேலை முழுமை பெற இன்னும் ஆக வேண்டிய செலவுகள்

மரவேலைகளுக்காக சுமார் 4 லட்சம்

எலெக்ட்ரிக் வேலைகளுக்காக சுமார் 2.25லட்சம்

கல் வகையரா சுமார் 3.60 லட்சம் 

பெயின்ட் சுமார் 2 லட்சம்

இதர வேலைகளுக்கு சுமார் 3 லட்சம் 

மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி பற்றிய விபரம்: http://www.adiraitntj.com/p/blog-page.html

நன்கொடை அனுப்ப http://www.adiraitntj.com/p/blog-page_29.html

நன்கொடை அனுப்ப மற்றும் மேலதிக விபரத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள்.