Wednesday, August 01, 2012

பதவி வெறி என்றால் என்ன என்று பாடம் ‎நடத்திக்காட்டிய வாத்தியார்!



பதவி வெறி என்றால் என்ன என்று பாடம் ‎நடத்திக்காட்டிய வாத்தியார்!




ம.ம.கட்சியின் மூத்த தலைவர் வத்தியாரின் பதவி வெறி ரொம்ப ‎முற்றிப்போய் அந்தப் பதவி வெறி மிக உச்சத்தை எட்டியுள்ளது.‎
‎ 
கடந்த வாரம் பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அவர் எந்த அளவிற்கு ‎பதவி வெறி பிடித்து அலைகின்றார் என்பதைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது.‎
‎ 
சமீபத்தில் வக்ஃபு வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு ‎உத்தரவு பிறப்பித்தது. அதில் நமது ஜால்ரா மன்னனின் பெயர் இடம் ‎பெறவில்லை. இந்த அளவிற்கு அம்மாவிற்கு சிங்கி அடித்து, ஜிங்சா ‎தட்டியபோதும், அ.தி.மு.க.வினரே ஆச்சர்யப்படக்கூடிய அளவிற்கு அம்மா ‎புகழ் பாடிய போதும் தனக்கு அதில் இடம் வழங்கப்படவில்லையே என்று ‎நொந்து கொண்ட நமது ஜால்ரா மன்னன் சீறி எழுந்தார்.‎
‎ 

வக்ஃபு வாரியத்தின் உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்த ஆணைக்கு ‎எதிராக ஜால்ரா மன்னன் அந்த நியமனத்துக்குத் தடை கோரி வழக்குத் ‎தொடர்ந்தார்.‎
‎ 
அதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தியை அப்படியே இங்கு ‎தருகின்றோம்.‎
வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் நியமனத்துக்கு தடை கோரி வழக்கு: – ‎அமைச்சருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!‎
சென்னை ஐகோர்ட்டில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தாக்கல் செய்த ‎மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-‎
‎ 
வக்பு வாரியம், கோடிக்கணக்கான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. ‎இதற்கான உறுப்பினர்களாக பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ‎சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜான், எம்.எல்.ஏ. அப்துல்ரகீம், ‎எம்.பி.க்கள் ஹாரூன் ரஷீத், அமீர் அலி ஜின்னா மற்றும் தமிழ்மகன் உசேன், ‎பாரூக்,தலைமை ஹாஜி (சன்னி) சலாஹுதீன் அயூப், தலைமை ஹாஜி ‎மெஹ்திகான் ஆகிய 8 பேரை நியமித்து 15.6.12 அன்று தமிழக அரசிதழில் ‎அறிவிப்பு வெளியிடப்பட்டது.‎
‎ 
இந்த நியமனத்தில் விதிமுறைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ‎செயலாளர் சரியாகப் பின்பற்றவில்லை என்பதால்,தகுதியுள்ள என்னால் ‎உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாமல் போய்விட்டது. தகுதியில்லாதவர் கூட ‎உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.‎
‎ 
தேர்தலுக்கு வாய்ப்புள்ள நிலையில் அரசு தனது இஷ்டப்படி ஒருவரை ‎உறுப்பினராக நியமிக்க முடியாது. நியமன உறுப்பினர்களின் ‎எண்ணிக்கையைவிட தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினரின் எண்ணிக்கைதான் ‎அதிகமாக இருக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாமல் ‎உறுப்பினர்களை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய ‎வேண்டும்.‎
‎ 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.‎
‎ 
இந்த மனுவை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். இந்த மனுவுக்கான பதில் ‎மனுவை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்யும்படி அமைச்சர் முகமது ஜான், ‎அரசுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதி ‎உத்தரவிட்டார்.‎
மேற்கண்டவாறு செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியிருந்தது.‎
‎ 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமுதாய நலன் கருதி தீமைக்கு எதிராக களம் ‎காணுவார்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பார்கள். ஆனால், இந்த ஜால்ரா ‎மன்னனோ தன்னை வக்ஃபு வாரிய உறுப்பினராக தமிழக அரசு ‎நியமிக்கவில்லை. அதனால் இந்த உத்தரவு செல்லாது என்றும், தமிழக அரசு ‎நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ‎நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் என்றால் இவரது பதவி வெறியை, ‎பதவி மோகத்தை நாம் என்னவென்பது?‎
‎ 
ஜால்ரா மன்னனின் இந்த நடவடிக்கையில் ஏதாவது சமூக நலன் உள்ளதா? ‎இல்லை. அறவே இல்லை. முழுக்க முழுக்க தனக்கு பதவி ‎வழங்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இவர் இந்த வழக்கை ‎தொடுத்திருப்பதிலிருந்து அவர் தன்னைப் பற்றி இந்த இஸ்லாமிய ‎சமுதாயத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.‎
‎ 
தற்போது இவர் தன்னை உறுப்பினராக அறிவிக்காதததால், இந்த ‎நியமனத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோருவதற்கு அவர் சொல்லும் ‎காரணம், முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்று ‎கூடி ஓட்டுப்போட்டுத்தான் வக்ஃபு வாரிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ‎வேண்டுமாம். அப்படியில்லாமல் தன்னிச்சையாக இவர்கள் அறிவித்ததை ‎ரத்து செய்ய வேண்டுமாம். அதுதான் இவர் சொல்லும் காரணம்.‎
‎ 
அப்படியானால், இதற்கு முன்பாக தி.மு.க. ஆட்சியில் ஹைதர் அலியை ‎வக்ஃபு வாரிய சேர்மனாக அறிவித்தார்களே! அப்போது இதுபோல தேர்தல் ‎நடத்தி முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் எல்லாம் கூடி ஓட்டுப் ‎போட்டுத் தேர்ந்தெடுத்துத்தான் அவரை அறிவிப்புச் செய்தார்களா? ‎இல்லையே! அப்படியானால், இவருக்குச் சாதகமாக ஒரு முடிவை அரசு ‎அறிவித்தால் அப்போது விதிமுறைகள் பேணப்படத்தேவையில்லை. ‎அதேநேரத்தில் இவருக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை அரசு அறிவித்தால் ‎அப்போது மட்டும் இந்த ஜால்ரா மன்னர் சட்டம் பேசுகின்றார் என்றால், இது ‎எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதம்? இது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் என்பதை ‎மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.‎
‎ 
நீதிமன்றத்தில் இது வழக்காக தொடுக்கப்பட்டுவிட்டதால் அந்த வழக்கு ‎குறித்து அதனுள் செல்ல நாம் விரும்பவில்லை. அதுபோல இவர் ‎சொல்லக்கூடிய சட்டதிட்டங்கள் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட ‎வேண்டுமா? இல்லாவிட்டால் அது செல்லாதா? என்பது குறித்தும் நாம் சர்ச்சை ‎செய்ய விரும்பவில்லை. இங்கு நாம் சுட்டிக் காட்ட விரும்பும் முக்கியமான ‎விஷயம், இவ்வளவுக்கும் மீறி இவரது பதவி வெறி எந்த அளவுக்கு ‎தலைவிரித்து ஆடுகின்றது என்பதை தெளிவுபடுத்துவதே!‎
பொருளாதார மோசடி வழக்கில் சிக்கியவருக்கு பதவி கிடைக்குமா?:‎
‎ 
அதுமட்டுமல்லாமல், இந்த ஜால்ரா மன்னன் சமீபத்தில்தான் பொருளாதார ‎மோசடி வழக்கில் சிக்கி, இவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட ‎வேண்டும் என்பதை தனக்கு தீர்ப்பாகப் பெற்று வெளியில் நடமாடிக் ‎கொண்டிருக்கின்றார். அப்படியிருக்கையில் அரசாங்கத்தின் பார்வையில் ‎மோசடி மன்னனாகத் திகழக்கூடிய இந்த ஜால்ரா மன்னனுக்கு எப்படி வக்ஃபு ‎வாரியப் பதவி கிடைக்கும் என்பதை அவர் யோசிக்க வேண்டாமா? அந்த ‎அளவிற்கு அவருடைய பதவி வெறி தான் ஓராண்டு ஜெயில் ‎தண்டனையைத் தீர்ப்பாகப் பெற்ற குற்றவாளி என்பதையும் கூட மறக்கடிக்கச் ‎செய்துவிட்டதா? அந்த அளவிற்கு இவரது பதவி வெறி தலைக்கேறி விட்டது.‎
இதற்கு வழக்குப் போட்டுள்ளீர்களே! உங்களுக்கு மான ஈனம் இல்லையா?:‎
‎ 
ஜால்ரா மன்னன் தனக்குப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக வழக்கு ‎தொடுத்துள்ளாரே! அவரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றோம்.‎
‎ 
சென்ற பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ம.ம.கட்சியினர் வக்ஃபு ‎வாரியச் சேர்மன் பதவியைப் பயன்படுத்தி பலகோடி ரூபாய் வக்ஃபுச் ‎சொத்துக்களை தின்றுவிட்டனர். ஊழல் செய்து கொள்ளையடித்துவிட்டனர். ‎வக்ஃபுச் சொத்துக்களைத் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர் ‎என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு சொல்லி அதை உணர்வு இதழிலும் ‎ஆதாரத்தோடு வெளியிட்டு அம்பலப்படுத்தினோமே அதற்கு எதிராக எங்கள் ‎மீது வழக்குத் தொடுத்தீர்களா?‎
‎ 
நீங்கள் உண்மையாளர்களாக இருந்திருந்தால், வாத்தியாருக்கு ‎உண்மையிலேயே மான ஈனம் என்பது இருக்குமேயானால் மானம் ‎போகக்கூடிய இந்த விஷயத்திலல்லவா வழக்குத்தொடுத்திருக்க வேண்டும். ‎செய்தார்களா? இல்லவே இல்லை.‎
‎ 
அதுமட்டுமல்ல வக்ஃபு வாரியச் சேர்மனாக இருந்து கொண்டு ‎கொள்ளையடித்தவை எவ்வளவு? ஊழல் செய்தது எவ்வளவு? தாரை ‎வார்த்ததுக் கொடுத்தது எவ்வளவு என்பதை தோலுரித்துக்காட்ட பகிரங்க ‎விவாதத்திற்கு அழைத்து அவர்களது அலுவலகத்திற்கே நேரில் சென்று ‎அவர்களிடம் விவாத அழைப்புக் கடிதம் கொடுத்தோம். விவாதிக்க ‎வந்தார்களா இந்த ம.ம.கட்சியினர். வரவே இல்லையே!. அன்று பின்னங்கால் ‎பிடரியில் அடிக்க ஓட்டமெடுத்தவர்கள்தான்; இன்று வரை அது குறித்து மூச்சு ‎விடக்கூட மறுக்கின்றனர்.‎
‎ 
இவர்கள் சரியான ஆட்களாக இருந்தால், உண்மையிலேயே வாத்தியாருக்கு ‎வெட்கம், மானம், சூடு, சொரணை என்பதெல்லாம் துளியளவாவது ‎இருக்குமென்றால் நம்மோடு விவாதித்து, நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை ‎நிரூபித்துவிட்டு, தனக்கும் வக்ஃபு வாரிய உறுப்பினர் பதவி வேண்டும் என்று ‎கூறி இந்த வழக்கைத் தொடுத்திருப்பாரேயானால் இவரை தைரியசாலி என்று ‎சொல்லலாம். ஆனால் அப்போதும் தனக்காகத்தான் தனது பதவி வெறியின் ‎உச்சத்தில்தான் வெறிபிடித்து இந்த வழக்கை தொடுத்துள்ளார் என்ற ‎உண்மையை இவர் மறைக்க முடியாது.‎
அனைத்தும் உங்களுக்குத்தானா?:‎
‎ 
வாத்தியாருக்கு எந்த அளவுக்கு பதவி வெறி பிடித்தாட்டுகின்றதென்றால், ‎இராமநாதபுரத்தில் வேட்பாளராக நிற்பதற்குக்கூட நான் தான் வேட்பாளராக ‎நிற்பேன்; சென்னை எனது ஊராக இருந்தாலும் இங்கு தோற்கக்கூடிய ‎சேப்பாக்கம் தொகுதியில் நான் நின்று தோற்றுப்போகத் தயாரில்லை; ‎சேப்பாக்கத்தில் நின்று தோற்றுவிட்டு பின்பு கண்ணீர் கடிதம் எழுதுவதற்கு ‎என் அடிமைத் தம்பி தமீம் அன்சாரி உள்ளார். அவர் சேப்பாக்கத்தில் நின்று ‎தோற்கட்டும் என்று ஐடியா செய்து தானே இராமநாதபுரத்தில் ‎போட்டியிட்டார். அந்த அளவிற்கு பதவி ஆசை.‎
‎ • அதுமட்டுமல்ல எம்.எல்.ஏ சீட் கொடுத்தாலும் அதுவும் எனக்குத்தான்.‎
‎ • எம்.பி சீட் கிடைத்தாலும் அதுவும் எனக்குத்தான்.‎
‎ • வக்ஃபு வாரியத்தில் உறுப்பினர் என்றாலும் அதுவும் தனக்குத்தான் என்று ‎சொல்லக்கூடிய அளவிற்கு இவருக்கு
பதவி ஆசை தலைக்கேறி உள்ளது. ‎தமிழில் ஒரு பழமொழி சொல்வார்களே, “கல்யாண வீடாக இருந்தால் ‎நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்; இளவு வீடாக இருந்தால் ‎நான்தான் பிணமாக இருக்க வேண்டும்” என்று. அந்தப் பழமொழி இந்த ‎ஜால்ரா மன்னனுக்குத்தான் ரொம்ப பொருந்தும்.‎
‎ • பதவி வெறி பிடித்தவர் என்றாலும் அதுவும் நானாகத்தான் இருக்க ‎வேண்டும்.‎
‎ • ஜால்ரா தட்டுவதில் மன்னன் என்ற பட்டம் என்றாலும் அதுவும் ‎எனக்குத்தான் கிடைக்க வேண்டும்.‎
‎ • புளுகுவதில் மன்னர் பட்டம் கிடைப்பது என்றாலும் அதுவும் தனக்குத்தான் ‎கிடைக்க வேண்டும் என்று இவர் ஆசைப்படுவது ரொம்ப ஓவராகத்தான் ‎உள்ளது.‎
அவரவர் நிர்வகிப்பதுதான் சரியானது:‎
‎ 
இப்படி வக்ஃபு வாரியத்திலுள்ள இந்த பதவிக்காக அலையோ அலை என்று ‎அலைவதற்குக் காரணம் எப்படியாவது இந்தப் பதவியைப் பெற்று வக்ஃபுச் ‎சொத்துக்களை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நப்பாசைதான். ‎அதனால்தான் தனது மனுவின் ஆரம்பத்திலேயே, “வக்பு வாரியம், ‎கோடிக்கணக்கான சொத்துகளை நிர்வகித்து வருகிறது” என்று கோடிகளைக் ‎குறிப்பிட்டுக் கோடிட்டுக் காட்டுகின்றார்.‎
‎ 
இந்த வக்ஃபு வாரியத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்கள் ‎பறிபோகின்றதே தவிர பாதுகாக்கப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனமான ‎உண்மை. அதனால்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இப்படி ஒரு வாரியமே ‎தேவையில்லை; அதைக் கலைத்துவிட வேண்டும் என்று கோரிக்கை ‎வைக்கின்றது.‎
‎ 
கடந்த வாரம் இராமகோபாலன் கூட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ‎அதில் இந்து கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை இந்து ‎அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் அல்லாமல் சம்பந்தப்பட்ட கோவில் ‎நிர்வாகமே அதை நிர்வகிக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட வேண்டும் ‎என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.‎
‎ 
காரணமென்னவென்றால் அப்போதுதான் பொதுச்சொத்துக்கள் தனியாருக்கு ‎தாரைவார்க்கப்படும் அயோக்கித்தனங்கள் குறையும் என்பதால். அதுபோல ‎கிறித்தவர்கள் தங்களது தேவாலய சொத்துக்களை அவரவர்களே நிர்வகித்துக் ‎கொள்வதால் வளர்ச்சிப்பாதையை நோக்கி அவர்கள் செல்கின்றனர். ‎அதுபோல பள்ளிவாசல் சொத்துக்களை வக்ஃபு என்ற பேரில் அதில் கொண்டு ‎போய் சேர்த்துவிட்டு பறிகொடுப்பதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் ‎நிர்வாகமே அதைப் பாதுகாத்தால் ம.ம.கட்சியினரைப் போல ‎கொள்ளையடிக்கத் துடிக்கும் கொள்ளைக்காரர்களுக்கு ஆப்பு விழும். அந்த ‎வகையில் வக்ஃபு வாரியத்தைக் கலைத்துவிட்டு புதிய சட்டதிருத்தத்தை ‎தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.‎
உதவியும் வேண்டாம்; தலையிடவும் வேண்டாம்:‎
‎ 
அந்த அடிப்படையில் சட்டமியற்றி முஸ்லிம்களின் சொத்துக்கள் பாதுகாக்க ‎வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. ‎முஸ்லிம்களின் சொத்துக்களில் அரசு தலையிடவும் வேண்டாம்; எந்த ‎உதவியும் செய்யவும் வேண்டாம்” என்றாலே அவர்களது வக்ஃபு சொத்துக்கள் ‎பாதுகாக்கப்பட்டுவிடும். இதைச் செய்தால் நீதிமன்றங்கள் வாத்தியார் ‎தொடுத்த இது போன்ற வழக்குகளை விட்டும் தவிர்ந்து கொள்ளலாம்.
தமிழக ‎அரசு இதைச் செய்ய முன்வருமா?‎
ஏற்கனவே செய்த அட்டூழியங்கள் போதாதா? :‎
‎ 
ஏற்கனவே இந்த ம.ம.கட்சியின் பொதுச்செயலாளர் ஹைதர் அலி என்பவர் ‎வக்ஃபு வாரியச் சேர்மனாக இருந்த போது என்னென்ன அட்டூழியங்கள் ‎செய்தார் என்பதையும், வக்ஃபு வாரியச் சேர்மன் பதவியைப் பயன்படுத்தி,‎
‎ • இவர்கள் செய்த கட்டப்பஞ்சாயத்துக்கள் எவ்வளவு?‎
‎ • பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளை இவர்கள் அந்தப் பதவியை வைத்து ‎எப்படியெல்லாம் மிரட்டினார்கள்?‎
‎ • எந்த அளவிற்கு வக்ஃபு சொத்தை தனியாருக்குத் தாரைவார்த்தார்கள்?‎
‎ • எந்த அளவிற்கு ஊழல் செய்தார்கள்
என்ற கதையெல்லாம் சொல்லிமாளாது.‎
‎ 
அப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தைச் செய்து பதவி சுகம் அனுபவித்து ‎ஊர்சொத்தை உலையில் அடித்துப் போட்டது போதாதென்று தற்பொழுது ‎தனக்கு அந்த உறுப்பினர் பதவி வேண்டும் என்று இந்த ஜால்ரா மன்னர் ‎கேட்கின்றார் என்றால், ஏன் இந்த எலும்புத்துண்டிற்காக இந்த அளவிற்கு ‎மானமிழந்து நிற்கின்றார்கள் என்பது விளங்குகின்றதா? மறுபடியும் அந்த ‎கட்டப்பஞ்சாயத்து, ஊழல், சுரண்டல், வக்ஃபு சொத்துக்கள் தாரைவார்ப்பு என்று ‎சகலத்தையும் செய்து காசு பார்க்கத்தான் என்பது விளங்குகின்றதா? ‎இல்லையா?‎
இதுதான் சமுதாய ஒற்றுமை பேணும் லட்சணமா?:‎
‎ 
இந்த ஜால்ரா மன்னன் சமுதாய ஒற்றுமை குறித்து அடிக்கடி வாய்கிழியப் ‎பேசுவார். வழக்குத்தொடுத்த இந்த ஜால்ரா மன்னன் என்ன செய்துள்ளார் ‎தெரியுமா?. தனது மனுவில் வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட ‎அனைவருக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் இவரை விட ‎அரசியலிலும், அனுபவத்திலும் மூத்த ஹாரூன் எம்.பி மற்றும் இன்னபிற ‎முஸ்லிம் அரசியல்வாதிகளும் அடங்குவர். இந்த அளவிற்கு கேவலமாக ‎யாராவது பதவிக்காக அநாகரீகமான முறையில் நடந்து கொள்வார்களா?‎
‎ 
இவர் உண்மையிலேயே சமுதாய ஒற்றுமையை விரும்பக்கூடியவராக ‎இருந்தால், அவர்களுக்காக நான் விட்டுத்தருகின்றேன் என்று சொல்ல ‎வேண்டியது தானே! அதை விட்டுவிட்டு அவர்களை வக்ஃபு வாரிய ‎உறுப்பினராக நியமித்தது செல்லாது என்று உத்தரவிடச் சொல்லி இவர் ‎வழக்குத் தொடுப்பதிலிருந்தே இவர் பேசும் சமுதாய ஒற்றுமை ‎என்பதெல்லாம் வாய்ஜாலம்தான் என்பதும், தனக்குப் பதவி ‎கிடைக்கவில்லையென்றால், அந்தப் பதவியைப் பெறுவதற்காக இவர் ‎யாருக்கு எதிராகவும் வழக்குத்தொடுப்பார் என்பதும் இதன் மூலம் ‎தெளிவாகின்றது.‎
‎ 
ம.ம.கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ அஸ்லம் பாட்ஷாவுக்கு உறுப்பினர் ‎பதவி கொடுங்கள் என்று கேட்க மனமில்லாதவர், அடுத்த கட்சியினரை விட்டு ‎வைப்பாரா என்று கேட்கின்றீர்களா? அதுவும் நியாயமான கேள்விதான்.
நன்றி :www.tntj.net