ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு ஓர் அறைகூவல்
[மார்க்கம் என்ற பெயரில் விட்டு அடிக்கும் ஹைதர் அலி நமது சவாலை இதுவரை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது]
பெண்கள் முகத்தை மூடாவிட்டால் ஹராம் என்று சொல்லும் ஃபத்வா சரியானதா ?
ஹைதர் அலி ஆலிம் (?) அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் எதையாவது சொல்லுவது,
அதை பற்றி கேள்வி எழுப்பினால் எஸ்கேப் ஆகிவிடுவது என்பதையே கொள்கையாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் பெண்கள் முகத்தை கட்டாயமாக மறைக்க வேண்டும் என்று
அள்ளிவிட்டுள்ளார்.
இதற்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இவருக்கு விவாத அழைப்பு
கீழ்காணும் விடியோவில் விடப்பட்டுள்ளது. விவாதத்திற்கு வந்து இவரின் கொள்கையை
நிலைநாட்டுகிறாரா? என்று பார்ப்போம்.
விவாதத்திற்கு வந்தால் இவர் தூக்கி
பிடிக்கும் மத்ஹபின் அசிங்கங்களையும் ஆபாசங்களையும் அள்ளிப்போட்டு இவரின் முகத்திரையை
கிழிக்க வசதியாக இருக்கும். வருடம் முழுவதும் லைலத்துல் கத்ர் வரும் என்று
கதைவிடும், இவர் தூக்கி பிடிக்கும் தப்லீக் தஃலிம் கிதாபின் கப்சாக்களையும்
அள்ளிப்போட வசதியாக இருக்கும்.
வருகிறாரா என்று பார்ப்போம். சத்தியம்
இருந்தால் தானே வர முடியும்? வந்து கேவலப் படுவதா ? அல்லது வராமல் கேவலப்படுவதா?
என்பதை ஆலிம்சா (?) அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தர்ஹாவிற்கு எதிராக
பேசிவிட்டு, எவனாவது மிரட்டினால், அடுத்த நாள் நான் அப்படி பேசலைங்க என்று தைரியமாக
தனது தொடை நடுக்கத்தை கப்ர் வணங்கிகளிடம் வைத்து கொள்ள வேண்டும். சத்தியத்தில்
இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திடம் மோதினால், கேவலம் தான் மிஞ்சும் என்பதை எச்சரிக்கையாக
சொல்லிக்கொள்கிறோம்.
இந்த ஆலிம்சாவை தூக்கிபிடிக்கும் தவ்ஹீத்வாதிகள் (?) திருந்துவது எப்போது?
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.