தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல்கள்தான் சரியான தீர்வு என்பதை உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆட்சியாளர்களும், அனைத்து மக்களும் உணர்ந்து கொண்டு இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களை தங்களது நாடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு கோரிக்கை விடுப்பது மட்டுமின்றி பல நாடுகளில் இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தத் துவங்கியும் விட்டனர்.
இப்படி உலகமே இஸ்லாத்தை நோக்கியும், இஸ்லாம் சொல்லக்கூடிய சட்ட திட்டங்களை நோக்கியும் திரும்பிப்பார்த்து அவற்றை ஏற்றுக் கொண்டு வரும் இந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் பாசிசவாதிகள் இஸ்லாம் காட்டித் தந்த சட்டதிட்டங்கள் கொடூரமானவை என்று கூறி இஸ்லாம் சொல்லக்கூடிய சட்டதிட்டங்களை அப்புறப்படுத்த கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்களது ஊது குழலாக மாறி வரும் ம.ம.கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் அந்த சங்பரிவாரத்தின் கோரிக்கையை தனது கோரிக்கையாக வாந்தி எடுத்து வருகின்றார்.
சமீபத்தில் பிஜேபி தலைவர் இல.கணேசனுடன் ஒரே மேடையில் உற்சாகத்தோடு கைகோர்த்து நின்று போஸ் கொடுத்து தனது பாசிச முகத்தை வெளிப்படுத்தினார்.
அதற்கு விளக்கம் சொல்கின்றேன் என்று அவர் விட்ட அறிக்கையைப் பார்த்துவிட்டு அதன் பிறகு பல சகோதரர்கள் அவரைக் காரித்துப்பி விட்டு, ம.ம.கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.
இப்படி நிலைமை மோசமாகி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ம.ம.கட்சியின் ஜால்ரா மன்னன் கலந்து கொண்டு மரண தண்டனையை ஒழிப்பதுதான் தனது தலையாய பணி என்று சூளுரைத்துள்ளார்.
மரண தண்டனை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வாறு, “மரண தண்டனை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தமிழனுடைய உணர்வாக இருக்க முடியும்” என்று கூறி தனது மொழி வெறியை வெளிக்காட்டியுள்ளார். இஸ்லாமிய சட்டதிட்டத்தைவிட தனது இனவெறிதான் முக்கியம் என்பதை தனது சூளுரையின் வாயிலாக நிரூபித்துள்ளார்.
“மரணதண்டனை வழங்குவது என்பது மிகப்பெரும் கொடூரம்” என்று கூறி திருவாய் மலர்ந்துள்ளார்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் :
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை,பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள் அல்குர்-ஆன் 2 : 178, 179
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கொலைக்குப் பகரமாக கொலை என்ற சட்டத்தின் மூலம் நமக்கு வாழ்வு உள்ளதாக சொல்லிக்காட்டுகின்றான்.
மேலும்,
உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள் அல்குர்-ஆன் 5 : 45
மேற்கண்ட வசனத்தில் உயிருக்கு உயிர் என்பதுதான் சரியானது என்று அல்லாஹ் சொல்லிக்கட்டுகின்றான். இந்த நாட்டில் உள்ள உருப்படியான சட்டம் ஒன்று உள்ளதென்றால் அது இந்த மரணதண்டனை வழங்கும் சட்டம்தான். மற்ற குற்றவியல் சட்டங்கள் எல்லாம் பல வருடங்கள் குற்றம் செய்தவனுக்கு சோறு போட்டு, அவனை படிக்க வைத்து, அவனுக்கு பாதுகாப்பளித்து, மருத்துவம் பார்த்து, அவனுக்குத் தேவையான அனைத்து சுக போகங்களையும் வழங்கக் கூடிய மானங்கெட்ட சட்டமாகத்தான் உள்ளன.
அல்லாஹ் சொல்லக்கூடிய இந்த மரணதண்டனை வழங்கும் சட்டத்தை ஒரு முஸ்லிம் வரவேற்க வேண்டுமா? அல்லது அதை ஒழித்துக்கட்ட களம் காண வேண்டுமா?
அல்லாஹ்வுடைய இந்த சட்டத்தை யார் எதிர்ப்பார்கள்? இஸ்லாத்தை ஒழித்துக்கட்டத்துடிக்கும் பாசிசவாதிகள்தான் இந்த சட்டத்தை ஒழித்துக்கட்டத் துடிப்பார்கள். அந்த பாசிசவாதிகளின் ஏஜெண்டாக செயல்படும் ம.ம.கட்சியின் தலைவரோ அல்லாஹ் எந்த ஒரு சட்டத்தில் வாழ்வு இருப்பதாக சொல்லிக்காட்டுகின்றானோ அந்த சட்டத்தை மவுத் ஆக்கப்பார்க்கின்றார்.
அல்லாஹ் சொல்லிக்காட்டக்கூடிய சட்டம் கொடூரமானது என்று சொல்லி சங்பரிவாரத்தின் கூற்றை, குற்றச்சாட்டை அப்படியே வாந்தி எடுத்து, தான் தமிழகத்து ஏஜெண்ட்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றார்.
அதற்காக நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொண்டு, “நான் இஸ்லாத்தை ஒழித்துக்கட்டத்துடிக்கும் இஸ்லாமிய துரோகிதான்” என்று நிரூபித்துள்ளார்.
ஜால்ரா மன்னனிடம் சில கேள்விகள்:
இந்த ஜால்ரா மன்னனிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம்.
மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் செய்கின்றாரே!
இவரது நெருக்கமான உறவினரையோ அல்லது குடும்பத்தாரையோ யாராவது கொன்றுவிட்டால் அவனுக்கு 28 ஆண்டுகள் இவர் தனது சொந்த செலவில் சோறு போட்டு, வாரம் ஒரு முறை சிக்கன் வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பாரா?
மரணதண்டனை என்பது கொடூரமான சட்டம் என்றால், கற்பழிப்பு, கொலை, போன்ற செயல்களை செய்யக்கூடியவர்களை என்ன செய்யச் சொல்லுகிறது இந்த சட்டமன்ற ஜனாஸா?
அதுமட்டுமல்லாமல் கடந்த பெருநாள் தினத்தன்று ராஜிவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களது மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் போட்டது முஸ்லிம்களுக்கு பெருநாள் பரிசு என்று நாக்கூசாமல் பேட்டி கொடுத்தார்.
அது போல இந்தப் பெருநாள் தினத்தன்று, இந்திய அரசாங்கம், மரணதண்டனை என்ற கொடூரமான சட்டத்தை ரத்து செய்து முஸ்லிம்களுக்கு பெருநாள் பரிசளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த ஜால்ரா மன்னன் தற்போது வசூல் மன்னனாக மாறி, சவூதி அரேபியாவில் சரணாகதி அடைந்து, அங்கு சென்று வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன.
மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட இந்தக் கொள்கை குன்று(?), மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சென்னையில் கூட்டத்தில் முழங்கிய தனது வீரமுழக்கத்தை சவூதி அரசாங்கத்திடம் முழங்க திராணி உண்டா? என்று இந்த ஜால்ரா மன்னனுக்கு சவால் விடுகின்றோம்.
அப்படி சவூதியில் மரணதண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இவர் வீர முழக்கமிட்டால் இவருக்கு அங்கு “முர்தத்” என்ற பட்டம் கொடுத்து மரண தண்டனை கொடுத்து விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்?
இந்த சட்டமன்ற ஜனாஸா இதே கோரிக்கையை வலியுறுத்தி சவூதியில் ரகசியக் கூட்டம் போட்டதாகவும் கேள்வி.
பிஜேபியின் பிரச்சாரத்தை சவூதியிலும் சென்று செய்யும் இந்த ஜால்ரா மன்னனை இஸ்லாமிய சமுதாயம்
அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
நன்றி tntj.net