தமுமுகவிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பிரிவினை ஏற்பட்ட போது பலர் தமுமுகவும் தவ்ஹீத் கொள்கையை தான் கொண்டுள்ளது என்று நம்பினார்கள் (நம்ப அளவுக்கு அவர்களும் ஏமாற்றினார்கள்). ஆனால், தவ்ஹீத் கொள்கை எங்களின் வளர்ச்சி தடை என்று எழுதிக்கொடுத்து விட்டுதான், இவர்கள் பிரிந்தார்கள். இன்றும் தமுமுக தவ்ஹீத் கொள்கையை தான் தூக்கி பிடிக்கிறது என்று சில அப்பாவிகள் நம்புகிறார்கள்.
அந்த இயக்கத்தில் இருக்கும் பலர் ஊருக்கு ஊர் தங்களின் வேஷத்தை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் எழுதிக்கொடுத்த கடிதத்தையும் இவர்கள் தவ்ஹீதிற்காக செய்ய தியாகங்களையும் நாம் வெளியிடும் போது இவர்களின் உண்மை முகம் புலப்படும், இன்ஷா அல்லாஹ்.
இவர்களும் தவ்ஹீத் என்று நம்பும் அப்பாவிகளுக்காக தான் இந்த ஆக்கம்.
தவ்ஹீத் எங்களுக்கு தடை
(இவர்கள் இப்படி எழுதிக்கொடுத்த முதல் இவர்களை அல்லாஹ் எந்த அளவுக்கு தருதலைகளாக ஆக்கிவிட்டான் என்பதை பின்னர் ஆதாரத்துடன் எழுதுவோம், இன்ஷா அல்லாஹ்).