
பேய் பிசாசுகளைத் துரத்தியடித்த டிஎன்டிஜே!
“பேய் நடமாட்டத்தால் மக்கள் பீதி!”, “பிசாசு நடமாட்டத்தால் மக்கள் கலக்கம்” என்று அடிக்கடி பரபரப்பு செய்தி வெளியிட்டு, தங்களது விற்பனையை சூடுபிடிக்க வைத்து பத்திரிக்கைகள் காசு பார்க்கின்றன. அந்த வகையில் கடந்த 12.07.2012 அன்று தினமலர் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள ஆத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் பெண் பேய் ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அது மொபைல் போனில் படம் எடுக்கப்பட்டதாகவும் ஒரு...