Thursday, June 28, 2012

சுகாதாரத்துறை அளித்த விளக்கம் சரியா? - விளக்கம் என்ற பெயரில் ம.ம.கவின் முகத்தில் கரி பூசிய சுகாதாரத்துறை!


விளக்கம் என்ற பெயரில் ..கவின் முகத்தில் கரி பூசிய சுகாதாரத்துறை :

இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது என்று தவ்ஹீத் ஜமாஅத் குற்றம்சாட்டி போராட்டத்தில் இறங்க, மற்ற முஸ்லிம் அமைப்புகளும் இந்த துரோகத்தை பெயரளவில் கண்டிக்க, ..கட்சியும் தடாலடியாக கணடன அறிக்கை வெளியிட என்று தமிழக அரசியல் களம் சூடு பறந்தது.

ஆரம்பத்தில் முஸ்லிம்கள் திட்டமிட்டு வஞ்சிங்கப்பட்டுவிட்டார்கள்; புறக்கணிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கண்டன அறிக்கை வெளியிட்ட ..கட்சியினர் பிறகு அந்தர்பல்டி அடித்து இடஒதுக்கீட்டில் துரோகம் நடக்கவில்லை என்று தமிழக அரசுக்கு முட்டுக்கொடுத்தனர். தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தினர்.

இந்த விஷயத்தில் ..கட்சியினர் செய்த துரோகத்தைக் கண்டித்து மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டத்தை 24.06.12 ஞாயிறன்று நடத்தவுள்ளோம் என்று கடந்த 22.06.12 வெள்ளிக்கிழமை அன்று அறிவிப்பு நாலாபுறமும் பறக்க ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கப்போகின்றது என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்த பரபரப்பான நேரத்தில், இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவித்த 24.06.12 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11மணியளவில்,  இந்த ஒப்பந்த மருத்துவர்கள் தேர்வை பொறுப்பேற்று நடத்திய தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, இது குறித்த ஒரு அறிக்கையை அன்றைய மாலை நேர பதிப்பாக வெளிவரக்கூடிய இதழ்களில் வெளியிட்டு மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் : மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம்என்ற அந்த செய்தியை பார்த்த பிறகுதான் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்ட செய்தி மேலும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் தாங்கள் செய்த தவறை மறைக்க வேண்டும் என்பதற்காக பல செட்டிங் வேலைகளை செய்து விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டி மாட்டிக்கொண்டுள்ளனர் என்பது அந்த அறிக்கையின் வாயிலாக தெள்ளத்தெளிவாக விளங்கியது.

சுகாதாரத்துறை அளித்த இந்த உளறல் விளக்கத்தின் மூலம் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் அம்பலமானது.

தமிழக அரசு செய்த இந்த துரோகத்திற்கு ஆதரவாக ஜால்ரா தட்டிக்கொண்டு, அவர்களுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருந்த ..கவின் முகத்தில் மருத்துவத்துறையின் அந்த அறிக்கை கரியை அள்ளிப்பூசியது.

அந்த அறிக்கையில் உள்ள முரண்பாடுகளையும், குழப்பங்களையும் இப்போது அலசுவோம்.

இதோ அந்த அறிக்கை:

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும்  நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு  ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள மொத்தம் 835 மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர் காலிப் பணியிடங்கள் வேலை வாய்ப்பகம் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு நிரப்பிடுவதற்கு 2.1.12 அன்று ஆணை வெளியிடப்பட்டது.

அவற்றுள்  682 எம்.பி.பி.எஸ். மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1:5 விகிதாசாரப்படி மருத்துவர்கள் பதிவு மூப்புப் பட்டியல் பெறப்பட்டது. அதில் இனச் சுழற்சி முறைப்படி பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பைச் சார்ந்தவர்களுக்குரிய ஒதுக்கீடு 24 ஆகும்.

முதற்கட்டமாக  வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 2448 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதில் 88 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களின் பெயரும் அடங்கும்.
ஜனவரி 20 மற்றும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பணி நியமன கலந்தாய்வு நடத்திட திட்டமிட்டு 09.01.2012 அன்று அனைவருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இணையதளத்திலும் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சில முஸ்லீம் சமுதாய மருத்துவர்கள்  இணையதளத்திலிருந்த பட்டியலிலுள்ள  முஸ்லீம் நபர்களைவிட பதிவு  மூப்பு உடையவர்களாக இருந்தால்  வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகியதைத் தொடர்ந்து, 20.01.2012 அன்று பதிவு தேதியின்படி 122 பிற்படுத்ப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் தவறுதலாக விடுபட்டுள்ளது என்று வேலைவாய்ப்பு அலுவலகத்திருந்து ஓர் பட்டியல் பெறப்பட்டது.

அவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பின்னர் வழங்கப்பட்ட 122 நபர்களும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட 88 நபர்களைக் காட்டிலும் பதிவு தேதியின் அடிப்படையில் முதுநிலை பெற்றவர்கள் என்பதால் தந்தி வாயிலாக கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி மாதம் நடைபெற்ற கலந்தாய்வின்போதே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்திற்கான ஒதுக்கப்பட்ட 24 காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டது. மேலும், பொதுப் பிரிவின் கீழ் வேலை வாய்ப்பக அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 28 முஸ்லீம் சமுதாயத்தினருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பணிநியமனக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 33 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் (16.11.2010 முதல் 14.12.2011 வரையிலான) பணியில் சேர தேர்வு செய்ததின் பேரில் காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே  மீதமுள்ள 423 எம்.பி.பி.எஸ். காலி பணியிடங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1349 நபர்களின் பட்டியல் பெறப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிற்ப்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினரைவிட முந்தைய தேதியில் (2008, 2009 மற்றும் 11/2010) பதிவு செய்த பிற சமுதாயத்தினர் இடம் பெற்று இருந்தனர்.

காத்திருப்போர்  பட்டியலில் வைக்கப்பட்டுள்ள  பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மருத்துவர்கள் மேற்கூறிய  1349 நபர்களில் பட்டியலில் இருந்தவர்களுக்குப் பிறகு பதிவு செய்தவராதலால் அவர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. முதற்கட்ட பணிநியமன கலந்தாய்விலேயே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுகத்தினருக்கான இடஒதுக்கீடு (3.5 சதவீதம்) 24 நபர்கள் மற்றும் பொது பிரிவு 28 நபர்களும் ஆக மொத்தம் 52 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே  மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பணி நியமனக் கலந்தாய்வின்போது மற்ற சமுதாயத்தினரைச் சார்ந்தவரை கொண்டு 371 காலிப் பணியிடங்கள் இனச் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டது. தற்பொழுது இன்னமும் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் 52 ஆகும்.

இவற்றை  நிரப்ப மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின் வாயிலாக வெளிவந்த துரோகம் :

இந்த அறிக்கையில் 682 மருத்துவர்கள் நியமனம் செய்ய ஆனை பிறப்பிக்கப்பட்டதாகவும், அதற்குத்தான் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் கோரப்பட்டதாகவும், அதில் 122 முஸ்லிம்களின் பெயர் விடுபட்டு விட்டதாகவும், அதை பலர் சுட்டிக்காட்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகிய பிறகுதான் விடுபட்ட அந்த 122 முஸ்லிம்களின் பெயர் பட்டியலை வாங்கி அவர்களுக்கு தந்தி மூலம் கவுன்சிலிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறுகின்றது மருத்துவத்துறை.

அப்படியானால் முஸ்லிம்களை அழைப்பதில் மட்டும் இப்படி திட்டமிட்டு தவறுகள் நடப்பது ஏன்?
முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் பொடுபோக்கா?

இப்படி விடுபட்ட முஸ்லிம்களின் பட்டியலை, அவர்களுக்கு தந்தி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்ட செய்தியை, அவர்களின் விபரங்களை இன்று வரைக்கும் இணையதளத்தில் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்திருப்பது ஏன்?

தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தி, பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்த பிறகு அலறி அடித்துக் கொண்டு இப்போது இந்த உண்மைகளை வெளியில் கக்கும் மர்மம் என்ன?

இதைக்கேட்க நாதியில்லை என்பதாலா? எவ்வளவுதான் நாம் இதில் துரோகம் செய்தாலும் எச்சில் பிழைப்பு பிழைக்கும் சில வாலாட்டும் நாலுகால் கூட்டம் இதற்கும் முட்டுக்கொடுத்து துரோகம் செய்யும் அதிகாரிகளை காப்பாற்றிவிடுவார்கள் என்ற தைரியத்திலா?

122 முஸ்லிம்களை திட்டமிட்டு புறக்கணித்துவிட்டு, பிறகு பிரச்சனை கிளம்பிய பிறகுதான் இந்த கவுன்சிலிங்கிற்காக தந்தி மூலம் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி இந்த அறிக்கையின் வாயிலாக நமக்குத் தெரியவருகின்றது. இது முதல் துரோகம்.

செய்த துரோகத்தை இனி வரக்கூடிய காலங்களில் சரிசெய்வோம்: அடுத்தபடியாக 1349 பேர்களை அழைத்ததில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று நாம் சொன்ன குற்றச்சாட்டிற்கு சரியான பதில் இந்த அறிக்கையில் அளிக்கப்படவில்லை.

மாறாக இனிமேல் முஸ்லிம்களின் பட்டியலை வாங்கி தகுதியான முஸ்லிம் பிரதி நிதிகளை நியமிப்போம். செய்த துரோகத்தை இனி வரக்கூடிய காலங்களில் சரிசெய்வோம் என்ற ரீதியில்தான், தாங்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் முகமாகத்தான் இந்த அறிக்கையின் வாசகங்கள் அமைந்துள்ளன.

அதாவது தேவைப்படும் இடங்கள் 682. அதில் 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடங்கள் 24.

இந்த 24 இடங்களையும் முதல் முதலில் அழைக்கப்பட்ட கவுன்சிலிங்கிலிலேயே முஸ்லிம்கள் 24 பேரை நியமித்துவிட்டோம் என்று விளக்கம் கூறி சப்பைக்கட்டு கட்டுவார்களேயானால்இவற்றை நிரப்ப மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும்என்று மருத்துவத்துறை கூற வேண்டிய அவசியம் என்ன?

அதுதான் 682 பேர்களை நியமித்ததில் 24 முஸ்லிம்களை 3.5 சதவீத அடிப்படையில் நியமித்துவிட்டீர்களே!  பிறகு மறுபடியும் ஏன் முஸ்லிம்களை அழைக்க வேண்டும்.

ஆக, “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்என்ற அடிப்படையில் தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக செட்டிங் கணக்குகளை யோசித்து யோசித்து வெளியிடுகின்றனர் என்பது இதன் வாயிலாக தெளிவாகின்றதா? இல்லையா?

வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும்என்று தங்களது விளக்க அறிக்கையில் கூறி,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முஸ்லிம்கள் பட்டியல் பெறப்பட்டு தகுதியான முஸ்லிம்கள்  உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்ற இந்த அறிக்கையின் வாசகங்களின் மூலம், ஜால்ரா மன்னருக்கு செருப்படி கொடுத்து அவர்களது முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதா? இல்லையா?

ஜால்ரா மன்னர் சொன்னது என்னவென்றால், “முஸ்லிம்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டதுஎன்று. ஆனால் மருத்துவ தேர்வாணையமோ, “நாங்கள் முழுமையாக வழங்கவில்லை. சில முஸ்லிம்கள் விடுபட்டுள்ளனர். மறுபடியும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியலை வாங்கி முஸ்லிம்களுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை இனிமேல்  வழங்குவோம்என்கின்றது. இப்போது புரிகின்றதா? இவர்களின் சமுதாய துரோகம்.

அடுத்து மருத்துவத்துறையின் அடுத்த கட்ட மோசடி அவர்களது அறிக்கையின் வாயிலாக அம்பலமாகின்றது. அவர்கள் தங்களது விளக்க அறிக்கையில்,

பணிநியமனக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 33 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் (16.11.2010 முதல் 14.12.2011 வரையிலான) பணியில் சேர இடம் தேர்வு செய்ததின் பேரில் காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறதுஎன்று கூறியுள்ளனர்.

14.12.2011 தேதிக்கு பின்னர் பதிவு செய்த முஸ்லிம் அல்லாதவர்களையெல்லாம் பணியமர்த்த அழைப்பு விடுத்துவிட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு புதியதாக பதிவு செய்தவர்கள் பட்டியலை பெற்று அதில் உள்ளவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கினால் அது துரோகமா? இல்லையா?

இந்த அப்பட்டமான துரோகத்தை இந்த விஷயத்தில் இந்த அதிகாரிகள் செய்துள்ளார்களா? இல்லையா?

2012ல் ஜனவரி மாதம் வேலைக்கு ஆட்களை எடுப்பதாக இருந்தால் அதற்கு முன்னரே காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும் முஸ்லிம்களுக்கு இடமளித்துவிட்டல்லவா அடுத்தவர்களை அழைக்க வேண்டும். “இதை கேட்பார் யாருமில்லையா?” என்று தலையங்கம் எழுத ஆள் இல்லாத காரணத்தினால்தான் இந்த நெறிமுறையும் கூட பேணப்படுவதில்லை.

அதாவது 16.11.2010 முதல் 14.12.2011 வரையிலான கலந்தாய்வில் 33 முஸ்லிம்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்யாமல் அப்படியே பத்திரமாக பாதுகாப்பாக அவர்களது பட்டியலை வைத்துக் கொண்டுள்ளார்களாம். அதற்கு முன்னரே பதிவு மூப்பு அடிப்படையில் பதிவு செய்து பணி நியமனத்திற்காக காத்திருக்கும் 33 முஸ்லிம்கள் என்ன கிள்ளுக்கீரையா? இவர்களது இந்த அறிக்கையின் வாயிலாக இந்த துரோகமும் தற்போது தெரிய வந்துள்ளது.

இதையெல்லாம் கண்டிக்க இந்த ஜால்ரா மன்னர்களுக்கு துப்பில்லையே!

இதற்கிடையே மீதமுள்ள 423 எம்.பி.பி.எஸ். காலி பணியிடங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1349 நபர்களின் பட்டியல் பெறப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினரைவிட முந்தைய தேதியில் (2008, 2009 மற்றும் 11/2010) பதிவு செய்த பிற சமுதாயத்தினர் இடம் பெற்று இருந்தனர்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மருத்துவர்கள் மேற்கூறிய 1349 நபர்களில் பட்டியலில் இருந்தவர்களுக்கு பிறகு பதிவு செய்தவராதலால் அவர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை”  என்று நாம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளது சுகாதாரத்துறை.

அதாவது அழைக்கப்பட்ட 1349 நபர்களில் இரு முஸ்லிம் கூட இல்லையே என்ற நமது கேள்விக்கு இதுதான் விடையாம். இதிலும் இவர்கள் செய்துள்ள தில்லுமுல்லுகள் அம்பலமாகின்றது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினரைவிட முந்தைய தேதியில் (2008, 2009 மற்றும் 11/2010) பதிவு செய்த பிற சமுதாயத்தினர் இடம் பெற்று இருந்தனர்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் மருத்துவர்கள் மேற்கூறிய 1349 நபர்களில் பட்டியலில் இருந்தவர்களுக்கு பிறகு பதிவு செய்தவராதலால் அவர்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை”  என்று அப்பட்டமான பொய்யை இந்த விஷயத்தில் அள்ளிவிட்டுள்ளனர்.

அதாவது 1349 பேர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்பதற்கு இவர்கள்கூறும் காரணம், பதிவு மூப்பு அடிப்படையில் இந்த 1349 பேருக்கு முன்பாக எந்த முஸ்லிமும் விண்ணப்பிக்க வில்லை. அதனால்தான் அந்த பட்டியலில் 1349 பிற மதத்தவர்கள் மட்டும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்குப் பிறகுதான் மற்ற முஸ்லிம்கள் பதிவு செய்திருப்பதால் இந்த 1349 பேரில் யாரும் முஸ்லிம் இல்லை என்று தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யை சொல்லி இதில் தாங்கள் செய்த தவறை மறைக்கப்பார்க்கின்றனர்.

ஆனால் இதில் இவர்கள் செய்த தில்லுமுல்லுகளை தற்போது ஆதாரத்துடன் நிரூபிக்கின்றோம்.

அதாவது நெல்லையைச் சேர்ந்த ஹாஜா மைதீன் என்ற முஸ்லிம் சகோதரர் பதிவு செய்தது 2011 ஆம் ஆண்டு நம்பர் 25ஆம் தேதி. பதிவு மூப்பு அடிப்படையில் இந்த ஹாஜா மைதீனைப் போன்ற பல முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கு அழைப்பு வராதா என்று காத்திருக்கும் போது அவர்களை புறந்தள்ளிவிட்டு, திட்டமிட்டு புறக்கணித்து விட்டு அவர்களுக்கு பிறகு 6.1.2012 ஆம் ஆண்டு பதிவு செய்த பாரதிராஜன் என்ற பிற்படுத்தப்பட்ட சகோதரரை இவர்கள் அழைத்துள்ளார்கள் என்றால் இந்த விஷயத்தில் இவர்கள் செய்த துரோகமும், அந்த துரோகத்தை முறைக்க இவர்கள் செய்த மோசடியும் அம்பலமாகின்றதா? இல்லையா?

திடீரென்று 423 காலிபணியிடங்கள் முளைத்தது எப்படி?

அறிக்கையில் இடம்பெற்றுள்ள மேற்கூறிய வாசகத்தில், “இதற்கிடையே மீதமுள்ள 423 எம்.பி.பி.எஸ். காலி பணியிடங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 1349 நபர்களின் பட்டியல் பெறப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டதுஎன்று கூறி உளறியுள்ளனர்.

அதாவது, மொத்தம் பணி நியமனம் செய்யப்பட வேண்டிய இடங்கள் 835. அதில் 682 இடங்களுக்கு பணிநியமனம் வழங்கியுள்ளோம் என்று இவர்கள் சொல்வார்களேயானால், மீதம் உள்ள காலிப்பணியிடங்கள் 153தான். ஆனால் 423 காலிப்பணியிடங்கள் என்று அதிலும் குழப்பம் செய்து அறிக்கை வெளியிடுகின்றார்கள்.

இந்த அளவிற்கு கூறுகெட்டு அறிக்கை வெளியிடும் இந்தத் துறைதான் மருத்துவர்களை நியமிக்கும் துறையாம். விளங்கிப்போய்விடும். முதலில் இவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும். அதுதான் சரியாகப் படுகின்றது.

முதற்கட்ட பணிநியமன கலந்தாய்விலேயே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுகத்தினருக்கான இடஒதுக்கீடு (3.5 சதவீதம்) 24 நபர்கள் மற்றும் பொது பிரிவு 28 நபர்களும் ஆக மொத்தம் 52 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதுஎன்று இவர்கள் கூறுவதிலும் நமக்கு இன்னும் முழுநம்பிக்கை வரவில்லை.

52 முஸ்லிம்களுக்கு இவர்கள் இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவின் கீழ் சேர்த்து பணி நியமனம் வழங்கியிருப்பார்களேயானால் இவ்வளவு கலேபரத்திற்குப் பிறகும் அந்த தேர்வு செய்யப்பட்ட முஸ்லிம்களின் பட்டியலை இதுவரை அவர்கள் வெளியிடாதது ஏன்?

நமது ஜால்ரா மன்னர்தான், “எனக்கு அவர் தந்தார்; இவர் தந்தார்என்று கூறிக்கொண்டு, கையில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு திரிகின்றார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை அரசு தரப்பு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகும் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட முஸ்லிம்களின் பட்டியலை வெளியிடுவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள் என்றால், நாம் போராட்டம் நடத்திய பிறகு தமிழக அளவில் இந்தப் பிரச்சனை பூதாகரமாக ஆக்கப்பட்ட பிறகு, வேறு வழியின்றி, 52 முஸ்லிம்களை அவசர அவசரமாக தேர்வு செய்து, ஏற்கனவே இவர்கள் சொன்னது போல, பணி நியமன ஆணையையும் நமது போராட்டத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு தந்தி அடித்து தெரிவித்துள்ளார்களோ என்னவோ தெரியவில்லை.

மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பணி நியமனக் கலந்தாய்வின்போது மற்ற சமுதாயத்தினரைச் சார்ந்தவரை கொண்டு 371 காலிப் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டது. தற்பொழுது இன்னமும் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் 52 ஆகும்என்று கூறி மறுபடியும் குழப்புகின்றனர். 371 காலிப் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டது எப்படி? திடீரென்று எப்படி 52 காலிப்பணியிடங்கள் முளைத்தன என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை.

இறுதியாக, இவற்றை நிரப்ப மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் கோரப்பட உள்ளது. பெறப்படும் பட்டியலில் பதிவுத் தேதியின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் நபர்களை உரிய இடத்தில் பொருத்தி பணி நியமனம் மேற்கொள்ளப்படும்என்று சொல்லி முஸ்லிம்கள் சரியான அளவிற்கு நிரப்பப்படுவார்கள் என்று கூறியிருப்பதால் இனிமேலும் இதில் எவ்வித திருகுதாளங்களோ, தில்லுமுல்லுகளோ செய்யாமல் சரியான முறையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.

ஆக மொத்தத்தில் எப்படியோ போகட்டும், முஸ்லிம்களுக்கு அவர்களது விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுத்தால் இந்தப் பிரச்சனையை தவ்ஹீத் ஜமாஅத் விட்டுவிடும். அதைவிடுத்து தாங்கள் செய்த துரோகத்தை நியாயப்படுத்த முயல்வார்களேயானால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்பதை மட்டும் தற்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.

அதுபோக இப்படி முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் களம் காணும் போது, இந்த சமுதாய துரோகிகள், “போராட்டம் நடத்த வேண்டாம்; அதை கொச்சைப்படுத்தி முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்து இப்படி கேவலப்படாமலாவது இருக்கட்டும்என்று இந்த சமுதாய துரோகிகளை எச்சரிக்கின்றோம்.

நன்றி: ததஜ இணையதளம்