Monday, June 25, 2012

காணாமல் போன கண்டன அறிக்கை - ஜால்ரா இயக்கத்தின் உண்மை முகம்!


சமீபத்தில் இட ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகை பேராட்டம் நடத்தியது. இந்த பேராட்டம் நடந்த பிறகு ஆளும் கட்சிக்கு அடிமைகளாக இருக்கும் இயக்கத்தினர், ஆளும் கட்சிக்கு வழக்கம் போல்  ஜால்ரா தட்டியுள்ளார்கள்.

இந்த ஜால்ராவை வைத்துக்கொண்டு சிலர் தவ்ஹீத் ஜமாஅத் ஏதோ விளம்பரத்திற்காக பேராட்டம் நடத்தியதை போல் ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இட ஒதுக்கீடு முறைகேட்டை, கலைஞர், முஸ்லிம் லீக் காதர் முகைதீன் ஆகியோர் கண்டித்தனர். தவ்ஹீத் ஜமாஅத் இதற்காக போராட்டம் நடத்தியது. இப்போது இவர்கள் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று ஜால்ரா தட்டியுள்ளார்கள். இவர்களுக்கு சமுதாய அக்கரையிருந்தால், தவ்ஹீத் ஜமாஅத்தின் பேராட்டத்தை பாராட்டி இருக்க வேண்டும். நாம் தான் அடிமைகளாக மாறிவிட்டோம், இவர்களாவது சமுதாயத்திற்கு ஒரு துரோகம் இழைக்கப்படுவதை உணர்ந்தவுடன் பொங்கி எழுகிறார்களே என்று. இவர்கள் அதை செய்யவில்லை. மாறாக, எதையுமே சுயமாக சிந்திக்க தெரியாத இவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் அறிவித்தவுடன், தங்களின் அதிகாரபூர்வ (காணாமல் போகும் செய்திகளையே) இணையதளத்தில் இடஒதுக்கீடு முறைகேட்டை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுயிருந்தார்கள். 

அந்த அறிக்கை இதோ. இப்போது அந்த அறிக்கையை அவர்களது இணையதளத்தில் காணவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தியது என்றால், விளம்பரத்திற்காக கண்டன அறிக்கை வெளியிடலாமா? கழக கண்மணிகளுக்கு புரிந்தால் சரி. 


(கழக கண்மணிகளே, உங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தையும் ஸ்கீரீன் சாட் போட்டு வையுங்கள். அப்போது தான் உங்களின் இயக்கத்தின் சால்ராவை புரிய முடியும்)

ஸ்கீரீன் சாட் எடுத்து வைத்த முஹம்மது உபைஸ் அவர்களுக்கு நன்றிகள்!

தானே புயல் நிவாரணத்தை பாராட்டி, தானே புயல் வராதா என்று தமிழக மக்கள் ஏங்குவதாக ஜால்ரா தட்டி, அதிமுகவினர் கூட அடிக்காத ஜால்ராவை அடித்த பேராசிரியர், இதில் ஜால்ரா தட்டி இருக்கிறாரா இல்லை என்பதை காலம் பதில் சொல்லும்.

தொடர்புடையவை: