ஸஹாபாக்கள் நமது உம்மத்தில் தலைசிறந்தவர்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய குர்ஆன் வசனமே அல்லது ஹதீஸே இல்லை.
ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் தம்பட்டம் அடிக்கும் கூட்டம், தங்களின் வாதத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு குர்ஆன் வசனத்தையும் ஒரு ஹதீசையும் தான் முன்வைத்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும். அவர்கள் முன்வைத்துள்ள குர்ஆன் வசனத்தையும் ஹதீசையும் படிக்கும் எவரும், அதில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற எந்த வாசகமும் இடம் பெறவில்லை என்பதை புரிந்துகொள்வார்.
ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு வளைத்து நெளித்து ஆதாரம் சொல்லும் இவர்கள், ஸஹாபாக்களோடு சேர்த்து ஸலஃபுகள் (முன்னோர்கள்) என்ற ஸஹாபாக்கள் பின்னர் வந்த சில தலைமுறையினரையும் கண்மூடி பின்பற்றுகிறார்கள்.
வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று யாருக்கும் அஞ்சாமல் சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சனம் செய்யும் ஸலஃபுகள் எந்த அளவுக்கு அறியாமையில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸலஃபு கொள்கையை ஏற்றுயிருக்கும் ஒரு சகோதரின் கருத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.
அந்த சகோதரின் கருத்து:
பெரும்பாலும் தன்னுடைய எந்த பேச்சுக்களிலும் சரி, உரைகளிலும் சரி ஒரு கருத்தை முன்வைக்கும் போது ஸஹாபாக்கள் அல்லது தாபீஈன்கள் அல்லது அவர்களுக்குப் பின் வந்த நேர்வழிநின்ற நல்லோர்களின் கருத்துக்களிலிருந்து அவர் கோடிட்டுக் காட்டுவதில்லை. மாறாக ஒரு கொள்கையை மக்கள் மன்றத்தில் முன்வைப்பதற்காக குர்ஆனையோ ஹதீசையோ கோடிட்டுக் காட்டும்போது அதற்கு அவர் சுயமாக விளக்கம் தருவது வழக்கம். இதற்கு ஓர் உதாரணம்தான் அல்லாஹ் முதல் வானத்தில் ஒவ்வோர் இரவும் இறங்குகிறான் என்பதற்கு அந்த ஹதீசுக்கு மாத்திரம் அப்படி பொருள் கொடுக்கக் கூடாது என்று கூறி சுய விளக்கம் அளித்தது. ஸஹாபாக்கள் மற்றும் முன் சென்ற நல்லறிஞர்களின் புரிதல்களையும் விளக்கங்களையும் புறம் தள்ளியது.
பதில்:
அதாவது குர்ஆன் ஹதீசை பற்றி பேசினால், முன்னோர்களின் கருத்துகளை கோடிட்டு பேச வேண்டுமாம். இங்கு தான் இவர்களின் குருட்டு பக்தி வெளிப்படுகிறது. மனிதர்கள் என்ற முறையில் மார்க்க ஆய்வில் ஸஹாபாக்களும் அவர்களுக்கு பின்னர் வந்தவர்களும் தவறு செய்துள்ளார்கள் (வேண்டும் என்று அல்ல). தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீசை நேரடியாக மக்களுக்கு விளக்குகிறது.
அல்லாஹ் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக ஆக்கியுள்ளான் என்று கூறிப்பிடுகிறான்.
இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17)
ஆனால், ஸலஃபுகள் என்பவர்களை கோடிட்டு தான் பேச வேண்டுமாம். குர்ஆன் ஹதீசை பற்றி பேசும் போது இவர்கள் கோடிட்டு தான் பேச வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் என்பதை ஸலஃபுகள் விளக்குவார்களா?
ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நாம் வைத்த ஆதாரங்களுக்கு பதிலை காணோம். குர்ஆன்னோடு முரண்படும் ஹதீஸ்களை எவ்வாறு முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் அணுகினார்கள் என்பதற்கு நாம் எடுத்து வைத்த வாதத்திற்கு இவர்களின் பதிலை காணோம். இவர்களால் எமது வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாது. இவர்களின் ஷேக் வந்தாலும் (இந்த ஷேக் தான் அல்பானியின் மாணவர் என்று தம்பட்டம் அடிக்கிறார்) எமது வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாது.
எமது வாதங்களுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது என்பதை இவர்களே தெளிவாக தெரிந்துள்ள காரணத்தினால் தான், பதில் தராமல், பிஜேவின் ஆசிரியர் யார்? என்று தங்களின் மடமையை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் இந்த குருட்டு வாதங்களுக்கு எமது பதில் விரைவில் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்.
கீழே உள்ள வீடியோவில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று வாதிடுபவர்களின் வாதங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
* ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா?
*ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று குர்ஆனில் கட்டளையிடப்பட்டுள்ளதா?
* ஸஹாபாக்கள் ஸஹாபாக்களை பின்பற்ற சொன்னார்களா?
* ஸஹாபாக்கள் ஸஹாபாக்களை பின்பற்றினார்களா?
போன்ற கேள்விக்குகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில்களை வீடியோவில் காணுங்கள்.
பாகம்-1
பாகம்-2
பாகம்-3
பாகம்-4
பாகம்-5