ஸஹாபாக்கள் நமது உம்மத்தில் தலைசிறந்தவர்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய குர்ஆன் வசனமே அல்லது ஹதீஸே இல்லை.
ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் தம்பட்டம் அடிக்கும் கூட்டம், தங்களின் வாதத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு குர்ஆன் வசனத்தையும் ஒரு ஹதீசையும் தான் முன்வைத்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும். அவர்கள் முன்வைத்துள்ள குர்ஆன் வசனத்தையும் ஹதீசையும் படிக்கும் எவரும், அதில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற எந்த வாசகமும் இடம் பெறவில்லை என்பதை புரிந்துகொள்வார்.
ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு வளைத்து நெளித்து ஆதாரம் சொல்லும் இவர்கள், ஸஹாபாக்களோடு...