Friday, October 28, 2011

வாக்காளா்களின் பெயா்கள் விடுப்பட்டவை மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கு கடைசி நாள் 08 11 2011

 மேலும் விபரங்களுக்கு தொடர்புக்கு 9944824510

இன்று துல் ஹஜ் முதல் நாள் – தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிறை பார்க்கப்பட்டது

தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், ராமநாதபுரம், நீலகிரி,தஞ்சை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று (28-10-2011) மக்ரிப்லிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் பிறை 1 ஆரம்பமாகின்றது. இதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ் பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.   - தலைமையகம்
                                                                                                                


Wednesday, October 26, 2011

அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமான பணியின் தற்போதை நிலை

தவ்ஹீத் பள்ளியின் கட்டிட பணிக்கு உங்களின் நன்கொடைகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்.






Wednesday, October 19, 2011

TNTJ அமீரக அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம்

TNTJ அமீரக அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம்,  14.10.2011 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு துபாய்  பெமிளி சூப்பர் மார்கெட் (Family Super Markat) பின்புறம் உள்ள அப்பாஸ் அவர்களின் ரூம் மாடியில் நடைபெற்றது  இதில் . TNTJ உறுப்பினர்களும் அனுதாபிகளும் பலர்கலந்து கொண்டனர் .

இதில் அதிரை தவ்ஹீத்  பள்ளி விரைவில் கட்டி முடிக்க அனைவரும் பொருளாதாரத்தை திரட்டுவது என முடிவு எடுக்கப்பட்டது  





தகவல் துபாயில் யிருந்து
அதிரை ஜகபர் சாதிக்


Monday, October 17, 2011

மலாக்காவில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை உதயம்

 16-10-11 அன்று  மலேஷியா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் தலைமையில் மலாக்கா தாஜ் உணவகத்தில் மலாக்கா மாநிலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை உதயம்

இதில் கிழ்க்கண்ட நிவாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தலைவர்:S.உபைதுல்லாஹ்(பனைக்குளம்)

துணை தலைவர்:KMS.தாஜுதீன் (அதிரை)
செயலாளர் தம்ரின்(மலாக்கா)
துணை செயலாளர் அதிரை அப்துர்ரஹ்மான்
பொருளாளர்.KMS. ஜாஹிர்ஹுசைன்(அதிரை)

இதில் கொள்கை சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

தகவல்  மலேஷியா 
அதிரை அப்துர்ரஹ்மான்

Sunday, October 16, 2011

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு - தொடர் 1

'இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய நூல் இங்கு தொடராக வெளியிடப்படும். முழு நூலையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

முன்னுரை:

பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்லக் குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நல்லவர்களாக ஆவதும் தீயவர்களாக ஆவதும் பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது.

பெற்றோர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமிய சிந்தனையில் வளர்கிறார்கள். பெயரளவில் முஸ்லிமாக இருந்தால் குழந்தைகளும்  பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் கொள்கை கோட்பாடு குணநலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபலிப்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.

இதற்கு மாற்றமாக நல்லவர்களுக்குக் கெட்டக் குழந்தைகளும் கெட்டவர்களுக்கு நல்லக் குழந்தைகளும் பிறப்பதுண்டு. ஆனால் இது குறைவாகும்.

"ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (1359)

எனவே நம் குழந்தை ஒழுக்கத்திலும் மார்க்கத்திலும் நன்நடத்தையிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் நம்மிடத்தில் இவையெல்லாம் ஏற்பட வேண்டும். நமது நடவடிக்கைள் ஒவ்வொன்றும் இஸ்லாத்திற்கு உட்பட்டு அமைய வேண்டும்.

குழந்தைகளை பெற்றெடுப்பது பெரிய விஷயமல்ல. ஏனென்றால் ஆடு மாடு கோழி குதிரை இன்னும் கோடிக்கணக்கான உயிரினங்களும் குட்டியிடத்தான் செய்கின்றன. பெற்றெடுத்தக் குழந்தைகளை சரியான அடிப்படையில் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்ப்பதில் தான் பெற்றோரின் திறமையுள்ளது.

பல பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் குழந்தையை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்துவிடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

மனிதன் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வுகளை இஸ்லாம் கற்றுத்தருகிறது. இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத் தருகிறது.

திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் போதனையின் அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் முறையை இந்நூல் விவரிக்கிறது. பெற்றோர்கள் கட்டாயம் இதைப் படித்துணர்ந்து இதனடிப்படையில் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

எல்லாப் பெற்றோர்களும் இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு முறையை கையாண்டால் வளரும் குழந்தைகள் முழுக்க முழுக்க இறைவனுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இப்ராஹீம் (அலை) தனது மகன் இஸ்மாயீலை முறையான அடிப்படையில் வளர்த்தக் காரணத்தினால் தான் அரும்பெரும் தியாகங்களை இறைவனுக்காக செய்வதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் தயாரானார்கள்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.

அல்குர்ஆன் (37 : 102)

குழந்தை பாக்கியத்தை கேட்க வேண்டும்:

பெற்றோர்கள் வயோதிகத்தை அடையும் போது பிள்ளைகள் பெற்றவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லா தம்பதியினரும் ஆசைப்படுகிறார்கள். எனவே தான் குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளை பெற்றெடுப்பதினால் இந்த உலகத்தில் இன்னும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது. மறுமையிலும் பெற்றோர்கள் நன்றாக வாழ்வதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் நல்லக் குழந்தைகள் காரணமாக அமைகின்றன, எனவே இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் கேட்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : அஹ்மத் (10202)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3358)

ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும். பிள்ளையின் குணமும் நடத்தையும் கெட்டுவிட்டால் இவர்களே பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறார்கள்.

எனவே தான் இறைத்தூதர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!'' என்று (ஸக்கரிய்யா) கூறினார்.

அல்குர்ஆன் (19 : 6)

ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்'' என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

அல்குர்ஆன் (3 : 38)

"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (25 : 74)

நம்பிக்கை இழந்து விடக்கூடாது:

குழந்தை பிறக்காதவர்கள் தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் பிரார்த்தனை செய்தால் குழந்தை கிடைக்கும் என்று பலர் கருதிக்கொண்டு தர்ஹாக்களுக்குச் சென்று வருகிறார்கள்.

குழந்தையைத் தருகின்ற சக்தி அல்லாஹ் ஒருவனிடத்தில் மட்டும் தான் உள்ளது. அவனே தான் விரும்புகின்றதை மனிதர்களுக்குத் தருகின்றான்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் (42 : 49)

இறைவனிடம் பல வருடங்களாக பிரார்த்தனை செய்து குழந்தை பிறக்காவிட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் நாடினால் முதிய வயதில் கூட குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிடுவான்.

ஸக்கரிய்யா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். முதிய வயதை அடைந்த போதும் அல்லாஹ்விடத்திலே குழந்தை பாக்கியத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!

அல்குர்ஆன் (19 : 4)

பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது:

பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறைநிராகரிப்பாளர்கள் தான் பெண் குழந்தைகளை இழிவாகக் கருதிவந்தார்கள்.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் (16 : 58)

பெண் குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கு எதிரான சாட்சியாக மறுமை நாளில் அக்குழந்தைகள் இறைவனிடம் முறையிடும்.

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,

அல்குர்ஆன் (81 : 8)

பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையை பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் (5127)

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “"இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (1418)

"யார் இந்தப் பெண் குழந்தைகüல் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்தி-ருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5995)

குழந்தைகளை கொல்வது மாபெரும் குற்றம்:

பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்வது இறைநிராகரிப்பாளர்களின் பண்பாகும். அல்லாஹ்வும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இதை தடைசெய்துள்ளார்கள். மேலும் இது பெரும்பாவங்களில் ஒரு பாவமாகும்.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பிவிட்டன.

அல்குர்ஆன் (6 : 137)

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.

அல்குர்ஆன் (6 : 140)

"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. பெற்றோருக்கு  உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் (6 : 151)

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர்ஆன் (17 : 31)

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (60 : 12)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல் : புகாரி (5975)

நபி (ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகüன் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று  கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (6857)

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

கருவில் குழந்தை உருவாகுவதை தடுப்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் "அஸ்ல்' (புணர்ச்சி இடை முறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி (5209)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்... அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2606)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்துகொண்டிருந்தோம். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2610)

மேலுள்ள செய்திகளை கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.

நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியேத் தீரும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (2542)

தற்காலிகமாக குழந்தை உருவாவதை தடுத்துக்கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வதை சிறந்தது கிûடாயாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாதவாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும்.

தற்காலிக குடும்பக் கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை காப்பர்டி போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தி தற்காலிகமாக குழந்தை பிறப்பதை தவிர்த்துக்கொள்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது.

குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்த பின் பெற்றெடுத்தக் குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யமாட்டார்கள்.

அதிகமானக் குழந்தைகளை பெற்றெடுப்பது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட ஒன்றாகும். அதிகக் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களை திருமணம் செய்யுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) அந்தஸ்த்தும் மதிப்பும் உள்ள ஒரு பெண் எனக்குக் கிடைத்துள்ளாள். ஆனால் அவள் குழந்தையை பெற்றெடுக்கமாட்டாள். அவளை நான் திருமணம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (வேண்டாமென்று) அவரைத் தடுத்துவிட்டார்கள். இரண்டாவது முறையும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போதும் தடுத்தார்கள். மூன்றாவது முறை அவர் வந்த போதும் நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள். (குழந்தையை பெற்றெடுக்க) அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். (குழந்தையை பெற்றெடுக்க) அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக)  நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யசார் (ரலி)
நூல் : நஸயீ (3175)

தொடரும், இன்ஷா அல்லாஹ்

Saturday, October 15, 2011

தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம கடந்த 10.10.11.அன்று பட்டுக்கோட்டை யில் சரியாக இரவு 7 மணி அளவில் திரி ஸ்டார் மகாலில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் அப்துர் ரஹீம் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் கடந்த வருட மாவட்ட செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு கணக்குகள் பொதுக்குழு உறுப்பினர்களிடையேபட்டியலிப்பட்டது.பின்னர்  இதில் கீல்கண்ட 
புதிய மாவட்ட நிர்வாகிகள்   பொதுக்குழு உறுப்பினர் களால்   தேர்ந்து எடுக்கப்பட்டது


தேர்வு செய்யப்பட்ட   மாவட்ட  நிர்வாகிகள்
     தலைவர்: அதிரை Y.அன்வர் அலி    =9629115317
 து தலைவர்:சம்பை         சாதிக்                 =9944653652


       செயலாளர்: வல்லம் பாஷா                =9443288653
து செயலாளர்: பேராவுரணி ஷாகுல்     =9942520032
து செயலாளர்: ஒரத்தநாடு சலீம்             =9367791586
து செயலாளர்: செந்தலை கஸ்சளி        =7373608773

பொருளாளர் தஞ்சை முஜிபுரகுமான் =9944653652





Friday, October 14, 2011

இவ்வருடமும் கூட்டு குர்பானி

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக 

கடந்த ஆண்டுகளைப் போன்று  இவ்வருடமும்    கூட்டு குர்பானித் திட்டத்தை ஏற்று நடத்த இருக்கிறது. இத்திட்டத்தில் மாட்டுப்பங்கு ஒன்றுக்கு ரூபாய் ரூ. 1000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
                                                                                     
 தொடர்புக்கு கிளை பெருளாளர் அப்துல் ஜப்பார் 9629533887

Wednesday, October 12, 2011

மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் தவ்ஹீத் மர்கஸ்'சில் வாரந்திர மார்க்க சொற்பொழிவு

9-10-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் தவ்ஹீத் மர்கஸ்'சில் வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது இதில் மலேஷியா மண்டல பொருளாளர் சகோ.அய்யூப் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் பலர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

             

                                                                                                                                                                 

                                                                                                                                                                                தகவல்
                                                                                                                                                                 மலேஷியாவிலிருந்து
                                                                                                                                                             அதிரை அப்துர்ரஹ்மான்.

Tuesday, October 11, 2011

TNTJ அமீரக அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம்

TNTJ அமீரக அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 14.10.2011 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு பெமிளி சூப்பர் மார்கெட் (Family Super Markat) பின்புறம் உள்ள அப்பாஸ் அவர்களின் ரூம் மாடியில் நடைபெறவுள்ளது. TNTJ உறுப்பினர்களும் அனுதாபிகளும் தவறாது கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். 

Sunday, October 09, 2011

கிருத்துவர்களை மூச்சுத் திணற வைத்த விவாதம்!!

கும்பகோணத்தில் சில பாதிரியார்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் சில மாதங்களுக்கு முன்பு விவாதம் நடந்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் பங்குகொண்ட நம் மக்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்கள். வழக்கம் போல வல்ல இறைவன் அந்த விவாதத்திலும் நமக்கு வெற்றியையே தந்தான்.

அந்த விவாதங்கள் சீடியாக வெளியிடப்பட்டு மக்கள் கிருத்துவத்தின் பொய்மையை அறிந்து கொண்டனர். அது மட்டுமின்றி அந்த விவாதத்தின் விவரங்கள் உணர்வு வார இதழிலும் தொடராக வெளிவந்து பரபரப்பை உண்டாக்கியது. இந்தத் தொடரை நிறுத்தி விடுங்கள் என்றெல்லாம் சில பாதிரியார்கள் நம் சகோதரர்களிடம் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் இந்த சீடியை முழுமையாகப் பார்த்த சில பாதிரியார்கள் நம் தலைமையகத்திற்குக் கடிதம் எழுதினார்கள்.

நீங்கள் வாயில்லாப் பிள்ளைப்பூச்சிகளிடம் விவாதம் செய்து விட்டு அதைப் பெருமையாக பீற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் அவர்கள் மவுனம் சாதித்த கேள்விகளுக்கு நாங்கள் அடுக்கடுக்காக ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கக் காத்திருக்கிறோம். 5 மற்றும் 6 ஆம் தேதி ஆகிய இரு நாட்களும் நாங்கள் விவாதிக்கத் தயார் என்றும் கடிதம் அனுப்பியிருந்தனர். அவர்களின் அழைப்பை அன்போடு ஏற்றுக் கொண்டு 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இது விவாதம் இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் கிறித்தவர்களின் வேதம் குறித்து முஸ்லிம்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அதற்கு கிறித்தவர்கள் பதிலளிக்க வேண்டும். இது இரண்டு நாட்கள் நடத்தப்பட வேண்டும்.அதன் பின்னர் முஸ்லிம்களின் வேதம் குறித்து கிறித்தவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அதற்கு முஸ்லிம்கள் பதிலளிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்ட்து.

முதல் தலைப்பிலான விவாதம் இம்மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் நடத்துவது என்றும் ஆறாம் தேதி விவாத முடிவில் இரண்டாம் தலைப்புக்கான தேதியை முடிவு செய்வது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் விவாத அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இரு புறமும் தலா இருபது பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டிருந்தன. சகோ.ஜெபக்குமார் தலைமையில் சகோ. சுதன்பாண்டியன், சகோ.மதிவானன், சகோ.பன்னீர்செல்வம், சகோ.சுரேஷ் ஆகியோர் ஒரு குழுவாகவும், சகோ. கலீல் ரசூல் தலைமையில், சகோ. கோவை சகோ.ரஹ்மத்துல்லாஹ்,சகோ. சையது இப்ராஹீம்,சகோ.யூசுஃப்,சகோ. தாங்கல் ஹபிபுல்லா,சகோ. E. பாரூக் மற்றும் பலரும் கலந்து கொள்ள விவாதம் துவங்கியது.

விவாதத்தின் முதல் அமர்வில் பைபிளில் மனிதச் சரக்குகள் கலந்துள்ளது என்றும், பைபிள் 7 முறை புடம்போடப்பட்டும் இன்னும் தவறுகள் இருக்கின்றன என்றும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும், அத்தோடு நாங்களும் நூற்றுக்கும் அதிகமான வசனங்களை நீக்கி விட்டோம் என்றும் போட்டு உடைத்தனர் கிருத்தவ விவாதக் குழுவினர். ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியதும் நம் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மூச்சுத் தினறினார்கள் பாதிரிமார்கள்.

பைபிளில் இருந்து இன்னும் கூட வசனங்கள் நீக்கப்படும் என பகிரங்கமாக  ஒப்புக் கொண்டனர் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். இப்படியாக போய்க் கொண்டிருந்த விவாதத்தில் சில வசனங்களுக்கு விளக்கம் கேட்க, அவர்கள் கொடுத்த சமாளிப்பு அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கியது. இறுதியில் பைபிளில் உள்ள ஆபாசங்களை நம் சகோதரர்கள் அள்ளிக் கொட்டிய போது அவர்களிடம் இருந்து பதில் என்ற பெயரில் வந்த விளக்கங்கள் பார்ப்பவர்களை திகைக்க வைத்தது.

பைபிள் வசனங்களைப் படித்துக் கொண்டிருந்த பெண்களை ஒரு கட்டத்தில் பைபிளில் உள்ள “உன்னதப்பாட்டு” அதிகாரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட போது அவர்கள் திக்கித் திணறி தலை குணிந்ததைப் பார்க்க முடிந்தது. ஆபாசங்கள் நிறைந்த அத்தியாயங்களைப் படிக்கப் படிக்க அவர்கள் சார்பில் வந்திருந்த பெண்கள் நெளிய ஆரம்பித்தனர்.

பெண்களின் முன்னிலையில் படிக்க முடியாத இந்தப் புத்தகத்தை நீங்கள் எப்படி இறைவேதமாக நம்புகிறீர்கள் என்று நம் விவாதக் குழுவினர் கேட்ட போது அதற்குப் பதில் சொல்ல முடியாமல் சம்பந்தமே இல்லாதவற்றைப் பேசி காலத்தைக் கடத்தினர் கிருத்துவர்கள்.

நேரம் ஆக ஆக பதில் சொல்லமுடியாமல் இந்த விவாதத்திற்கான முடிவுகளும் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. மனிதச் சரக்குகள் சங்கமித்திருக்கும் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இறைவேதமாக நம்பும் மக்களை நோக்கி இறுதி ஏற்பாட்டு வேதக்காரர்கள் வைத்த ஒவ்வொறு வாதங்களும் அவர்களை மூச்சு தினறவைத்த காட்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இப்படி விவாதம் போய்கொண்டிருன்ந்த போது ஒரு கட்டத்தில் இரண்டு நாட்கள் விவாதக்க ஒப்புக் கொண்டு வந்த கிறித்தவர்கள் ஒரு நாளிலேயே விவாத்ததை முடித்துக் கொள்வோம். அப்படித்தான் நாம் முடிவு செய்தோம் என்று பல்டி அடித்தனர்.

காலையில் விவாதம் துவங்கிய போது அவர்கள் சொன்ன ஒரு தகவலுக்கு நம் தரப்பில் ஆதாரம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நாளை விவாத்ததுக்கு வரும் போது கொண்டு வருகிறோம் என்று பதில் அளித்தனர். இது விவாத சீடியில் பதிவாகியுள்ளது. இதில் இருந்து அவர்கள் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு தான் வந்தனர் என்பதை நீங்கள் அறியலாம். முதல் நாள் இறுதியில் பேசும் போது ஒரு நாள் விவாதம் என்று தான் பேசப்பட்டது என்றனர். மேலும் அடுத்த தலைப்புக்கான தேதி குறித்து பேசவும் அவர்கள் விரும்பவில்லை.

முதன் முதலில் கிறித்தவர்களின் பெந்த கொஸ்தே குரூப்பைச் சேர்ந்த ஜெபமணி என்பவருடன் நாம் விவாதம் நடத்தினோம்.கும்பகோனத்தில் ஆர்சி எனப்படும் கத்தோலிக்க பிரிவினருடன் விவாதம் நடத்தினோம்.ஜெரி தாமஸ் வகையறாக்கள் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் இவர்கள் அனைவரையும் விட பைபிள் அறிவாளிகளாகவும் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்களாகவும் தங்களை கூறிக் கொள்ளும் யஹோவா விட்னஸ் என்ற பிரிவினருடன் யாரும் விவாதிக்க முடியாது. அவர்கள் பைபிளைக் கரைத்து குடித்தவர்கள் என்ற கருத்து கிறித்தவ மக்களிடம் உள்ளது. இப்போது நாம் நடத்திய விவாதம் இந்த யஹோவா பிரிவினருடன் தான் .

இதன் மூலம் கிறித்தவர்களின் அனைத்து பிரிவினருடனும் தவ்ஹீத் ஜமாஅத் விவாதக் களம் கண்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ். நடந்து முடிந்த மூன்றிலும் அல்லாஹ் மாபெரும் வெற்றியை அளித்தான். இனி நடக்கவுள்ள விவாதங்களிலும் அல்லாஹ் வெற்றியை அளிப்பான். இன்ஷா அல்லாஹ்

இந்த விவாதத்திற்கான முடிவுகளும் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. மனிதச் சரக்குகள் சங்கமித்திருக்கும் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இறைவேதமாக நம்பும் மக்களை நோக்கி இறுதி ஏற்பாட்டு வேதக்காரர்கள் வைத்த ஒவ்வொறு வாதங்களும் அவர்களை மூச்சு தினறவைத்த காட்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

விவாத வீடியோக்களை பார்வையிட, இங்கே சொடுக்கவும்.

Saturday, October 08, 2011

மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி 
வாசல் தற்போது.
 



Saturday, October 01, 2011

காவல் நிலைய முற்றுகை போராட்டம்

வளம் கொழிக்கும் செல்வபூமி தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள். முஸ்லிம்களும் ஹிந்துக்களும் ஒற்றுமையாக , அந்நியோன்யமாக இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இரு தரப்பும் தங்களை மாமா மச்சான் என அன்போடும் பாசத்தோடும் அழைத்து., ஒருவர் பண்டிகைக்கு ஒருவர் இனிப்புகளை பறிமாறிக் கொள்ளும் வழக்கமும் இருந்து வந்தது. நகர்ப்புறங்களை விட இது போன்ற கிராமப் புறங்களில் தான் மத நல்லிணக்கம் அதிகமாகப் பேணப்படும் வழக்கம் இருந்து வந்தது.

ஊடுறுவிய மத பயங்கரவாதம்:

இது போன்ற நட்பான சகோதரத்துவத்துக்கு சமாதி கட்டுவதற்கு உள்ளே நுழைந்தது இந்த இந்துத்துவா என்னும் விசக்கொள்கை. சகோதரர்களாக பழகி வந்த மக்களை எதிரெதிர் தரப்பாக மாற்றி இருதரப்பிற்கும் இடையே இரத்தத்தை ஓட்டக்கூடிய அளவிற்கு மத வெறியைக் கிளப்பியது இந்த வெறிக்கொள்கை.

அப்பாவி இந்து மக்களைப் பிரித்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்து ஏவப்படும் வேட்டை நாயாக பயன்படுத்த ஆரம்பித்தனர் இந்துத்துவ வெறியர்கள். இவர்கள் சொல்வதுதான் வேதம் என்ற நிலைக்கு அந்த அப்பாவி இந்து மக்கள் தள்ளப்பட்டனர். அதன் பிரதிபலிப்பு தான் இன்றைக்கு பல பகுதிகளில் எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றது.

கிரிக்கெட்டை காரணமாக்கி கலவரம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து மல்லிப்பட்டினம் செல்லும் வழியில் அமைந்துள்ள இஸ்லாமிய கிராமம் தான் புதுப்பட்டினம். இந்த ஊரில் இஸ்லாமியர்கள் மீது வெறியாட்டம் நடத்தப்படுவது புதிது அல்ல. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் செயல்தான்.

இப்படித்தான் கடந்த 22/09/2011 அன்று மாலை புதுப்பட்டினத்தில் உள்ள தெருவில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றனர்.
சிறுவர்களுக்கே உரிய மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் நோக்கி சப்தமிட்டு கத்திக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்த நேரத்தில் அவ்வழியே வந்த காவி பயங்கரவாதிகள் சிலர் நேராக அவர்களிடம் சென்று, “ஏன்டா எங்களைக் கேலி செய்கிறீர்கள்” எனக் கேட்டனர். “உங்களைக் கேலி செய்யவில்லை, நாங்கள் எங்களுக்குள் விளையாடிக் கொண்டிருக்கிறோம்” என அவர்கள் பதிலளிக்க, அதில் கோபமடைந்த அவர்கள் உங்களைச் சொல்லி குற்றமில்லையடா, உங்களை இந்த ஊரை விட்டு காலி செய்தால் தான் நீங்களெல்லாம் அடங்குவீர்கள், உங்களை என்ன செய்கிறோம் பார் எனச் சொல்லி விட்டு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக ஊருக்குள் சென்றுவிட்டனர்.

திரண்டு வந்த பயங்கரவாதிகள்:

புதுப்பட்டினத்திற்குள் சென்று அங்கே தயாராக இருந்த 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்த காவிக்கயவர்கள், அங்கிருந்த பள்ளிவாசல் மீது கற்களை வீசி பள்ளிவாசலை சேதப்படுத்தினர்.

அத்தோடு அவர்களின் வெறி அடங்கிவிடவில்லை. அருகில் இருந்த சில வீடுகள் மீதும் கற்களை வீசி எறிந்து சேதப்படுத்தினர். கடும் கூச்சலுடன் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி கத்திக் கொண்டு வெறியாட்டம் நடத்தும் இவர்களின் செயலைக் கேள்விப்பட்டு அந்தப் பகுதி மக்கள் அங்கே திரண்டு வர காவி வெறியர்கள் அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓடி விட்டனர். தகவலறிந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் அன்வர் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று களமிறங்கினார்கள்.

ஒன்று திரண்ட பொதுமக்கள்:

இதுபோல தொடர்ச்சியாக சங்பரிவார வெறியர்களால் இடையூறுகள் விளைவிக்கப்பட்டு வருவதால் நிம்மதியிழந்த அந்தப் பகுதி பொதுமக்கள், இது தொடர்பாக ஏதாவது செய்தாக வேண்டும் எனக் கருதி சில கயவர்கள் மீது அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடிப்பு வேலையில் இறங்கியது சேதுபாவாசத்திரம் காவல்துறை. சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த எஸ்.பியை ஊருக்குள்ளே செல்லவிடாமல் இது சாதாரண பிரச்சனை எனச் சொல்லி அவரை திரும்பி அழைத்துச் சென்று விட்டனர்.

காவல்துறை உயரதிகாரி நேரில் வந்தால் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என நினைத்திருந்த மக்கள், அவர் திரும்பிச் சென்றதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை நம்பினால் நமக்கு நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தனர். காரணம் ஜமாத்தார்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கூட கைது செய்யப்படாதது அவர்களுக்கு காவல்துறை மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

காவி அதிகாரியின் கயமைத் தனம்:

கலவரத்தை விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ரவீந்திரபூபதி என்பவர் செய்த காரியம் அனைவரையும் வெறுப்பில் ஆழ்த்தியது. அவர் காக்கிச்சட்டைக்காரராக இருப்பார் என்று நினைத்த போது அவரது காவி வேடம் கலைய ஆரம்பித்தது.
அந்த ஊர்த்தலைவர் ராமசாமி என்பவரை அழைத்து, “நீங்கள் அவர்கள் மீதும் புகார் கொடுங்கள்” என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் ஏற்கனவே பிப்ரவரி மாதம் நடந்த ஒரு பிரச்சனையில் சம்பந்தப்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் சிலரின் பெயரையும் கொடுத்து இவர்கள் மீது புகார் எழுதிக் கொடுங்கள் என பாதை அமைத்துக் கொடுத்தார். அவரது இந்த சிறப்பான ஆலோசனையின் பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் பலரின் பெயர்களை பட்டியலிட்டுக் கொடுத்து விட்டு வந்தார் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி.

களமிறங்கிய டி.என்.டி.ஜே:

ராமசாமி கொடுத்த புகாரின் பெயரில் இந்த பிரச்சினைக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவி முஸ்லிம்கள் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றனர் காவல்துறையினர். அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களையெல்லாம் சுதந்திரமாக விட்டுவிட்டு சில அப்பாவி மீனவ இந்து மக்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்தப் பிரச்சினை இப்படியே போனால் இது காவிக்கூட்டத்திற்கு வலுவாக அமைந்து விடும் எனக்கருதி புதுப்பட்டினம் ஜமாத்தார்கள் இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் தெரிவித்த போது, மாநிலச் செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் இது குறித்து ஆலோசனை செய்து இந்தப் பிரச்சினையை மாநிலத் தலைமையிடம் கொண்டு வந்தனர். காவிக்கூட்டத்திற்கு துணைபோகும் காவித்துறை அதிகாரி ரவீந்திர பூபதியின் செயலைக் கண்டித்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அனல் பறந்த ஆர்ப்பாட்டம்:

காவல்துறையின் கயமைத்தனத்தை குறிப்பாக காவி அதிகாரி ரவீந்திர பூபதியின் அராஜகச் செயலைக் கண்டித்து கடந்த 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிந்தது. மாலை 4 மணிக்கு சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்திற்கு எதிரே மக்கள் திரள ஆரம்பித்தனர்.

ஒரு சாதாரண சிறிய கிராமத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களைக் குவித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அந்தப் பகுதி மக்களும் காவல்துறையினரும் வியப்படைந்தனர்.

கயமைத் தனம் செய்த காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோசங்கள் அனலாய்ப் பறந்தன. மேலாண்மைக் குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி கண்டன உரையாற்றினார். இது போன்ற காவி அதிகாரிகள் சிலர் செய்யும் ஈனச்செயல்கள் தான் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்துகின்றன என தன்னுடைய உரையில் அழுத்தமாகத் தெரிவித்தார் அல்தாஃபி.

அத்துமீறல் எங்களுக்கும் தெரியும்:

முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள், எந்த நிலையிலும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்பவர்கள் இல்லை, ஆனால் சட்டப்படி அனுசரித்துச் செல்வதால் முஸ்லிம்களை கோழைகள் என நினைத்து விட வேண்டாம். எங்களுக்கும் அத்துமீறத் தெரியும்., எப்படி என்றால் இவர்கள் செய்யும் செயல்களை விட பண்மடங்கு வேகம் எங்களால் காட்ட முடியும் ஆனால் நாங்கள் எப்போதுமே சட்டத்தை மதிப்பவர்கள்., தவறு செய்பவர்கள் எங்கள் பக்கம் இருந்தால் அவர்களை கைது செய்யுங்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் தவறு இல்லை. ஆனால் தப்பு செய்யாத அப்பாவிகளின் மீதே பொய்வழக்குப் போடும் போக்கினை இந்தக் காவல்துறையினர் இஸ்லாமியர்கள் மீது மட்டும் நிகழ்த்துவதற்கு என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை.., இது மீண்டும் தொடர்ந்தால் நாங்கள் இது போல ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்க மாட்டோம், எங்களை அந்த நிலைக்குத் தள்ளி விடாதீர்கள் என தன்னுடைய கண்டன உரையில் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிந்து சென்ற மக்கள் இனி ஒரு விடிவு வந்து இதுபோன்ற காவி பயங்கரவாதிகளின் அட்டகாசங்களில் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.


போர் என்றாலும் மகிழ்ச்சியே!

விநாயகருக்கு சதுர்த்தி என்ற பெயரில் இந்த காவி பயங்கரவாதிகள் அதை ஒரு கலவர வித்திடு கலமாக உருவாக்கிவைத்துள்ளனர். நாங்கள் இஸ்லாமியர்களின் தெருக்கள் வழியாகத் தான் செல்வோம், பள்ளிவாசல் வழியாகத் தான் செல்வோம்., அப்போது தான் இஸ்லாமியர்களைத் திட்டி அவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டி அதை மையமாக வைத்து கலவரத்தை உண்டாக்க சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற நோக்கத்தோடு தான் இவர்கள் நாடு முழுவதும் இந்த ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ஊர்வலத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் விதமாக ஆங்காங்கே பேனர்களை வைத்து அதில் எதாவது பிரச்சினை உண்டாகாதா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த விநாயகர் ஊர்வலத்தின் போதும் இந்த புதுப்பட்டினத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் வாசகம் அங்கிருந்த மக்களை கலவரத்திற்கு அழைப்பு விடும் விதமாக அமைந்து இருந்தது.

“அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்” “வாள் ஏந்தத் தயங்க மாட்டோம்” “போர் என்றாலும் மகிழ்ச்சியே” என கொட்டை எழுத்துக்களில் அமைந்திருந்த அந்த பேனர் மக்களை வெறுப்புக்குள்ளாக்கியது.

கலவரத்தை நடத்த தயாராகி விட்ட சங்பரிவாரங்களின் சதியை விளக்கும் அந்த பேனரை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் பலரும் காவல்துறையில் புகார் தர, அடுத்த சில மணிநேரங்களில் சர்ச்சைக்குரிய அந்த பேனர் அகற்றப்பட்டது.

இந்த காவி சிந்தனையாளர்கள் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் எப்படியாவது ஒரு பெரிய கலவரத்தை விளைவித்து விடலாம் என பல வியூகங்களை வகுத்து அதற்கான செயல்திட்டங்களில் இறங்கியுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் பரவலாகத் தெரிவிக்கின்றனர். இது காவல்துறை மற்றும் உளவுத்துறையினருக்குத் தெரிந்தும் அதைப் பற்றி அவர்கள்பெரிய அளவில் சட்டை செய்யாமல் இருக்கின்றார்களாம்.

இது போன்ற சிறிய சிறிய பிரச்சனைகளை உண்டாக்கி சோதனை ஓட்டம் பார்க்கிறதாம் சங்பரிவார சதிக்கூட்டம். ஆனால் இவர்கள் எங்கெல்லாம் சோதனை பார்த்தார்களோ அங்கெல்லாம் இறைவனின் அருளால் சரியான பதிலடி கொடுக்கப்பட்டு அவர்களை பல்பிடுங்கப் பட்ட பாம்பாக ஆக்கி விட்டனர் நம் மக்கள்.

சேதுபாவாசத்திர ஆர்ப்பாட்டத்தில் கூடிய மக்கள் கூட்டம் சங்பரிவார சதி கும்பல்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாம். இனி ஒரு முறை இதுபோலச் சீண்டிப்பார்க்க நினைத்தால் அவர்களுக்கு கிடைக்கும் பதிலடி இதுவரை அவர்கள் சந்தித்திடாத வகையில் இருக்கும் என்பது தான் உண்மை. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் பல ஊர்களில் அவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து மதவெறியைத் தூண்டிவிடும் இந்தக் காவி கும்பல்களை தடை செய்தாலே போதும் தமிழகம் என்றைக்குமே அமைதிப்பூங்காவாக திகழும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

காவியேந்திர பூபதி

புதுப்பட்டினத்தில் கலவரம் நடப்பது இது முதல்முறை அல்ல. இது மூன்றாவது முறை. ஆனால் ஒவ்வொரு முறையும் இஸ்லாமியர்களின் சொத்துக்கள் தான் சேதப்படுத்தப் படுகின்றனவே தவிர காவி பயங்கரவாதிகளுக்கு எவ்வித சேதமும் உண்டாவது இல்லை. உண்டாவது இல்லை என்று சொல்வதை விட உண்டாக்கப்படுவதில்லை என்று தான் சொல்லவேண்டும்.

சட்டத்தை மதித்து நம் மக்கள் காவல்துறையில் உதவி கேட்டு நிற்கிறார்கள். ஆனால் சேதுபாவாசத்திரத்தில் இருக்கும் ரவீந்திரபூபதி என்ற காவித்துறை ஆய்வாளர் முஸ்லிம்கள் கொடுக்கும் புகாரை குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிடுகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பட்டினத்தில் இந்துக்கள் நடத்திய ஒரு திருமண ஊர்வலத்தைத் முஸ்லிம்கள் தடுத்தார்கள் என காவி வகையாற்றாகள் பூபதியிடம் புகார் செய்ய சம்பவ இடத்திற்கு பறந்து வந்தார் பூபதி.

அங்குள்ள பள்ளிவாசல் வாசலில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம் இங்கு என்ன பிரச்சினை என்று கேட்டார். அதற்கு அவர் எனக்கு ஒன்றும் தெரியாது என சொன்னவுடன்,. வந்தது ஆத்திரம் இந்த காவிபூபதிக்கு, “ஏன்டா உனக்கு ஒன்னுமே தெரியாதா? நீ இப்ப தான் பாகிஸ்தானில் இருந்து வந்தியா? நீங்களெல்லாம் பக்கா தீவிரவாதிப்பயலுகடா, ஒருநாள் என் கையில் மாட்டாம போக மாட்டீங்க, அன்னிக்கி பாத்துக்கிறேன்டா உங்களை” என்று அவரைத் திட்டித் தீர்த்து விட்டுச் சென்றுவிட்டார்.

இந்தப் பிரச்சினையின் போது கூட புதுப்பட்டினம் பெண்கள் சிலர் பூபதியிடம், “சார், இவர்களால் தினமும் இப்படி பிரச்சினைகள் உண்டாகிறது, நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைக்க, அவர்களை முறைத்த பூபதி, “அவர்களால பிரச்சினையாவுதா? எல்லா பிரச்சினைக்கும் உங்க ஆளுங்க தான் காரணம், அதனால எல்லோரும் இந்த ஊரைக் காலி பண்ணிட்டு எங்கேயாவது ஓடிப்போயிடுங்க” என்று சொல்ல அந்தக் கூட்டத்தில் நின்ற ஒரு வீரப்பெண்மனி வெளியே வந்து பூபதியை நோக்கி, “நாங்க ஏன் சார் இந்த ஊர விட்டு போகனும், நாங்க பொறந்து வளர்ந்த ஊர் இந்த ஊர், கலவரம் செய்றவன அடக்குறதுக்கு உங்களுக்கு துப்பு இல்லை, நீங்க உங்க யூனிபாம கழற்றிட்டு இந்த ஊரக் காலிபண்ணிட்டு போங்க” என முகத்தில் அறைந்தது போல பூபதிக்கு பதில் கொடுத்தார்.

ஆக கலவரக்காரர்களின் கைக்கூலியாக கடமையாற்றும் கருப்பு ஆடு காவியேந்திர பூபதியை காவிகள் மட்டும் இருக்கும் ஊர்ப்பக்கம் கரையேற்றினால் தான் இதுபோன்ற கயவர்கள் கட்டுப்படுவார்கள். காவியேந்திர பூபதியால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என கடமையில் கருத்தாய் இருக்கும் காவல்துறையினருக்கு கலங்கம் தான் விளையும்.

கயவர்களின் கடல்வழித் தாக்குதல்
































புதுப்பட்டினம் என்பது ஒரு கடற்கரை கிராமம். ஒரு புறம் கிழக்குக் கடற்கரை சாலையும் மறுபுறம் கடலும் அமைந்துள்ள பகுதி. சாலையின் பக்கம் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். கடற்கரைப் பக்கம் வசிக்கும் அப்பாவி மீனவர்கள் மத்தியில் இதுபோன்ற சில விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிற்கு காவி வெறியர்களும் இருக்கின்றனர். இவர்கள் செய்யும் காவி வெறியாட்டங்களுக்கு புதுப்பட்டினம் மீனவ மக்கள் அதிகமானவர்கள் உடன்படுவதில்லை.

இதனால் அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து கடல் மார்க்கமாக காவிக்கூட்டங்களை வரவழைத்து கலவரங்களை நிகழ்த்துகின்றனர் இந்த பயங்கரவாதிகள். தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் யாரும் தாக்கி விட்டு அந்த இடத்தில் நிற்பது கிடையாது. கலவரம் உண்டாக்க வரும் இந்த வீரத்திருமகன்கள் தாக்குதல் முடிந்த பின் “ஓடு ஓடு” எனக் கத்திக் கொண்டே ஓடி ஒழிந்து விடுகின்றனர். வேலை முடிந்து ஒரு நிமிடம் நின்றாலும் ஆபத்து என்று ஓட்டெமெடுக்கும் இந்த வீராதி வீரப்புலிகள் போருக்கு அழைப்பு விடுவது சிரிப்பைத் தான் வரவழைக்கிறது.

கலவரத்தை உண்டாக்கும் இந்த வீரமங்கையர்கள் முதலில் செய்யும் வேலை அந்த ஊருக்கு மின்சாரம் தரும் டிரான்ஸ்பார்மரை அணைத்து விடுவது தான். வெளிச்சத்தில் சண்டையிட வெட்கப்பட்டு இருட்டில் புகுந்து களேபரம் செய்யலாம் என நினைக்கிறார்கள் போலும். இவர்களின் அராஜக அட்டூழியத்தை இனிவரும் காவல் அதிகாரிகளாவது ஒடுக்க வேண்டும். கடல்வழியாக கலவரம் விளைவிக்க இதுபோல திரண்டு வரும் கயவர்களை அங்கேயே பிடித்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பயங்கரவாதிகள் ஒடுங்குவார்கள்.
.