Saturday, October 01, 2011

காவல் நிலைய முற்றுகை போராட்டம்

வளம் கொழிக்கும் செல்வபூமி தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள். முஸ்லிம்களும் ஹிந்துக்களும் ஒற்றுமையாக , அந்நியோன்யமாக இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இரு தரப்பும் தங்களை மாமா மச்சான் என அன்போடும் பாசத்தோடும் அழைத்து., ஒருவர் பண்டிகைக்கு ஒருவர் இனிப்புகளை பறிமாறிக் கொள்ளும் வழக்கமும் இருந்து வந்தது. நகர்ப்புறங்களை விட இது போன்ற கிராமப் புறங்களில் தான் மத நல்லிணக்கம் அதிகமாகப் பேணப்படும் வழக்கம் இருந்து வந்தது.

ஊடுறுவிய மத பயங்கரவாதம்:

இது போன்ற நட்பான சகோதரத்துவத்துக்கு சமாதி கட்டுவதற்கு உள்ளே நுழைந்தது இந்த இந்துத்துவா என்னும் விசக்கொள்கை. சகோதரர்களாக பழகி வந்த மக்களை எதிரெதிர் தரப்பாக மாற்றி இருதரப்பிற்கும் இடையே இரத்தத்தை ஓட்டக்கூடிய அளவிற்கு மத வெறியைக் கிளப்பியது இந்த வெறிக்கொள்கை.

அப்பாவி இந்து மக்களைப் பிரித்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்து ஏவப்படும் வேட்டை நாயாக பயன்படுத்த ஆரம்பித்தனர் இந்துத்துவ வெறியர்கள். இவர்கள் சொல்வதுதான் வேதம் என்ற நிலைக்கு அந்த அப்பாவி இந்து மக்கள் தள்ளப்பட்டனர். அதன் பிரதிபலிப்பு தான் இன்றைக்கு பல பகுதிகளில் எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றது.

கிரிக்கெட்டை காரணமாக்கி கலவரம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து மல்லிப்பட்டினம் செல்லும் வழியில் அமைந்துள்ள இஸ்லாமிய கிராமம் தான் புதுப்பட்டினம். இந்த ஊரில் இஸ்லாமியர்கள் மீது வெறியாட்டம் நடத்தப்படுவது புதிது அல்ல. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் செயல்தான்.

இப்படித்தான் கடந்த 22/09/2011 அன்று மாலை புதுப்பட்டினத்தில் உள்ள தெருவில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றனர்.
சிறுவர்களுக்கே உரிய மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் நோக்கி சப்தமிட்டு கத்திக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்த நேரத்தில் அவ்வழியே வந்த காவி பயங்கரவாதிகள் சிலர் நேராக அவர்களிடம் சென்று, “ஏன்டா எங்களைக் கேலி செய்கிறீர்கள்” எனக் கேட்டனர். “உங்களைக் கேலி செய்யவில்லை, நாங்கள் எங்களுக்குள் விளையாடிக் கொண்டிருக்கிறோம்” என அவர்கள் பதிலளிக்க, அதில் கோபமடைந்த அவர்கள் உங்களைச் சொல்லி குற்றமில்லையடா, உங்களை இந்த ஊரை விட்டு காலி செய்தால் தான் நீங்களெல்லாம் அடங்குவீர்கள், உங்களை என்ன செய்கிறோம் பார் எனச் சொல்லி விட்டு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக ஊருக்குள் சென்றுவிட்டனர்.

திரண்டு வந்த பயங்கரவாதிகள்:

புதுப்பட்டினத்திற்குள் சென்று அங்கே தயாராக இருந்த 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்த காவிக்கயவர்கள், அங்கிருந்த பள்ளிவாசல் மீது கற்களை வீசி பள்ளிவாசலை சேதப்படுத்தினர்.

அத்தோடு அவர்களின் வெறி அடங்கிவிடவில்லை. அருகில் இருந்த சில வீடுகள் மீதும் கற்களை வீசி எறிந்து சேதப்படுத்தினர். கடும் கூச்சலுடன் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி கத்திக் கொண்டு வெறியாட்டம் நடத்தும் இவர்களின் செயலைக் கேள்விப்பட்டு அந்தப் பகுதி மக்கள் அங்கே திரண்டு வர காவி வெறியர்கள் அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓடி விட்டனர். தகவலறிந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் அன்வர் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று களமிறங்கினார்கள்.

ஒன்று திரண்ட பொதுமக்கள்:

இதுபோல தொடர்ச்சியாக சங்பரிவார வெறியர்களால் இடையூறுகள் விளைவிக்கப்பட்டு வருவதால் நிம்மதியிழந்த அந்தப் பகுதி பொதுமக்கள், இது தொடர்பாக ஏதாவது செய்தாக வேண்டும் எனக் கருதி சில கயவர்கள் மீது அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடிப்பு வேலையில் இறங்கியது சேதுபாவாசத்திரம் காவல்துறை. சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த எஸ்.பியை ஊருக்குள்ளே செல்லவிடாமல் இது சாதாரண பிரச்சனை எனச் சொல்லி அவரை திரும்பி அழைத்துச் சென்று விட்டனர்.

காவல்துறை உயரதிகாரி நேரில் வந்தால் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என நினைத்திருந்த மக்கள், அவர் திரும்பிச் சென்றதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை நம்பினால் நமக்கு நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தனர். காரணம் ஜமாத்தார்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கூட கைது செய்யப்படாதது அவர்களுக்கு காவல்துறை மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

காவி அதிகாரியின் கயமைத் தனம்:

கலவரத்தை விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ரவீந்திரபூபதி என்பவர் செய்த காரியம் அனைவரையும் வெறுப்பில் ஆழ்த்தியது. அவர் காக்கிச்சட்டைக்காரராக இருப்பார் என்று நினைத்த போது அவரது காவி வேடம் கலைய ஆரம்பித்தது.
அந்த ஊர்த்தலைவர் ராமசாமி என்பவரை அழைத்து, “நீங்கள் அவர்கள் மீதும் புகார் கொடுங்கள்” என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் ஏற்கனவே பிப்ரவரி மாதம் நடந்த ஒரு பிரச்சனையில் சம்பந்தப்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் சிலரின் பெயரையும் கொடுத்து இவர்கள் மீது புகார் எழுதிக் கொடுங்கள் என பாதை அமைத்துக் கொடுத்தார். அவரது இந்த சிறப்பான ஆலோசனையின் பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் பலரின் பெயர்களை பட்டியலிட்டுக் கொடுத்து விட்டு வந்தார் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி.

களமிறங்கிய டி.என்.டி.ஜே:

ராமசாமி கொடுத்த புகாரின் பெயரில் இந்த பிரச்சினைக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவி முஸ்லிம்கள் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றனர் காவல்துறையினர். அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களையெல்லாம் சுதந்திரமாக விட்டுவிட்டு சில அப்பாவி மீனவ இந்து மக்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்தப் பிரச்சினை இப்படியே போனால் இது காவிக்கூட்டத்திற்கு வலுவாக அமைந்து விடும் எனக்கருதி புதுப்பட்டினம் ஜமாத்தார்கள் இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் தெரிவித்த போது, மாநிலச் செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் இது குறித்து ஆலோசனை செய்து இந்தப் பிரச்சினையை மாநிலத் தலைமையிடம் கொண்டு வந்தனர். காவிக்கூட்டத்திற்கு துணைபோகும் காவித்துறை அதிகாரி ரவீந்திர பூபதியின் செயலைக் கண்டித்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அனல் பறந்த ஆர்ப்பாட்டம்:

காவல்துறையின் கயமைத்தனத்தை குறிப்பாக காவி அதிகாரி ரவீந்திர பூபதியின் அராஜகச் செயலைக் கண்டித்து கடந்த 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிந்தது. மாலை 4 மணிக்கு சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்திற்கு எதிரே மக்கள் திரள ஆரம்பித்தனர்.

ஒரு சாதாரண சிறிய கிராமத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களைக் குவித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அந்தப் பகுதி மக்களும் காவல்துறையினரும் வியப்படைந்தனர்.

கயமைத் தனம் செய்த காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோசங்கள் அனலாய்ப் பறந்தன. மேலாண்மைக் குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி கண்டன உரையாற்றினார். இது போன்ற காவி அதிகாரிகள் சிலர் செய்யும் ஈனச்செயல்கள் தான் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்துகின்றன என தன்னுடைய உரையில் அழுத்தமாகத் தெரிவித்தார் அல்தாஃபி.

அத்துமீறல் எங்களுக்கும் தெரியும்:

முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள், எந்த நிலையிலும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்பவர்கள் இல்லை, ஆனால் சட்டப்படி அனுசரித்துச் செல்வதால் முஸ்லிம்களை கோழைகள் என நினைத்து விட வேண்டாம். எங்களுக்கும் அத்துமீறத் தெரியும்., எப்படி என்றால் இவர்கள் செய்யும் செயல்களை விட பண்மடங்கு வேகம் எங்களால் காட்ட முடியும் ஆனால் நாங்கள் எப்போதுமே சட்டத்தை மதிப்பவர்கள்., தவறு செய்பவர்கள் எங்கள் பக்கம் இருந்தால் அவர்களை கைது செய்யுங்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் தவறு இல்லை. ஆனால் தப்பு செய்யாத அப்பாவிகளின் மீதே பொய்வழக்குப் போடும் போக்கினை இந்தக் காவல்துறையினர் இஸ்லாமியர்கள் மீது மட்டும் நிகழ்த்துவதற்கு என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை.., இது மீண்டும் தொடர்ந்தால் நாங்கள் இது போல ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்க மாட்டோம், எங்களை அந்த நிலைக்குத் தள்ளி விடாதீர்கள் என தன்னுடைய கண்டன உரையில் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிந்து சென்ற மக்கள் இனி ஒரு விடிவு வந்து இதுபோன்ற காவி பயங்கரவாதிகளின் அட்டகாசங்களில் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.


போர் என்றாலும் மகிழ்ச்சியே!

விநாயகருக்கு சதுர்த்தி என்ற பெயரில் இந்த காவி பயங்கரவாதிகள் அதை ஒரு கலவர வித்திடு கலமாக உருவாக்கிவைத்துள்ளனர். நாங்கள் இஸ்லாமியர்களின் தெருக்கள் வழியாகத் தான் செல்வோம், பள்ளிவாசல் வழியாகத் தான் செல்வோம்., அப்போது தான் இஸ்லாமியர்களைத் திட்டி அவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டி அதை மையமாக வைத்து கலவரத்தை உண்டாக்க சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற நோக்கத்தோடு தான் இவர்கள் நாடு முழுவதும் இந்த ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ஊர்வலத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் விதமாக ஆங்காங்கே பேனர்களை வைத்து அதில் எதாவது பிரச்சினை உண்டாகாதா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த விநாயகர் ஊர்வலத்தின் போதும் இந்த புதுப்பட்டினத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் வாசகம் அங்கிருந்த மக்களை கலவரத்திற்கு அழைப்பு விடும் விதமாக அமைந்து இருந்தது.

“அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்” “வாள் ஏந்தத் தயங்க மாட்டோம்” “போர் என்றாலும் மகிழ்ச்சியே” என கொட்டை எழுத்துக்களில் அமைந்திருந்த அந்த பேனர் மக்களை வெறுப்புக்குள்ளாக்கியது.

கலவரத்தை நடத்த தயாராகி விட்ட சங்பரிவாரங்களின் சதியை விளக்கும் அந்த பேனரை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் பலரும் காவல்துறையில் புகார் தர, அடுத்த சில மணிநேரங்களில் சர்ச்சைக்குரிய அந்த பேனர் அகற்றப்பட்டது.

இந்த காவி சிந்தனையாளர்கள் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் எப்படியாவது ஒரு பெரிய கலவரத்தை விளைவித்து விடலாம் என பல வியூகங்களை வகுத்து அதற்கான செயல்திட்டங்களில் இறங்கியுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் பரவலாகத் தெரிவிக்கின்றனர். இது காவல்துறை மற்றும் உளவுத்துறையினருக்குத் தெரிந்தும் அதைப் பற்றி அவர்கள்பெரிய அளவில் சட்டை செய்யாமல் இருக்கின்றார்களாம்.

இது போன்ற சிறிய சிறிய பிரச்சனைகளை உண்டாக்கி சோதனை ஓட்டம் பார்க்கிறதாம் சங்பரிவார சதிக்கூட்டம். ஆனால் இவர்கள் எங்கெல்லாம் சோதனை பார்த்தார்களோ அங்கெல்லாம் இறைவனின் அருளால் சரியான பதிலடி கொடுக்கப்பட்டு அவர்களை பல்பிடுங்கப் பட்ட பாம்பாக ஆக்கி விட்டனர் நம் மக்கள்.

சேதுபாவாசத்திர ஆர்ப்பாட்டத்தில் கூடிய மக்கள் கூட்டம் சங்பரிவார சதி கும்பல்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாம். இனி ஒரு முறை இதுபோலச் சீண்டிப்பார்க்க நினைத்தால் அவர்களுக்கு கிடைக்கும் பதிலடி இதுவரை அவர்கள் சந்தித்திடாத வகையில் இருக்கும் என்பது தான் உண்மை. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் பல ஊர்களில் அவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து மதவெறியைத் தூண்டிவிடும் இந்தக் காவி கும்பல்களை தடை செய்தாலே போதும் தமிழகம் என்றைக்குமே அமைதிப்பூங்காவாக திகழும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

காவியேந்திர பூபதி

புதுப்பட்டினத்தில் கலவரம் நடப்பது இது முதல்முறை அல்ல. இது மூன்றாவது முறை. ஆனால் ஒவ்வொரு முறையும் இஸ்லாமியர்களின் சொத்துக்கள் தான் சேதப்படுத்தப் படுகின்றனவே தவிர காவி பயங்கரவாதிகளுக்கு எவ்வித சேதமும் உண்டாவது இல்லை. உண்டாவது இல்லை என்று சொல்வதை விட உண்டாக்கப்படுவதில்லை என்று தான் சொல்லவேண்டும்.

சட்டத்தை மதித்து நம் மக்கள் காவல்துறையில் உதவி கேட்டு நிற்கிறார்கள். ஆனால் சேதுபாவாசத்திரத்தில் இருக்கும் ரவீந்திரபூபதி என்ற காவித்துறை ஆய்வாளர் முஸ்லிம்கள் கொடுக்கும் புகாரை குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிடுகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பட்டினத்தில் இந்துக்கள் நடத்திய ஒரு திருமண ஊர்வலத்தைத் முஸ்லிம்கள் தடுத்தார்கள் என காவி வகையாற்றாகள் பூபதியிடம் புகார் செய்ய சம்பவ இடத்திற்கு பறந்து வந்தார் பூபதி.

அங்குள்ள பள்ளிவாசல் வாசலில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம் இங்கு என்ன பிரச்சினை என்று கேட்டார். அதற்கு அவர் எனக்கு ஒன்றும் தெரியாது என சொன்னவுடன்,. வந்தது ஆத்திரம் இந்த காவிபூபதிக்கு, “ஏன்டா உனக்கு ஒன்னுமே தெரியாதா? நீ இப்ப தான் பாகிஸ்தானில் இருந்து வந்தியா? நீங்களெல்லாம் பக்கா தீவிரவாதிப்பயலுகடா, ஒருநாள் என் கையில் மாட்டாம போக மாட்டீங்க, அன்னிக்கி பாத்துக்கிறேன்டா உங்களை” என்று அவரைத் திட்டித் தீர்த்து விட்டுச் சென்றுவிட்டார்.

இந்தப் பிரச்சினையின் போது கூட புதுப்பட்டினம் பெண்கள் சிலர் பூபதியிடம், “சார், இவர்களால் தினமும் இப்படி பிரச்சினைகள் உண்டாகிறது, நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைக்க, அவர்களை முறைத்த பூபதி, “அவர்களால பிரச்சினையாவுதா? எல்லா பிரச்சினைக்கும் உங்க ஆளுங்க தான் காரணம், அதனால எல்லோரும் இந்த ஊரைக் காலி பண்ணிட்டு எங்கேயாவது ஓடிப்போயிடுங்க” என்று சொல்ல அந்தக் கூட்டத்தில் நின்ற ஒரு வீரப்பெண்மனி வெளியே வந்து பூபதியை நோக்கி, “நாங்க ஏன் சார் இந்த ஊர விட்டு போகனும், நாங்க பொறந்து வளர்ந்த ஊர் இந்த ஊர், கலவரம் செய்றவன அடக்குறதுக்கு உங்களுக்கு துப்பு இல்லை, நீங்க உங்க யூனிபாம கழற்றிட்டு இந்த ஊரக் காலிபண்ணிட்டு போங்க” என முகத்தில் அறைந்தது போல பூபதிக்கு பதில் கொடுத்தார்.

ஆக கலவரக்காரர்களின் கைக்கூலியாக கடமையாற்றும் கருப்பு ஆடு காவியேந்திர பூபதியை காவிகள் மட்டும் இருக்கும் ஊர்ப்பக்கம் கரையேற்றினால் தான் இதுபோன்ற கயவர்கள் கட்டுப்படுவார்கள். காவியேந்திர பூபதியால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என கடமையில் கருத்தாய் இருக்கும் காவல்துறையினருக்கு கலங்கம் தான் விளையும்.

கயவர்களின் கடல்வழித் தாக்குதல்
































புதுப்பட்டினம் என்பது ஒரு கடற்கரை கிராமம். ஒரு புறம் கிழக்குக் கடற்கரை சாலையும் மறுபுறம் கடலும் அமைந்துள்ள பகுதி. சாலையின் பக்கம் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். கடற்கரைப் பக்கம் வசிக்கும் அப்பாவி மீனவர்கள் மத்தியில் இதுபோன்ற சில விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிற்கு காவி வெறியர்களும் இருக்கின்றனர். இவர்கள் செய்யும் காவி வெறியாட்டங்களுக்கு புதுப்பட்டினம் மீனவ மக்கள் அதிகமானவர்கள் உடன்படுவதில்லை.

இதனால் அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து கடல் மார்க்கமாக காவிக்கூட்டங்களை வரவழைத்து கலவரங்களை நிகழ்த்துகின்றனர் இந்த பயங்கரவாதிகள். தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் யாரும் தாக்கி விட்டு அந்த இடத்தில் நிற்பது கிடையாது. கலவரம் உண்டாக்க வரும் இந்த வீரத்திருமகன்கள் தாக்குதல் முடிந்த பின் “ஓடு ஓடு” எனக் கத்திக் கொண்டே ஓடி ஒழிந்து விடுகின்றனர். வேலை முடிந்து ஒரு நிமிடம் நின்றாலும் ஆபத்து என்று ஓட்டெமெடுக்கும் இந்த வீராதி வீரப்புலிகள் போருக்கு அழைப்பு விடுவது சிரிப்பைத் தான் வரவழைக்கிறது.

கலவரத்தை உண்டாக்கும் இந்த வீரமங்கையர்கள் முதலில் செய்யும் வேலை அந்த ஊருக்கு மின்சாரம் தரும் டிரான்ஸ்பார்மரை அணைத்து விடுவது தான். வெளிச்சத்தில் சண்டையிட வெட்கப்பட்டு இருட்டில் புகுந்து களேபரம் செய்யலாம் என நினைக்கிறார்கள் போலும். இவர்களின் அராஜக அட்டூழியத்தை இனிவரும் காவல் அதிகாரிகளாவது ஒடுக்க வேண்டும். கடல்வழியாக கலவரம் விளைவிக்க இதுபோல திரண்டு வரும் கயவர்களை அங்கேயே பிடித்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பயங்கரவாதிகள் ஒடுங்குவார்கள்.
.