தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாட்டின் உடனடி பிரதிபளிப்பாக இந்திய பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அழைப்பு வந்ததன் பேரில் மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வழியுறுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பி.ஜைனுல் ஆபிதீன், அப்துல் ஹமீத், கோவை ரஹ்மதுல்லாஹ், ஷம்சுல்லுஹா ஆகியோர் இன்று (6-7-2010) காலை 11.15 மணிக்கு டெல்லி சென்று காங்கரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரத பிரதமர் மன்மோகங் சிங் ஆகியோரை நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்கிட கோரி ஜுலை 4 அன்று லட்சோப லட்சம் மக்கள் சென்னையில் கூடியதை சுட்டிக்காட்டி இதை உடனடியாக சட்டமாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வழியுறுத்தினர்.
புகைப்படம் மற்றும் மேலதிக விபரம் விரைவில் இன்ஷா அல்லாஹ்.