தொகுப்பு: RASMIN M.I.Sc
நேரடி ரிப்போட்
கடந்த 24.25.2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில் வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான இரண்டாவது விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஆரம்பமாகியது.
இறைவனுக்கு உருவம் உண்டா? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அல்லாஹ்வையே கடுமையாக விமர்சித்து தான் அல்லாஹ்வின் எதிரி என்பதை பகிரங்கமாக வீடியோவில் பதிவு செய்த அப்துல்லாஹ் ஜமாலி இந்த விவாதத்திலாவது உரிய ஆதாரத்தை முன்வைத்து வாதிடுவார் என்று அரங்கில் கூடியிருந்தவர்கள் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார்கள்.
விவாதத்தின் இருதியாய் மாறிய ஜமாலியின் ஆரம்பம்:
ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்? என்ற தலைப்பில் சரியாக காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகியது.
முதலாவதாக பேச ஆரம்பித்த சகோதரர் பி.ஜெ அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்ட சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவையைச் சேர்ந்தவர்களும் அவருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் தெளிவான இணைவைத்தலில் ஈடுபடுவதால் அவர்கள் அனைவரும் முஷ்ரிக்குகள் தான் என்பதை மிகத் தெளிவாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பி.ஜெ சொன்னதைப் போல் தான் முஷ்ரிக் என்பதற்கு தானே ஆதாரத்தைக் காட்டி பி.ஜெ அவர்கள் சொன்னதை ஆமோதித்தார் ஜமாலியுடைய முதல் வாதமே விவாதத்தின் கடைசியாக மாறியது என்பதுதான் விவாதத்தின் ஹைலைட்.
தான் முஷ்ரிக் என்பதை நிரூபித்த ஜமாலியின் முதல் கேள்வி:
உலகில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அனைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுக்கக் கூடிய ஆற்றல் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் இருக்கிறது.
ஆனால் அப்துல்லாஹ் ஜமாலியும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை என்று சொல்லிக் கொள்பவர்களும் இந்த அதிகாரம் நல்லடியார்கள் என அவர்களால் நம்பப் படுபவர்களுக்கும் இருப்பதாக நம்பி ஏற்றுக் கொண்டிருப்பதால் அவர்கள் அணைவரும் இணைவைத்தல் எனும் ஷிர்க்கை செய்து முஷ்ரிக்காக மாறிவிட்டார்கள் என சகோதரர் பி.ஜெ அவர்கள் தெளிவாகக் கூறினார்.
அதை எதிர்த்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் முஷ்ரிக் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலியோ தான் முஷ்ரிக் அல்ல என்று நிரூபிப்பதை விட்டு விட்டு உலகில் உள்ள அணைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அணைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அணைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுக்கக் கூடிய ஆற்றல் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் இருக்கிறது.என்பதற்கு ஆதாரம் என்ன? என்று கேள்வி கேட்டு அல்லாஹ்வின் ஆற்றலிலேயே சந்தேகத்தை எழுப்பி அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் இந்த அதிகாரம் இருப்பதாக ஒத்துக் கொண்டு தான் முஷ்ரிக் தான் என்பதை முதல் வாதத்திலேயே ஒத்துக் கொண்டார்.
ஜமாலி தவ்ஹீத் ஜமாத்தின் மேல் வைத்த குற்றச் சாட்டுக்களும் பி.ஜெயின் பதில்களும்:
உலகில் உள்ள அணைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் கேட்டாலும் அணைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அணைவருக்கும் பதில் தரக்கூடிய ஆற்றல் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் உண்டு என்றால் தசாவதானி ஒரே நேரத்தில் 10 வேலைகளை செய்கிறான் சதாவதானி ஒரே நேரத்தில் 100 வேலைகளை செய்கிறான் இதுவெல்லாம் அல்லாஹ்வுக்கு ஒப்பாகாதா? என்று பி.ஜெயை நோக்கி ஜமாலி கேள்வியைத் தொடுத்தார்.
அதற்கு பதில் அளித்த பி.ஜெ தசாவதானி என்பவன் ஒரே நேரத்தில் 10 காரியங்களை செய்வதும் சதாவதானி ஒரே சந்தர்பத்தில் 100 காரியங்களில் ஈடுபடுவதும் பிறப்பில் உருவாவதோ அல்லது இயற்கையோ கிடையாது மாறாக அது பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்வது அப்படி ஒருவர் ஒரே நேரத்தில் 10 அல்லது 100 காரியங்களை செய்வதால் ஒன்றும் அவர் கடவுளாகவோ அல்லது கடவுளின் தன்மைகள் பெற்றவராகவோ மாற முடியாது.
ஒரு வாதத்திற்கு அப்படி வைத்துக் கொண்டாலும் தசாவதானி சதாவதானி என்றவர்களின் பட்டியலில் ஒரே ஒரு முஸ்லிம் தான் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மற்றவர்கள் அணைவரும் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தான்.
ஒருவன் தசாவதானியாக அல்லது சதாவதானியாக இருப்பதால் அவன் அவ்லியாதான் என்று நீங்கள் கூறினால் மாற்று மதத்தை சேர்ந்தவர்களைத்தான் அந்தப் பட்டியலில் அதிகமாக இடம் பிடிக்கச் செய்யவேண்டி வரும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னார்.
ஜமாலியின் அர்த்தமற்ற கேள்விகளும் பீ.ஜெயின் ஆணித்தரமான பதில்களும்:
முதலாவதாக தவ்ஹீத் ஜமாத்தும் அதன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களும் முஷ்ரிக்குகள் எனும் இணைவைப்பாளர்கள் என்று உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெரிவித்துள்ளீர்கள் அதற்கு என்ன ஆதாரம் என பி.ஜெ ஜமாலி யைப் பார்த்து கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளிலிருந்தும் ஆதாரத்தை எடுத்து தனது குற்றச் சாட்டை மெய்ப்படுத்த வேண்டிய ஜமாலியோ நகைச்சுவையை உண்டு பண்ணும் ஒர் ஆதாரத்தை முன் வைத்தார்.
ஜமாலியின் ஆதாரக் கிரந்தங்களாகிய உணர்வுப் பத்திரிக்கையும் அல்ஜன்னத்தும்:
தவ்ஹீத் ஜமாத்தினர் இணைவைக்கின்றனர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு உணர்வுப் பத்திரிக்கையில் இரத்த தானம் செய்வீர் மனித உயிர் காப்பீர் என இரத்ததானத்தை வழியுறுத்தி செய்யப் பட்டிருந்த விளம்பரத்தை ஆதாரமாக காட்டிய ஜெமாலி அவர்கள்
உயிரைத் தருவதும் அதனை எடுப்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ளது அப்படியிருக்க இரத்ததானம் செய்து உயிர் காக்கும் படி விளம்பரம் செய்து மக்களிடம் கேட்பது இணைவைப்பதாகும்.
இப்படி விளம்பரம் செய்தததினால் தவ்ஹீ;த் ஜமாத் இணைவைத்த விட்டது அது போல் 1988 காலப்பகுதியில் வெளியான அல்ஜன்னத் பத்திரிக்கையில் குழந்தையில்லாத தம்பதியினருக்கு ஒரு வைத்தியர் ஆலோசனைகளும் மருந்தும் தருகிறார் என்று ஒரு விளம்பரம் வெளியிடப் பட்டிருந்தது அதை எடுத்துக் காட்டிய ஜமாலி அவர்கள் குழந்தைப் பாக்கியத்தைத் தருபவன் இறைவன் அப்படியிருக்க நீங்கள் எப்படி குறிப்பிட்ட மருத்துவரிடம் செல்லும் படி பத்திரிக்கையில் விளம்பரம் செய்வீர்கள் இதுவும் ஷிர்க் எனும் இணைவைத்தலாகும்.என வாதிட்டார் ஜமாலி.
அப்துல்லாஹ் ஜமாலியும் அவர் சார்ந்திருக்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினரும் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் முஷ்ரிக்குகள் என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டை பி.ஜெ வைத்து அதனை ஆதாரத்துடன் நிருவியும் காட்டியுள்ளார்.
ஆனால் நாங்கள் முஷ்ரிக்குகள் அல்ல என்று நிருவ வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலியோ கோமாலித்தனமாக தனது நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக உணர்வுப் பத்திரிக்கையையும் அல்ஜன்னத்தையும் காட்டியது அவர்கள் தரப்பில் பார்வையாளர்களாக வந்தவர்களையே முகம் சுழிக்க வைத்து விட்டது.
# அல்லாஹ்விடம் கேட்டால் எப்படி கிடைக்குமோ அது போல ஒரே நேரத்தில் உலகில் எத்தனை பேர் கேட்டாலும் கூகுல் இணையத்தளம் தேவையானதை உடனே தேடித்தருகிறது.இப்படி தேடித்தருவதால் (Google)கூகுலைப் பயன் படுத்துவது ஷிர்க் என்றாகிவிடுமா என கொஞ்சம் கூட சிந்தனையற்ற சிறுபிள்ளைத் தனமான கேள்வியை பி.ஜெயிடம் ஜமாலி கேட்டார்.
கூகுல்(Google) செர்ச் என்ஜினைப் பொருத்தவரை ஒரே நேரத்தில் பலர் கேட்டாலும் தேடித்தருகிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள் அது தேடித்தரும் முறையை முதலில் புரிந்து கொள்ளுங்கள் கூகுல் செர்ச் என்ஜின் ஒவ்வொரு மைக்ரோ பாயின்டுக்கும் பலரைக் கொண்டு இயக்கப் படுகிறது.அதனால் தான் நாம் கேட்கும் போது அது உடனே தேடித் தருகிறது.
அப்படியே அதனை இயக்குவதற்கு ஆட்கள் இல்லாமலயே அது இயங்கினால் கூட உங்கள் கேள்வியில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
அல்லாஹ் ஒருவருக்கு எதையாவது கொடுத்தால் அது யாருடைய கண்ணுக்கும் தெரியாது ஆனால் அல்லாஹ் அவர்கள் கேட்டதற்கு தெளிவாக பதில் கொடுப்பான்.
ஆனால் கூகுல் செர்ச் என்ஜினில் ஏதாவது ஒன்றை தேடும் போது தேடுபவரின் கண்ணுக்கும் அது தெரிகிறது அதே போல் அது தேடிக் கொடுப்பதும் கண்ணுக்குத் தெரிகிறது.அதனால் கூகுல் செர்ச் என்ஜினில் தேடுவதை யாரும் இணை வைத்தல் என்று சொல்ல முடியாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார் பி.ஜெ.
சென்னையில் சிக்க வைத்த களியக்காவிலை ஒப்பந்தம்:
# வெளியில் பல இடங்களில் வலிமார்கள் என்று நம்பப்படுபவர்களிடம் கேட்டால் அல்லாஹ் எப்படி பிரித்தறிந்து உதவுவானோ அப்படி உதவுவார்கள் என பேசித்திரிந்த ஜமாலி சென்னை விவாதத்தில் நாம் அப்படி சொல்ல வில்லை அல்லாஹ்வின் இடத்தில் அவர்களை வைக்கவில்லை என வாதிட்டார்.
ஆனால் களியக்காவிலையில் நடந்த விவாதத்திற்கு போட்ட ஒப்பந்தத்திலோ ஒரே நேரத்தில் எத்தனை பேர் எத்தனை மொழிகளில் கேட்டாலும் எங்கிருந்து அழைத்தாலும் அதனை பிரித்தறிந்து அவற்றுக்கு பதில் கொடுக்கும் ஆற்றல் வலிமார்கள் என நம்பப் படுபவர்களுக்கு இருப்பதாக ஒப்பந்தம் போட்டு அதில் அப்துல்லாஹ் ஜமாலி இது தனது தரப்பு நிலைப்பாடு என கொட்டை எழுத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார்.
ஆனால் இந்த விவாதத்திலோ தான் அப்படி எங்கும் கூறவில்லை என வாதிட பி.ஜெ அவர்களோ களியக்காவிலை விவாத ஒப்பந்தத்தை எடுத்துக் காட்டியதும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி ஒரே நேரத்தில் எத்தனை பேர் எந்த மொழியில் கேட்டாலும் அவற்றை பிரித்தறிந்து பதில் கொடுக்கும் அதிகாரம் வலிமார்களுக்கு இருப்பதாக தான் கூறுவதாக சொல்ல ஆரம்பித்தார்.
பி.ஜே அவர்களோ அப்படியானால் விவாதத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சொல்லிக் கொண்டிருந்தது உங்கள் நிலைப்பாடா அல்லது களியக்காவிலையில் சொன்னது உங்கள் நிலைப்பாடா? முதலில் தெளிவான ஒரு நிலைப்பாட்டிட்கு வாருங்கள்.என அழகாக ஜமாலிக்கு உபதேசம் செய்தார் பி.ஜெ
உளரி மாட்டிக் கொண்ட அபூ தலாயில்(?):
தனது கருத்துக்கு குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாத இவருக்கு அவருடைய சீடர்கள் வைத்திருக்கும் பெயர் அபூ தலாயிலாம் (ஆதாரத்தின் தந்தை).(சிரிப்பு தாங்க முடியவில்லை)
ஆதாரங்களை அவா்களாக உருவாக்குவதால் இப்படி அழைக்கிறார்களோ தெரியவில்லை.
உண்மையில் இவர் ஆதாரத்தின் தந்தை அல்ல வழிகேட்டின் தந்தை என்பதை சென்னையில் நடந்த இரண்டு விவாதங்களும் அழகாக தெளிவு படுத்திவிட்டது.
இடத்திற்கு ஏற்றது போல் உளரிக் கொண்டு திரிந்த ஜமாலி தான் வலிமார்களை அல்லாஹ்வின் இடத்தில் வைக்கிறேன் வைக்கவில்லை என மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார் அப்போது நீங்கள் வலிமார்கள் என்று உங்களால் நம்பப்படுபவர்களை அல்லாஹ்வின் இடத்தில் தான் வைக்கிறீர்கள் என்பதற்கு ஆதாரமாக அவர் பேசிய ஒரு வீடியோவின் க்லிப்பிங்கை பி.ஜெ போட்டுக் காட்டினார்.
அந்த க்லிப்பிங்கில் அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கை அவ்லியாக்களின் பார்வை அல்லாஹ்வின் பார்வை அவ்லியாக்களின் கேள்வி அல்லாஹ்வின் கேள்வி என ஜமாலி அவ்லியாக்களை அல்லாஹ்வின் இடத்திற்கு உயர்த்தி பேசும் வீடியோ பதிவாகியிருந்தது.
அதனை பி.ஜெ போட்டுக் காட்டியவுடன் அந்த க்லிப்பிங்கிற்கு பதில் சொல்ல முடியாமல் பந்தியில் குந்திய மந்தியைப் போல் முழித்துக் கொண்டிருந்தார் ஜமாலி பாவம்…….
அடுத்ததாக……
ஒரு கையால் முஸாபஹா செய்தல்,
பெண்கள் ஜும்மாவிற்கு பள்ளிக்கு வருதல்,
அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று எழுதுவது,
காபிர்களுக்கும் ஸலாம் சொல்வது ,
தற்கொலை செய்து கொண்டவர்களை காபிர்கள் என்று சொல்வது போன்றவைகள் எல்லாம் தவ்ஹீத் ஜமாத்தினரால் மார்க்கத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்ட பித்அத்துகள்.இவைகள் அணைத்திற்கும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பி.ஜெ பதில் தரவேண்டும் என்று ஜமாலி குற்றச் சாட்டை வைத்தார்.
ஆரம்பித்தார் பி.ஜெ அமைதியாகியது அரங்கம்:
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தார் சகோதரர் பி.ஜெ
1.முஸாபஹா விஷயம் :
ஒரு கையால் முஸாபஹா செய்வது பித் அத் கிருத்தவர்களின் செயல் என்றால் முதலில் உங்கள் கருத்தை தெரிவித்து எந்த அடிப்படையில் அதனை பித்அத் என்று கூறுகிறீர்கள் என விளங்கப் படுத்துங்கள் அதன் பின் நாம் அதற்கு பதில் கொடுப்போம் என்றார் பி.ஜெ.
அதற்கு பதில் சொன்ன ஜமாலி அவர்கள் முஸாபஹா விஷயத்தில் எங்கள் கருத்து ஒரு கையாலும் முஸாபஹா செய்யலாம் இரண்டு கைகளாலும் செய்யலாம் என்பதாகும்.என்றார்
பி.ஜெ அவர்கள் பதில் சொல்லும் போது அப்படியானால் உங்களுக்குள்ள பிரச்சினை மட்டும் என்ற வார்த்தை தானா? இரண்டு கையால் முடியும் ஒரு கையாலும் முடியும் தவ்ஹீத் ஜமாத் ஒரு கையால் மாத்திரம் தான் முஸாபஹா என்று சொல்கிறது.அதனால் அது பித்அத் கிருத்தவர்களின் செயல்பாடு இதுதான் உங்கள் நிலை என்றால் ஒரு கையாலும் முஸாபஹா செய்யலாம் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு யாராவது அதனை நடை முறைப்படுத்தினால் உங்கள் கருத்துப் படி அவரும் கிருத்தவ கலாசாரத்தை பின்பற்றியவராக ஆவாரே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டதுடன் முதலில் ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் தெளிவு படுத்தினார்.
ஆனால் இந்தக் கேள்விக்கும் கடைசி வரை கோமாலி ஸாஹிப் அவர்கள் பதில் தரவே இல்லை.
2.பெண்கள் ஜும்மாவிற்கு வருவது பெண்களை காட்சிப் பொருளாக்குவதாகும் என்ற ஜமாலியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொன்ன பி.ஜெ நபியவர்களின் காலத்தில் ஜும்மாத் தொழுகைக்கு பெண்கள் வந்துள்ளார்கள் அதுபோல் யுத்தக் கலத்துக்கே பெண்கள் வந்துள்ளார்கள் அப்படியிருக்க நபியின் வழிமுறையை கையால்வது எப்படி பெண்களை காட்சிப் பொருளாக்குவதாக மாறும் என கேள்வியெழுப்பியதுடன் அப்படியானால் உங்கள் பெண்கள் ஏ.சி போட்ட கடையில் ஒரு ஆண் மாத்திரம் இருக்கும் நேரத்தில் பொருட்கள் வாங்கவே செல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?
உங்கள் வீட்டுப் பெண்களை கடைக்கு பொருள் வாங்கக் கூட செல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள்.
வெளியிலேயே வர விடாமல் வீட்டிட்குள்ளேயே பூட்டி வையுங்கள் என சொன்னார்.
தர்காக்களில் நடை பெரும் விழாக்களுக்கு ஆண்களும் பெண்களும் சென்று கூட்டமாக வெட்க உணர்வே இல்லாமல் கலந்து கொள்கிறார்கள்.
சில தர்காக்களில் பெண்களின் மறைக்கப் பட வேண்டிய பகுதிகளுக்கு அங்குள்ள ஆலிம்கள் குழந்தைப் கிடைப்பதற்கு என்று n;சால்லி எண்ணைகளைப் பூசி விடுகிறார்கள்.
இதுவெல்லாம் பெண்களை காட்சிப் பொருளாக்குவதில்லையாம் நபிவழியைப் பின்பற்றி பெண்கள் பள்ளிக்கு வருவதுதான் பெண்களை காற்சிப் பொருளாக்குவதாம்;.
என்னே தத்துவம் ?
3.தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் விளம்பரங்களிலும் நோட்டீஸ்களிலும் போஸ்டர்களிலும் அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று போடுகிறார்கள் இது பித்அத்தான வழி முறை என்று ஜமாலி அவர்கள் வாதத்தை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த பி.ஜெ அவர்கள் நபியவர்கள் தனது வாழ்நாளில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்) என்றும் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்றும் இரண்டு விதங்களிலும் பயண்படுத்தியுள்ளதால் நாமும் இரண்டு விதங்களிலும் பயண்படுத்திக் கொள்ளலாம்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்) என்றோ பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்றோ குறிப்பிடுவதில் பிரச்சினை இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.
4.காபிர்களுக்கும் ஸலாம் சொல்வது தற்கொலை செய்து கொண்டவனுக்கு தொழுகை இல்லை போன்ற தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு பித் அத் என்று சொன்ன ஜமாலி அவர்கள் அந்த விஷயங்களுக்கும் தன் தரப்பால் எந்த விதமான ஆதாரத்தையும் காட்ட வில்லை.
இருந்தாலும் பி.ஜெ அவர்களோ நாங்கள் செய்வது பித் அத் என்றால் அவற்றை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள் அப்படி நீங்கள் ஆதாரங்களுடன் எடுத்து வைத்தால் நாம் அதற்கு பதில் தரக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் ஆனால் வழமை போல் ஜமாலி அவர்கள் அதற்கும் பதில் ஏதும் சொல்லவில்லை என்பதே நடந்த உண்மை.
ஸஹாபாக்களை பி.ஜெ சுயமாக விமர்சித்தாரா?
நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற பி.ஜெ அவர்களின் புத்தகத்தில் மறுமையில் சில ஸஹாபாக்களின் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றி பி.ஜெ அவர்கள் புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை ஆதாரம் காட்டி எழுதியிருந்தார்.
புத்தகத்தின் அந்தப் பகுதியை விமர்சித்த ஜமாலி பி.ஜெ நபித்தோழர்கள் மீது அபாண்டமாக பழி போடுகிறார் என்றார்.
அதற்கு பதில் சொன்ன பி.ஜெ பல தடவைகள் அந்தப் புத்தகத்தில் நான் மேற்கோள் காட்டியிருக்கும் ஹதீஸை மக்களுக்கு வாசித்துக் காட்டி நான் எப்படி தவறு செய்துள்ளேன் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று பல முறை கேட்டும் ஜமாலி வாசிக்க மறுத்து விட்டார்.
ஆனால் ஹதீஸை வாசித்துக் காட்டினால் தான் சொன்னது பொய்யென்று மக்களுக்கு புரிந்து விடும் என்பதால் அந்த ஹதீஸின் இலக்கத்தை மாத்திரம் மக்கள் மத்தியில் சொன்னார்.
புகாரியில் 3349.3447 இலக்கங்களிலும் பி.ஜெ அவர்களின் நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற புத்தகத்தில் நபியவர்களின் முன்னறிவிப்பு என்ற தலைப்பில் 46ம் பக்கத்திலும் அந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்க ஹதீஸைப் படிப்பவர்கள் பி.ஜெ தனது சுய விருப்பப்படி ஸஹாபாக்களை விமர்சித்தாரா அல்லது நபியவர்களே அப்படித்தான் கூறியுள்ளார்களா என்பதை தெளிவாக புரிய முடியும்.
பி.ஜெயின் கேள்வியும் பதிலின்றி தினறிய ஜமாலியும்:
விவாதத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சகோதரர் பி.ஜெ அவர்கள் ஜமாலியிடம் திரும்பத்திரும்ப ஒரு கேள்வியை முன் வைத்தார் அந்தக் கேள்விக்கு ஜமாலி அவர்கள் கடைசி வரை பதிலே சொல்லவில்லை.
அதாவது உலகில் உள்ள அத்தனை கோடி பேரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் கேட்டாலும் அல்லாஹ் அதனை பிரித்தறிந்து அதற்கு பதில் சொல்வான் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை அப்படியிருக்க அவ்லியாக்களுக்கும் அந்தத் தன்மை இருக்கிறது என்று வாதிடுவது முஷ்ரிக்கின் பண்பு என்பதை பி.ஜெ அவர்கள் எடுத்த சொன்னவுடன் அதற்கு பதில் சொன்ன ஜமாலி அவர்களோ அல்லாஹ்வின் பார்வை கேள்வி ஆகியவற்றுக்கு எல்லை இல்லை ஆனால் அவ்லியாக்களின் பார்வை மற்றும் கேள்விக்கு எல்லை உண்டு என வாதிட்டார்.
அல்லாஹ்வின் கேள்வி மற்றும் பார்வைக்கு எல்லை இல்லை அவ்லியாக்கலுக்க எல்லை உண்டு என்பது உங்கள் வாதம் அப்படியானால் அந்த எல்லை எது?
அப்படி எல்லை பிரிப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?
அந்த எல்லைகளுக்குறிய குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் என்ன?
அவ்லியாக்களின் கேள்விக்கு எல்லை உண்டு என்றால் ஒரே நேரத்தில் எத்தனை பேர்களின் கோரிக்கைக்கு பதில் தருவார்?
போன்ற கேள்விகளை பி.ஜெ அவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார் ஆனால் பாவம் இருதிவரை ஜமாலி இந்தக் கேள்விக்கோ வேறு எந்தக் கேள்விக்குமோ பதில் தரவே இல்லை.
சவால் விட்ட பி.ஜெயும் சறுக்கி விழுந்த ஜமாலியும்:
கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது தம்மிடம் தமிழகத்தில் 45 சதவீதம் பள்ளிகள் இருப்பதாக ஜமாலி தரப்பினர் கூறினர்.
அதற்கு பதில் கொடுத்த பி.ஜெ அவர்கள் இந்த விவாதக் கலத்தில் அதிகப் படியாக பில்டப் செய்து சொல்வதற்க்காகத்தான் இப்படி சொல்கிறீர்களே தவிர உண்மையில் உங்கள் கைவசம் தமிழகத்தில் வெரும் இரண்டு சதவீதத்தினர் மாத்திரமே உள்ளனர் என்பதை ஆதாரத்துடன் பி.ஜெ எடுத்து வைத்தார்.
பி.ஜெயின் கருத்துக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாத ஜமாலியோ உடனே ஜுலை மாநாட்டிற்கு தாவினார்.
மாநாட்டிற்கு கூட்டத்தை வர விடாமல் இருப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது.அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினோம்.என்று பி.ஜெ சொல்ல இல்லை உங்கள் மாநாடு தோழ்வியில் முடிந்து விட்டது எந்தப் பயணும் ஏற்படவில்லை.என்று சிறுபிள்ளைத் தனமாக உளரினார்.
அதே போல் எங்கள் ஜமாத்தின் வீரியம் நாங்கள் சவால் விட்டு ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் பத்தாயிரம் பேரை உடனே கூட்டிக் காட்டுவோம் உங்களால் முடியுமா? என்றார்.
மக்கள் கூட்டத்தை கூட்டிக்காட்ட திராணியற்ற ஜமாலியோ வாய் மூடி மௌனித்துப் போனார் பாவம்.
அது போல் நீங்கள் ஒரு மாநாடு நடத்தி உங்கள் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள் அதே போல் ஒரு மாநாடு நடத்தி நீங்கள் கூட்டிய கூட்டத்தைப் போல் 100 மடங்க கூட்டத்தை நாங்கள் கூட்டிக் காட்டுவோம் சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா? என பகிரங்கமாக அறிவித்தார் பி.ஜெ
இந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இந்த விவாதக் கலத்திலேயே நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம் என்றார் பி.ஜெ ஆனால் கடைசி வரை சவாலையும் ஜமாலி ஏற்றுக் கொள்ளவில்லை.
எங்கள் ஜமாத் காலத்திற்கு காலம் ஒரு மாநாட்டை நடத்திக் கொண்டு தான் இருக்கிறோம் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஒவ்வொரு மாநாட்டிலும் ஆட்சியாளர்களையே அதிர வைக்கும் அளவுக்கு எங்கள் வீரியம் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.என்று கூறி முடித்தார் சகோதரர் பி.ஜெ.
பதிலின்றி வாயடைத்துப் போய் அமைதிகாத்தார் அப்துல்லாஹ் ஜமாலி.
என்றும் வெற்றி ஏகத்துவத்திற்கே என்பது சென்னை விவாதத்தின் மூலம் மீண்டும் உறுதியாகியது.