Sunday, February 28, 2010

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 08.02.2010 அன்று மேலத்தெருவில் அதிராம்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள். ...

Thursday, February 25, 2010

சத்திய இஸ்லாத்தை ஏற்ற டாக்டர் சவுந்தர்ராஜன் அவர்களின் உரை

சத்திய இஸ்லாத்தை ஏற்று கொண்ட சவுந்தர்ராஜன் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தது எப்படி என்பதை விளக்கி தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற 'தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில்' ஆற்றிய உரை.  ...

Tuesday, February 23, 2010

புடம் போடும் புறக்கணிப்புகள்

மீலாது விழா புறக்கணிப்பு! மவ்லிது விழா புறக்கணிப்பு! திருமண விழா புறக்கணிப்பு! நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு! பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு! கத்னா விழா புறக்கணிப்பு! இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு! இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு! இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு! புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் அதையும் புறக்கணிக்கும் நிர்ப்பந்தம். திருமணம் எனும் போது திருமண சபையில்...

பாமரர்களால் குர்ஆனை விளங்க முடியுமா?

இந்த கேள்விக்கு 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சகோதரர் பிஜே அவர்கள் அல் ஜன்னத் இதழில் பதில் அளித்து இருந்தார். அதன் பதிலை ஆன்லைன் பிஜே இணைய தளம் வெளியிட்டது. அதை நாம் இங்கே வெளியிடுகிறோம். கேள்வி : சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழிபெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது? பதில்: மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் ஆதாரமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். குர்ஆன், ஹதீஸையே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது. குர்ஆனும், ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மை தான். அரபு மொழி அறியாத மக்கள்...

Friday, February 19, 2010

வெள்ளிமேடை - 19.02.2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைமையகத்தில் 19.02.2010 அன்று நடைபெற்ற ஜும்ஆ உரையின் வீடியோ. தலைப்பு: பித்அத் உரை: மௌலவி அப்துந் நாஸிர் Visit: http://www.tntjwebmedia.info/Vellimedai_19-2-2010.w...

Wednesday, February 17, 2010

இறை இல்லங்களுக்கு இணையான தர்ஹாக்கள்!

இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும் வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக் கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப் படுகின்றன. இதற்கு இஸ்லாம் ஒரு விதிவிலக்கு! இஸ்லாம் இதை எதிர்த்து நிற்கின்றது. எனவே உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு பள்ளிவாசலில் கூட இன்னிசைப் பாட்டுகள் இடம் பெறுவதில்லை. இந்த அடிப்படையில் தான் தொழுகைக்கு அழைக்கப்படும் இஸ்லாமிய அழைப்பு என்பது மணியோசையாகவோ, ஊதியின் நாதமாகவோ இல்லாமல் ஒரு வித்தியாசமான, செவிக்கு இதமான பாங்கோசையாக அமைந்திருக்கின்றது. மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள்...

Sunday, February 14, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க கூட்டம்

அதிராம்பட்டிணத்தில் கடந்த 13.02.2010 அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி அவர்கள் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்' என்ற தலைப்பிலும், மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'சத்தியத்தை மறைக்காதீர்கள்' என்ற தலைப்பிலும், மௌலவி எம்.எஸ் சுலைமான் அவர்கள் 'இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு,...

Thursday, February 11, 2010

மரைக்காயர் (மஸ்ஜிதுல் அக்ஸா) பள்ளி அருகில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

மரைக்காயர் (மஸ்ஜிதுல் அக்ஸா) பள்ளி மற்றும் ரஹ்மானிய மதரஸா அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக 10.02.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'சிந்திக்க தூண்டும் இஸ்லாம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.  ஒரு காலத்தில் அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்வதற்கு பல்வேறு தடைகள் இருந்தது. ஆனால், இன்று அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் எங்கும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைபெறுகிறது. கேரளாவிற்கு பரோவியிசத்தை சப்ளை செய்யும் ரஹ்மானிய மதரஸாவின் அருகில் கூட தவ்ஹீத்...

Tuesday, February 09, 2010

மேலத்தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 02.02.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் ‘நாவை பேணுவோம்’ என்ற தலைப்பிலும், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் ‘இறையச்சம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ...

Thursday, February 04, 2010

MSM நகரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

கடந்த 04.02.2010 அன்று MSM நகர் பள்ளிக்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி ஆகியோர் உரையாற்றினார்கள். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். ...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்