அல்லாஹ்வின் பள்ளிக்கு உதவுங்கள்
இதுநாள் வரை தவ்ஹீத் பள்ளியில் உப்பு இல்லாத தண்ணீர் தரும் போர் வசதி இல்லாமல் இருந்தது. ஒரு சகோதரர் பள்ளிக்கு தண்ணீர் வழங்கி வந்தார். தற்போது பள்ளிக்கென்று உப்பு இல்லாத தண்ணீர் தரும் போர் போட வேண்டிய நிலையுள்ளது. பள்ளி கட்டுமான பணி மற்றும் ஒளு செய்வதற்கு தண்ணீர் இல்லாமல் சிரமமாக இருக்கிறது.
இப்போது ஒளு செய்ய தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நமக்கு நிரந்தரமாக தண்ணீர் பிரச்னை தீர உடனடியாக ஆழ்குழாய் (போர் ) போட வேண்டும்
சகோதரர்கள் தங்களால் ஆன உதவியை செய்யும்படி கேட்டுகொள்கிறோம்.
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி
நூல்: முஸ்லிம் 3084
எந்த ஒரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டு, அம்மரத்திலிருந்து மனிதர்களோ, மற்ற விலங்கினங்களோ சாப்பிட்டால் அது அவர் செய்யும் தர்மமாகக் கருதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்கள்: புகாரி 6012, 2320, முஸ்லிம் 2904
Borewell from Adiraitntj on Vimeo.
1 கருத்துரைகள் :
அஸ்ஸலாம்,
இதற்கு எவ்வளவு ஆகும். இந்த பின்னூட்டத்திலேயே தெரியப்படுத்தலாம்.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.