Thursday, November 29, 2012

கல்லூரி மாணவன் படுகொலையை கண்டித்து விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவன் படுகொலையை கண்டித்து விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் 

அஸ்ஸலாமு அலைக்கும் 

அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த சமுதாய துரோகிகளை கண்டித்து மாபெரும் விழிப்புணர்வு  மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் :                           01.12.2012

நேரம் :                        மாலை 4 மணி

தலைமை :                Y. அன்வர் அலி
                                 தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்
                                 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கண்டன உரை :        பக்கீர் முகம்மது அல்தாஃபி
                                 மேலாண்மை குழு உறுப்பினர்
                                  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் :   அதிரை பேருந்து நிலையம்

இந்த சமுதாய துரோகிகளுக்கு எதிராக அணி திரண்டு வாரீர்

உங்களை அன்புடன் அழைப்பது தவ்ஹீத் ஜமாஅத் கிளை அதிராம்பட்டிணம்



அதிரையில் அதிரைவாசிகள் ஒட்டி இருக்கும் போஸ்டர்

அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை!!

அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை SDPI சேர்ந்தவர் வெறிச்செயல்!!

அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [வயது 20], என்ற சகோதரனை கத்தியால் குத்தி படுகொலை செய்த SDPI சேர்ந்த சமுதாய துரோகி!!

23-11-2012 மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவனை அருகில் நின்றவர்கள் அரசு மருத்துவனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கே போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்களால் முதலுதவி மாத்திரம் செய்யப்பட்டு மேற்கொண்டு சிகிச்சையளிக்க தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உடலில் பல்வேறு இடங்களில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி 24-11-2012 அதிகாலை சுமார் 4.45 மணியளவில் தஞ்சையில் உயிர் பிரிந்தது பிரத பரிசோதனையடுத்து உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிப்பு: கடந்த ஆண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y. அன்வர் அலி அவர்களை வீடு புகுந்து தாக்கிய இந்த ABCD அமைப்பை சேர்ந்தவர்களில் ஐந்து பேரில் ஒருவன் தான் இந்த கொலையாளி காதர் முஹைதீன் எனபது குறிப்பிடத்தக்கது!


முஸ்லிமை கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம்!

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:93

நன்றி: உணர்வு வார இதழ்.


படுகொலை செய்யப்பட்ட ஹாஜா





அதிரையில் இந்த வன்முறையை கண்டித்து ஒட்டபட்டு இருக்கும் போஸ்டர்



Wednesday, November 28, 2012

ஸலஃபிகளின் மறுபக்கம் (வீடியோ)!


ஸலஃபிகளின் மறுபக்கம் (வீடியோ)

ஸலஃபிகள் என்று சொல்லிக்கொண்டு, முன்னோர்கள் சொன்னால் தான் மார்க்கம் என்று  பல கூட்டங்கள் இருக்கின்றன. ஸலஃபி என்று சொல்லுப்பவர்களிலேயே, ஆயிரம் ஆயிரம் பிரிவுகள் உள்ளது. ஒவ்வொருவரும் மற்றவரை வழிகேடர்கள் என்பர்.

ஸலஃபி கூட்டங்கள் பெரும்பாலும் அரபுநாட்டில் சம்பளம் வாங்கிக்கொண்டு, வாலை ஆட்டுபவர்கள். அரபுநாடுகளில் போடப்படும் எலும்பு துண்டுகளுக்காக, வாலை ஆட்டுவார்கள் (நன்றாக). அரபுநாட்டு அறிஞர்கள் மார்க்கத்தில் விளையாடினால், அவர்களை எதிர்த்து இவர்கள் பேச மாட்டார்கள் (பேட்டா நின்றுவிடும்  அல்லவா).

இந்த ஸலஃபி கூட்டங்களில் சில தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்கின்றன. இவர்களை தவ்ஹீத் ஜமாஅத் நேரடியாக விவாதம் செய்ய அழைக்கிறது. விவாதிக்க வந்தால், இவர்களின் முகத்திரை கிழிந்து போகும் அல்லவா, அதனால், இவர்கள் வரமாட்டார்கள். உலகளவில் புகழ்பெற்ற அறிஞர்கள் என்று சொல்லப்படும், பிலால் பிலிப்ஸ், சினிமா நடிகரை ஆடம்பரத்தில் மிஞ்சும் ஜாகிர் நாயக் போன்றவர்களே, தவ்ஹீத் ஜமாஅத்தை கண்டு ஓடும் போது, இந்த ஸலஃபிகள் ஓட மாட்டார்களா என்ன?

மிகவும் ஆச்சரிப்படும் வண்ணம், பெங்களுரில் உள்ள ஒரு ஸலஃபி கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க தயார் என்று வந்தது. ஒப்பந்தமும் கையெழுத்தானது. இப்போது அந்த ஸலஃபி கூட்டம் ஓட்டமும் எடுத்துள்ளது.

முழு விபரம் அறிய கீழுள்ள வீடியோக்களை பார்வையிடவும்.

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
பாகம்-1

பாகம்-2

Tuesday, November 27, 2012

2013 காலண்டர்

2013 காலண்டர் 


அஸ்ஸலாமு அலைக்கும்  2013 ஆண்டுக்கான காலண்டர்கள்வெளிவந்து விட்டது .தேவை படுபவர்கள் ,அப்துல் ஜப்பார் 9629533887 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் 



Saturday, November 24, 2012

தவ்ஹீத் பள்ளியில் ஆழ்குழாய் (போர் ) போட உதவுங்கள்(வீடியோ )


அல்லாஹ்வின் பள்ளிக்கு உதவுங்கள்

இதுநாள் வரை தவ்ஹீத் பள்ளியில் உப்பு இல்லாத தண்ணீர் தரும் போர் வசதி இல்லாமல் இருந்தது. ஒரு சகோதரர் பள்ளிக்கு தண்ணீர் வழங்கி வந்தார். தற்போது பள்ளிக்கென்று உப்பு இல்லாத தண்ணீர் தரும் போர் போட வேண்டிய நிலையுள்ளது. பள்ளி கட்டுமான பணி மற்றும் ஒளு செய்வதற்கு தண்ணீர் இல்லாமல் சிரமமாக இருக்கிறது.

இப்போது ஒளு செய்ய தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நமக்கு நிரந்தரமாக தண்ணீர் பிரச்னை தீர உடனடியாக ஆழ்குழாய் (போர் ) போட வேண்டும் 

சகோதரர்கள் தங்களால் ஆன உதவியை செய்யும்படி கேட்டுகொள்கிறோம்.

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி
நூல்: முஸ்லிம் 3084

எந்த ஒரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டு, அம்மரத்திலிருந்து மனிதர்களோ, மற்ற விலங்கினங்களோ சாப்பிட்டால் அது அவர் செய்யும் தர்மமாகக் கருதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்கள்: புகாரி 6012, 2320, முஸ்லிம் 2904

Borewell from Adiraitntj on Vimeo.

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 23.11.12(வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா உரை 23.11.12
உரை :சகோ அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி
இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா 
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா ?
கூத்தாடிகளுக்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டும் ?
இஸ்லாம் வாளால் பரவிய மார்க்கமா ?

மாமனிதர் நபிகள் நாயகம் - வரலாற்றுச் சுருக்கம் (தொடர் 2)


இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.

மாமனிதர் நபிகள் நாயகம் - வரலாற்றுச் சுருக்கம் (தொடர் 2)

வரலாற்றுச் சுருக்கம்:

இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

குலப் பெருமையையும், சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி எறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷ்' என்னும் குலத்தில் பிறந்தார்கள்.

தாயின் வயிற்றிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும், தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் பறி கொடுத்து அனாதையாக நின்றார்கள்.

பின்னர் பாட்டனார் அப்துல் முத்தபின் அரவணைப்பிலும், அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.

சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் அற்பமான கூக்காக ஆடு மேய்த்தார்கள். ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள். இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எழுதவோ, படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது.

தமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள். மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும், பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா அம்மையார் நபிகள் நாயகத்தின் ஒழுக்கம், பண்பாடு, நேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை மணந்து கொள்ள விரும்பினார். நபிகள் நாயகத்தை விட அதிக வயதுடையவராகவும், விதவையாகவும் இருந்த கதீஜா அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.

இதன் மூலம் மக்காவில் மிகப் பெரிய செல்வந்தர் என்ற நிலைக்கு உயர்ந்தார்கள்.

தமது நாற்பது வயது வரை அவர்கள் சாதாரண மனிதராகவும், ஒரு வியாபாரியாகவும் தான் இருந்தார்கள். நாற்பது வயது வரை எந்த ஒரு இயக்கத்தையும் அவர்கள் தோற்றுவிக்கவில்லை. எந்த ஒரு கொள்கைப் பிரச்சாரமும் செய்ததில்லை.

நாற்பது வயது வரையிலான நபிகள் நாயகத்தின் வரலாற்றுச் சுருக்கம் இது தான்.

நாற்பது வயதுக்குப் பின்னுள்ள நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இரு பெரும் அத்தியாயங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று மக்கா வாழ்க்கை. மற்றொன்று மதீனா வாழ்க்கை. இது குறித்தும் ஓரளவு அறிந்து கொள்வோம். நாற்பது வயது வரை சராசரி மனிதர்களில் ஒருவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்தார்கள்.

'அகில உலகையும் படைத்தவன் ஒரே கடவுள் தான்; அந்த ஒரு கடவுளைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் கடவுளிடமிருந்து தமக்கு வருகின்ற முக்கியமான செய்தி' என்றார்கள்.

'கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும்' என்ற செய்தியும் கடவுளிடமிருந்து தமக்கு வருவதாகக் கூறினார்கள்.

கஃபா என்னும் ஆலயத்திலும், அதைச் சுற்றிலும் 360 சிலைகளை நிறுவி தினம் ஒரு சிலைக்கு வழிபாடு நடத்திய சமுதாயத்தில் 'ஒரே ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும்; மற்றவை கடவுள் அல்ல' என்று கூறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை வரலாற்றைப் படிக்காதவர்களும் அனுமானிக்க முடியும்.

உண்மையாளர், நம்பிக்கைக்கு உரியவர் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாராட்டிய மக்கள் இந்தக் கொள்கை முழக்கத்துக்குப் பின் கடும் பகைவர்களாகி விட்டனர். பைத்தியம் என்று பட்டம் சூட்டினார்கள். அவர்களையும், அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரையும் சொல்லொனாத துன்பத்துக்கு ஆளாக்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முதல் எதிர்த்தவர்களும், கடுமையாக எதிர்த்தவர்களும் அவர்களது குடும்பத்தினர் தாம் என்பது குறிப்பிடத்தக்கது. 'தமது குலத்தைச் சேர்ந்த ஒருவரே எல்லோரும் சமம்' என்று பிரச்சாரம் செய்கிறாரே! தாழ்த்தப்பட்டவர்களையும், இழிகுலத்தோரையும், கறுப்பர்களையும், அடிமைகளையும் உயர் குலத்துக்குச் சமம் என்கிறாரே! தம்மோடு சரிக்குச் சரியாக அவர்களையும் மதித்து குலப்பெருமையைக் கெடுக்கிறாரே' என்ற ஆத்திரத்தில் தம்மை மிகவும் உயர் குலம் என்று நம்பிய நபிகள் நாயகத்தின் குலத்தினர் கடுமையாக நபிகள் நாயகத்தை எதிர்த்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரச்சாரத்தை இரகசியமாக நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட அப்பாவிகளையும், கேட்பதற்கு நாதியற்றவர்களையும் கொன்று குவித்தார்கள். சிறுவர்களை ஏவி விட்டு கல்லால் அடிக்கச் செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கணவாய்க்கு நபிகள் நாயகத்தையும், அவர்களது சகாக்களையும் விரட்டியடித்து சமூகப் புறக்கணிப்பும் செய்தனர். பல நாட்கள் இலைகளையும், காய்ந்த சருகுகளையும் மட்டுமே உணவாகக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

'நபிகள் நாயகத்துடன் யாரும் பேசக் கூடாது; அவருடன் யாரும் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது' என்றெல்லாம் ஊர்க் கட்டுப்பாடு போட்டார்கள்.

நபிகள் நாயகத்தின் சகாக்கள் ஒரு கட்டத்தில் ஊரை விட்டே ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு ஆளானார்கள். நபிகள் நாயகத்தின் அனுமதியோடு சிலர் அபீசீனியாவுக்கும், வேறு சிலர் மதீனா எனும் நகருக்கும் குடி பெயர்ந்தார்கள்.

இத்தனை அடக்குமுறைகளையும் மீறி நபிகள் நாயகத்தின் கொள்கை வளர்ந்து கொண்டு தான் இருந்தது.

முடிவில் 'இவரை உயிரோடு விட்டு வைத்தால் ஊரையே கெடுத்து விடுவார்; எனவே கொலை செய்து விடுவோம்' என்று திட்டம் வகுத்தார்கள்.

இச்செய்தியை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொத்து, சுகம், வீடுவாசல் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு எளிதாக எடுத்துச் செல்ல இயன்ற தங்க நாணயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தம் தோழர் அபூபக்ருடன் மதீனா என்னும் நகர் நோக்கி தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.

நாற்பதாம் வயதில் ஆரம்பித்த மக்கா வாழ்க்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53 ஆம் வயது வரை நீடித்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது அவர்களது கொள்கைப் பிரச்சாரம் பற்றிக் கேள்விப்பட்டு மதீனாவிலிருந்து சிலர் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே சந்தித்திருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய கொள்கை விளக்கத்தையும் ஏற்றிருந்தனர்.

'மக்காவில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால் நீங்கள் எந்தத் தயக்கமும் இன்றி மதீனா வரலாம்; எங்கள் உயிரைக் கொடுத்தேனும் உங்களைக் காப்போம்' என்று அவர்கள் உறுதிமொழியும் கொடுத்திருந்தனர். மதீனா சென்று நபிகள் நாயகம் (ஸல்) போதனை செய்த ஒரு கடவுள் கொள்கையைப் பிரச்சாரம் செய்து ஓரளவு மக்களையும் அவர்கள் வென்றெடுத்திருந்தனர்.

இதன் காரணமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்குப் புறப்பட்டார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தது போல அவ்வூரில் மகத்தான வரவேற்பு அவர்களுக்குக் காத்திருந்தது. அவ்வூர் மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்த கொள்கையையும் ஏற்றார்கள். நபிகள் நாயகத்தைத் தங்களின் தலைவராகவும் ஏற்றுக் கொண்டார்கள்.

மதீனா நகரின் மக்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள மக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது 63 ஆம் வயதில் மதீனாவில் மரணிக்கும் போது இன்றைய இந்தியாவை விட அதிக நிலப்பரப்பைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருந்தார்கள்.

இந்தியா போன்ற பெரும் நிலப்பரப்பை ஒரு நாடாக ஆக்குவதற்கு எண்ணூறு ஆண்டு கால முஸ்லிம்களின் ஆட்சியும், இருநூறு ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சியும் ஆக ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன.

ஆயிரம் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு அகண்ட ராஜ்ஜியத்தைப் பத்தே ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள். அதுவும் அடக்குமுறையினால் இல்லாமல் தமது கொள்கைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை வென்றெடுத்து இந்த ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். இத்தகைய சாம்ராஜ்ஜியம் நபிகள் நாயகத்துக்கு முன்போ, பின்போ உலகில் எங்குமே ஏற்பட்டதில்லை எனலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த கால கட்டத்தில் இத்தாயும், பாரசீகமும் உலகில் மிகவும் வலிமை மிக்க நாடுகளாக இருந்தன. உலகின் மிகப் பெரிய வல்லரசுகளாக இவ்விரு நாடுகளும் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தே ஆண்டுகளில் தமது ராஜ்ஜியத்தை உலகின் ஒரே வல்லரசாக உயர்த்தினார்கள்.

அன்றைக்கு உலகில் மிகவும் வலிமை மிக்க இராணுவ பலம் கொண்டதாகவும், கூக்காக பணி செய்யாத வீரர்களைக் கொண்டதாகவும் நபிகள் நாயகத்தின் இராணுவம் இருந்தது. அது போல் கேள்வி கேட்பாரில்லாத வகையில் அதிக அதிகாரம் பெற்ற தலைவராகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். 

சக்தி வாய்ந்த இரண்டு தலைமை:

ஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள். ஒரு

வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம்.

ஆட்சித் தலைமைக்குக் கட்டுப்படும் போது பயத்தின் காரண மாகவே மக்கள் கட்டுப்படுவார்கள். முழு ஈடுபாட்டுடன் கட்டுப்பட மாட்டார்கள். மதத் தலைமைக்கு பக்தியுடன் கட்டுப்படுவார்கள். ஆன்மீகத் தலைவருக்கு முன்னால் ஆட்சித் தலைவர்களும், அறிஞர்களும் மண்டியிட்டுக் கிடப்பதையும், நாட்டையே ஆளும் தலைவர்கள் கூட ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு நிற்பதையும் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம்.

யாரோ உருவாக்கிய ஒரு மதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளில் ஒருவராக இருப்பவருக்கே இந்த நிலை என்றால், ஒரு மார்க்கத்தை உருவாக்கிய ஒரே ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.

இதனால், நபிகள் நாயகத்தின் நடை, உடை, பாவணையைக் கூட அப்படியே பின்பற்றக் கூடிய தொண்டர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

கேள்வி கேட்பாரில்லாத ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?

தலைமைக்கு ஆசைப்படுபவரும், இது போன்ற பதவிகளையும், அதிகாரத்தையும் அடைந்தவரும் எவ்வாறு நடந்து கொள்வார்களோ, அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடக்கவில்லை. 

பதவியையும், அதிகாரத்தையும் பெற்றவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவார்களோ அவ்வாறு அவர்கள் பயன்படுத்தவும் இல்லை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Friday, November 23, 2012

கடற்கரை தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் - காவல்துறை அன்பர்களுக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' புத்தகம் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் 22.11.2012 வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு பெண்கள் மார்கட் அருகில் நடைபெற்றது. இதில் 'நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகள்' என்ற தலைப்பில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பயான் முடிந்தவுடன் அங்கு வந்திருந்த காவல் துறை சகோதரர்களுக்கு கிளையின் சார்பாக கிளை நிர்வாகிகளால் 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.







Wednesday, November 21, 2012

பிஜே அவர்களின் இல்ல திருமணம்!


தவ்ஹீத் எங்களுக்கு தடை என்று கூறி எழுதிகொடுத்துவிட்டு, அரசியலுக்கு போய் நாள்தோறும் மறுமையை பாழாக்கும் செயல்களில் ஈடுபட்டுவரும் ஒரு  இயக்கத்தின் தலைவரின் மகளுக்கு திருமணம் என்றும், அதில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்டார்கள் என்றும் சிலர் எழுதிவருகிறார்கள் என்பதை அறிவீர்கள் தானே ?

மணமகள் சார்பாக விருந்து கொடுக்கலாமா? என்று அந்த தானே தலைவரிடம் கேள்வி கேட்க முடியாது தானே? காரணம், மரண தண்டனையை ஒழிப்போம் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, அதில் சொற்பொழிவு ஆற்றிய  அரைவேக்காடு தலைவருக்கு இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை தானே? 

பிரச்சினை அதுவல்ல! தலைவர் அவர்களின் மகள் திருமணத்தில் பிஜே அழைக்கப்பட்டாரா? கலந்து கொண்டாரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். பிஜே அழைக்கப்பட்டாரா? என்று கேள்வி கேட்கும் முன், தலைவரின் மகள் திருமணம் நபிவழியில் நடந்ததா? என்று இவர்கள் கேட்டிருக்க வேண்டும் தானே?

பிஜே அவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளை கூட அழைக்காமல், மிக எளிமையான முறையில் நபிவழியில் பிஜே தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

தானே தலைவரின் மகள் திருமணத்திற்கு பிஜே அழைக்கப்பட்டு இருக்க மாட்டார். தானே தலைவர் தானே சென்று  அழைத்து இருந்தாலும், பிஜே  போய் இருக்கவும் மாட்டார். தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கொண்டு பெண் வீட்டு விருந்து வாங்குபவர்களின் திருமணத்தில் கூட கலந்து கொள்ளக்கூடாது என்பவர் இதிலே கலந்து கொண்டு  இருப்பாரா என்ன? 

பிஜேவின் பிள்ளைகளுக்கு நடந்த திருமணத்தின் வீடியோ காட்சி கீழே உள்ளது. இது தம்பட்டம் அடிப்பதற்காக அல்ல. மாறாக, எது நபி வழி திருமணம் என்று காட்டுவதற்காக. 


நபிவழித் திருமணம் பற்றி முழுமையாக அறிய:


இருக்கும் வரை ஜால்ரா தட்டி விட்டு, பிரிந்த பின் பிஜேவை குறை சொல்லுவது ஏன்? (வீடியோ)

இருக்கும் வரை ஜால்ரா தட்டி விட்டு, பிரிந்த பின் பிஜேவை குறை சொல்லுவது ஏன்? (வீடியோ)




கூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எப்படி?

கூத்தாடிகளின் கொட்டத்தை  அடக்குவது எப்படி?
இந்த வார உணர்வு இதழில் வெளியான கேள்வி பதில் 
கேள்வி -1
நம் வீட்டிற்கு முன் ஏதாவது ஒரு நாள் ஒரு நாய் குலைத்தால் அதை விரட்டாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் அதையே பொழுதுபோக்காக வைத்து தினமும் வந்து குலைத்தால் அந்த நாயை விரட்டத்தான் வேண்டும்.

அதேபோல் முதலில் அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார், கமலஹாசன் போன்ற கூத்தாடிகள்தான் சில படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தார்கள். அதை நாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது மாதா மாதம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்தக் கூத்தாடிகளின் வரிசையில் இப்போது கூத்தாடி சிம்பு, சூர்யா, விக்ரம், விஜய், நாளை யாரோ...

இப்படி முஸ்லிம்களை கூத்தாடிகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு சீண்டுவதைப் பார்க்கிறோம். முஸ்லிம்கள் சிறுபான்மையினர் தானே, இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியம்தான் இவர்களை இவ்வாறு மேலும் மேலும் செய்யத் தூண்டுகிறது. இதைக் களைய வேண்டுமென்றால் நம் ஜமாஅத் இதைக் கையில் எடுக்க வேண்டும். களத்தில் இறங்கி போராடினால்தான் நிச்சயமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைப் பற்றி தற்போது நம் ஜமாத்தின் நிலைபாடு என்ன?
குறிப்பு:ரசூலுல்லாஹ்வை அவமதித்து திரைப்படம் எடுத்ததையும் நாம் சக்திக்கு உட்பட்டு போராட்டங்கள் நடத்தித்தான் வெல்ல முயற்சி செய்து வருகிறோம். நாம் போராட்டங்கள் செய்தால் அதுவே விளம்பரம் ஆகிவிடும் என்பது சரிதான். ஆனால் அதை விட பலமடங்கு மேலாக தொலைக்காட்சிகளின் எல்லா சேனல்களிலும் இந்த திரைப்படங்கள் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரம் ஆகி மூலை முடுக்கெல்லாம் சென்று பிரபலமாகத்தான் செய்கிறது. இறுதியாக இந்த கூத்தாடிகளுக்கு ரசிகர்களாக இருக்கும் நமது சமுதாய சகோதரர்களாவது இந்தப் போராட்டங்களைப் பார்த்து திருந்த வாய்ப்புண்டு என்று நான் நம்புகிறேன். எனக்கு தெரிந்தே என் குடும்பத்தைச் சார்ந்த நான்கு சகோதரர்கள் இந்தக் கூத்தாடிகளை அடையாளம் கண்டு திருந்தி இருக்கிறார்கள்.

- பஹ்ரைன் மண்டலத்திலுருந்து பஞ்சலிங்கபுரம் அரஃபாத்
கேள்வி 2

கமலஹாசன் எடுத்து வெளியிடவுள்ள விஸ்வரூபம் திரைப்படமும் விஜய் நடித்து வெளியிட்ட படத்தைப் போலவே முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக சொல்லப்படுகிறதே? இதுபோல் தொடர்ந்து நடப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள்?

- கடையநல்லூர் மசூது

கேள்வி 3

துப்பாக்கி என்ற படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பிற மத மக்களைத் தூண்டிவிட்டு மதவெறியை ஊட்டும் வகையில் தயாரித்துள்ளார்கள். இதில் ஐந்து வசனங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாகவும் நடந்த தவறுக்கு சினிமாக்காரர்கள் தரப்பில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அந்த ஐந்து வசனங்கள் தவிர மற்றவை சரியாக உள்ளதா?
- கடையநல்லூர் மசூது

மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்

துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்கு தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்பதை நாம் இன்று வரை பார்க்கவில்லை. ஆனாலும் பல சகோதரர்கள் அதைப் பார்த்து அந்தப் படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளராகவோ காட்டியுள்ளது என்று தெரிவித்தனர்.

அப்படியானால் எங்கும் அந்தப் படத்தை திரையிட முடியாத அளவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று 15 - 11- 12 அன்று கூடிய அவசர நிர்வாகக் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.

20.11.12 - செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளையும் முற்றுகையிட்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தினந்தோறும் முற்றுகை இடுவது எனவும் தீர்மானித்து காவல்துறையிலும் 15 ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.

போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தவுடன் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஹனீபா அவர்கள் நமது நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார். 

கூத்தாடி விஜய்யின் தந்தை சந்திரசேகரும், படத்தை இயக்கிய அயோக்கியன் முருகதாசும், படத்தை தயாரித்த அயோக்கியன் தானுவும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் அந்தப் படத்தை நாங்கள் பார்த்து விட்டு ஆட்சேபனை செய்த காட்சிகளை நீக்கி விடுவதாக சொல்லி விட்டனர் என்றும் எழுத்து மூலமாகவும் கையெழுத்திட்டு தந்துள்ளதாகவும் இரண்டு நாட்களில் அவை நீக்கப்படும் என்று அவர்கள் தரப்பில் உறுதி சொல்வதாகவும் தெரிவித்து நீங்கள் போராட்டத்தைக் கைவிடலாமே என்று கேட்டுக் கொண்டார்.

அவர்கள் பணிந்து வந்ததற்கு மதிப்பளித்து தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதே வேண்டுகோளை தேசியலீக் தலைவர் பஷீர் அஹ்மத் அவர்களும் நம் நிர்வாகிகளிடம் வைத்தனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக எந்தப் போராட்டத்தையும் நடத்துவதில்லை. கோரிக்கை நிறைவேறிவிட்டால் அதன்பின்னர் போராட்டம் நடத்துவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைத்தோம்.

அனைத்து முஸ்லிம் தலைவர்களும் அந்தப் படத்தை பார்த்து விட்டு சில காட்சிகளை நீக்கச் சொல்லி விட்டதால் அதன் பிறகு அந்தப் படம் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் இருக்காது என்று நம்பினோம்.

அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் அந்தப் படத்தைப் பார்த்து சில காட்சிகளை நீக்கினால் போதும் என்று சொன்னதால் அவர்கள் கவனமாகத்தான் பார்த்து இப்படி கோரிக்கை வைத்துள்ளனர் என்று நாமும் நினைத்தோம். ஆனால் நீக்கப்பட்ட பிறகும் அந்தப் படத்தின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை.

மூன்று நாட்கள் கழித்து அவர்கள் நீக்கிவிட்டு வெளியிட்ட படம் அதே கருத்தை கொஞ்சமும் குறையாமல் சொல்வதாக பல சகோதரர்கள் கொந்தளித்து போய் தலைமையை தொடர்பு கொண்டார்கள். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக இப்போதும் அந்தப் படம் சித்தரித்துள்ளதாக கூறி அந்தக் காட்சிகளையும் விளக்கினார்கள்.

முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் முன்னால் அழுது கண்ணீர் விட்டு நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று அந்த மூன்று அயோக்கியர்களும் நன்றாக நடித்துள்ளனர். எங்கள் பிள்ளை மேல் சத்தியம் செய்கிறோம் எங்களுக்கு முஸ்லிம்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றெல்லாம் கூறி ஏமாற்றியுள்ளனர். இவர்களும் நன்றாக ஏமாந்து இப்படிப்பட்ட உத்தமர்களா என்று வியந்து போய் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில காட்சிகளை பெயரளவுக்கு நீக்கச் சொல்லி இருக்கிறார்கள். வந்தவர்கள் உண்மைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சினிமாக்காரர்கள் என்பதும், நடித்து யாரையும் ஏமாற்றும் எத்தர்கள் என்பதும் அத்தனை பேருக்கும் எப்படி தெரியாமல் போனது?

நீக்குவது என்றால் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக காட்டும் எந்த ஒரு அம்சமும் இருக்கக் கூடாது என்று வற்புறுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அப்படி செய்யவில்லை என்பது நீக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட படமும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி வசூல் வேட்டை முடிந்து விட்ட நிலையில் போராட்டம் நடத்தினால் அந்த அயோக்கியர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. முஸ்லிம் தலைவர்களை ஏமாற்றி போதுமான அவகாசத்தை எடுத்துக் கொண்டார்கள்.

அந்தப் படத்திலுள்ள ஆட்சேபமான காட்சிகளை நீக்கி விட்டனர் என்று நம்மிடம் கூறி போராட்டம் நடத்த வேண்டாம் எனக்கூறினார்கள். ஆனால் தயாரிப்பாளன், இயக்குனர், நடிகன் ஆகிய மூன்று அயோக்கியன்களுக்கு வலிக்கக் கூடாது; நட்டம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது போல் அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தைப் பாதிக்கும் இந்த விஷயத்தில் கடுமையான உறுதிப்பாட்டை இவர்களால் காட்ட முடியாது என்றால் இது போன்ற பிரச்சனைகளில் தலையைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்ளுமாறு விட்டிருக்க வேண்டும்.

பம்பாய் படம் வந்தபோது இதுபோன்ற கூட்டமைப்புக்கள் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை மழுங்கச்செய்ய யாரும் இருக்கவில்லை. அப்போது மக்களாக கொடுத்த பதிலடிக்குப் பின் மணிரத்னம் இது போன்ற படங்களைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை.

பார்க்க வேண்டிய காசை அந்தக் கும்பல் பார்த்த பின்னர் இப்போது போராட்டம் நடத்துவதால் அந்த அயோக்கியர்கள் நட்டப்படப் போவதில்லை.

நடிகன் விஜய் கிறித்தவனாக உள்ளதால் திருச்சபைகளின் ஆலோசனைப்படி தான் இவன் இப்படி படம் எடுத்திருக்கிறான். இஸ்லாத்தின் எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக கிறித்தவ திருச்சபைகளின் ஆலோசனையுடன்தான் இவன் இது போல் படம் எடுத்திருக்க முடியும். இதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. (அவனது முழுபெயர் ஜோசப் விஜய். பார்க்க: அவன் சிறுவயதில் அவனது தந்தையுடன் ஞானஸ்நானம் எடுக்கும் புகைப்படம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி படம் எடுத்த கிறித்தவனுக்கும் நடிகன் விஜய்க்கும் ஒரே சக்திதான் பின்னணியில் இருக்கிறது.

முஸ்லிம்கள்தான் பயங்கரவாதிகள் என்ற கருத்து நிலைநாட்டப்பட்டால் யாரும் இஸ்லாத்தின் பக்கம் தலைவைக்க மாட்டார்கள் என்ற திட்டம் இதன் பின்னால் இருக்கிறது. இதே திட்டம்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி படம் எடுத்த அயோக்கியனுக்கும் இருந்தது.

இதை இனியும் நாம் சகித்துக் கொள்ள முடியாது. அண்ணன் தம்பிகளாக வாழும் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்தான் என்று சித்தரிப்பதைப் பொறுத்துக் கொண்டால் நாம் முற்றிலுமாக அந்நியப்பட்டுப் போவோம். அமைதிப்பூங்காவான தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறிப்போகும். இதை உணர்ந்து கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். இது கூத்தாடிகளின் கற்பனை என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்க்கைப் பிரச்சனை. முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் சின்ன பிரச்சனை வந்தால் அனைவரும் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் அளவுக்கு இந்தப் படம் மற்றவர்களுக்கு வெறியேற்றியுள்ளது.

அமெரிக்க அயோக்கிய அரசாங்கம் ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது அநியாயப் போர் தொடுத்ததை இந்த விஜய் என்ற நாய் படம் எடுப்பானா? அல்லது பாதிரியார்களின் லீலைகளை படம் எடுப்பானா? உலகமகா தீவிரவாதிகள் கூட்டத்தைச சேர்ந்தவன் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க துணிவு பெற்றுள்ளான்.

இனிமேல் செய்ய வேண்டியது என்ன?:

விஜய், முருகதாஸ், தானு ஆகிய மூன்று அயோக்கியர்களும் தமிழகத்தில் எங்கெல்லாம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்களோ அந்தத் தகவல் கிடைத்தவுடன் இவர்களுக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் எதிரிகள் என்று தொடர்ந்து அடையாளம் காட்ட வேண்டும். இது குறித்து தலைமை மூலம் முறைப்படி அறிவிப்புச் செய்யப்படும்.

கமலஹாசன் என்ற அயோக்கியனும் இதையே வழக்கமாகக் கொண்டுள்ளான். இவன் எடுக்கும் விஸ்வரூபம் படத்தின் பெயரையே அரபு எழுத்து போல் எழுதி விளம்பரம் செய்கிறான் என்றால் பரமக்குடி பார்ப்பான் கமலஹாசனுக்கு எவ்வளவு துவேசம் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

விஸ்வரூபம் படம் இதுபோல் எடுக்கப்பட்டால் அடுத்த நிமிடமே, “பாபா” படத்துக்கு ராமதாஸ் கொடுத்தது போன்ற பதிலடியைப் போல் எந்த ஊரிலும் அந்தப் படத்தை திரையிட முடியாத நிலையை ஏற்படுத்தியதுபோல் சமுதாயம் பதிலடி கொடுத்தால் அதை எந்த முஸ்லிம் இயக்கமும் தடுக்கக் கூடாது.

பணம் சம்பாதிப்பதற்காக கட்டிய மனைவியைக் கூட கூட்டிக் கொடுக்கும் கூத்தாடிக் கும்பலின் இந்தப் போக்கை இனியும் சகித்துக் கொள்ள முடியாது.

பிற சமுதாய மக்களிடமிருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தி வெறுப்பை விதைக்கும் அக்கிரமத்தை எந்த விலை கொடுத்தாகிலும் தடுக்க வேண்டும். அதனால் எந்த விளைவு ஏற்பட்டாலும் பொருட்படுத்தத் தேவை இல்லை என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் அறிவிக்க வேண்டும். காயம்பட்ட முஸ்லிம்கள் அவர்களே பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களை விட்டுவிட வேண்டும்.

அப்போதுதான் இதையே வேலையாகக் கொண்டு திரியும் அயோக்கிய சினிமாக் கூட்டம் அடங்கும். இவர்களை அடக்கியே ஆக வேண்டும்.

காயம்பட்ட முஸ்லிம்கள் அதற்கேற்ப எப்படி நடந்து கொண்டாலும் நாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் முன்னரே அறிவித்து விட வேண்டும்.

மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வார்கள்.

கேனத்தனமான பேச்சுவார்த்தைக்குப் போகாமல் எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
எவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை சமுதாயம் எடுத்தாலும் அதை யாரும் தடுக்கக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் இது போன்ற கருத்துக்கள் விதைக்கப்பட்டால் அதன் விளைவாக முஸ்லிம்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படும். அக்கம்பக்கத்தில் வசிக்கும் முஸ்லிமல்லாத மக்கள் சந்தேகத்துடன் முஸ்லிம்களைப் பார்ப்பார்கள். இன்னும் வேண்டாத பல விளைவுகள் ஏற்படும் என்பதால் தான் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் இந்த அயோக்கிய சினிமாக் கூட்டத்துக்கு மக்கள் தங்கள் விருப்பப்படி தக்க பதிலடி கொடுத்தால் முஸ்லிம் தலைவர்கள் அதில் தலையிட்டு தடுக்க வேண்டாம் என்று கோருகிறோம்.

Tuesday, November 20, 2012

இறைமறுப்பாளர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்!

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ 
 
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.10:92.


 இறைமறுப்பாளர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 

உலகின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல்ஆலமீன் குழந்தையின் தாயாருக்கு வாக்குறுதி அளித்தப் பிரகாரம் குழந்தையை ஒப்படைத்து விடுகிறான். அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன். 28:13.

குழந்தை தனது தாயிடம் பாலருந்தி ஃபிர்அவ்னின் மாளிகையில் வளர்ந்து வாலிபடைகிறது. அவர்களே மூஸா (அலைஹிஸ்ஸலாம்) எனும் இறைத் தூதராவார்கள். அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும் கல்வியையும் அளித்தோம்.164 நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.திருக்குர்ஆன்.28:14.


ஃபிர்அவ்னிடம் சென்று தூதுத்துவத்தை கூறுவதற்காக இரண்டு அத்தாட்சிகளுடன் இறைவன் அனுப்பி வைத்தான். மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று நான் அல்லாஹ்வின் தூதராவேன் இறைச் செய்தியுடனும் அத்தாட்சிகளுடனும் வந்துள்ளேன் என்றுக் கூறினார்கள்.


அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்க நான் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).181.திருக்குர்ஆன்.7:105.

தூதத்துவத்தை பொய்ப்பிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்காக கொண்டு வந்துள்ள அத்தாட்சிகளைக் காட்டும் படிக்கேட்டான். ''நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு வா!'' என்று அவன் கூறினான். அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.. ''இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். திருக்குர்ஆன். 7:106, முதல் 110  வரை.

சூனியக்காரர்கள் நிறைந்து வாழும் பிரதேசமாக எகிப்து திகழ்ந்ததால் கைத் தடி பாம்பாக மாறியதும், கைகள் வெண்மையாக பளிச்சிட்டதையும் கண்டு  சூனியக் கலையை கற்று வந்திருப்பதாகவும், மண்ணின் மைந்தர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக சதி திட்டம் தீட்டுவதாகவும் குற்றம் சுமத்தினான்.  


தூதுத்துவத்தை ஒரே அடியாய் முடிவுக்குக் கொண்டு வரத் திட்டம் தீட்டினான் எகிப்து பிரதேசத்தில் உள்ள கை தேர்ந்த சூனியக்காரர்களை மாளிகைக்கு கொண்டு வர உத்தரவிட்டான். ''திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.. திருக்குர்ஆன்.10:79.


சூனியக்காரர்களின் பட்டாளம் புடைசூழ ஃபிர்அவனின் மாளிகையை நோக்கி படை எடுத்தனர். இதை முறியடிக்க தங்களுக்கு தகுந்த கூலி வேண்டும் என்று ஃபிர்அவனிடம் பேசினர். 

கூலி என்ன ? அதன் பிறகு நீங்களே எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள் என்றுக் கூறி சூனியக்காரர்களை ஊக்கப்படுத்தினான். சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். ''நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று அவர்கள் கேட்டனர். (அதற்கவன்) ''ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என்று கூறினான். திருக்குர்ஆன்.7:113, 7:114.

இதைக் கேட்ட மாத்திரத்தில் வெகுமதிகளுக்கும், ஃபிர்அவனின் நெருக்கத்திற்கும் ஆசைப்பட்ட சூனியக்காரர்கள் மூஸா(அலை) அவர்களைப் பார்த்து முதலில் நீங்கள் தொடங்குகிறீர்களா? நாங்கள் தொடங்குட்டுமா ? என்று அவசரப்பட்டனர்.


என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு அதுவரை அனுமதி வராததால் என்ன செய்ய வேண்டுமோ அதை முதலில் நீங்களே செய்யுங்கள் என்றுக் கூறுகிறார்கள்.


''மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று கேட்டனர். ''நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.182 மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். திருக்குர்ஆன்.7:115, 7:116.

மக்கள் அதைக் கண்டதும் அச்சமுற்றனர் அந்த அச்சம் மூஸா(அலை) அவர்களுக்கும் ஏற்பட்டது. மூஸா(அலை) அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டதற்கு காரணம் அவர்கள் விரும்பிய போதெல்லாம் விரும்பியவாறு அற்புதங்கள் நிகழ்த்த முடியாது. தேவைப் படும் இடங்களில் தேவைப்படும் விதமாக அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கும் விதமே செய்து வந்தார்கள்.


அச்சத்தில் நின்றுக் கொண்டிருந்த மூஸா(அலை) அவர்களை நோக்கி அவர்களின் கையில் வைத்திருந்த கைத் தடியை எறியச் சொன்னான் அல்லாஹ்.


கைத் தடியை எறிந்ததும் மக்களை அச்சுறுதிய அனைத்தையும் அது ஒரே அடியாக விழுங்கி முடித்து விட்டது. ''உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. திருக்குர்ஆன்.7:117.

இந்நிகழ்வு சூனியக்காரர்கள் அனைவர்களையும் திகிலுறச் செய்தது, அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். நாம் செய்தது கண் கட்டி வித்தை எதிரில் நடந்தது அவ்வாறானதல்ல என்பதை உறுதிபட நம்பினர்.  


மேலும் கைத் தடியை எறிந்தவர் இறைத் தூதர் என்றுக் கூறுவதால் இன்னும் அவர்களுக்கு முழு நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உள்ளம் தூண்டியது. அவ்விடத்திலேயே திருக்கலிமாவை மொழிந்து ஸஜ்தாவில் வீழ்ந்து விடுகின்றனர். அல்லாஹூ அக்பர். சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். ''அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர். திருக்குர்ஆன்.7:120.121,122.


மேற்காணும் சம்பவங்கள் முழுவதும் ஃபிர்அவ்ன் முன்னிலையில் நடைபெறுகிறது. ஃபிர்அவ்ன் விடுவானா ?  என்னைக் கேட்காமல் எப்படி நீங்கள் நம்பிக்கைக் கொள்வது என நம்பிக்கைக் கொண்டவர்கள் மீது சீறிப்பாய்ந்தான் கர்ஜித்தான் இதைக் கூட்டு சதி என்றான். ''நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். திருக்குர்ஆன். 7:123


மூஸா (அலை) அவர்களிடம் ஆள் பலம் அதிகரிப்பதைக் கண்ட ஃபிர்அவன் நாம் நாடு கடத்தப் படலாம் என்றே அதிகம் அஞ்சினான் அதனால் ஒவ்வொரு கட்டத்திலும் இது எங்களை வெளியேற்ற நடக்கும் சதி என்று பிதற்றிக் கொண்டே இருந்தான்.


தர்க்க ரீதியாக இவரை வெல்ல முடியாது இவருக்கு ஆள்பலம் அதிகரித்துக் கொண்டு செல்வதற்குள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொலை செய்து விடுவது சிறந்தது எனும் முடிவுக்கு வந்து தனது ராணுவத்தை தயார் படுத்தினான்.


அவனுடைய ரகசிய கொலை திட்டத்தை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூஸா(அலை) அவர்களையும், அவர்களுடன் ஈமான் கொண்டவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு இரவில் வெளியேறும் படி உத்தரவிடுகிறான் அத்துடன் அவன் இவர்களை பின் தொடர இருப்பதையும் கூறி விடுகிறான். ''என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின் தொடரப்படுவீர்கள்'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். திருக்குர்ஆன்.26:52


அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் அந்த இரவிலேயே மூஸா(அலை) அவர்களும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய வஹி வந்ததும் இரவோடு இரவாக இடம் பெயர்ந்து செல்லலானார்கள். 

அதற்கு முன்பே ஃபிர்அவ்னுடைய கொலைவெறித் திட்டம் தயாராக இருந்ததால் அவனுடைய பெரும்படை அவர்களை விடிய விடிய துரத்தி அதிகாலையில் ஓரிடத்தில் ஓடுவதை அறிந்து கண்டு பிடித்து வேகமாக விரட்டியது... காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். திருக்குர்ஆன்.26:60.


கடல் குறுக்கிடுகிறது சிறிய அளவிலான எண்ணிக்கையுடைய மூஸா(அலை) அவர்களின் கூட்டத்தார்கள் ஃபிர்அவ்னுடைய பெரும் படையைக்கண்டு நம்மைப் பிடித்து விடுவார்கள் என்று அச்சமடைந்தார்கள். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது ''நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். திருக்குர்ஆன். 26:61


அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் நம்மைக் கை விட மாட்டான் பயப்படாதீர்கள் என்று அவர்களை மூஸா(அலை) அவர்கள் தைரியப் படுத்தினார்கள். ''அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர் கூறினார். திருக்குர்ஆன்.26:62


அல்லாஹ்வுடைய மகத்தான உதவி நம்பிக்கைக்கொண்டோரை அடைகிறது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூஸா(அலை) அவர்களிடம் இருக்கும் கைத்தடியை கடலில் அடிக்க உத்தரவிடுகிறான். ''உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. திருக்குர்ஆன்.26:63


கடல் பிளந்து மலை அளவுக்கு உயர்ந்து நின்று வழிவிட்டது அதன் வழியாக மூஸா(அலை) அவர்களின் கூட்டத்தார் வெளியேறுகின்றனர், அதே வழியாக ஃபிர்அவனின் படையும் உள்ளே நுழைந்து அவர்களை விரட்டுகிறது (கடல் மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாருக்காக பிளந்த அதிசயத்தை நேரில் பார்த்தப் பிறகாவது எதோ ஒரு சக்தி செயல்படுகிறது அதனால் மேலும் முன்னேறாமல் நின்று விடுவோம் என்று சிந்திக்க விடாமல் அவர்களுடைய மூளையை தடுத்து விடுகிறான் வல்லோன் அல்லாஹ்.) அதனால் அவ்வழிகளுக்குள் விரட்டிக் கொண்டு நுழைகிறார்கள். அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். திருக்குர்ஆன். 26:64.


இவ்வாறு இரு படைகளும் கடல் பிளவுண்ட மையப் பகுதிக்குள் சங்கமித்தார்கள் இதில் முன்பே நுழைந்து விட்ட மூஸா(அலை) அவர்களும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களும் கடலைக் கடந்து விடுகின்றனர். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். திருக்குர்ஆன்.26:65


கடல் பகுதியை விட்டு அவர்கள் வெளியேறியதும் கடல் மீண்டும் பழைய நிலையை அடைந்து வழிகளை மூடி விட்டது. ஃபிர்அவனின் படையினர் வசமாக மாட்டிக்கொண்டனர். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். திருக்குர்ஆன்..26:66



ஏக இறைவனை மறுத்தக் கூட்டம் கடலுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு உப்புத் தண்ணீரைக் குடித்து மூர்ச்சையாகிக் கொண்டிருந்தனர் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்றுக் கூறியவனோ தானும் ஒரு சாதாரண மனிதன் தான் ன்பதை உப்புத் தண்ணீரைக் குடித்துக் கொண்டு மூச்சுத் திணறும் போது உணர்ந்தான். (இங்காவது அவர்க்ளுக்கு உப்புத் தண்ணீர் கிடைத்தது மறுமையிலோ சலமும், சீழும் தான் ).


ஒரே ஒரு இறைவன் தான் இருக்கின்றான் அவன் அகிலங்களுக்கெல்லாம் அதிபதி, சர்வ வல்லமைப் பொருந்தியவன் அவனை நாம் காணவில்லை என்றாலும் அவன் நம்மைக் காண்கின்றான் நாம் கூறுவதைக் கேட்கின்றான் என்பதை இறுதியில் உறுதியாக நம்பினான்.


மக்களின் அதிபதியே ! இறைவா ! நான் கட்டுப்பட்டேன் என்று விண்ணை முட்டும் அளவுக்கு மூழ்குவதற்கு முன் அயபக் குரல் எழுப்பினான். இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது ''இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்'' என்று கூறினான். திருக்குர்ஆன்.10:90


அல்லாஹ்வுடைய கடும் கோபத்தால் அகம்பாவமும், ஆணவமும் கொண்ட ஃபிர்அவனுக்கு ஏற்பட்ட இந்த துர்பாக்கிய நிலையை பின் வரக்கூடிய மக்கள் தெரிந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவனுடைய உடலை மட்டும் அப்படியே விட்டு வைப்பதாக அவன் மூர்ச்சையாவதற்கு முன் அவனிடம் இறைவன் கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.384  

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். திருக்குர்ஆன்.10:91, 92.


அவனுடைய உடல் கடலோரத்தில் உள்ள பணிப்பாறையில் கண்டெடுக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு ட்படுத்தி ஆய்வாளர்களால் அது ஃபிர்அவ்னின் உடல் தான் என உறுதி செய்யப்பட்டு மக்கள் பார்த்து படிப்பினை பெரும் பொருட்டு அல்லாஹ்வின் அத்தாட்சி காட்சி பொருளாக்கப்பட்டுள்ளது.  

இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. திருக்குர்ஆன்.26:67 

அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்