அமெரிக்க தூதரக முற்றுகை புதிய தலைமுறை TV செய்தி
சென்னையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : அண்ணாசாலையில் போக்குவரத்து முடங்கியது
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணாசாலை மசூதி முன்னர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.முகமது நபிகளை விமர்சித்து திரைப்படம் எடுத்த அமெரிக்க இயக்குனரின் படத்தை எரித்தும், அமெரிக்க தேசியக் கொடியை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து அமெரிக்க துணை தூரகத்திற்கு முன்னர் குவிந்த போராட்டக்காரர்கள் அமெரிக்காவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அங்கேயும் தொடர்ந்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர்.
ஸ்தம்பித்தது அண்ணாசலை : இந்நிலையில் சாதாரணமாகவே பரபரப்பாக இருக்கும் அண்ணாசாலையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்தை முடக்க வேண்டாம் என போராட்டக்காரர்களை கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அங்கே கூட்டம் கலைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயார் நிலையில் வஜ்ரா : போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றால், போராட்டுக் குழுவை கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்துடன் தயாராக இருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றதால் அமைதி ஏற்பட்டது.
தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரம்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
http://puthiyathalaimurai.tv/new/?p=31957
2 கருத்துரைகள் :
கைது செய்ய வாகனம் இல்லை...! அடைத்து வைக்க மண்டபம் இல்லை..!!! காவல் துறை கெஞ்சல்...இதுவே மாபெரும் வெற்றி!!! அல்லாஹு அக்பர்..!!!
கைது செய்ய வாகனம் இல்லை...! அடைத்து வைக்க மண்டபம் இல்லை..!!! காவல் துறை கெஞ்சல்...இதுவே மாபெரும் வெற்றி!!! அல்லாஹு அக்பர்..!!!
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.