Saturday, September 22, 2012

தொழுவதற்கு பெண்கள் பள்ளி வாசலுக்குச் செல்லலாமா..?


தொழுவதற்கு பெண்கள் பள்ளி வாசலுக்குச் செல்லலாமா..?

இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு உலமாக்களே கடுமையாக எதிர்கிறார்கள்.ஆனால் ஆண்களும் பெண்களும் கலந்து உறவாடும் சபைகளுக்கும் கடைவீதிகளுக்கும் அனுமதியளிகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தாராளமாக பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுததையும் அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததையும் ஆதாரபூர்வமான நபி மொழிகளில் நாம் அறிய முடிகிறது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.
நூல்: புஹாரி-578



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'.
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நூல்: புஹாரி -707



உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள்.
பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன் என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.
நூல்: புஹாரி -837


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்."
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்.
நூல்: புஹாரி -1203

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை ஒரு நாள் தாமதப் படுத்தினார்கள். 'பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்' என்று உமர்(ரலி) கூறியதும் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து 'இந்தப்பூமியில் உங்களைத் தவிர வேறு எவரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை" என்று கூறினார்கள். அன்றைய தினம் மதீனா வாசிகளைத் தவிர வேறு எவரும் தொழுபவர்களாக இருக்கவில்லை.
நூல்: புஹாரி -862

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
"உங்களின் மனைவியர் (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம்."
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புஹாரி-873


இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார்.
நூல்: (புஹாரி-900)

காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442


இப்படி பல ஆதாரபூர்வமான நபிமொழிகள் இருந்தும் இவை அனைத்தையும் அல்லாஹுக்கு அஞ்சாமல் உண்மையை மறைக்கும் இந்த போலி உலமாக்களிடம் இருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக..!

'பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!' என்று அவர்களிடம் கூறப்படும் போது 'நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே' எனக் கூறுகின்றனர்.கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள். (அல்குர்ஆன் -2:11,12)


நோட்டீஸ் வெளியிடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அதிராம்பட்டினம் கிளை.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.