Friday, September 28, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 29.09.12

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 29.09.12
 
உரை: சிவகாசி.சுல்தான் இப்ராஹீம்

தலைப்பு:
நபி ஸல் அவர்களின் இறுதி உபதேசமும்,
நாம் பெற வேண்டிய படிப்பினையும்!
  
 
 

Monday, September 24, 2012

அதிரையில் நடைபெற்ற ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி!

அதிரையில் நடைபெற்ற ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி!

அதிரையில் 23-9-12 அன்று நபி வழியில் ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி நடுத்தெரு EPMS பள்ளிக்கூடத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மேலப்பாளையம் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவி: M.S சுலைமான் பிர்தௌசி அவர்கள் ஹஜ் செய்வது எப்படி? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி ஹஜ் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார். 

இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!












Saturday, September 22, 2012

தப்லீக் தஃலீம் – தொகுப்பு ஓர் ஆய்வு (தொடர் - 5) - இருநூறு ரக்அத்கள் தொழுத பெரியார், மலஜலம் கழிக்காத பெரியார்

தப்லீக் தஃலீம் – தொகுப்பு ஓர் ஆய்வு  (தொடர் -5) 


இருநூறு ரக்அத்கள் தொழுத பெரியார்

பெரியார்கள் மேல் அளவுக்கதிகமான மதிப்பையும்மலைப்பையும் ஏற்படுத்தும் மற்றொரு கதையைப் பாருங்கள்.

முஹம்மதுப்னு ஸிமாஆ (ரஹ்) என்ற பெரியார் சிறந்த ஆலிமாக இருந்தார்கள். இவர் இமாம் அபூயூசுப் (ரஹ்)இமாம் முஹம்மது (ரஹ்) ஆகிய இரு இமாம்களின் மாணவராவார். அன்னார் தங்களுடைய நூற்றிமுப்பதாவது வயதில் காலமாகும் வரை ஒவ்வொரு நாளும் இரு நூறு ரக்அத்கள் நபில் தொழுது கொண்டிருந்தார்களாம்அவர்கள் கூறுகிறார்கள்: நாற்பது ஆண்டுகள்வரை தொடர்ந்து முதல் தக்பீர் தவறாமல் நான் தொழுது வந்திருக்கிறேன் ஒரே நேரத்தை தவிர...... இப்படிப் போகிறது கதை!

இந்தக் கதை தப்லீகின் தஃலீம் தொகுப்புநூலில் தொழுகையின் சிறப்புகள் என்ற பகுதியில் 86ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
ஒரு நாளைக்கு 200 ரக்அத்கள் நபில் தொழுவது சாத்தியப்படக்கூடியது தானாஇதை முதலில் நாம் ஆராய்வோம்.

ஒரு நாளைக்கு மொத்தம் 24 மணி நேரங்களே உள்ளன. இந்த இருபத்திநான்கு மணி நேரங்களில் ஏறத்தாழ மூன்று மணிநேரங்கள் தொழக்கூடாத நேரங்களாகும்.

சூரியன் உதிக்கத் துவங்கி முழுமையாக உதிப்பதற்கு 20நிமிடங்கள். சூரியன் உச்சிக்கு வரத் துவங்கி உச்சி சாய்வதற்கு 20நிமிடங்கள். சூரியன் மறையத் துவங்கி முழுமையாக மறைவதற்கு20 நிமிடங்கள். இந்த மூன்று நேரங்களிலும் தொழக்கூடாது என்று ஹதீஸ்களில் தடைவந்துள்ளது. இந்த வகையில் 24மணிநேரங்களில் ஒரு மணிநேரம் குறைகின்றது.

அஸர் தொழுத பிறகு உபரியான தொழுகை தொழுவதற்கும் ஹதீஸ்களில் தடை வந்துள்ளது. இந்தப் பெரியார் முதல் தக்பீரிலேயே தொழுதுவிடும் வழக்கமுடையவர் என்று இந்தக் கதையில் கூறப்படுகின்றது. அஸர் தொழுகையை நான்கு மணிக்கு அவர் நிறைவேற்றினால் மஃரிப் வரை குறைந்தது இரண்டு மணி நேரங்கள் தொழக் கூடாத நேரங்கள். இந்த வகையில் இரண்டு மணி நேரங்கள் கழிந்து விட்டால் எஞ்சியிருப்பது 21 மணி நேரங்களே.

ஒரு நாளைக்கு இரண்டு தடவை மலம் கழிப்பது நான்கு தடவை சிறுநீர் கழிப்பது என்று வைத்துக் கொண்டாலும்குறைந்தது அரைமணி நேரமாவது தேவைப்படும். இவ்வாறு ஆறு தடவை வுளூ செய்யவேண்டும். இந்த வகையில் குறைந்தது அரைமணி நேரமாகும்.இப்போது எஞ்சியிருப்பது 20 மணி நேரங்களே.

மனிதன் என்ற முறையில் சில மணி நேரங்களாவது தூங்க வேண்டும். நபியவர்களும் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி வலியுறுத்துகிறார்கள். மனித உடலும் இயற்கையாகவே தூக்கத்தின் பால் நாட்டம் கொண்டதாகவே உள்ளது. குறைந்த பட்சம் ஐந்து மணி நேரங்கள் தூக்கத்தில் கழித்தால் எஞ்சியிருப்பது பதினைந்து மணிநேரங்களே.

எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் பசி உயர்வு இல்லாத மலக்குகளாக அவர்கள் ஆக முடியாது. டீகாபிடிபன் என்று பல தடவை உண்ணாவிட்டாலும் குறைந்தது இரண்டு தடவைகளாவது உண்ணவேண்டும். இதற்கு குறைந்தபட்சமாக அரைமணி நேரமாவது தேவைப்படும். இப்போது எஞ்சியிருப்பது பதினான்கரை மணி நேரங்களே.

இந்த பதினான்கரை மணி நேரங்களில் இந்தப் பெரியார் ஐவேளைக் கடமையான தொழுகைகளையும் தொழுதுவிட்டு சுன்னத்தான தொழுகைகளையும் தொழுதுவிட்டு உபரியாக 200ரக்அத்கள் நபில் தொழுதுள்ளார்களாம்.

ஜமாஅத்துடன் ஐவேளைத் தொழுகையையும் தொழ சுமார் ஒரு மணி நேரம். அதன் பின் ஓதவேண்டிய சுன்னத்தான திக்ருகள் துஆக்கள் ஆகியவற்றுக்கு அரை மணிநேரம்தொழுகையின் முன்பின் சுன்னத்துகளுக்காக ஒரு மணிநேரம்இரவுத் தொழுகை,லுஹாத் தொழுகை ஆகியவற்றுக்கு ஒரு மணிநேரம். இப்போது எஞ்சுயிருப்பது பதினொரு மணி நேரங்களே.

இந்தப் பதினொரு மணி நேரங்களில் அதாவது 660 நிமிடங்களில்200 ரக்அத் நபில் தொழ முடியுமாபெரியார்கள் நம்மைப் போல் அவசர அவசரமாகத் தொழமாட்டார்கள். நிறுத்தி நிதானமாகத் தொழுவார்கள். இந்தப் பெரியார் இதில் விதிவிலக்கானவர். நம்மைப் போல் வேகமாகத் தொழுபவர் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு ரக்அத்துக்கு ஐந்து நிமிடங்களாவது ஆகும். 200ரக்அத்துகளுக்கு 1000 நிமிடங்கள் தேவை.

மிக முக்கியமான தேவைகளுக்குப் போக எஞ்சியிருக்கும் 660 நிமிடங்களில் 200 ரக்அத்கள் தொழுவது எப்படி சாத்தியமாகும்அப்படித் தொழுதால் அது தொழுகையாக இருக்க முடியுமா?சிந்தியுங்கள்.

இது போக இன்னும் பல அலுவல்களைக் கணக்கில் நாம் சேர்க்கவில்லை. அவற்றுக்கு மழுப்பலான பதில்களை ரெடிமேடாக வைத்துள்ளனர்.

மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நேரம் தேவை என்று நாம் சொன்னால் இந்தப் பெரியார் அந்த உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று அவர்கள் கூறலாம். அவர் வேண்டுமானால் அப்பாற்பட்டவராக இருக்கலாம்அவரது மனைவியும் அப்பாற்பட்டவராக இருந்திருப்பாராஎன்று நாம் கேட்டால் அவர் பிரம்மச்சாரியாக இருந்திருக்கலாம் என அவர்கள் கூறலாம்.

தான் உண்பதற்காகவும்தனக்குச் சமைத்துப் போடுவோர்கள் உண்பதற்காகவும்உழைக்க நேரம் தேவை என்று நாம் சொன்னால் பூர்வீகச் சொத்துக்கள் ஏராளமாக இருந்துருக்கலாம் அல்லவா என்பர்.

மார்க்க அறிஞராக அவர் இருப்பதால் மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்கும்நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதற்கும் நேரம் தேவை என்று நாம் கூறினால் அந்தக் காலத்தில் எல்லாருமே மார்க்க அறிஞர்களாக இருந்துருக்கலாம் என்பர்.

திருமணம்ஜனாஸா போன்ற சுன்னத்தான காரியங்களுக்கும் நேரம் தேவை என்று நாம் கூறினால் அந்தக் காலத்தில் பித்அத்கள் மலிந்திருந்ததால் அவற்றை புறக்கணித்திருக்கலாம் என்பர். முன்னர் கூறியதற்கு இது முரணாக உள்ளதே என்று இவர்கள் சிந்திப்பதில்லை.

நியாயப்படுத்தவே முடியாத பணிகளுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கியுள்ளோம். இவற்றையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தாலும்200 ரக்அத்கள் தொழுவதற்கு நிச்சயமாக நேரம் கிடைக்காது.

பெரியார்களைப் பற்றி மலைப்பை ஏற்படுத்தி அவர்களை வழிபடுவதற்காகவே இது போன்ற கதைகளை கட்டியுள்ளனர். ஸகரிய்யா சாஹிபும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால்தான் தன் நூல் நெடுகிலும் இது போன்ற நம்ப முடியாத அபத்தமான கதைகளை அள்ளி விடுகிறார்.

மலஜலம் கழிக்காத பெரியார்: 

தொழுகையின் சிறப்புக்களைக் கூறும் சாக்கில் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்தும் மற்றொரு கதையைக் கேளுங்கள்!
சூபியாக்களில் பிரபலமான ஷைகு அப்துல் வாஹித் (ரஹ்) என்பவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் இரவு எனக்கு தூக்கம் மிகைத்து நான் வழமையாக ஓதக்கூடிய திக்ருகளையும் ஓதாமல் தூங்கி விட்டேன். அப்போது கனவில் மிக அழகிய மங்கை ஒருத்தியைக் கண்டேன். அவள் பச்சைப் பட்டாடை அணிந்திருந்தாள். அவளுடைய காலணிகள் கூட தஸ்பீஹ் செய்வதில் ஈடுபட்டிருந்தன.

அவள் என்னை நோக்கி நீர் என்னை அடைய முயற்சிப்பீராக! நான் உம்மை அடைய முயற்சிக்கிறேன்” என்று கூறி சில பேரின்பக் காதல் கீதங்கள் பாடினாள்.

இக்கனவைக் கண்டு விழித்த நான் இனிமேல் இரவில் தூங்குவது இல்லை என்று சத்தியம் செய்து கொண்டேன். அவ்வாறே நாற்பது ஆண்டுகள்வரை இஷாவுக்குச் செய்த உளூவுடன் சுப்ஹுத் தொழுது வந்தேன் என்று கூறுகிறார்கள்.

இந்தக் கதை தொழுகையின் சிறப்பு எனும் பகுதியில் 118ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து விட்டு அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதலை அலட்சியம் செய்துவிட்டு அதிகப் பிரசங்கித்தனமாக நடப்பவர் எப்படிப் பெரியாராக இருக்க முடியும்!

இஷாவுக்குச் செய்ய உளூவைக் கொண்டு நாற்பது ஆண்டுகள் 14,400 இரவுகள் எப்படி சுபஹ் தொழமுடியும்இந்தப் பதினான்கு ஆயிரத்து நானூறு நாட்கள் அவர் உறங்கியதே இல்லை என்பதை நம்பமுடியவில்லை. இத்தனை இரவுகளும் அவர் மலஜலம் கழிக்கவில்லை: காற்றுப் பிரியவில்லை: மனைவியுடன் சம்போகம் செய்யவில்லை என்பது அதைவிட நம்ப முடியாததாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அவர் அறியாத நிலையில் அவர் வரம்பு மீறியதையாவது நம்பலாம். தன்னைப் பற்றிப் பெருமையாக அவரே கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

சாத்தியமற்ற இது போன்ற சாதனைகளையும் பெரியார்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதைத் தவிர இந்தக் கதையில் ஒரு முஸ்லிமுக்கு எந்தப் படிப்பினையும் காணோம். இதே போன்ற மற்றொரு கதையைப் பாருங்கள்!
அபூபக்கர் ளரீர் (ரஹ்) என்ற பெரியார் கூறுகிறார்கள்:- என்னிடம் வாலிபரான ஓர் அடிமை இருந்தார்அவர் பகல் முழுவதும் நோன்பு வைத்திருப்பார். இரவு முழுவதும் தஹஜ்ஜுத் தொழுகையில் ஈடுபட்டிருப்பார். ஒரு நாள் அவர் என்னிடம் வந்து நான் இன்றிரவு எதிர் பாராத விதமாக தூங்கிவிட்டேன். அப்போது கனவு ஒன்று கண்டேன். அதில் நான் தொழுமிடத்திலுள்ள மிஹ்ராப் சுவர் உடைந்து அதன் வழியாக சில பெண்கள் வந்தனர். அவர்கள் மிக அழகிய தோற்றமுடியவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருத்தி மட்டும் அருவருப்பான தோற்றமுடையவளாக இருந்தாள். நான் அப்பெண்களிடம் நீங்களெல்லாம் யார்இந்த அருவருப்பான பெண் யார்?” என்று கேட்டதற்கு நாங்களெல்லாம் உம்முடைய சென்று போன இரவுகள். இப்பெண் உமது இன்றைய இன்றைய இரவு” என்று இப்பெண்கள் பதில் அளித்தார்கள்.

இந்தக் கதை 119ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ஒரு முஸ்லிம் இரவில் தூங்கக் கூடாது என்றும் பகலெல்லாம் நோன்பு வைத்திருக்க வேண்டும் என்றும் இந்தக் கதை மூலம் ஸகரிய்யா சாஹிப் சொல்ல வருகிறாராதூங்கிய இரவுகள் பாழாய்ப்போன இரவுகள் என்கிறாரா?

குடும்பத்துக்கும்ஊருக்கும்உலகுக்கும்தனக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு இரவில் உறங்க வேண்டிய அளவுக்கு உறங்கிவிட்டு பின்னிரவில் எழுந்து வணங்கிய நபித்தோழர்கள் எல்லாம் தங்கள் இரவுகளைப் பாழடித்துவிட்டதாக ஸகரிய்யா சாஹிப் கூற வருகிறாரா?

இந்தப் பெரியார்களின் வழியில் ஸகரிய்யா சாஹிப் கூட நடந்ததில்லை. அவர் உறங்கியுள்ளார். பகல் காலங்களில் சுவைமிக்க உணவுகளை உண்டுகளித்துள்ளார். அவரும் கூட தனது இராப் பொழுதுகளை பாழடித்தவர்தானா?

முஸ்லிம்களைப் பண்டார சன்னிதிகளாகவும்துறவிகளாகவும் ஆக்கி அவர்களை முடக்குவதற்காகவே இப்படிப்பட்ட கதைகளை பொறுக்கி எடுத்து எழுதியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

இரவெல்லாம் தூங்காத பகலெல்லாம் நோன்பு வைத்த கதைகள் ஏராளமாக அந்த நூலில் மலிந்துள்ளன. ஸகரிய்யா சாஹிபுக்குத் தோன்றிய பெயர்களையெல்லாம் பயன்படுத்தி இவ்வாறு கதையளந்துள்ளனர். இதுவரை நாம் செய்த விமர்சனமே இந்த வகையான அனைத்து கதைகளுக்கும் பொருந்தும் என்பதால் வேறு வகையான கதைகளைப் பார்ப்போம்.

கடமை மறந்த கூலிக்காரர்:

ஷைகு அபூ அப்தில்லாஹ் ஜலாவு (ரஹ்) என்பவர்கள் கூறுவதாவது: ஒரு நாள் என்னுடைய தாயார்என் தந்தையாரிடம் மீன் வாங்கி வரும்படியாகக் கூறினார். என் தந்தை கடைத்தெருவிற்குச் சென்றார்கள். நானும் அன்னாருடன் சென்றிருந்தேன். அங்கு மீனை வாங்கி அதனை வீட்டுக்குக் கொண்டுவர ஒரு கூலிக்காரரைத் தேடினார்கள். அப்பொழுது எங்களுக்கருகில் நின்றிருந்த ஒரு வாலிபர், “பெரியவரே இதனைத் தூக்கி வர கூலியாள் வேண்டுமா?” என்று கேட்டார். ஆம் என்று என் தந்தை பதில் கூறியதும் அவர் அதனை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு எங்களுடன் நடந்து வந்தார்.

சென்று கொண்டிருக்கும் போது வழியில் பாங்கு சப்தம் கேட்டதும் அந்த வாலிபர், “நான் உளூச் செய்ய வேண்டியிருக்கிறது. உளூச் செய்து தொழுத பின்னர்தான் இதனை எடுத்து வர முடியும். உங்களுக்கு விருப்பமிருந்தால் சற்று நேரம் காத்திருங்கள். இல்லையானால் தங்களுடைய மீனை எடுத்துச் செல்லலாம் என்று கூறி மீனை வைத்து விட்டுச் சென்று விட்டார்.

ஒரு கூலிக்காரப் பையன் இவ்வளவு பக்தியுடன் இருக்கும் பொழுதுநாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு இவரை விட மிக மிகத்தகுதியுள்ளவர்கள் என்பதற்காக என் தந்தையார் எண்ணியவராக அந்த மீன் கூடையை அங்கேயே வைத்துவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்று விட்டார்கள். நாங்கள் தொழுகையை முடித்து திரும்பி வந்த போது அந்த மீன் அங்கேயே அப்படியே இருந்தது. அந்த வாலிபர் அதனைத் தூக்கி எங்களுடைய வீட்டில் கொண்டு வந்து விட்டார்.

வீட்டுகுச் சென்று தந்தை இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியை என் தாயாரிடம் கூறினார். அதற்கு என் தாயார், “அவரை இருக்கச் சொல்லுங்கள். அவரும் மீன் சாப்பிட்டுச் செல்லட்டும்” என்று கூறினார். இதனை அவ்வாலிபரிடம் கூறியதும், “நான் நோன்பு வைத்திருக்கிறேன்” என்றார் அவர். சரி மாலையிலாவது இங்கு வந்து நோன்பு திறக்க வேண்டும் என்று என் தந்தையார் வற்புறுத்திக் கூறியதும், “நான் போய்விட்டுத்திரும்பி வர முடியாது. வேண்டுமானால் இங்கு அருகிலுள்ள மஸ்ஜிதில் தங்கி இருக்கிறேன். மாலையில் உங்களுடைய விருந்தைச் சாப்பிட்டுச் செல்கிறேன்.” என்று கூறிவிட்டு அருகிலுள்ள மஸ்ஜித்துக்கு சென்று விட்டார்.

மாலை நேரமானதும் மஃரிபிற்குப் பின் அவர் வந்தார். சாப்பிட்டு முடித்த பின் அவர் இரவில் தங்குவதற்காக தனிமையான ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் அவர் தங்கினார். எங்களுக்குப் பக்கத்து வீட்டில் நடக்க முடியாத சப்பாணிப்பெண் ஒருத்தி இருந்தாள். அவள் மறுநாள் முற்றிலும் சுகம் உடையவளாக - நன்கு நடக்கக் கூடியவளாக இருப்பதைப் பார்த்தோம். நாங்கள் அவளிடம் உனக்கு எப்படிச் சுகம் ஏற்பட்டது’ என்று கேட்டதற்கு உங்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளியின் பொருட்டால் நான் அல்லாஹுதஆலாவிடம் துஆ கேட்டேன். யா அல்லாஹ் இந்த விருந்தாளியின் பரக்கத்தால் எனக்கு சுகமளிப்பாயாக என்று கேட்டதும் உடனே எனக்குச் சுகம் எற்பட்டுவிட்டது.” என்று அப்பெண் கூறினாள். பிறகு நாங்கள் அவ்வாலிபர் தனிமையில் இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது கதவு மூடியே இருந்தது. ஆனால் அவரை அங்கு காணவில்லை. எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.

இந்தக்கதை மேற்படி நூலில் 124ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. கூலியாள் வேண்டுமா என்று இவ்வாலிபர் வந்து கேட்கிறார். மீனைத்தூக்கி வருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டவர் இடையிலேயே ஒப்பந்தத்தை முறிக்கிறார். இப்படி நடக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கவில்லை. கூலிக்கு வேலை கேட்கும் போதே அவர் யோசித்திருக்க வேண்டும். அல்லது பாங்கு சப்தம் கேட்கும் வரை நான் தூக்கி வருவேன் என்று அவர் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். ஆனால் அவர் இடையில் கழுத்தறுக்கிறார். இத்தகைய ஒப்பந்தத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பாங்கோசை கேட்டவுடன் ஒப்புக் கொண்ட வேலையைக் கூட உதறித் தள்ளிய இந்த வாலிபர் மஃரிபுக்குப் பின் சாப்பிட்டு விட்டு தனியறைக்குச் சென்று விட்டதாக இந்தக் கதை கூறுகிறது. இவ்வளவு பேணுதலுள்ளவர் இஷா ஜமாஅத்துக்காக ஏன் புறப்படவில்லைஇந்தக் கதை பொய்யாகப் புனையப்பட்டது என்பதை இந்த முரண்பாடு காட்டிக் கொடுத்து விடுகின்றது.

தொழுகையின் சிறப்பைச் சொல்லும் சாக்கில் ஸகரிய்யா சாஹிப் தூவுகின்ற விஷக்கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எவரது பொருட்டாலும் இறைவனிடம் எதையும் கேட்கலாகாது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கொள்கை. ஒவ்வொருவரும் தத்தமது நல்லறங்களின் பொருட்டாலேயே இறைவனிடம் உதவி தேட வேண்டும். ஸகரிய்யா சாஹிப் பின்பற்றுகின்ற இமாம் அபூஹனீபா அவர்கள் கூட இதை மிகவும் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.

இதற்கு மாற்றமாக அந்த வாலிபரின் பொருட்டால் அப்பெண்மணி குணமடைந்தாள் என்று கதை விடுகிறார். தனது இமாமுடைய போதனைக்கு மாற்றமாகவும் இவர் கதையளந்திருப்பது இது போன்ற மரியாதையை மற்றவர்களிடமிருந்து பெறுவதற்கே.

நல்லடியார்களை ஷைகுமார்களை மக்கள் இவ்வளவு உயரத்தில் வைத்துப் போற்ற வேண்டும் என்ற போதனை தான் இந்தக்கதையின் முக்கிய அம்சமாக உள்ளது.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்

தொழுவதற்கு பெண்கள் பள்ளி வாசலுக்குச் செல்லலாமா..?


தொழுவதற்கு பெண்கள் பள்ளி வாசலுக்குச் செல்லலாமா..?

இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு உலமாக்களே கடுமையாக எதிர்கிறார்கள்.ஆனால் ஆண்களும் பெண்களும் கலந்து உறவாடும் சபைகளுக்கும் கடைவீதிகளுக்கும் அனுமதியளிகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தாராளமாக பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுததையும் அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததையும் ஆதாரபூர்வமான நபி மொழிகளில் நாம் அறிய முடிகிறது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.
நூல்: புஹாரி-578



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'.
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நூல்: புஹாரி -707



உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள்.
பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன் என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.
நூல்: புஹாரி -837


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்."
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்.
நூல்: புஹாரி -1203

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை ஒரு நாள் தாமதப் படுத்தினார்கள். 'பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்' என்று உமர்(ரலி) கூறியதும் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து 'இந்தப்பூமியில் உங்களைத் தவிர வேறு எவரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை" என்று கூறினார்கள். அன்றைய தினம் மதீனா வாசிகளைத் தவிர வேறு எவரும் தொழுபவர்களாக இருக்கவில்லை.
நூல்: புஹாரி -862

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
"உங்களின் மனைவியர் (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம்."
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புஹாரி-873


இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார்.
நூல்: (புஹாரி-900)

காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442


இப்படி பல ஆதாரபூர்வமான நபிமொழிகள் இருந்தும் இவை அனைத்தையும் அல்லாஹுக்கு அஞ்சாமல் உண்மையை மறைக்கும் இந்த போலி உலமாக்களிடம் இருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக..!

'பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!' என்று அவர்களிடம் கூறப்படும் போது 'நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே' எனக் கூறுகின்றனர்.கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள். (அல்குர்ஆன் -2:11,12)


நோட்டீஸ் வெளியிடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அதிராம்பட்டினம் கிளை.

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.09.12

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 21.09.12






Sunday, September 16, 2012

நபி (ஸல்) நாயகத்தை தரைகுறைவாக விமர்சித்த அமெரிக்க நாய்களை கண்டித்து அதிரையில் நடந்த பேரணி ஆர்ப்பாட்டம் (வீடியோ)

அமெரிக்காவை கண்டித்து அதிரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணி மற்றும் கண்டன  ஆர்ப்பாட்டம்


adirai porattam from Jahir on Vimeo.


                     அதிரையில் அமெரிக்காவை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர் !

                       நபிகள் நாயகம் (ஸல் )அவர்களை காமுகராகவும், தீவிரவாதியாகவும் சித்தரித்து திரைப்படம் எடுத்துள்ள அமெரிக்க பாதிரியையும் ,அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக பிரம்மாண்டமான பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

                         தக்வா பள்ளியிலிருந்து துவங்கிய பேரணியை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y.அன்வர் அலி அவர்கள்  துவக்கிவைத்தார்.
அதிரை கிளை தலைவர் பீர்முகம்மது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரையில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் எப்போதும் இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டனர் .அதிரை வரலாற்றில் இது ஒரு மைல்கல் !.

                       இந்த ஆர்ப்பாட்டத்தில் சகோதரர் யாசர் அரஃபாத் இம்தாதி அவர்களும் ,தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரஃப் தீன் ஃபிர்தவ்சி  அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள் .தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அதிரை ஸாலிஹ் அவர்கள் நன்றி உரையாற்றினார்கள் .

                     இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியுடன் முடித்து தந்த வல்ல ரஹ்மானுக்கு புகழனைத்தும் !  அல்ஹம்துலில்லாஹ் !