Thursday, November 18, 2010

அதிரையில் நடைபெற்ற நபிவழித் திருமணம்

அல்லாஹ்வின் கிருபையால், அதிரையில் நாளுக்கு நாள் நபிவழித் திருமணங்கள் அதிகமாகி வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 01.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசலில் மேலத்தெருவை மணமகளுக்கும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்ந ஜகபர் சாதிக் என்ற சகோதரருக்கும் நபிவழியில் திருமணம் நடைபெற்றது.



இந்த திருமணத்தை மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் நடத்தி வைத்தார்கள். இதில் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தனது பெற்றோர்கள் நபிவழித் திருமணம் செய்ய ஒப்பாத காரணத்தினால், மணமகன் ஒரு சில சகோதரர்களுடன் மட்டும் திருமணத்திற்காக வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.